Sunday, August 24, 2008

ஒலிம்பிக்ஸ் சில (வேண்டாத) எண்ணங்கள்.

ஒலிம்பிக்ஸ்: என் பார்வையில் (வேண்டாத வேலைன்னு வச்சுக்கவா?)

ஆமாம். சும்மாப் பார்க்கத்தான் முடியும். அதுலே கலந்துக்கிட்டு விளையாடியெல்லாம் செயிக்க முடியாது. இதுவரை சிலபல ஒலிம்பிக் விழாக்களைப் பார்த்துருந்தாலும்..... இப்பத்தான் சிலவிசயங்களைக் கவனிச்சேன்னு சொல்லலாம். வலைபதிய ஆரம்பிச்சபிறகு கண்ணோட்டமும் மனஓட்டமும் மாறித்தான் போச்சு. இதுதான் முதல் விழா.....வலைபதியவந்தபிறகு.

மக்கள் ஆர்வமாக் கலந்துக்கிட்டு உற்சாகக்குரலில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிச்சுக்கிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு லட்சம்பேர் திடலில் குவிஞ்சுருக்காங்க. இது இல்லாம உலகம்பூராவும் இருந்த இடத்தில் இருந்தே என்னைப்போல நோகாம நோம்பு கும்புட்டுக்கிட்டு இருக்கறவங்க எத்தனை லட்சம் இருக்குமோ!!!!

பலவிளையாட்டுகள் பார்க்க நல்லா இருக்குன்னாலும் ஒரு சிலதைப் பார்க்கும்போது...... தேவைதானான்னு மனசு கொப்புளிக்குது. என்னதான்.....ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணுமுன்னு இருந்தாலும் ..............

முதல்லே இந்த 50 கிலோமீட்டர் நடை.

இந்தக் காலத்துலே யாருங்க நடையா நடக்குறாங்க? மனுசனுடைய பழக்கங்கள் எல்லாம் எவ்வளோ மாறிக்கிடக்கு! ரெண்டு கிலோமீட்டர் போகவே ஆட்டோவைத் தேடறோம். உடற்பயிற்சிக்குன்னு கூடிப்போனா மூணு நாலு கிலோமீட்டர் நடை. இந்த அழகில் உடம்பை வருத்திக்கிட்டு அம்பது கிலோமீட்டர் நடக்கணுமுன்னா....... பார்க்கறப்பவே எனக்குக் காலெல்லாம் கல்லைக் கட்டிவிட்டாப்புலே இருந்துச்சு. போன ஒலிம்பிக்ஸ்லேயும் எங்கூர் 'வீரர்' ஒருத்தர் இப்படிப் போட்டியில் கலந்துக்கிட்டுக் கடைசியில் நடக்க முடியாமல் காலெல்லாம் அப்படியே உதறி, நிக்கமுடியாமல் மடங்கி..... ரொம்பக் கோராமையாப் போச்சு.


ரெண்டாவதா.... இப்பப் புதுசா சேர்த்துருக்கும் BMX போட்டி.




பறந்துபறந்துவந்து ....ஒன்னு விழுந்தா....பின்னாலே வர்றவங்க எல்லாம் முட்டி மோதி விழுந்து..... பாவம் பசங்க. உடம்பெல்லாம் அடிபட்டுக்கிச்சுங்க. தலைக்கு மட்டுமே ஹெல்மெட் பாதுகாப்பு. அதுவும் அந்த ட்ராக் சரிவா இருக்கு பாருங்க. கீழே விழுந்து, சரிஞ்சு வரும்போது பின்னாலே வேகமா வர்றவங்க வந்து இடிச்சு அவுங்களும் விழுந்து....ஒரே களேபரம்.

மூணாவதா....

பெண்களுக்கான 20 கி.மீ நடை.

எல்லார் உடம்பு வாகும் இதைத் தாங்குமா?

சரி. போட்டியில் வைக்கறதுதான் சரின்னாலும் தூரத்தைப் பாதியாக் குறைக்கக்கூடாதா?

இப்பப் பாருங்க மாரத்தான் முடிஞ்சதும் இதை எழுதிக்கிட்டு இருக்கேன். அந்தக் காலத்துலே இப்படி ஓடுனாங்கன்னு இப்பவும் ஓடவச்சுட்டாங்க. ஆனா இந்த நடக்கறதைவிட இது எவ்வளவோ தேவலை!!! கூட்டமா ஆரம்பிச்சு ஒரு அரைமணியிலேயே அஞ்சுபேர் கும்பல் மட்டும் முன்னாலே வந்துக்கிட்டு இருந்துச்சு. நேரம் செல்லச் செல்ல மூணுபேர்ன்னு ஆச்சு. முடிவுக்குக் கொஞ்சம் முன்னே அதுவரை வந்துக்கிட்டு இருந்தவரில் ஒருத்தர் கண்ணெல்லாம் கலங்குறமாதிரி பார்க்கிறார். அரங்கத்தில் முதல் இரண்டு வீரர்கள் வந்தபிறகு.... மூணாவது வர்றவரைக் கடைசி நிமிசத்தில் நாலாவது நபர் பின்னுக்குத் தள்ளிட்டார். செயிக்கமுடியாதவரின் கலங்குன
கண்ணில் ஒரு விரக்தி.


அயிட்டங்களை மறுபரிசீலனை செய்து காலத்துக்கேற்ற மாதிரி அமைச்சா நல்லா இருக்காதா?

தொழில்முறையா ஆடும் விளையாட்டுகளை இதில் சேர்க்கணுமா அப்படியே சேர்க்கணுமுன்னு இருந்தாலும், தொழில்முறை ஆட்டக்காரர்களை சேர்க்காம இருக்கலாமில்லையா?

இன்னும்கூட என்னென்னவோ சொல்லிப் புலம்புவேந்தான்..... ஆனா.....

நாம் சொல்லி என்னா ஆகப்போகுதுன்னு.......

வேண்டாத லிஸ்ட்டுலே........பீச் வாலிபால்..நீங்க எல்லாம் வெகுவா ரசிச்சது இதுதானாமே......!!!!!


'மெய்வருத்தக் கூலிதரும்' எனப்து மெய்தான்.அதுக்காக மெய்யைக் கூடுதலா வருத்துனா அது பொய் ஆகிருமோன்னு ஒரு பயம்தான்............

பிடிச்ச ஐட்டத்தையும் சொல்லாமப் போகலாமா?

சீனர்கள் நெத்தியில் திலகம் வச்சுக்கிட்டு ஆடுன ஆட்டங்கள் எல்லாம் ஜோரே ஜோர்:-)))))


சொல்லவிட்டுப்போன ஒன்னு: எங்கூர்லே ஒரு குரங்கு காணாமப்போச்சு.

அட! நம்புங்கப்பா....உண்மையான குரங்குதான். கப்புசின் மங்கி. பெயர் மிண்ட்டி. புதுசா வந்த ஒரு செட் குரங்குகள். மொத்தம் நாலுபேர். டாக்டர் செக்கப் செய்ய கூண்டு மாற்றினபோது, நைஸா நழுவிட்டார். மூணுநாளா தினம் இந்தக் கவலைவேற சேர்ந்துக்கிச்சு.

சனிக்கிழமை பத்திரிக்கையில் இதுதான் முக்கிய சேதி. மத்த மூணுபேரும் வருத்தமா உக்கார்ந்துக்காங்க.



எங்கியாவது கண்ணுலே பட்டா, இந்த நம்பர்லே கூப்புட்டுச் சொல்லுங்க. யாரும் கிட்டே அணுகவேணாமுன்னு நம்ம எக்ஸ்ட்ரா நியூஸ்லேயும் இருந்துச்சு. இது என்னடா நம்ம கிறைஸ்ட்சர்ச்சுக்கு வந்த சோதனை(-:



வேண்டாத சாமி இல்லை. நல்லவேளை நேத்து மத்தியானம் கிடைச்சுருச்சு.
நாயை, நடக்கக் கூட்டிக்கொண்டு போனவர், மிண்ட்டி ஒரு மரத்துலேக் 'குந்திக்கினு' இருந்ததைக் கண்டு, தொலை பேசியில் கூப்பிட்டாராம். மிண்ட்டியை இல்லைங்க, ரிஸர்வ் ஓனரை.

நல்லபடியா வீட்டுக்குக் கூட்டியாந்துட்டாங்க.

டிஸ்கி: இந்த ரெண்டு சேதிக்கும் சம்பந்தமில்லை

21 comments:

said...

எல்லா விளையாட்டும் விளையாடறவங்களுக்கு கஷ்டமோ இல்லையோ நமக்கு எம்புட்டுக் கஷ்டமா இருக்கு!

அதுவும் ஒரே சோபாவில் அவ்வளவு நேரம் உட்கார்ந்துக்கிட்டே இருக்க கஷ்டமா இருக்காதா என்ன!! :))

said...

நல்லாச் சொன்னீங்க துளசி. இங்க ஐம்பது மைல்,எம்பது மைல்னு நடந்து நிதி திரட்டுறாங்களாம்.
ஏதோ ஒரு உற்சாகம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

ஆமாம் இப்படி லட்சக்கணக்கு டிவில பார்த்தா ஒலிம்பிக் விளம்பரதாரர்களுக்கு இன்னும் நல்லதுதானே.
நாம் அந்த வகையில காண்ட்ரிப்யூட் செய்திருக்கோம்.:0)
இது பத்தாததுக்கு இப்ப வயசுபத்தின நியூஸ் இங்க கலக்கு கலக்குன்னு கலக்குது.

said...

//உலகம்பூராவும் இருந்த இடத்தில் இருந்தே என்னைப்போல நோகாம நோம்பு கும்புட்டுக்கிட்டு இருக்கறவங்க எத்தனை லட்சம் இருக்குமோ!!!!//

ஹி ஹி ஹி அப்படியே நானும் ;-)

said...

ஒலிம்பிக்ஸ் சம்பந்தமான டீச்சருடைய அதே கருத்துத்தான் என்னுடையதுவும்.

அந்தக் குரங்குகள் கொஞ்சம் அழகு. இன்றுதான் பார்க்கிறேன்.

பகிர்ந்துகொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

குரங்கு காணமற்போனால் அதைக்கண்டு பிடிக்க ஒரு கூட்டமே தேடுமே உங்கூரில் தான் (4 பேர் தானே?),ஈசியாக கண்டுபிடித்துவிடலாம்.
முதல் பின்னூட்டமே நம்ம லீடர் வந்து குண்டு எரிந்துவிட்டு போய்விட்டார்.:-))

said...

//'மெய்வருத்தக் கூலிதரும்' எனப்து மெய்தான்.அதுக்காக மெய்யைக் கூடுதலா வருத்துனா அது பொய் ஆகிருமோன்னு ஒரு பயம்தான்............//

இந்த பஞ்ச் டயலாக் ரொம்ப புடிச்சிருக்கு !

:)

said...

ஒலிம்பிக்ஸில் இன்னும் தேவை இல்லாத விளையாட்டுகள் நிறைய இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் கிரிக்கெட்டை சேர்க்காதவரை மகிழ்ச்சி.(அப்புறம் சீனா, அமெரிக்காக்காரன் வந்து நமக்கு ஆப்பு ரெடி பண்ணிடுவான்)

said...

குரங்கு காணமப் போனது முக்கிய செய்தியா? அவ்வ்வ்வ்வ் (நாங்க மனுசன் காணாம போனதையே கண்டுக்க மாட்டோம்.... ;)

said...

வாங்க கொத்ஸ்.

நீங்க சொல்றது ரொம்பச் சரி. படுத்துக்கிட்டு (அதே சோஃபாவில்தான்) பார்க்கும்போதே கஷ்டமாத்தான் இருக்குன்னு கோகி சொல்றான்:-)

முழுசா 'எல்லாம்' பார்த்தவன் சொன்னா நம்பத்தானே வேணும்!!!!

said...

வாங்க வல்லி.

நிதி திரட்டன்னு ஜாலியாக் கூட்டமா நடக்கறது இங்கேயும் இருக்கு. ஆனா இதுக்குப் போட்டின்னு வச்சு, 'விக்குவிக்கு'ன்னு நடப்பது இல்லைப்பா:-)

வயசு நியூஸ் இங்கேயும் கலக்கல்தான்:-)

said...

வாங்க கிரி.

நாமெல்லாம் 'நோநோ' தான்:-))))

said...

வாங்க ரிஷான்.

முதலில் வானொலியில் உங்க கவிதை வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

தினசரியில் மற்ற மூணும் சோகமா உக்கார்ந்து போஸ் கொடுத்துச்சு. அருமையா இருந்தது. நம்ம வீட்டிலே பேப்பர் வாங்கிக்கலை. இருந்தா ஸ்கேன் பண்ணிப் போட்டுருக்கலாம்.

said...

வாங்க குமார்.
லீடரைத்தான் தேடுறாங்க இங்கே வாலரிக்குப் பதிலா குண்டு எறிய;-)))))

அவரும் நோநோவில் ஒன்னுதான்:-))))

said...

வாங்க கோவியாரே.

பஞ்சு வந்துருச்சு:-)))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

க்ரிக்கெட்டு ஒலிம்பிக்ஸிலா? சத்தமாச் சொல்லாதீங்க. கிளம்பிருவாங்களே.....

குரங்கு சாதாரணமானவர் இல்லீங்க.

முதலாவது குளிர். அவர் காணாமப்போன நாட்களில் இங்கே குளிர் மைனஸுக்குக் கீழே மூணு நாலுன்னு போய்க்கிட்டு இருந்துச்சு.

முக்கால்வாசி மரங்களில் இலையே இருக்காது. அப்ப குரங்கு குளிர்தாங்காம இறந்துரும்.

ரெண்டாவது மூனு நாளா சாப்பாடு?
இந்த வகைகளை கூண்டில் வச்சே வளர்த்ததால் தானே சாப்பாட்டைத் தேடித் திங்க பழகலை.

மூனாவதா..... ராத்திரியில் சீறிவரும் கார்களில் மாட்டிக்கிட்டா.....?

அதான் அதோட பாதுகாப்புக் கருதி ரேடியோவில் எல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க(ளாம்)

said...

\\தொலை பேசியில் கூப்பிட்டாராம். மிண்ட்டியை இல்லைங்க, ரிஸர்வ் ஓனரை.//

ஹஹ்ஹாஹா... நானும் நமக்கெதுக்குஇந்த வேண்டாத வேலைன்னு அதிகம் எட்டிப்பார்க்கல..

said...

ஒலிம்பிக்ஸ் பற்றிய உங்கள் வருத்தங்கள் மிகவும் சரியே.

//மிண்ட்டியை இல்லைங்க,//

:)) இதெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் மேடம் வரும் அத்தனை இயல்பா:)))!

Anonymous said...

பாவம் மிண்ட்ட்டி, பசியோட இருந்துருக்கும்போல இருக்கு, நிலக்கடலை ஸ்நாக் குடுத்ததும் ஓடி வந்துருச்சாம் ஜூ கீப்பர் கிட்ட

said...

வாங்க கயலு.

இங்கேயும் நியூஸி கலந்துக்கிட்டதைத்தான் அதிகமாக் காமிச்சாங்க.

மத்த நாடுகள்? அமெரிக்கா, இங்கிலாந்தை விட்டா வேற நாடுகள்னு ஒன்னும்
உலகில் இல்லையாமே......

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எதுவும் ஆரம்பிக்கும் நோக்கம் நாளாக ஆக எப்படி நீர்த்துப்போகுது பாருங்க.

கண்டதையும் சேர்த்தால்...... இந்தமாதிரித்தான் ஆகும்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

3 நாள் கொலைப் பட்டினியில்லையா..... அதான் பாவம் புள்ளெ.....

எப்படியோ நல்லமாதிரித் திரும்பக் கிடைச்சதே....