Friday, June 08, 2007

நியூஸிலாந்து பகுதி 67

நாட்டுநடப்பைச் சொல்றேன்னு அரசியலுக்குள்ளே நுழைஞ்சவ, நம்மூரு( இந்த இடத்தில் நம்மூர் = கிறைஸ்ட்சர்)லே நடந்த முக்கியமான சில சரித்திர நிகழ்வுகளை (!) விட்டுட்டேன் பாருங்க. 1995 லே இங்கே ஏறக்குறைய முப்பது தமிழ்ப் பேசும் குடும்பங்கள் கிறைஸ்ட்சர்ச் மாநகரில் இருந்தாங்க. நியூஸி ரெண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடுன்னு உங்களுக்குத் தெரியும்தானே? அதுலே இது , தெற்குத்தீவில் மிகப்பெரிய நகரம். மூணு லட்சம் மக்கள் தொகை.

மேற்படித் தமிழ்க்குடும்பங்களிலே ஒரு மூணு குடும்பம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பாக்கியெல்லாம் நம்ம இலங்கைத் தமிழர்கள். இவ்வளவு(!) பேர் இருக்கோமே, நமக்குன்னு ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சா நல்லதுன்னு முடிவு செஞ்சு, டிசம்பர் மாசம்(1995) சங்கத்தைப் பதிவு செஞ்சோம். இங்கே இந்தமாதிரிக் காரியங்களுக்குக் குறைஞ்சது 15 பேர் இருந்தாவே போதும். சங்கத்தின் முதல் காரியதரிசியா இருந்தது உங்க 'டீச்சர்'தான். சங்கத்தின் முதல் விழாவா 1996 பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் முக்கியக் கொள்கை என்னன்னா....... தமிழ் மொழியை வருங்கால சந்ததிக்களுக்குச் சொல்லிக் குடுக்கறது. பண்டிகை நன்னாளில் தமிழ்ப் பள்ளிக்கூடமும் தொடங்கி, இப்பவும் நடந்துக்கிட்டு இருக்கு. மாநகர கவுன்சிலில் இருந்து பள்ளிக்கூடத்துக்கும், சங்கத்தின் சில விழாக்களுக்கும் உதவித் தொகை கிடைக்குது. இந்த சமூகத்தில் தமிழருக்குன்னு ஒரு 'இடம்' உறுதியாச்சு. அப்ப மத்த ஆட்கள்?

இங்கே இந்தியர்கள்னு பார்த்தா இந்தியா, ஃபிஜித் தீவு, சிங்கை, மலேசியா, தெற்கு ஆப்பிரிக்கான்னு பலநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து சேர்ந்துருக்கறதாலே இந்தியர்களுக்குன்னு ஒரு சங்கம் வேணுமுன்னு ஒரு எண்ணம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. ஏற்கெனவே இங்கே 'கிறைஸ்ட்சர்ச் இண்டியன் அசோஸியேஷன்' என்ற பெயரில் ஒண்ணு நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனால் அதுலே 100% அங்கத்தினர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலத்துக்காரகளுக்கு அவுங்க சங்கத்தில் இடமில்லைன்னு சொல்லிட்டாங்க. இதனாலே மற்ற இந்தியர்கள் அத்தனை பேருக்கும் கொஞ்சம் மனக்கசப்பு.இதுக்கு எதாவது செய்யணுமுன்னு 1997வது வருசம், 'இண்டியன் கல்ச்சுரல் & சோஸியல் க்ளப்' என்ற பெயரில் நம்ம கோபால் ஒரு அமைப்பைத் தொடங்கினார். 100 குடும்பங்கள் இதில் உடனே அங்கமானாங்க. 'பிரஸிடெண்ட்'ன்னு ஒரு பெத்த பேர் வந்துச்சு. இந்திய சுதந்திர தினத்தின் பொன்விழாவை இந்த அமைப்பில் முதல்விழாவாக் கொண்டாடுனாங்க. இது பத்தாவது வருஷம், அந்த அமைப்புக்கு. ( இப்ப ரெண்டு வருசமா இதோட தலைவர் குஜராத்தி இனத்தைச் சேர்ந்தவர்தான்! )
இதைப்போல் இங்கே நகரில் இருக்கும் 'எத்னிக்' குடும்பங்கள் அவுங்கவுங்களுக்குன்னு ஒரு சங்கம் தொடங்கிட்டு,அவுங்க பின்புலத்தை மறக்காம இருக்காங்க. ஒரு சமயம் 'நகரத் தந்தை'யுடன் பேசிக்கிட்டு இருக்கும்போது 150பல்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் இருக்குன்னு சொன்னார். இதில் சமீபத்துலே அதாவது போனவருஷம்(2006)தொடங்குனது, 'தெலுகு அசோஸியேஷன்.

இந்தப் பல்வகை சமூகத்தினர் பயனுக்காக இங்கே அரசாங்கமே ஒரு 'கம்யூனிட்டி ரேடியோ' ஒலிபரப்பு வச்சிருக்கு.ரொம்பக் குறைந்த கட்டணம்தான். வாரம் ஒரு மணி நேரம் இந்த சேவையைப் பயன்படுத்திக்கிட்டு இந்த இந்தியன் சங்கம்ஒலிபரப்பு செய்யுது. இதில் நம்ம சமூகத்துக்குத் தெரிவிக்கும் தகவல்கள், பாட்டு, பேட்டி, சமையல் குறிப்புன்னு ஒலிபரப்பறோம். அவுங்களே நமக்கு இலவசப் பயிற்சி தருவாங்க. நானும் ஆரம்பத்தில் சில வருஷங்கள் இந்த ரேடியோ ப்ரோக்ராம் நடத்திக்கிட்டு இருந்தேன். (Best presenter award ம் கிடைச்சது. இருக்கற பத்து பதினைஞ்சுலே இதுக்கு அப்படி என்ன சிறப்பு? ஆனாலும் மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு) என்னுடைய நாட்களில் வழக்கமான ஹிந்திப்பாட்டுக்களுடன், தென்னிந்திய சினிமாக்களின் பாடல்களையும் சேர்த்துக்குவேன். இந்தியான்னா ஹிந்தி மட்டுமா என்ன? இது முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்களால்தான் நடக்குது. இப்ப இங்கே இருக்கும்மற்ற அமைப்புகள் இந்த சேவையை நல்ல முறையில் பயன்படுத்தறாங்க. வாரம் நாலு நாள் இந்தியன் நிகழ்ச்சிகள் உண்டு. இன்னும் தமிழ்ச் சேவை தொடங்கலை.

இதுக்கு நடுவிலே இந்தியத் திரைப்படங்களுக்கு பாடல் காட்சிகள் சுட்டுத்தள்ள நியூஸிக்கு வர ஆரம்பிச்சாங்க. எப்பவும் ஐரோப்பாவுக்கே போகும் கூட்டம் இந்தப் பக்கம் வந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு. இயற்கைக் காட்சிகள்தான் இங்கே அள்ள அள்ளக் குறையாமக் கொட்டிக் கிடக்குதே. 'பாலிவுட்' என்ற வார்த்தை இங்கே உள்ள வெள்ளைக்காரர்களுக்கு ரொம்பப் பழக்கமாயிருச்சு. அதிலேயும் ஒரு ஹிந்திப்படம், (1999 களில் இங்கே வந்து எடுத்தது) 'கஹோ நா ப்யார் ஹை' இந்தியாவில் நியூஸியின் அழகை விளம்பரப்படுத்திச்சு. அதுக்கப்புறம் 'சரமழை' போல தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்னு எல்லா தென்னிந்திய மொழிப் படத் தயாரிப்பாளர்களும் அவுங்கவுங்க பங்குக்கு, இருந்த அழகையெல்லாம் அள்ளிக்கிட்டுப் போனாங்க.

2003 வருஷம் இந்த நாட்டின் ஜனத்தொகை 40 லட்சத்தைத் தொட்டுச்சு. இன்னிக்குக் கணக்குக்குப் பார்த்தா 41,82022.


2002, 2005 தேர்தல்களிலும் லேபரே ஜெயிச்சதாலே அவ்வளவா மாற்றங்கள்னு இல்லாம ஒரே நிலைப்பாட்டில்தான் நாடு போய்க்கிட்டு இருக்கு. மாற்றங்கள்னு சொன்னால் இந்த அரசியல் கட்சி கூட்டுகள்தான். 2005 வது வருஷம் பொதுத்தேர்தல் வரும்போது வேலை இல்லாத் திண்டாட்டம் 'வரலாறு' காணாத அளவில் குறைஞ்சிருந்துச்சு.
படப்பிடிப்புக்கு மக்கள்ஸ் வந்த சமயம் எடுத்த சில படங்களை அங்கங்கே தூவி வச்சுருக்கேன் இந்தப் பதிவுலே:-))))

18 comments:

said...

ஆஹா! christchurch வந்த ஒருத்தரையும் நீங்க விட்டு வைக்கல போல இருக்கே.

ஹாமில்டன் கதையெல்லாம் சொல்லி உங்க பழைய ஞாபகத்தை கிளறி விட்டுட்டேன் போல இருக்கு

said...

அந்த படத்துல சிடிய என்ன பண்ணறீங்க???
சூப்பர் போஸ் போங்க‌!!!!!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.


'அப்ப' சினிமாக்காரங்கன்னா ஒரு க்ரேஸ் இருந்துச்சு. நிழலை நிஜமாப் பார்க்கறொமுன்னு.
இப்ப அதையெல்லாம் கடந்து வந்தாச்சு:-)))))

'சரித்திரத்தை'த் தோண்டி எடுத்துருவொம்லெ:-)))))

சிடியை என்ன.......பண்ணறேன்னா...........?

ஐயகோ.......... அதுதாங்க நமக்குக் கிடைச்ச அவார்டு:-)))

said...

உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான்.:-))

said...

அச்சச்சோ!!! இப்ப சரியா பாத்துட்டேன். விருதுதான்.
ஒழுங்கா பாக்காததுனால சிடி மாதிரி இருந்துச்சு.

said...

வாங்க குமார்.

தைரியம் ஜாஸ்தி.........? எது? ரம்பாவை 'நேருக்கு நேர்' பார்த்ததா? :-))))))


ச்சின்ன அம்மிணி........

இதுக்குத்தான் சரியாப் பாக்கணுங்கறது:-))))))))))))

said...

ஹோ! அது ரம்பாவா?சிரஞ்சீவி காரு கூட இருக்காரு,காலை வீட்டை விட்டு கிளம்பும் முன்பு ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டு விட்டு வந்துவிட்டேன்.படம் சரியாக பார்க்கவில்லை.
நம்ம கேப்டன் கூட இருக்கார்.
லைலா சிரிப்பு..
ஆமாம்,பெருந்தலைகள் வந்தால் உங்க வீட்டில் தான் சாப்பாடா?
கடைசியாக ஒரு சந்தேகம் "ரம்பா" யாருங்க? நடிகையா?:-))

said...

ச்சீக்கிரம் தமிழ்ச்சேவையும் துவக்கிடுங்க

said...

குமார்,

//கடைசியாக ஒரு சந்தேகம் "ரம்பா" யாருங்க? நடிகையா?:-))//

இது டென் மச்:-)

said...

வாங்க சிஜி.

இன்னும் ரெண்டு பேராவது கூட்டுச் சேர்ந்தால்தான் நல்லது. தனியாவே நடத்தனுமுன்னாக்
கொஞ்சம் கஷ்டம். இது லைவ்வான ஒலிபரப்பு. ஒரு நாள் போகமுடியாட்டா........
வம்பாயிரும். எனக்கு ரேடியோவில் host ஆக இருப்பது ரொம்ப விருப்பம்.
இன்னும் இதுக்கு நேரம் வரலைன்னு இருக்கு.பார்க்கலாம்.

said...

நிறைய சினிமா நடிகர்கள் கூட போட்டோ எடுத்துட்டு இருக்கீங்க போல!!
அந்த தொடர்பை பயன்படுத்தி சட்டுனு சினிமாவுல குதிச்சிருங்க!! :-D
நாளைக்கு அரசியல்ல போறதுக்கும் வசதியா இருக்கும்!! :-P

said...

என்ன இது ஒரே சரித்திரம்சினிமா ஆயிடுச்சே.:-)))

சாப்பாடு போட்டே கட்டுப்படியாச்சா.
சினிமா க்ரேஸ் போயிடுச்சினு நல்லாவே தெரியுதெ.இவங்க யாரும் இப்பத்தி மனுஷங்களாத் தெரியில.அதென்ன எல்லாரும் தட்டும் கையுமாவே இருக்காங்க.:-)))

said...

//'அப்ப' சினிமாக்காரங்கன்னா ஒரு க்ரேஸ் இருந்துச்சு. நிழலை நிஜமாப் பார்க்கறொமுன்னு.
இப்ப அதையெல்லாம் கடந்து வந்தாச்சு//

வணக்கம் டீச்சர்.. இங்கனேயும் இதைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்திட்டுத்தான் இருக்காக.. ஆனா ஒண்ணு.. அவுகளை வைச்சு பிஸினஸ் பண்றது பெரிசாகிட்டே போகுதா.. அதுதான் பிராண்ட்-கம்பெனி-சேல்ஸ்-வாடிக்கையாளர் என்ற அளவுல ரிலேஷன்ஷிப் போய்க்கிட்டிருக்கு.. இது நல்லதுதான்னு நாங்களும் நினைக்கிறோம்.

ஆமா டீச்சர்.. சிரஞ்சீவிகாரு, ரம்பா பொண்ணு, செளந்தர்யா அக்கா, புரட்சிக்கலைஞர் போட்டோவை வைச்சுக்கிட்டு இப்படியொரேயொரு பதிவுல போட்டு வேஸ்ட் பண்ணிட்டீகளே..))))))))

நானா இருந்தா எட்டுப் பதிவாச்சும் போட்டிருப்பேனாக்கும்..

said...

அடடடடே! கமலஹாசன் மட்டுந்தான் ஒங்களப் பாத்து மரியாதை செஞ்சுட்டுப் போனாருன்னு நெனச்சேன். பாத்தா...ஆந்திர சிரஞ்சீவி, வெங்கடேஷ்...கன்னட சௌந்தர்யா....நம்மூரு விஜயகாந்த்து....எல்லாரும் மரியாதை செஞ்சிட்டுப் போயிருக்காங்க. பிரமாதங்க.

said...

வாங்க CVR.

நல்ல நல்ல ஐடியாக்கள் கொடுத்துருக்கீங்க.
நேரம் வரட்டும், செஞ்சுறலாம்:-))))

said...

வாங்க வல்லி.

//.............இப்பத்து மனுஷங்களா....................//
அதான் க்ரேஸ் போயிருச்சுன்னு சொல்லிட்டேனே.

இது அன்றொரு காலத்தில்:-))))

மத்த படங்கள் போட்டா, சாப்புடாமப்
போயிட்டாங்கன்னு நீங்க நினைச்சுட்டீங்கன்னா.............?
அதான் தட்டும் கையும்:-)))))

said...

வாங்க உண்மைத்தமிழரே.

எட்டுப் பதிவா? ஒவ்வொண்ணும் 8 பக்கமா? :-))))

said...

வாங்க ராகவன்.

இன்னும் பல 'பெருந்தலைகள்' படங்கள் இருக்கு. ஆனால் கொஞ்சம்
அடக்கி வாசிக்கலாமுன்னுதான்..........................:-)