Friday, June 01, 2007

நியூஸிலாந்து பகுதி 64







பெண்கள்னு சொல்றப்ப ஒரு விசேஷமான பெண்ணின் ஞாபகம் வருது. நாந்தான் இவுங்களை ஸ்பெஷல்னு நினைக்கிறேனே தவிர,மத்தவங்க எல்லாம் இவரைப் பெண்களில் ஒருவரா சாதாரணமாத்தான் நினைக்கிறாங்க.

மவொரி, வெள்ளையர்கள் கலப்பினத்தைச் சேர்ந்த ஜ்யார்ஜ் என்றவர் தனக்குப் பதினேழு வயசானப்ப ( 1974), தான் ஆண் உடலில் இருக்கும் பெண் என்ற உண்மையைக் கண்டுக்கிட்டார். அதுக்கப்புறம் ஆஸ்தராலியாவுக்குப்போய் ஜ்யார்ஜீனாஎன்ற பெயரில் சிகப்பு விளக்குப் பகுதிகளின் இரவு விடுதிகளில் நடனம் ஆடிக்கிட்டு இருந்தார். அப்ப சிலரால் வன்புணரப்பட்டு, ரொம்ப பாதிப்பை அடைஞ்சுட்டு இங்கே நியூஸிக்கே திரும்ப வந்துட்டார். இங்கேயும் இரவு விடுதிகளில் நடனம் ஆடிக்கிட்டு இருந்து அப்புறம் நடிப்புத் தொழிலில் போகலாமுன்னு அதுக்காக முயற்சி செஞ்சு சில நாடகங்களில் நடிச்சார். கூடவே ரேடியோ ஹோஸ்டாவும் இருந்து டாக்(talk) ஷோ நடத்துனார். இதெல்லாம் நடந்து பத்து வருசங்கள் கழிச்சு 1984 லே அறுவை சிகிச்சை(sexual reassignment surgery)செஞ்சுக்கிட்டு முழுப்பெண்ணாவே மாறிட்டாங்க.

அவுங்க இருந்த ஊரான கார்ட்டெர்டன் (Carterton)லே பள்ளிக்கூடத்து 'போர்ட் ஆஃப் ட்ரஸ்ட்டீஸ்' தேர்தலில் ஜெயிச்சாங்க. அரசியல் ஆர்வம் வந்துருச்சு. 1995 லே அந்த ஊருக்கான மேயர் தேர்தலில் நின்னு ஜெயிச்சு, உலகின் முதல் & நியூஸியின் முதல் transsexual மேயர் ஆனாங்க.

இங்கே அநேகமா எல்லா ஊர்களுக்கும் ஒரு மேயர் இருப்பாங்க.( நம்மூர் பஞ்சாயத்து மாதிரியா?) அதிலும் பெண் மேயர்கள் ரொம்ப அதிகம்தான். (மேயராவே இருக்கணும். இருந்தா மேயராத்தான் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு அதேபோல மேயராவும் ஒருத்தர் இருந்துக்கிட்டு இருக்கார். அவரைப் பத்தி முந்தி ஒரு சமயம் எழுதுனது இங்கே)

ஜ்யார்ஜினா 1999 தேர்தலில் லேபர் சார்பா நின்னு ஜெயிச்சு பாராளுமன்ற அங்கத்தினர் ஆனாங்க. உலகின் முதல் 'திருநங்கை' எம்.பி. இவுங்க என்ற பெருமையும் கிடைச்சது. 'ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படித் திருமணம் செஞ்சுக்க அங்கீகாரம் வேணும். அவுங்களுக்கு தனிமனித உரிமைப்படி எல்லா உரிமைகளையும் கொடுக்கணுமு'ன்னு இவுங்க அரசாங்கத்துகிட்டே வலியுறுத்துனாங்க. ஏற்கெனவே 1986லேயே ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் வெளிப்படையாக அங்கீகாரம் உண்டு என்ற சட்டம் வந்தாலும் மக்கள் முழுமனசோட அதை ஏத்துக்கலைன்னு இவுங்க நினைச்சாங்க.

இந்த சமயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் நடத்துன ஒரு ஊர்வலத்தில்(Hero Parade) கலந்துக்கிட்டாங்க நம்ம ஜென்னி ஷிப்லி. இதுவரை நேஷனல் கட்சித்தலைவர்கள் யாருமே செய்யத் துணியாத ஒரு காரியம். இன்னும் சொல்லப்போனா பிரதமர் என்ற பதவியில் உள்ள யாருமே இதுவரை இப்படி ஒரு ஊர்வலத்தில் பங்கேற்றதே இல்லை. நேஷனல் கட்சி இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்கவேணாமுன்னு செஞ்ச புரட்சியோ புரட்சி இது.

அப்ப 1998லே இருந்த கலாச்சார மந்திரி 'மரீ ஹேஸ்லர்', நியூஸிக்கொடியை வேற மாதிரி மாத்தணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கு(ம்) ஆதரவு தெரிவிச்சாங்க ஷெப்லி. உடனே கொடியை எப்படி புதுசா வடிவமைக்கலாமுன்னு மக்களிடத்தில் கேட்கவும் செஞ்சாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் எல்லாம்கூட இந்த ப்ராஜெக்டில் கலந்துகிட்டு வரைஞ்சு தள்ளுச்சுங்க. அதுலே இருக்கும் யூனியன் ஜாக் வேணுமா வேணாமான்னு அங்கங்கே அறிக்கைகள், கருத்துக்கணிப்புகள் எல்லாம் வந்துச்சுதான். இன்னும் முடிவாத் தீர்மானம் ஆகலை. இப்ப இருக்கும் கொடியும் 1869 முதல் புழக்கத்தில் இருக்கு.
பெரணி இலை வடிவம்தான் நியூஸிக்குச் சரியா இருக்கு(மா)ம்,1980 ஒலிம்பிக்ஸ்க்கு டிசைன் செஞ்ச பெரணி இலைக் கொடியில் ஒலிம்பிக்ஸ் வளையத்தை மட்டும் எடுத்துட்டு கொடியை வச்சுக்கலாமுன்னு சிலர் சொல்றாங்க. ஆனா அந்தப் பெரணி இலை இருக்கும் கொடி இப்ப நியூஸி ரக்பி டீமான ஆல் ப்ளாக்குக்குக் கொடியா இருக்கு.
மவோரிகள் தங்களுக்குன்னு ஒரு கொடியை வடிவமைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா அரசியல் கட்சிகளுக்குத் தனித்தனிக் கொடிகள் கிடையாது( பொழைக்கத் தெரியாத மனுசங்க. கட்சி ஆரம்பிச்சவுடனே கொடியைப் பறக்கவிட வேணாம்?இதுங்க எங்கே உருப்படப்போகுது?)

இப்ப இருக்கும் நியூஸிக் கொடியும், ஆஸிக் கொடியும் சட்னு பார்த்தா ஒண்ணுபோலவே இருக்கு. அதனாலெ குழப்பம் ஏற்படுது(!), (இது என்னவோ உண்மைதான். ஆஸியிலே அஞ்சு நட்சத்திரம்! ஒரு பெரிய நட்சத்திரம் இடதுபக்கம் கீழே இருக்கு)மவொரிகளின் கலாச்சாரத்தைக் கொடியில் 'கோடி' காட்டலை, இங்கிலாந்தின் காலனியா இருந்தோமுன்னுஇன்னும் யூனியன் ஜாக் நினைவூட்டிக்கிட்டே இருக்குது, அதைப் பார்த்ததும் மனசில் தேசிய உணர்வு எழும்பலை. அதனால் கொடியை மாத்தியே தீரணுங்கறது ஒரு கூட்டத்தின் எண்ணம்.

இன்னொரு கூட்டம், 'கூடவே கூடாது........யார் சொன்னா தேசிய உணர்வை எழுப்பலைன்னு? நியூஸிலாந்து மக்கள் தேர்ந்தெடுத்த கொடி இது 104 வருசமா இருக்கு.இந்தக் கொடியின்கீழ் உலக யுத்தங்களில் கலந்துக்கிட்டுப் போராடி வீரமரணம் அடைஞ்சவங்களுக்கு மரியாதை தரும் நிமித்தம் இதே வடிவம்தான் இருக்கணும். எவ்வளவு அழகா நம்ம தென் வானத்தில் இருக்கும் சதர்ன் க்ராஸ் கொடியில் அமைஞ்சிருக்கு. அதுவும் அஞ்சு முனை நட்சத்திரம்! இந்த நட்சத்திரம் வழிகாட்டித்தானே ஆதிகாலத்தில் இங்கே வந்தார் கேப்டன் குக். இந்த நாட்டின் சரித்திரத்தைச் சொல்லும் விதமா அதுலே யூனியன் ஜாக் இருக்கறது பொருத்தம்தான்'னுசொல்றாங்க.

சரி. பொது மக்கள் இப்ப என்னதான் நினைக்கறாங்கன்னு ஒரு ரெஃபரண்டம் நடத்திடலாமுன்னு நினைச்சா அதுக்குக் குறைந்த பட்சமா 10 % வாக்காளர்கள் மனுவில் கையெழுத்துப் போடணும். இங்கே எந்த ஒரு விஷயத்துக்கும்இது பொருந்தும். இந்தக் கொடி விஷயத்தில் ஒரு லட்சம் பேர்தான் (2005 தேர்தல் சமயம்)கையெழுத்துப் போட்டுருந்தாங்க.அந்த வருஷம் பதிவு செஞ்சிருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,847,396. அதனாலே ரெஃபரண்டத்துக்கே ஆதரவில்லைன்னு கைவிடவேண்டியதாப் போச்சு. பார்க்கலாம் அடுத்த தேர்தல் சமயத்தில் போதுமான கையெழுத்தைச் சேர்க்க முடியுதான்னு.
இந்தக் கொடிகள் எல்லாம் நல்லா இருக்கு. இதுலே ஒண்ணைத் தேர்ந்தெடுத்துக்கலாமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்!

15 comments:

said...

கும்மானிங் டீச்சர்

கருப்பு-சிவப்பு கொடி அங்கியுமா??
நம்ப முடியவில்லை
,வில்லை
வில்லை
..............
.
.
.
.
.
.
.
.
.
..
வில்லை.
ல்லை.
லை.

கருப்பு-சிகப்பு பாத்தாலே கண்ணைகட்டுதுடா சாமி.

சாரி டீச்சர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.

said...

ஃபெர்னும் 4 ஸ்டாரும் உள்ள சிகப்பு நீலக்கொடி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பாப்போம். புதுக்கொடி எப்ப வருதுன்னு

said...

கீழே இருந்து இரண்டாவது கொடி சரிப்பட்டு வரும் போல் தெரிகிறது.

said...

வாங்க பெருசு.

வகுப்பிலே வாயை(யே)த் திறக்காம இருந்த உங்களை எழுப்பி விட்டதுக்கு
இந்த கறுப்புசிவப்புக் கொடிக்கு நன்றி சொல்ல வச்சுட்டீங்களே:-))))

இங்கே ஒவ்வொரு ரீஜனுக்குமே ஒரு அஃபீசியல் கலர் இருக்கு. நியூசி நாட்டின்
அஃபீசியல் கலர் கறுப்பு. எங்க ஊர் இருக்கும் கேண்டர்பரி ரீஜனின் கலர்
கறுப்பும் சிவப்பும்தான். சொன்னா நம்பணும்.

அதுவும் எங்க ரீஜன் கலந்துக்கும் ரக்பி போட்டி நடக்கும்போது ஊரே எதோ திமுக
மகாநாடு நடக்கறாப்போல கறுப்பும் சிவப்புமா அலங்கரிச்சுக்கிட்டு இருக்கும்.
அதிலும் முகத்துலே ஃபேஸ் பெயிண்டிங் செஞ்சுக்கிட்டுப் புள்ளைங்க வலம் வரும்.
போதாக்குறைக்கு கறுப்பு பலூனும் சிவப்பு பலூனுமா கலந்து கட்டிப் பறக்கும்.
இதைப் பத்திக்கூட முந்தி ஒரு பதிவே போட்ட நினைவு.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

சில டிஸைன்கள் உண்மைக்குமே நல்லாத்தான் இருக்குல்லே?

said...

வாங்க குமார்.
எனக்கும் இது பிடிச்சிருக்கு. பார்க்கலாம் எது வரப்போகுதுன்னு.
அதுக்கு முன்னாலே ரெஃபரண்டம் இருக்குல்லே?

said...

//உலகின் & ந்யூஸியின் முதல்
transsexual மேயர் ஆனார்//

இதுதான் 'பெரிய பூனைக்கு பெரிய ஓட்டை, சிறிய பூனைக்கு சிறிய ஓட்டை' டெக்னிக் என்பதா?

said...

//( பொழைக்கத் தெரியாத மனுசங்க. கட்சி ஆரம்பிச்சவுடனே கொடியைப் பறக்கவிட வேணாம்?இதுங்க எங்கே உருப்படப்போகுது?)//

இதற்காகத்தான் தங்களைப்போன்ற தங்கத்தலைவி அரசியலில் குதித்து நாட்டு மக்களை வழி நடத்த வேண்டும் என்பது எங்களை போன்ற தொண்டர்களின் நீண்ட நாளைய ஆசை!!:-D

said...

தலைவி,(இந்த நியூசியை முடிக்கிறவரை இப்படியே கூப்பிடலாம் என எண்ணம்.

கடைசிக்கு முந்தின கொடிதான் பெஸ்ட்டு கண்ணா பெஸ்டு. இதை நான் சொன்னதா அங்க சொல்லிடுங்க.

நியூசியின் மாதாமகி வாழ்க!!

said...

டீச்சர் கருப்பு-சிவப்பு எங்க இருந்தாலும் பிரச்சினைதான் போலிருக்கே.. நம்ம கொத்ஸ் ஸார் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். அந்தக் கடைசிக்கு முந்தி பெஸ்ட்டுதான்.. அத்தோட அடுத்த தபா கருத்துக்கணிப்பு வைச்சாங்கன்னா எம் பேர்ல ஒண்ணு, கொத்ஸ் பேர்ல ஒண்ணுன்னு ரெண்டு கள்ள ஓட்டைச் சேர்த்து போட்டிருங்க.. அப்புறம் கடைசியா நானும் சொல்லிக்கிறேன்..
நியூஸிலாந்து மாதாகி ஜே..

said...

வாங்க சிஜி.

//இதுதான் 'பெரிய பூனைக்கு பெரிய ஓட்டை,
சிறிய பூனைக்கு சிறிய ஓட்டை' டெக்னிக் என்பதா?//

அட! ஆமாம்ல்லே? :-)))))

அப்படித்தான் வச்சுக்கணும். அவுங்கவுங்களுக்குத் தனிவழி வேணுமாமே:-)

said...

வாங்க CVR.
இப்படி அடிக்கடி வரும் விபரீத ஆசைகளுக்கு இடம் கொடுக்காதீங்க.
சொல்லிட்டேன்,ஆமா:-))))

said...

வாங்க கொத்ஸ்.

//,(இந்த நியூசியை முடிக்கிறவரை இப்படியே .....//

வகுப்பைச் சீக்கிரம் ஊத்திமூட இப்படி (யும்) ஒரு உத்தி இருக்கா?

said...

வாங்க உண்மைத்தமிழரே.

நல்ல ஓட்டுப்போடவே நேரமில்லை. இதுலே கள்ள ஓட்டு வேறயா?

//நியூஸிலாந்து மாதாகி ஜே..//

அது 'மாதாமகி'ங்க.

பிதாமகனுக்குப் பெண்பாலாம். எல்லாம் கொத்ஸின் உபயம்:-)

said...

//அது 'மாதாமகி'ங்க.

பிதாமகனுக்குப் பெண்பாலாம். //

நான் சொல்ல வந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க. நன்றி. :))