Wednesday, June 13, 2007

ஆட்டுமந்தைன்றது .......

ஆட்டுமந்தைன்றது சரியாத்தான் இருக்கு. எப்படி ஒண்ணு ஓடுனதும் மற்றதும்

என்ன ஏதுன்னு பார்க்காம ஓடுது பாருங்க:-)















எதுக்கு இப்படி ஓடுதுங்கன்னு தெரியலையே(-:

29 comments:

said...

பரி( ஆடு) சோதனை:-)

said...

சோதனை மேல சோதனைடா சாமி. நல்ல இருக்கும் இன்னும் கூட கொஞ்சம் ஷூமிருக்கலாம் :)

said...

//ஆட்டுமந்தைன்றது .......

ஆட்டுமந்தைன்றது சரியாத்தான் இருக்கு. எப்படி ஒண்ணு ஓடுனதும் மற்றதும்


என்ன ஏதுன்னு பார்க்காம ஓடுது பாருங்க:-)//

அம்மா,

இந்த பதிவு சிவாஜி தொடர் பதிவுகளை நக்கல் அடிக்கவில்லை என்று ஒரு டிஸ்கி போட்டுவிடுங்க.

:)))))))))

said...

வாங்க இளா.

அடுத்த 'ரைடு'லே இன்னும் நல்லா ட்ஸூமிடலாம்:-))))
இதுவே மகளோட கெமெராவுலே இருந்து நான் 'சுட்டுக்கிட்டது':-)

said...

வாங்க கோவியாரே.

//....சிவாஜி...... டிஸ்கி.......//
ஆஆஆஆஆஆஆஆஆ இதுக்கு இப்படி (யும்) ஒண்ணு இருக்கா(-:

அட தேவுடா................

'பரி'ன்றது குதிரைன்றதாலே தான் ஆட்டை
ப்ராக்கெட்(லே) போட்டுருக்கேன்:-)))))

said...

டீச்சர்,

வெறும் சுட்டி குடுக்காம அந்த வீடியோவை (இதுக்கு என்ன தமிழ்? நகர்படமா? நிகழ்படமா? என்னவோ ஒண்ணு) இங்க எம்பெட் செய்யணுமுன்னா அந்த வீடியோ பக்கத்தில் எம்பெட் அப்படின்னு ஒரு நிரல் இருக்கு பாருங்க. அதை எடுத்து உங்க பதிவில் எங்க வேணுமோ அந்த இடத்தில் html edit என்ற tabல் கட் பேஸ்ட் பண்ணிடுங்க.

ரொம்ப குழப்பிட்டேன்னா ஒரு மின்னரட்டை வாங்க சொல்லறேன்.

said...

வாங்க கொத்ஸ்.

அந்த எம்பெட் நிரலைச் சேர்க்கமுடியலை. முழுசும் காப்பி & பேஸ்ட் லே
வரலை. பாதி நிரல் மட்டும்தான் பேஸ்ட் பண்ணுது. ரெண்டு நாளாப் போராடிட்டு,
இப்ப உரல் கொடுத்துப் போட்டேன். ( தேதியைப் பாருங்க)

said...

அடடா நீங்க குடுத்த லின்க் ஆபிஸில இருந்து பாக்க முடியாது. Blocked site

said...

சின்ன அம்மினி கொடுத்த பதில் தான் எனக்கும்.
வீட்டுக்கு போய் பார்க்கலாம்.
அதெப்படி இருக்குமோ,இங்க பாதசாரி கடக்கும் இடத்தில் சிகப்பு மனிதனை உதாசீனப்படுத்தி விட்டு செல்லும் நண்பர் பின்னால் தொலைபேசியில் SMS படித்துக்கொண்டு அவருக்கு பின்னால் செல்லும் மக்களை என்ன சொல்வது.
2 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பாதசாரிகள் கடக்கும் இடத்தில் இருக்கும் Blind Spot யில் ஒரு இள வயது தாத்தா தள்ளிக்கொண்டு போன போது மிகவும் கோபமாகவும் திரில்லாகவும் இருந்தது.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இதுக்கென்னங்க? நீங்க வீட்டுக்குப்போற
வழியிலேயே பார்க்கும் காட்சிதான் இதுவும்:-)))))

said...

வாங்க குமார்.

சிகப்பு மனிதனை மதிக்காமப்போனா ஆபத்தாச்சே. சின்னப்புள்ளைகளுக்கு
பெரியவுங்கதானே ரோல் மாடலா இருக்கணும்.

said...

என்னங்க இது.
ஆடு ஒரு சின்ன சைஸ் விலங்கு. அது மற்ற வேட்டையாடும் விலங்கினங்களுக்கு எளிதான இலக்கு அதானல ஒரு ஆடு ஓட ஆரம்பிச்சா மற்ற ஆடுகள் எல்லாம் அதுக்கிட்ட போயி ஏன ஓடிகிட்டு இருக்கேன்னு கேட்டுட்டுருக்க முடியாது. உயிரை காப்பாத்தனுமுனா தானும் அது போற திசையில ஓடியாகனும் :)))))். மனிதன் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தபின்னாலும் அது தனது காட்டு வாழ்க்கை behaviour இழக்கவில்லை பூனை போல. மற்ற காட்டு விலங்க்கிடமும் இதே போன்ற குணாதியசிங்கள் உண்டு.

said...

இதுக்கும் சிவாஜி ரிலீசுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சம்பந்தம் இருக்கா?

said...

வாங்க நாடோடி,

நல்லாச் சொன்னீங்க.
இப்பக் காலம் இருக்கற இருப்புலே மனுஷங்க கூட
ஆட்டைப் பார்த்துப் படிக்கணும்போல இருக்கே!

said...

என்ன அழகா ஒரே மாதிரி லைன் கலையாம ஓடுதுங்க

இந்தமாதிரி வாத்துக்க் கூட்டம் போட்டொ ஒண்ணு போடலாமானு பார்க்கிறேன்:-)
நல்லாத்தான் ஃபாலோ செய்திருக்காங்க உங்க மகள்.ஒரு வேளை தெனமெரிக்காஆடுகளோ.
அந்த மேப் வடிவத்திலேயே ஓடுதுங்களே.:-)

said...

வாங்க தேவ்.

சரியாப்போச்சு. யதார்த்தமாப் போட்டதுக்கு இப்படியெல்லாம்
ஆராய்ச்சி இருக்கா?

ஆமாம். ஸ்மைலி ஏன் போடலை நீங்க? மறந்துட்டீங்கதானே?

said...

வாங்க வல்லி.

வாத்துக்கூட்டமா? ஹை......... போடுங்கப்பா சீக்கிரம்.

said...

துளசி அம்மா,

ஓடறதெல்லாம் திராவிட தமிழ் ஆடுகள்;முதலில் வெள்ளை தாடி வைத்த கன்னட ஆடு ஓட ஆரம்பிக்கும்.மத்த திராவிட தமிழ் ஆடுகளெல்லாம் வேகமா தலை தெறிக்க அதன் பின்னாடி ஓடும்.

பாலா

said...

ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க அம்மா... எண்ணிப்பாருங்க!!

said...

வாங்க குட்டிப்பிசாசு.

ஏன் பாட்டைப் பாதியோட விட்டுட்டீங்க?

நாச்சியப்பா சங்கிலிக்கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா.........

இந்த ஆட்டுக்கும், அந்த பாட்டுக்கும் எதாவது
சம்பந்தம் இருக்கோ? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

(வீட்டுவீட்டுக்கு ஒரு குட்டிப்பிசாசு இருக்கும் போலிருக்கே!
அந்தக் காலத்துலே எங்க வீட்டுலே என் பேர் இதுவா இருந்துச்சு)

said...

வாங்க பாலா.

சாதாரண செம்மறியாட்டுக்குள்ளே இவ்வளவு தத்துவங்கள் நிறைஞ்சிருக்கா?

அம்மாடியோவ்!!!!!!

பதிவு திசை திரும்புறமாதிரித் தோணுது.

இருக்கறது பத்தாதுன்னு இதெல்லாம் வேணுமா? (-:

said...

விண்மங்கை மேடம்.. என் கம்ப்யூட்டர்ல ஒண்ணுமே தெரியலே.. தெரியவும் தெரியாது.. நாங்கள்லாம் சின்னப்புள்ளைகன்றதால எக்ஸ்ரே பூட்டு போட்டுட்டாக.. ஸோ.. என்னமோ எல்லாரும் எழுதியிருக்காங்க.. அதுனால நானும் ஆஜர் ஆயிட்டேன்..

said...

"சாய்ஞ்சா சாயுற பக்கம் சாயுற செம்மறி ஆடுகளா..
உங்க சாயம் வெளுத்துப் போகும்
பழைய ஏடுகளா......"

எந்தப்படம் சொல்லுங்க......

said...

நானும் ஏதோ ரஜினி ரசிகர் சமாச்சாரம்னுதான் நெனச்சேன். டைமிங் அப்படி(தினமலர் நாய்த் தொந்தரவு நியூஸ் மாதிரி).

சும்மா மேஞ்சிக்கிட்டு இருக்கற ஆட்டுங்க மேல இறங்கறமாதிரி பெரிய பலூன் கொண்டு போனா ஓடாம என்ன பண்ணும்.

அது வேற ஒண்ணுமில்ல. பக்கத்து பண்ணைல ரஜினி படம்னு ஒரு பட்சி சொல்லுச்சாம். அதான் எல்லாம் ஓடுதுங்க....

said...

ஆஹா அருமையா இருக்கு... எங்களையும் பறக்க வச்சதுக்கு.டேங்க்ஸ்

said...

வாங்க உண்மைத்தமிழரே.

பூட்டுப் போட்டுட்டாங்களா? அடடா.......... இது ஒண்ணும்
'பலான' சைட் இல்லீங்களே.

என்னமோ 'விண்மங்கை'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே, அதுக்கான
பலூன் சவாரியில் எடுத்த ஆட்டு மந்தைப் படம்தாங்க அது. ச்சும்மா
ஒரு 47 விநாடி வீடியோ. அம்புட்டுதான்.

உண்மையான விண்மங்கைகள் நம்ம கல்பனா சாவ்லா போன்றவர்கள்தான்.

said...

வாங்க சிஜி.

நீங்க சொன்ன பாட்டு எந்தப்படமுன்னு தெரியலை. இதனான்னு பாருங்க.

"எரியும் கொள்ளியில் எண்ணெய்"

எல்லாம் ஒரு யூகம்தான்:-)

said...

வாங்க நாகு.

சரியாப் பாயிண்டைச் சொன்னீங்க.

எல்லாத்துக்கும் நமக்கு நேரம் ( அதாங்க டைமிங்) சரியா இருக்கணும்.
இல்லேன்னா இப்படி அவஸ்தைதான்(-:

said...

வாங்க மங்கை.

டில்லி சூட்டுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சா இது:-)))

கூட வந்ததுக்கு டேங்க்ஸ்:-)