மெயின் டே டுடே!!!!
சாயங்காலம் கல்யாணம். இவரும் எல்லார்கிட்டேயும் எத்தனை மணிக்குக் கல்யாணமுன்னு கேட்டுக்கிட்டே இருக்கார். வர்ர பதில்தான் வெவ்வெற மாதிரி.
"மூண்ரை மணிக்குப் 'பராத்'கிளம்பிரும்."
"எப்ப பராத் போய்ச் சேருதோ அப்ப."
"சாயங்காலம்....."
சிரிப்பு.
"வக்த் பர் ஹோ ஜாயேகா."
கல்யாணப் பத்திரிக்கையில் இருந்ததைப் படிச்சுட்டு 5 மணிக்குக் கல்யாணமுன்னு சொல்லி இருந்தேன். 7 ஐத் தலைகீழாப் போட்டா அது 5 தானே? பத்திரிக்கை குஜராத்தி மொழியில் அடிச்சுருந்துச்சு. தட்டுத்தடுமாறிப் படிச்சுருவேன். பாதி எழுத்து ஹிந்தி எழுத்துத்தானே? நான் சொன்னதை நம்பாம எல்லாரையும் கேட்டீங்கல்லே? நல்லா வேணும்:-)
அஞ்சரைக்கு அடிச்சுப்பிடிச்சுக் கல்யாணமண்டபம் போய்ச் சேர்ந்தால் வாசலில் கார் நிறுத்த இடம் லட்டாட்டம் கிடைச்சது. அப்பவே ஒரு சந்தேகம்தான். வெளியே நின்னுக்கிட்டு இருந்தவரிடம் ' பராத் 'வந்துருச்சான்னு கேட்டால் 'இன்னும் இல்லை'ன்னார்.
உள்ளே நுழைஞ்சதும் நம்ம வரவேற்க ரெண்டு யானைகள். தும்பிக்கையை உயர்த்தி வாங்க வாங்கன்னு கூப்பிடும் போஸில், மேடைக்குக்கீழே ரெண்டு பக்கமும். இதுகளுக்கு நடுவில் ஒரு புள்ளையார். மேடையில் குழந்தைகள் கைகளைச் சேர்த்துப்பிடிச்ச மாதிரி ( நம்ம பாவைவிளக்கு ஸ்டைலில்) ரெண்டு சிலைகள். ஹாலில் ஒரு இருவது, இருவத்தஞ்சு பேர் இருப்பாங்க. நாங்களும் போய் உக்கார்ந்து கொஞ்ச நேரத்தில் இவர் மெதுவா காதருகில் சொல்றார் 'என்னம்மா ஒரே பொம்பளைங்க கூட்டம்? ஆம்புளைகள் யாரையும் காணோமே'ன்னு.
"அதான் நீங்க ரெண்டுபேர் இருக்கீங்கல்லே?"
அப்பதான் மேடையில் சிலர் வந்து அலங்காரம் ஆரம்பிச்சாங்க. போச்சுரா...... இனிமேத்தானா? பரபரன்னு வேலை ஆச்சு. நடுவில் அலங்கார இருக்கைகள். வலது இடது ரெண்டு பக்கமும் நிறைய நாற்காலிகள் கொண்டுவந்து போட்டுக்கிட்டு இருந்தாங்க. மேடைக்குக் கீழே இருக்கும் இருக்கையைவிட மேலே அதிக அளவு எண்ணிக்கையோ?
கூட்டம் சேர ஆரம்பிச்சது. அப்படியும் பெண்களாவே உள்ளே வந்துக்கிட்டிருக்காங்க. மணி ஆறரை ஆச்சே..... இன்னுமா பராத் வரலை?
கோபால், மாப்பிள்ளைவீட்டாரை செல்லில் கூப்புட்டார். வந்துக்கிட்டு இருக்காங்களாம். பா வில் இருந்து புறப்படும்போதே நாலரை ஆயிருச்சாம். நடுவில் லௌடொகாவில் ஒருத்தரை பிக் பண்ணிக்கணுமுன்னு போனப்ப அங்கேயும் கொஞ்சம் லேட் ஆயிருச்சாம். இன்னும் 15 நிமிசத்துலே மண்டபத்துக்கு வந்துருவாங்களாம். ஏழடிக்க அஞ்சு நிமிசமானப்ப 'படபட'ன்னு பட்டாஸ் வெடிக்கும் சப்தம். ஆஹா...மாப்பிள்ளை வந்துட்டார். ரெண்டு பஸ் நிறைய கூட்டம் வந்துருக்கு மாப்பிள்ளையோடு.
பொண்ணு வீட்டுக்காரங்க போய் மாப்பிள்ளையை எதிர்கொண்டு, அங்கே கூட்டமா நின்னு பாடி ஆடி அழைச்சு வந்தாங்க. என்ன ஏதுன்னு சரியாப் பார்க்கவிடாம வீடியோக்காரங்க சுத்தி நின்னுக்கிட்டாங்க. அதுக்கப்புறமும் மேடையில் இவுங்க அட்டகாசம்தான். மேடையில் ரெண்டுபக்கமும் உக்கார்ந்திருந்த பொண்ணு, பையன் வீட்டு ஆளுகள்தான் கண்ணுக்குப் புலப்பட்டாங்க. ஹாலில் இருந்த அனைவருக்கும் வீடியோக்காரர்களின் 'பின்' தரிசனம்தான். அங்கே என்னவோ நடக்குது.
அப்ப திடீர்ன்னு 'மைக் 'லே ஒரு அறிவிப்பு, குஜராத்தியில்தான். ரிஃப்ரெஷ்மெண்ட் தயாரா இருக்குன்னு சொன்னதுதான் தாமதம் கூட்டம் மொத்தமும் அம்பேல்:-) குருவிக் கூட்டத்தில் கல் எறிஞ்சமாதிரிச் சிட்டாப் பறந்துட்டாங்கப்பா. 'களபுளா' சத்தம் 'கப் 'ன்னு நின்னு ஹாலே நிசப்தமா ஆகிருச்சு. மாப்பிள்ளைவீட்டு வகையறாக்கள் மட்டுமே இருக்கோம். சரி இனியாவது கல்யாணத்தில் என்ன நடக்குதுன்னு பார்க்கலாமுன்னா......ஊஹூம். எப்படியும் நமக்கு ஒரு காப்பி டிவிடி அனுப்புவாங்க. அதைப் பார்த்துட்டுத்தான் எழுதணும்:-)
பொண்ணும் பையனும் அக்னியைச் சுத்தி வலம்வருவது வீடியோக்காரர்களின் கால்களின் இடையில் தெரிஞ்சது. அப்புறம் சப்தபதி. ஸாத் ஃபேரே. மேடையின் முன்புறம் நோக்கி ஏழு அடி. ஆலன் நல்ல உயரம். கேமெராவைக் கொடுத்து ஒரு படம் எடுக்கச் சொன்னேன்.
அர்விந்த் ' பையா' அப்ப வந்து, இங்கே ஏன் உக்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க? மாடிக்குப் போங்கன்னு கோபாலையும் ஆலனையும் கூட்டிட்டுப்போனார். கல்யாணப்பந்தலில் ஆண்கள் யாருமே இல்லாத காரணம் அப்பத்தான் தெரியவந்தது. மண்டபத்துக்குள்ளே வருமுன்னேயே இடதுபக்கம் போகும் மாடிப்படியை நோக்கி ஆண்களும், கல்யாணம் நடக்கும் ஹாலின் உள்ளே பெண்களுமாப் பிரிஞ்சு போயிருக்காங்க ஆரம்பத்துலேயே!
மாடியில் என்ன? இன்னுமா விளங்கலை. தீர்த்தத் திருவிழா:-)))) இதுக்குத் தகுந்த வகையில் மண்டபம் டிஸைன் செய்த புண்ணீயவான் யாரோ? இது தெரியாம 'தேமே'ன்னு எங்ககூட இவ்வளோ நேரம் இருந்து டயம் வேஸ்ட் பண்ணிட்டாங்க.... த்ச் த்ச் த்ச்.......
கல்யாண விருந்தை ரிஃப்ரெஷ்மெண்ட்ன்னா சொல்றது? என்னவோ போங்க. பந்தி விறுவிறுப்பா நடந்துக்கிட்டு இருக்கு. முதல் ரெண்டு பந்தி முடிஞ்சு மீண்டுவந்த மக்கள் ஆரம்பிச்சுட்டாங்க கலகலா.......களபுளான்னு .... இரைச்சலான இரைச்சல். இதுக்கிடையில் சாப்பிடப் போங்கன்னு விரட்டாத குறையா ஒவ்வொருத்தரும் வந்து என்னையும் மகளையும் விசாரிக்கிறாங்க. இனிமேலும் பொறுத்தால் எங்கே தூக்கிக்கிட்டுப்போய் டைனிங் ஏரியாவில் விட்டுறுவாங்களோன்னு நாங்க போனோம். நாலாவது பந்தி. மின்னலா எங்க பக்கத்தில் வந்து உக்கார்ந்தாங்க கோபாலும் ஆலனும். இப்பத்தான் நிம்மதியாச்சு எனக்கு.
மொத்த ஆம்புளைங்க கூட்டமும் மேலே இருக்காம். சுவா (தலைநகர்)நகரில் இருந்து இன்னிக்குக் கிளம்பிவந்த எல்லாருக்கும் கோபாலைப் பார்த்ததும் ஆச்சரியமாம். என்னையும், மகளையும் ரொம்ப விசாரிச்சாங்களாம். சாப்பிட்டுட்டுப்போய் அவுங்களைச் சந்திக்கலாமுன்னு சொன்னார்.
முழுசா வெஜிடேரியன் சாப்பாடு. அப்பாடா..... இன்னிக்கு மீனுக்கு லீவு:-))))
கல்யாணத்துக்குன்னு ஒரு ஸ்பெஷல் பூரி இருக்காமே!. தடியா பிஸ்கெட்டு போல இருந்துச்சு. தால், மூணு வகை காய் கறிகள், பஜ்ஜியா, பர்ஃபி, ஜிலேபி, பப்படம், மிருதுவான காராசேவ் மாதிரி ஒன்னு, குழம்பு போல ஏதோ ஒன்னு...........அவ்ளோதான். பாயசம், கேஸரின்னு ஒன்னையும் காணோம். சாப்பாடு ருசியும் ரொம்பச் சுமாராத்தான் இருந்துச்சு. இவுங்ககிட்டே கிச்சன் ஸ்கேல் இல்லை போல இருக்கு:-))))
பாதி சாப்பாட்டுக்கு நடுவிலேயே நம்மைத்தேடி ஆட்கள் வந்து மெஸேஜ் சொல்லிட்டுப் போறாங்க. மேடைக்குப் போகணுமாம். எதுக்கு? கல்யாணம் முடிஞ்சு ஃபோட்டோ செஷன் நடந்துக்கிட்டு இருக்காம். நம்ம அட்டெண்டன்ஸ் பதிவு பண்ணணுமுல்லே?
நாங்க போனப்ப மாப்பிள்ளை வீடு முடிஞ்சு பொண்ணுவீட்டு ஆட்கள் போட்டோவுக்கு நிக்கிறாங்க. அஞ்சு நிமிசம் காத்துருக்க வேண்டியதாப் போச்சு. மணமக்களுக்கு ரெண்டு பக்கமும் பொண்ணோட அப்பா அம்மா.
மாப்பிள்ளையின் தாய்தகப்பன் பின்னால் நிக்கறாங்க. சம்பந்திச் சண்டைக்கு ஏற்ற நிகழ்ச்சி. ஆனால் எல்லாரும் சிரிச்சுப் பேசறாங்களே தவிர ............
ஆங்...... சொல்ல மறந்துட்டேன் இல்லை? வரதட்சணை, சீர் செனத்தி லிஸ்ட், இத்தனை பவுன், இவ்வளோ வெள்ளி இப்படி ஒன்னும் கிடையாது. சுருக்கமாச் சொன்னா ஒரு பையனுக்கும் ஒரு பொண்ணுக்கும் புது உறவு
ஏற்படுத்திக் கொடுக்கும் மகிழ்ச்சியான குடும்ப நிகழ்ச்சி. இந்த மகிழ்ச்சியைப் பங்குபோட்டுக்க நம்மையெல்லாம் அழைச்சு ஒரு கொண்டாட்டம்.
நம்ம நாட்டிலும் இப்படி இருந்தா எதுக்கு கேஸ் சிலிண்டர் வெடிக்கப் போகுது? கோர்ட் எல்லாம் காலி ஆகிறாதா? வக்கீலுங்கதான் கஷ்டப்படுவாங்க........... காவல்துறைக்கும் வருமானம் கொறைஞ்சுருமோ?
பழைய நண்பர்களையெல்லாம் சந்திச்சுப்பேசி மகிழ்ந்தோம். எல்லார் கண்களிலும் உண்மையான மகிழ்ச்சி தெரிஞ்சது. இன்னும் ரெண்டு பந்தி நடக்கணுமாம். இப்பவே ஒம்போதரை ஆச்சு. வந்த பராத் வீடு திரும்ப நடுராத்திரி ஆகிருமாம். மகளையும் நண்பரையும் கொண்டுவிட்டுட்டு நாங்க பா திரும்பணும். செக்யூரிட்டி கெடுபிடி இருக்கே. அதனால் 'கவலைப்படாதீங்க. நாங்க வீட்டுவாசலில் வெயிட் பண்ணுவோமுன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.
பத்துமணி இருக்கும் ஃபர்ஸ்ட் லேண்டிங் வந்தப்ப. ராத்திரி டின்னர் முடிஞ்சு பாரில், டைனிங் ஏரியாவில் கூட்டம் கலைஞ்சு போயிருந்துச்சு. பார் மியா(வ்) மட்டும் உலாத்திக்கிட்டு இருந்துச்சு. மகளைப் பார்த்ததும் ஓடிவந்து காலுக்கருகில் நின்னுச்சு. அஞ்சாறுநாளில் நல்லாவே ஃப்ரெண்ட்புடிச்சு வச்சுருக்கு. தினம் டின்னர் நேரத்தில் ஆலன் மடியில் வந்து உக்கார்ந்துக்குமாம்:-) நானும் கொஞ்சம் தடவிக்கொடுத்துட்டு, மகளின் அறையில் போய் புடவையை மாத்திப் பழைய வேசத்துக்கு வந்தேன்.
ரெண்டு புடவைகளையும் மடிக்கவே 15 நிமிசமாச்சு. நியூஸியில் புடவைகளுக்கான ட்ரைக்ளீனிங் கடைகள் இல்லை. அதனால் ரொம்பக் கசக்காம ஒழுங்கா உடனுக்குடன் காப்பாத்துனால்தான் கொஞ்சநாள் தாக்குப்பிடிக்க முடியும்.
'அவசரமில்லாம மெதுவாவே ஓட்டுங்க. இப்ப என்ன கல்யாணத்துக்காப் போறோம்?' னு கோபால்கிட்டே சொல்லி வச்சேன்:-)) வழியெல்லாம் மை இருட்டு. கார் விளக்கு வெளிச்சத்தில் ரோடுக்கருகில் அங்கங்கே ஒன்னு ரெண்டுன்னு ஆட்கள் நடந்து போறாங்க. கையில் ஒரு டார்ச் லைட் கூட இல்லாம எங்கேதான் இப்படி இருட்டில் போறாங்களோ? 'சரேல்'ன்னு காருக்கு முன்னால் கடந்து போகும் உருவங்களில் பெண்களும் உண்டு.
எல்லோரும் ஃபிஜியன்கள்தான்.
'அவுங்க ஊர். அதனாலே பயமில்லாமப் போறாங்க'ன்னு இவர் சொன்னார். போகட்டும். ஆனா கையில் ஒரு விளக்கு வச்சுக்கலாமுல்லே? வண்டி எதாவது தெரியாமல் இடிச்சுட்டா?
கிட்டத்தட்ட 12 மணிக்கு வீட்டுமுன்னால் வந்து சேர்ந்தோம். இன்னும் யாரும் வரலை. காருக்குள்ளேயே ஸீட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நல்ல தூக்கம். திடீர்ன்னு வண்டி ஸ்டார்ட் ஆச்சு. வந்துட்டாங்களாம். காரை வீட்டுக்குள்ளே விட்டப்ப மணி ஒன்னரை. ரெண்டு பஸ்ஸும் வந்துருச்சாம்.
நாளைக்கு மாலை தானே ரிஸப்ஷென். காலையில் லேட்டா எழுந்திருக்கணுமுன்னு திட்டம் போட்டுக்கிட்டேன்.
நாம் ஒன்னு நினைச்சால்.....கல்யாண வீட்டுக்காரங்க வேறொன்னு நினைப்பாங்க போல!!!!!
தொடரும்.................:-)
Thursday, August 07, 2008
கல்யாண வீட்டு விஷயங்கள்: ஆறாம் நாள்.
Posted by துளசி கோபால் at 8/07/2008 02:46:00 PM
Labels: Gujarathi wedding rituals in Fiji, சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
மி தி பர்ஸ்ட்டு?
வாங்க சிஜி.
ராத்திரி ரெண்டரை மணிக்கு வகுப்புக்கு வந்த மொதல் மாணவர் நீங்கதான்.
கடமை உணர்ச்சிக்காக கிரேஸ் மார்க் 10:-)))
மிஸ் பண்ணிட்டேனே!!
Ok, me the second!!!!(முதலில் வந்தால் தான் பெருமைபடனுமா?) இன்று லாஜிக்கா வந்து கொட்டுது.
நீங்க சொன்ன சாப்பாடு ஐட்டம்ஸ் பார்த்தால் நம்மூர் கல்யாண சாப்பாடு தான் பெஸ்ட் போல இருக்கு.
மீண்டும் நல்ல கட்டுரை துளசி டீச்சர்.
பூனைக்குட்டி ரொம்ப க்யூட் :)
வாங்க க.ஜூ.
நம்ம சிஜி, கல்லூரிப் பேராசிரியர். அதான் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டார்.
இந்தப் பூனையை க்யூட்டுன்னா இன்னும் நம்ம கோகியைப் பார்த்தா என்ன சொல்வீங்களோ?
யாரது கோகி? உங்களுடைய நிக் நேமா? :)
ஐயோ ஐயோ......
கோபால கிருஷ்ணன்
இந்தப் பெயரை கூகுளில் தட்டுங்க. இருப்பான்.
எங்கும் எதிலும் இருப்பான். அவன் யாரோ? :-))))
க.ஜூ.
தனிமடல் அனுப்புனா அதைப் பார்க்கும் வழக்கமே இல்லையோ?????
அப்படியா? இப்போதே செக் பண்றேன், சாரி டீச்சர் :)
அப்ப கல்யாணம் முடிஞ்சதா? ஒரு மேளதாளம், உச்ச ஸ்தாயியில் மாங்கல்யம் தந்துனானேனா நவஜீவன... இதெல்லாம் கிடையாது.... சரி சரி நல்லா இருக்கட்டும்.... :)
ஆலன் .... :)
//இது தெரியாம 'தேமே'ன்னு எங்ககூட இவ்வளோ நேரம் இருந்து டயம் வேஸ்ட் பண்ணிட்டாங்க.... த்ச் த்ச் த்ச்.......//
யப்பா! என்ன ஒரு வில்லத்தனம். :))
ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சது. நாளைக்கு கட்டு சாத கூடையா? :))
வாங்க தமிழ் பிரியன்.
கல்யாணத்துக்கு வாத்திய கோஷ்டி இல்லாத நாடா இருக்கே.
நல்லவேளை.... அதை ஈடு கட்டறோமுன்னு ம்யூஸிக் சிஸ்டம் வச்சு நம்ம காதைக் கிழிக்காம இருந்தாங்களே அதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றி சொல்லிக்கணும்.
வாங்க அம்பி.
நேரம் போனாத் திரும்ப வருமா? :-))))
கட்டு சாதம்? ஊஹூம்....
கட்டு ரொட்டியா இருக்கலாம்:-))))
எங்க போனாலும் ஒரு மியாவ் உங்களுக்கு கிடைச்சிருது பாருங்க.
கல்யாண வீட்டுப் படங்கள் அருமை. கூடவே பொறுமையாக விளக்கியிருக்கிறீர்கள் முறைகளை.
இங்கும் யானைப் பொம்மை. கூடவே நிஜப் பூனையும்:)! கோகியைப் பற்றி கூகிளில் கண்டு பிடிக்க முடியலயே. சரி தனிமடல் கயல்விழிக்கு மட்டும்தானா:(?
வாங்க ராமலக்ஷ்மி.
புதுமுறையா இந்தக் கல்யாணத்துலே நான் பார்த்ததை உங்களோடு இல்லாமல் வேற யாரோடு பகிர்ந்து கொள்வேன்?
கோகிக்கு இவ்வளவு டிமாண்டா?
இதோ சுட்டி.
http://thulasidhalam.blogspot.com/2006/01/blog-post_13.html
http://thulasidhalam.blogspot.com/2005/07/17.html
வாங்க சின்ன அம்மிணி.
அதாங்க எனக்கும் புரியலை:-)
கல்யாணவீட்டில் என்ன்ன நடக்குதுன்னு நல்லா விசாரிச்சு பதிவு ம் போடும் உங்களுக்குமாடியில் நடப்பது மட்டும் தெரியலயாக்கும்,....சரி சரி.. துளசிக்கும் தெரியாததும் புரியாததும் இருக்கும்போல..
ரைட்டு. மீ த 19த். வேற என்ன பண்ண டீச்சர். எப்பவும் லேட் ஆயுடுது. :)
கல்யாண வீட்டில் உங்கள் புடவைதான் பளிச் :D :D (மணப்பெண்ணிற்கு அடுத்து)
சாப்பாடு சுமாரா??? ஓகே. நானும் நம்ம ஊர்க்கல்யாணம் ஒண்ணுக்குப் போறேன். முடுஞ்சா படம் எடுத்து, விலாவாரியா விளக்குறேன்(சாப்பாட்டுக்குன்னே ஒரு பதிவு) :P. எல்லார்க் காதிலும் கொஞ்சமே கொஞ்சம் புகை வருமா டீச்சர் :P
பி.கு.:இது லீவ் லெட்டரும் கூட டீச்சர் :)))
//பழைய நண்பர்களையெல்லாம் சந்திச்சுப்பேசி மகிழ்ந்தோம்//
இதை போல நிகழ்ச்சிகள் இதற்க்கு மிகவும் பயன்படுகின்றன.
//நியூஸியில் புடவைகளுக்கான ட்ரைக்ளீனிங் கடைகள் இல்லை. அதனால் ரொம்பக் கசக்காம ஒழுங்கா உடனுக்குடன் காப்பாத்துனால்தான் கொஞ்சநாள் தாக்குப்பிடிக்க முடியும்//
:-)
//'அவுங்க ஊர். அதனாலே பயமில்லாமப் போறாங்க'ன்னு இவர் சொன்னார். போகட்டும். ஆனா கையில் ஒரு விளக்கு வச்சுக்கலாமுல்லே? வண்டி எதாவது தெரியாமல் இடிச்சுட்டா?//
மேடம் நியூசில குற்றங்கள் மிக குறைவு என்று கேள்வி பட்டேன் உண்மையா?
மெயின் டே அன்னிக்குக் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் டீச்சர்... :)
திருஷ்டி சுத்திப் போடுங்க டீச்சர்..பொண்ணு,மாப்ளைக்கல்ல..உங்களுக்கு.
அவ்ளோ சூப்பரா எழுதியிருக்கீங்க..!
வாங்க கயலு.
கல்யாணம் நடந்த இடம் புது ஊராச்சேப்பா. அதுவும் மண்டபம் வேற புதுசாக் கட்டி இருக்காங்க நாங்க நாட்டைவிட்டு வந்த பிறகு.
அடுத்தமுறை நேரா மாடிக்குத்தான்:-))))
வாங்க புதுவண்டு.
சாப்பாட்டுக்குன்னு படங்களோட போடணும். அப்பத்தான் புகையை எதிர்பார்க்க முடியும்!
(நானும் படம் ஒன்னு இன்னிக்குப் போட்டுருக்கேன்)
புடவை?
மொத்தக் கல்யாணக்கூட்டத்திலேயும் 'காஞ்சீபுரம்' உடுத்துனது நானும் மகளும்தான்:-) அதுவும் டிஸைனர் புடவையாக்கும்:-)
வாங்க கிரி.
விளக்கில்லாமப் போனது ஃபிஜீயில்.
குற்றங்கள்.... நியூஸி?
மக்கள் தொகை 41 லட்சம்தானே மொத்த நாட்டுக்கும். அதுதான் குற்றங்கள் குறைவுபோல ஒரு தோற்றம். விகிதாச்சாரப்படி பார்த்தீங்கன்னா உலகநாடுகள் எல்லாம் ஒன்னுபோல இருக்கு.
மனுச சுபாவம்..... எப்படி மாறும்?
வாங்க ரிஷான்.
மெயின் டே சாப்பாடு ரொம்ப சுமார். லேட்டா வந்து தப்பிச்சுட்டீங்க:-))))
ரீச்சர், பேக் டு ஆக்ஷன்.
வாங்க கொத்ஸ்.
மீண்டு(ம்) வந்ததுக்கு நன்றி. போன வேலை எல்லாம் சுபமாய் முடிஞ்சதா?
வகுப்பைக் கொஞ்சம் ஒழுங்கு செஞ்சு, வராத மாணவர்களை இழுத்துக்கிட்டு வாங்க:-))))
Post a Comment