Wednesday, June 06, 2007

நியூஸிலாந்து பகுதி 66

அது என்னங்க, அரசியல்வாதிகள் எல்லாம் மாணவர்களையே குறி வைக்கறாங்க? மாணவ சமுதாயம்நினைச்சா எதுவேணாலும் நடந்துருமோ? இல்லை.......இளம் மனசைக் குளிர்விச்சா, அப்படியே பெத்தவங்களும்குளிர்ந்து போவாங்கன்னா??

படிக்கும் மாணவர்களுக்குக் கொடுக்கற கடனுக்கான வட்டியைக் குறைச்சாங்க. இது இப்பப் புதுசாச் சேர்ந்த மாணவர்களுக்குதான். ஆனா 2001 வருசத்துக்கு முன்னாலே வாங்குனவங்க அப்ப இருந்த வட்டியைக் கட்டணுமுன்னும் சொன்னாங்க. அதுசரி, படிச்சு முடிச்ச பிறகு தானே? அப்பப் பார்த்துக்கலாம்........... கடனில்லாத மாணவனைப் பார்க்கறது இங்கே அபூர்வம்.
அதுவுமில்லாம, இங்கேதான் படிக்கற வயசுன்னு ஒண்ணும் இல்லையே. யாரு வேணா எப்ப வேணாப் படிக்கலாம்.ரிட்டயர் ஆனபிறகு படிக்கிறேன்னு கடன் வாங்கிக்கிட்டுப் படிச்சவங்க பலர் இருக்காங்க. இவுங்க எப்பப் படிச்சு முடிச்சு,அப்புறம் எப்ப( எப்படி?) வேலைக்குப் போய்க் கடனைக் கட்டுவாங்க? எல்லாம் காந்திக் கணக்குதான்.

2002 தேர்தலில் ஓட்டுப்பதிவு கூட குறைஞ்சு போச்சு. வழக்கமா 89% ஓட்டுப்போடும் மக்கள்ஸ், இந்த முறை 77% பதிவுதான் செஞ்சிருந்தாங்க. 'எப்படியோ போங்க'ன்ற மனப்பான்மை வந்துருச்சோ என்னவோ! நேஷனல் கட்சிக்கு 27 இடம்தான்.லேபருக்கு 52. பாராளுமன்றத்துலே மொத்தம் 121 இடங்களாச்சே. அதனாலே 61 இருந்தாத்தானே 'அரியணை' ஏற முடியும்?என்ன செஞ்சிருப்பாங்கன்றீங்க? மறுபடி கூட்டோ கூட்டு.
( எங்க நாட்டு அம்மா)

'மருத்துவப் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ஆஸ்பத்திரிகளில் போனா அதி முக்கிய அறுவை சிகிச்சைத் தவிர,பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் என்னும் காத்திருப்பு கூடுதலா இருக்கு. நோயாளிகளோட வரிசை ரொம்ப மெதுவா இருக்கு. அவுங்கவுங்க முறை வர்றதுக்குள்ளே ஆளே போயிருவாங்க'ன்னு கூக்குரல் எழுந்தது.போதுமான மருத்துவத்துறை ஆட்கள் இல்லைன்றதும் ஒரு முக்கிய காரணமா இருந்துச்சு. செவிலிகள் பற்றாக்குறை வேற.இங்கே செவிலியர் படிப்பு முடிஞ்சவுங்களுக்கு, அண்டை நாடான ஆஸ்தராலியாவில் வேலை சுலபமா அதிக சம்பளத்தோடக் கிடைச்சது. மேலும் நியூஸிகளுக்கு ஆஸிக்குப் போகவும், அங்கே வேலை செய்யவும் தடை ஏதும் இல்லை.விஸான்னு எதுவும் வாங்கவும் வேணாம். கூடக் காசுன்னதும் மக்கள்ஸ் போகாம இருப்பாங்களா? மேலும் பிரிட்டனிலும் வேலைவாய்ப்பு இந்தத் துறையில் ஏராளம்.

இப்பத்து அரசாங்கம் இதுக்கு எதாவது வழி செய்யணுமுன்னு மத்த நாட்டுச் செவிலியர்களுக்கு இங்கே வேலைக்கானஅனுமதி கொடுக்கும் விதிகளைக் கொஞ்சம் தளர்த்துச்சு. இதைப் பயன்படுத்திக்கிட்டு, நம்ம கேரள நாட்டுச் செவிலியர்கள் நிறையப்பேர் வந்து இப்போ இங்கே வேலை செய்யறாங்க. டாக்டர்கள் விஷயம்தான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை(-:


டாக்டர்கள் இங்கே வந்து வேலை செய்யணுமுன்னா மட்டும் ஆயிரம் கண்டிஷன்கள். அவுங்களை மீண்டும் தேர்வு எழுதவச்சே முக்காவாசிப்பேரை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. அதுவும் மூணு முறைக்கு மேலே தேர்வுஎழுத அனுமதி இல்லை. ரெண்டு முறை தேர்வில் தோத்துப்போய், மூணாவதுக்குப் பயந்துக்கிட்டு வேற எதாவது வேலை செய்யப் போயிரும் டாக்டர்களையும் நாங்க சந்திச்சு இருக்கோம். டாக்ஸி ஓட்டியாக்கூட வேலை செய்யறாங்க. பேசாம அவுங்க நாட்டுலேயே இருந்திருக்கலாம். படிச்ச படிப்பு ஏத்த மரியாதையாவது மிச்சமாயிருக்குமுன்னு நான் புலம்புவேன்.


இங்கே எல்லாருக்கும் ஒரு குடும்ப டாக்டர் இருக்கணுமுன்னு ஒரு ஏற்பாடு இருக்கு. எல்லாப் பகுதிகளிலும், G.P. ன்னு சொல்லும் ஜெனரல் ப்ராக்டிஷனர்ஸ் சிலர் சேர்ந்து மருத்துவ மனை வச்சுருப்பாங்க. படுக்கை வசதிகள் எல்லாம் இல்லை. பகல் நேரம் காலை 9 முதல் மாலை 5.30 வரை டாக்டரைப் பார்க்கும் க்ளினிக்தான். இங்கே மருத்துவர்கள் மனம்போனபடி ஃபீஸ் வாங்க முடியாது. அரசு நிர்ணயிக்கும் தொகைதான். இதுலே மக்கள்ஸ் வருமானம் அனுசரிச்சு குறைச்சலாவோ,கூடுதலாவோ வாங்குவாங்க. உதாரணத்துக்கு ஒரு நோயாளிக்கு 100 டாலர்ன்னு அரசு சொன்னா, வருஷத்துக்கு 36,000 வருமானம் இருக்கறவங்ககிட்டே 50 வாங்குவாங்க. 16 வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அரசாங்க உதவி வாங்கறவங்களுக்கு, குறைஞ்ச வருமானம் உள்ளவங்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்குன்னு இன்னும் குறைச்சலா வாங்குவாங்க. இதுலே துண்டு விழும் காசு அரசு, மருத்துவர்களுக்குக் கொடுத்துரும்.

கொஞ்சம் வயது போனவர்கள் டாக்டர் செலவைப் பார்த்துப் பயந்து, தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டலைன்னு செய்தி வர ஆரம்பிச்சது. இது ஆபத்தாச்சே. ரொம்ப மோசமான நிலைக்குப் போயிட்டா அரசாங்கம்தானே கவனிக்கணும்? முன்னெச்சரிக்கையா இருக்கலாமுன்னு லேபர் ஆட்சியில் இதைக் கொஞ்சம் குறைச்சாங்க. 50 வயசுக்குமேலே இருக்கறவங்களுக்கு யாரா இருந்தாலும் இருந்தாலும் குறைவான காசுதான். இன்னிக்குக் கணக்குக்கு ஒரு தடவை டாக்டரைப் பார்க்க 28 $ கொடுத்தாப் போதும்.

மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்தை வாங்கிக்க மருந்துக் கடைகளில் போனா, அங்கேயும் ஒரு சில மருந்துகளைத் தவிர மத்த மருந்துகளுக்கு அரசு மானியம் கிடைக்கும். இதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துனதாலே மக்களுக்கு மருந்துச் செலவு குறைஞ்சது.

மருத்துவக் காப்பீடு எடுத்துக்கிட்டோமுன்னாதான் நல்லது. ஆனாலும் தனியார் ஆஸ்பத்திரிகள் இல்லாததால் எதுக்கெடுத்தாலும் அரசாங்க மருத்துவ மனைகளையே நம்பி இருக்கணும். இப்ப ஒரு பதினைஞ்சு வருஷமா ஹெல்த் இன்ஷூரன்ஸ் கம்பெனியே முக்கிய நகரங்களில் மருத்துவ மனைகளைத் திறந்திருக்கு. காப்பீடு இல்லாம உள்ளே கால் வைக்கமுடியாது. ஆர்கனைஸ்டு சர்ஜரிகள் மட்டும் இங்கே நடத்துறாங்க. அரசாங்க ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே இங்கேயும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதுக்கும் நம்ம குடும்ப மருத்துவர்கள் மூலமாத்தான் போகணும்.

இங்கே உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கெல்லாம் போனா நாம் காசு எதுவுமே கொடுக்க வேணாம். அரசாங்கமே பார்த்துக்கும். ரத்தப் பரிசோதனைக்கெல்லாம் குடும்ப டாக்டர் பரிந்துரைக்கணும். ரிஸல்ட்டும் அவுங்களுக்குத்தான் போகும். எக்ஸ்ரே, MRI இதெல்லாமும் காத்திருக்கக் கூடிய வகைன்னா அரசாங்க மருத்துவ மனையிலேயே இலவசமா செஞ்சுக்கலாம். நமக்குக் காப்பீடு இருக்குன்னா, இதுக்குண்டான தனியார் நிலையங்களில் செஞ்சுக்கலாம்.

டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை நீண்டகாலம் எடுக்கணுமுன்னா மூணு மாசத்து சப்ளை கிடைக்கும். அதுவுமேஒரு மாசத்துக்குண்டான மருத்தைக் கொடுத்துட்டு அது முடியும் சமயம் இன்னொரு மாசத்துக்குன்னு கொடுப்பாங்க.மருந்துக் கடைகளுக்குத்தான் இந்தப் பொறுப்பு. முதல் மாசத்துக்கு வாங்கும் சமயம் காசு கொடுக்கறதோட சரி. அதுக்கப்புறம் அடுத்த ரெண்டு மாச சப்ளைக்குக் காசு கொடுக்க வேணாம்.

மருந்துப்பேரைத் தெரிஞ்சு வச்சுக்கிட்டு, அப்படியே போய் கடையில் வாங்கிக்கறதெல்லாம் இங்கே முடியாது. தலைவலி மாத்திரைதான் இப்படிக் கிடைக்கும். கை வைத்தியமா ஆண்ட்டிபயாடிக் வாங்கித் தின்னுற கதையெல்லாம் போச்சு.எதுவும் மருத்துவர் சொல்லாமக் கிடைக்காது. பொதுவாவே இங்கே மருந்துக்களை அவ்வளவாப் பரிந்துரைக்கவே மாட்டாங்க இந்த மருத்துவர்கள். நமக்குத்தான் டாக்டர் க்ளீனிக்போயிட்டு, வெறுங்கையா வர்றது என்னவோ போலிருக்கும்:-)))))) முழ நீள மருந்துச்சீட்டுக்குப் பழக்கப்பட்டவங்களாச்சே நாம். அப்புறம் 'டானிக்' எழுதி வாங்கிக்கறது? மூச்...பேசப்படாது ஆமாம்.

50 வயசுக்கு மேலே இருக்கும் பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் பரிசோதனை (மம்மோகிராம்) ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை முற்றிலும் இலவசமாக்கினாங்க.....வரப்பிரசாதமுன்னே சொல்லலாம். பலருக்கும் பயனா இருக்கு.

பிரசவத்துக்குத் தாய்மாருக்குக் கொடுக்கும் லீவையும் அதிகப்படுத்துனாங்க. பிரசவ சமயத்துலே குழந்தையோட அப்பாவுக்கும் 2 வாரம் லீவு சம்பளத்தோடு கிடைக்கும். குழந்தை வளர்ப்பில் ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கணுமில்லையா?அதுக்கப்புறமும், இன்னும் லீவு வேணுமுன்னா ஒரு வருஷம்வரை சம்பளமில்லாம லீவு தாயோ, தகப்பனோ எடுத்துக்கலாம். அவுங்க வேலைக்கு ஆபத்து இல்லை. அப்புறம் போய்ச் சேர்ந்துக்கலாம். 'பார்ட்னர்ஸ் ' எல்லாரும் தனிக் குடித்தனமாவே இருக்கறதாலே இதெல்லாம் ரொம்ப உதவியாத்தான் இருக்கு.

22 comments:

said...

கும்மானிங்க டீச்சர்

அங்கிட்டும் அம்மா,அதுவும் கறுப்பு சிவப்பு. ம்ம்ம்ம்ம்.

கலரைப்பாத்து என்ன ஆவப்போவுது.

பாடத்தை கவனிப்போம்.

said...

இதெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க. இப்படி கூட இருக்குமான்னு நெனச்சு பார்க்கவே முடியல

said...

வாங்க பெருசு.

//பாடத்தை கவனிப்போம்.//

இது..........:-)

said...

வாங்க விவசாயி.
எப்படி இருக்கீங்க?

//இதெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க//

எதெல்லாம்? மருத்துவத்துறைக்கே இப்படிச் சொன்னா
அப்ப உங்க 'விவசாயத்துறை'?

திடீர்னு உங்க வருகைதான் எனக்கு இப்போ ஆச்சரியமா இருக்கு:-)))))

said...

திருமண நாள் வாழ்த்துக்கள். long weekend க்கு ஹாமில்டன் வரை போயிருந்தேன். உங்க புகழ் நியூஸி முழுக்க பரவி இருக்கு

said...

இங்க கூட மருத்துவம் என்பது ரொம்ப தொந்தரவு பிடிச்ச வேலை டீச்சர்.
போனமா டாக்டரை பார்த்தோமா,மருந்து வாங்கினோமான்னு இல்லாம நிறைய complications!! :-(

said...

நம்மூர் அம்மா,பிலிபைன்ஸ் அம்மா(இமெல்டா) வுக்கு செருப்பு கணக்கில்லாமல் இருந்ததை போட்டோவில் பார்த்த ஞாபகம்..
உங்கூர் அம்மாவுக்கு என்ன லிப்ஸ்டிக்கா? சும்மா கோவில் சுவற்றில் அடிக்கிற மாதிரி அடித்திருக்கிறார்கள்.அவுங்க வீட்டில் ரெய்ட் வந்தா கணக்கில் காட்டப்படாத (கணவரிடம்/பார்ட்னரிடம்) லிப்ஸ்டிக் படம் உலகுக்கு காணக்கிடைக்கும்.
மகப்பேரு விடுப்பு இங்கு சம்பளத்துடன் 2 மாதங்கள்.அதை 4 மாதங்களுக்கு மாற்றலாமா என்று யோசிக்கிறார்கள்.கர்பமான சில தனியார் நிறுவனங்கள் வேலையில் இருந்து தூக்கிறார்கள் என்ற குறை கூவலும் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது.
கடன் எடுத்து படிப்பா?கொடுத்து வைத்தவர்கள்.
சுத்தமான காற்று,தூய்மையான தண்ணீர் உள்ள உங்க ஊருக்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதே நல்லது தானே!!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நம்ம புகழா? அத்த்த்த்தையேன் கேக்கறீங்க...........:-)
நியூஸியின் சரித்திரத்தில் இடம்புடிச்சுட்டோம்லெ!
ஒரு நாள் நம்ம கூகுள்லே Tulsi Gopal னு போட்டுப் பார்த்ததுலே,
இங்கே கிறைஸ்ட்சர்ச் ஹெரிட்டேஜ் பக்கத்துலே நம்ம பேர் & போட்டோ
இருக்கு.நானே வாயைப் பொளந்து நின்னுட்டேன்:-)))

இத்தைப் பாருங்க


நம்ம புகழ் திக்கெட்டும் தீப்போல் பரவுது! ( வசன உதவி: மை.ம.கா.ரா)

said...

டீச்சர் உங்களுக்கு மறு மொழி எழுதலைன்னு பெயிலாக்கிறாதீங்க. கூகிள் ரீடர்ல தவறாம வாசிக்கிறேன்.

//வடுவூர் குமார் said... உங்க ஊருக்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதே நல்லது தானே!!
//
அய்யா... என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? குறைவா மருத்துவர் இருப்பதால.... நமக்கு மருத்துவச் செலவு அதிகம்; அவங்களுக்கு வருமானம் அதிகமால்ல போயிடும். Demand-supply யோசிச்சிப் பாருங்க.

said...

படிப்புக்கு கடன் எல்லாம் இங்க சர்வ சாதாரணம். மருத்துவத் துறையோ வெறும் ரணம். கொடுமைடா சாமி. விரிவா பதிவு போடற அளவு மேட்டர் இருக்கு.

மத்தபடி உங்க ஊர் அளவு இலவசம் குடுத்து இங்க கட்டுப்படி ஆகாது.

said...

வாங்க CVR.

வீக் எண்ட்லே டாக்டரைப் பார்க்கறது இன்னும் கஷ்டம். ஊருக்கெல்லாம் ஒரு இடமுன்னு
ஒரு ஆஃப்டர் அவர் க்ளீனிக். வெள்ளி சாயங்காலம் அஞ்சரை முதல் திங்கள் காலை 9 வரை
எதுன்னாலும் அங்கேதான் ஓடணும். அரசாங்க ஆஸ்பத்திரிக்கும் போகலாம். இங்கே 2 மணி நேரம்
காத்திருப்புன்னா அங்கே 5 மணி நேரம்!

புள்ளைங்களுக்கெல்லாம் எப்படித்தான் தெரியுமோ வீக் எண்ட் வந்துருச்சுன்னு! மகள், குழந்தையா
இருக்கும்போது வருஷத்தின் எல்லா வீக் எண்டும் மேற்படி இடங்களில்தான்(-:

அங்கேயும் இதே 'கதி' தானா?

said...

வாங்க குமார்.

'அம்மா' மட்டுமில்லை நாங்களும் இப்படித்தான் லிப்ஸ்டிக் போடுவோம்:-))))))

இல்லாட்டி குளிருக்கு உதட்டுலே வெடிப்பு வந்துருமுல்லே(-:

எங்க 'அம்மா' நல்ல ஸ்போர்ட்டிவ். ராக் க்ளைம்பிங், ஓட்டம் அது இதுன்னு எல்லாத்துலேயும்
கலந்துக்குவாங்க. மத்த 'தலை'களைப்போல 'நாசூக்கு' பார்க்கறதெல்லாம் இல்லை. சிலசமயம்
அவுங்க போட்டுருக்கற உடுப்புகளைப் பார்த்தா...............'நாமே இவுங்களைவிட நல்லா ட்ரெஸ்
பண்ணியிருக்கோமு'ன்னு தோணும்:-)))) down to earth தான்.

said...

வாங்க காட்டாறு.

தவறாம வாசிக்கிறீங்களா? அது போதும் பாஸே பாஸ்:-))))

//Demand-supply// இது இங்கே பொருந்துமான்னு தெரியலை. அதான் அவுங்க இஷ்டத்துக்கு ஃபீஸ்
வாங்க முடியாதே. ஆனா டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கறது கஷ்டமாயிரும்(-:

said...

வாங்க கொத்ஸ்.

'இலவசம்' கூட இங்கே இன்னும் கூட்டம் அதிகமானா வரும்காலங்களில் குறைஞ்சிரும். 'டாக்ஸ்' புடுங்கிடுறாங்களே.
அப்பக் கொஞ்சமாவது 'கருணை' காட்டணுமா இல்லையா?

said...

இங்கேயும் நாமா மருந்து வாங்க முடியாதா.கஷ்டமாச்சே.
வீகெண்ட் எல்லோருக்கும் பிரச்சினை. நம்ம ஊரில கூட ஞாயித்துக்கிழமை காய்ச்சல் வரக்கூடாதேனு வேண்டிக்குவேன்.
இங்க பாசல்ல, எதுக்கெடுத்தாலும் எமர்ஜென்சிக்கு ஓடிடராங்க.

ஓடரதெல்லாம் நம்ம சைடுதான். இந்த ஊர்க் குழந்தைகள் டச்வுட்
நல்லாவே இருக்கு.
ரொம்ப நல்லா அழகா இருக்காங்க உங்க அம்மா.:-)))

said...

மைமகாரா ரொம்ப நல்லவருங்க!
அது சரி. அவர் யாருங்க?

அன்புமணிய அங்கே வந்து ட்ரெயினிங்
எடுக்கச் சொல்லலாமா?

said...

// மேலும் பிரிட்டனிலும் வேலைவாய்ப்பு இந்தத் துறையில் ஏராளம். //

உண்மை. இங்கு நிறைய கீவீக்கள் ஆஸ்பத்திரிகளில் வேலை செய்கிறார்கள்.

நீங்கள் எழுதும் பல விடயங்கள் பிரிட்டனில் நடப்பதோடு ஒத்து வருகின்றன.

வைசா

said...

ஒங்கூரு அம்மாவும் நல்லா செவசெவன்னு ஜம்முன்னுதான் இருக்காங்க. ஆனா என்ன..நல்லா சிரிச்சாப்புல இருக்காங்க. ஒங்கூர் ஐயா படமெங்க? யாராவது ஜினிமாக்காரங்க அரசியல்ல இருக்காங்களா? இல்லைன்னா பாட்டுப்பாடுறவங்க....ஆடுறவங்க..அந்த மாதிரி?

இங்க நெதர்லாந்துலயும் குடும்ப மருத்துவர் கட்டாயம். வந்ததும்...அதச் செய்யச் சொன்னாங்க. அதுவுமில்லாம...எல்லாரும் புதுசா வர்ரவங்கள ஏத்துக்க மாட்டாங்க. ஆபீஸ்ல ஒருத்தங்க ஒரு நம்பரு குடுத்தாங்க. டாக்டர். கோஃபர்தோன். அவருதான் நம்ம குடும்ப மருத்துவரு. ரொம்ப நல்ல மனுசரு. ஒரு வாட்டி பாக்க 25யூரோதான் வாங்குவாரு. நல்லவேளைக்கு காப்பீடு இருக்கு.

said...

வாங்க வல்லி.

எங்கம்மா அழகுக்கு என்ன குறைச்சல்? 57 வயசுக்கு எப்படி
'ச்சிக்'னு இருக்காங்க பாருங்க! மனசும் அழகுதான்.
நல்லாப் படிச்சவுங்க வேற. அவுங்க பி.ஹெச்.டி thesis கூட
ரூரல் பொலிட்டிக்கல் பிஹேவியர். அரசியலுக்கு வர்றதுக்கு முன்னே
ஜூனியர் லெக்ச்சரர் வேலைதான் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பொலிடிகல்
ஸ்டடீஸ். அதான் ஏழைகள் சிரிப்பில் இறைவன்
இருக்கிறான்னு நினைச்சுட்டாங்க. உண்மையைச் சொன்னா இவுங்க ஒரு
Agnostic. இதை அவுங்களே சொல்லி இருக்காங்க.

said...

வாங்க சிஜி.

மைமகாரா தெரியாதா? மெய்யாலுமா? பார்த்துருப்பீங்கன்னு
நினைச்சேன். 4 x கமல்:-)))))

அன்பு மணியே ஆனாலும் இங்கே வந்தா பரிட்சை எழுதித்தானாகணும்.
'அவருக்குப் பரவாயில்லை'ன்னா அனுப்புங்களேன்.

said...

வாங்க வைசா.

//நீங்கள் எழுதும் பல விடயங்கள் பிரிட்டனில்
நடப்பதோடு ஒத்து வருகின்றன.//


இருக்காதா பின்னே? நாங்க இன்னும் மாட்சிமை பொருந்திய
மகாராணியின் மக்கள்தான்!
அதான் உங்க ஊர் நிலவரம் இங்கேயும் பொருந்தி வருது:-)

//உண்மை. இங்கு நிறைய கீவீக்கள் ஆஸ்பத்திரிகளில்
வேலை செய்கிறார்கள்//

ஸ்பெஷல் நன்றிப்பா. என்னடா..........பத்திரிக்கைகளில் வர்றதையும்,
அக்கம்பக்கம் கேட்டதையும் வச்சு எழுதுறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான்
இருந்துச்சு. உண்மைன்னு தெரிஞ்சதும் மனசு சமாதானமாச்சு.

கிவீக்கள் அங்கேயே இருக்கட்டும். எங்களுக்குச்' சேச்சிமார்' போதும்:-))))

said...

வாங்க ராகவன்.

//ஒங்கூர் ஐயா படமெங்க? //

ஐயாவும் இங்கே யுனிவர்சிடியில் வேலை. படத்தைப் போடணுமா?
அடுத்த பகுதியில் போடறேன்.

//யாராவது ஜினிமாக்காரங்க
அரசியல்ல இருக்காங்களா? இல்லைன்னா
பாட்டுப்பாடுறவங்க....ஆடுறவங்க..அந்த மாதிரி?//
இதுவரை யாரும் இப்படி இல்லை. ஆனா ஒரு வலைப்பதிவாளர்
அரசியலுக்கு வர்ற ச்சான்ஸ் இருக்கு என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக்கொள்ளும்
இந்த நேரத்திலே.................

அரசியல்வாதின்னதும் எப்படி நிறுத்தமுடியாம சொற்பொழியுது பாருங்க:-)