Monday, June 04, 2007

நியூஸிலாந்து பகுதி 65

அதென்னவோ சொல்லி வச்ச மாதிரி அரசாங்கம் தொடர்ந்து மூணு தேர்தலில் நேஷனலும், அடுத்த மூணு லேபருக்குமா மாறிமாறி இருந்துக்கிட்டிருக்கு. இந்த 1999 தேர்தலில் லேபர் வெற்றி அடைஞ்சு, ஹெலன் கிளார்க் பிரதமரா ஆனாங்க.'கட்சித் தலைமையாத் தேர்தலின் நின்னு ஜெயிச்சு வந்த முதல் பெண் பிரதமர்' இவுங்க. ஷிப்லி எதிர்வரிசையில்போய், எதிர்க்கட்சித் தலைவியா உக்கார்ந்துக்கிட்டாங்க.( இதுக்கப்புறம் ரெண்டு வருசம் கழிச்சு வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க ஷிப்லி. அந்த இடத்துக்கு வந்தார் பில் இங்கிலீஷ். இவராலே லேபருக்கு ஈடு கொடுத்து நல்ல பலமான எதிர்க்கட்சித் தலைவரா செயல் படமுடியலை. இவராலேதான் நேஷனல் தேர்தலில் அடி வாங்குச்சுன்னு பேசுனாங்க.

இந்த முறையும் முழுமையான மெஜாரிட்டி இல்லை. மறுபடியும் 'கூட்டு'தான். லேபருக்கு, லிஸ்ட் ஸீட்( கேக்)உள்பட 49 கிடைச்சது. இன்னும் குறைஞ்சது 12 வேணும். நேஷனலுக்குக் கிடைச்சது எல்லாம் சேர்த்து 39. அவுங்களுக்கு இன்னும் 22 வேணும். மறுபடி 'பேச்சு வார்த்தைகள்' தொடங்குச்சு.
இருபத்திரெண்டைவிட பன்னிரெண்டுச் சின்ன எண் இல்லையா? லேபர் 49, அலையன்ஸ்கிட்டே 10, கிரீன் பார்ட்டிகிட்டே 7 ன்னு புதுக்கூட்டு. மந்திரிசபை அமைச்சாங்க. இந்த கிரீன் பார்ட்டியோட கொள்கைகள் உண்மைக்குமே நல்லா இருக்குது ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது என்னன்னா இவுங்க Cannabis law வை மாத்தி அமைக்கணும், marijuanaவை லீகலாக்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.இவுங்க கட்சியின் லிஸ்ட் எம்.பி. நாந்தோர்(Nandor Steven Tanczos)என்றவர்தான் இதைச் சொல்லிக்கிட்டு இருக்கார்.ஏற்கெனவே மயக்க மருந்துக்கு அடிமைகளா இருக்கறவங்க போதாதுன்னு இதையும் பழக்கப்படுத்துனா என்ன ஆகுமோன்றது என்னைப்போல பலருக்குக் கவலையா இருக்கு. 'போதாக்குறைக்குப் பொன்னம்மா'ன்னு இவரோட தலை அலங்காரமும் தோற்றமும் பொதுவாப் பார்க்கும் மனிதர்களில் இருந்து வேறு பட்டும் இருந்துச்சு. (ஜடாமுடியோடு இருக்கும் இவர், எனக்கு நம்ம இமயமலைச் சாமியார்களை நினைவூட்டிக்கிட்டு இருந்தார்) நேஷனல் கட்சியும் இவரோட உருவத்தைப்போட்டு, 'ஓட்டுப்போடறதுக்கு முந்தி யோசியுங்க' ன்னு மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக்கிட்டு இருந்துச்சு.

2000 வருசம் பிறக்கறதையொட்டி உலகநாடுகள் கவனம் எல்லாமே நியூஸி பக்கம் திரும்புச்சு. காரணம்? இதுசரியா 'டேட் லைன்'லே இருக்கற நாடாச்சே! ஒரு புதுநாள் ஆரம்பிக்கிறப்ப முதல் சூரியன் இங்கேதான் உதிக்கும்.Y2K ன்னு ஒரே பேச்சா இருந்தது உங்களுக்கெல்லாம் நினைவு இருக்குல்லே? 2000 வருஷம் பிறந்தவுடனே கணினிகள் செயல்படாதுன்னு ஒரே கசமுசா. அது உண்மையா இல்லே வதந்தியான்னு யாருக்குமே தெரியாது. கணினி போச்சுன்னா,நாடே செயல்படாது. அப்படி எதாச்சும் ஆச்சுன்னா, அவசர நிலமையில் என்னென்ன செய்யணுமோ அதைக் கடைப்பிடிக்கணுமுன்னுச் சொன்னாங்க. கையில் நாலு டாலராவது இல்லேன்னா எப்படி? அதான் ATM எதுவுமே வேலை செய்யாதே.கையிலே காசு இருந்தாலும், சூப்பர் மார்கெட்லே 'டில்' வேலை செய்யாது. எல்லாமே கணினியோட இணைச்சு வச்சுருக்குல்லே! இன்னும் ச்சின்ன தெருமுக்குக் கடைகள் இந்த அளவுக்கு வரலை. பார் கோடை ஸ்கேன் செய்யாம விலையை மட்டும் டில் லில் போட்டுச் சாமான் வாங்கலாம். நல்ல காலமுன்னு சொல்லணும்:-) ஆனா.........விலை கூடுதல்தான். தேவைன்னு வந்துட்டா? 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை'ன்னு இருக்க முடியாதேன்னு முன் ஜாக்கிரதையா கொஞ்சம் காசு, இன்னும் சாப்பாட்டுச் சாமான்கள், முக்கியமா குடிதண்ணீர் எல்லாம் டெலிஃபோன் புத்தகப் பின்னட்டையில் சொன்னதெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டோம்.

அதென்ன பின்னட்டை, டெலிபோன் புத்தகம்? அவசர நிலமையில் அதாவது வெள்ளம், பூகம்பம், புயல்ன்னு இயற்கைச் சீற்றம் ஏற்பட்டா அரசு நெருக்கடி நிலை அறிவிப்பாங்கல்லே?அப்ப முன்னேற்பாடா என்னென்ன செய்யணும், எந்தெந்த இடங்கள் சிவில் டிஃபென்ஸ்க்கு இருக்குன்னு அந்தப் பின்னட்டையில் விவரம் இருக்கும். அநேகமா அந்த வட்டாரத்துலே இருக்கற பள்ளிக்கூடங்கள்தான் இதுக்குன்னு பயன் படுத்துவாங்க. போன் வச்சிருக்கமோ இல்லையோ, இந்த டெலிபோன் டைரக்டரி மட்டும் நாட்டில் ஒரு வீடு விடாம எல்லா வீட்டுக்கும் வருஷம் ஒரு தடவை விநியோகம் உண்டு. போன் புத்தகம், வெள்ளைப் பக்கம்,மஞ்சள் பக்கம் ( இது 'அந்த' மஞ்சள் இல்லை) ரெண்டும் ஒரு பையில் போட்டு வீட்டு வாசலில் வச்சுட்டுப் போயிருவாங்க. புதுப்புத்தகம் வந்ததும் போன வருசப் பழசை அதே பையில் திருப்பி வச்சுட்டு, அந்தப் பையை வாராவாரம் குப்பைசேகரிப்பு வண்டி வரும் நாள் வெளியே வச்சுட்டா அதை எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க. பழைய பேப்பர்கள், தினசரி நம்ம தபால் பெட்டியில் வரும் ஜங்க் பேப்பர்கள் எல்லாம் இப்படி மறுசுழற்சிக்குப் போயிரும்.

உலகநாடுகள் எல்லாத்தையும் போலவே இங்கேயும் குப்பை ரொம்ப பிரச்சனைதான். இப்ப நாலைஞ்சு வருஷமா,ரீ சைக்கிள் கூடைன்னு ஒண்ணு நகராட்சி எல்லா வீட்டுக்கும் கொடுத்துருக்கு. அதுலெ இந்தப் பேப்பர்கள்,பால், ஜூஸ் வர்ற ப்ளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப்பொருட்கள் வர்ற டின்கள், இன்னும் முக்கியமா பூனை, நாய் வச்சிருக்கும் வீடுகளில் அதுங்களுக்கு சாப்பாடு வர்ற டின்கள்( குறைஞ்சது வீட்டுக்கு ஒரு பூனை நிச்சயம்) இதெல்லாம்வச்சுட்டா அதை ரீ சைக்கிளுக்குக் கொண்டு போயிருவாங்க. நம்மூட்டுலே நிறைய குப்பை சேருதுன்னா இன்னும் ஒண்ணோ ரெண்டோ கூடைகள் வேணுமுன்னு நகராட்சிகிட்டே கேட்டு வாங்கிக்கலாம். இலவசம்தான். எப்படியாவது குப்பைகள் ஒழிஞ்சாச் சரிதானே எல்லாருக்கும்.

பாருங்க, என்னவோ சொல்ல வந்து எங்கியோ போயிட்டேன். புது வருசம் 2000 பிறந்து, நல்லவேளை ஒண்ணும் ஆகலை.மத்த நாடுகளும் அப்பாடான்னு பெருமூச்சு விட்டுச்சு. இது மட்டுமில்லை உலக அளவுலே எது வெளியிட்டாலும்,அது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், விஸ்டா, இல்லே வீடியோ கேம்ன்னு எதுன்னாலும் முதல் விற்பனை நியூஸியில்தான்.

எந்தப் பண்டிகைன்னாலும் ஊர் உலகத்துக்கு முந்தி நாங்க கொண்டாடிருவொம்லெ:-) உலகின் முதலா இருக்க இப்படியும் ஒரு வழி இருக்கு:-)

'தம்பா' என்ற கப்பலில் உயிர் தப்பி வந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் ஆஸ்த்ராலியா அருகில் கடலில்தவிச்சப்ப, ஆஸ்தராலியா அரசாங்கம் அவுங்களை அகதிகளா ஏத்துக்க மறுத்துருச்சு. அப்ப அந்த அகதிகளுக்குஇடம் கொடுத்தது நியூஸி அரசுதான். மொத்தம் 76 பேர். மூழ்கிக்கிட்டு இருந்த இந்தோநேஷியன் படகில் இருந்து காப்பாத்தப்பட்டவங்க இவுங்க. 2001 -ல் நடந்த இந்த சம்பவம் உலகநாடுகளில் அப்ப கவனிக்கப்பட்டுச்சாம்.
அகதிகளுக்கு அப்ப அரசாங்கம் 'வாரி வழங்குனது' பலருக்கு அதிருப்தியைத் தந்துச்சு. அரசாங்க வீடுகள், வாராவாரம் தரும் உதவித் தொகை, குறைந்த செலவில் மருத்துவக் கட்டணம், இன்னும் மற்ற வசதிகள் எல்லாம் செஞ்சு கொடுத்து,கூடவே ஒரு குடும்பத்துக்கு 20,000 டாலர்கள் காசும் கொடுத்தாங்க. அவுங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரவும் அநேக தன்னார்வத்தொண்டு ஆர்வலர்கள் முன்வந்தாங்க. இது இல்லாம பொது மக்கள் நிறைய வீட்டுப்பொருட்களைப் புதுசா வாங்கி அவுங்களுக்குக் கொடுத்தாங்க. எல்லாம் நல்ல விஷயங்கள்தான்.


வாழ வசதி செஞ்சு கொடுத்தது போதாதா? இங்கேயே எவ்வளவோ ஏழைகள் இருக்கும்போது இது போல மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குனது சரியில்லை என்றது அவுங்க எண்ணம். அதுக்கேத்த மாதிரி, பல அகதிகளும்ஆடம்பர வாழ்க்கையைத் தொடங்குனாங்க. அகதிகள்ன்னு சொன்னா எல்லா நாட்டு அகதிகளையும் ஒண்ணுபோல நடத்தவேணாமா? தம்பா அகதிகள் ஸ்பெஷலா இருந்தாங்க. ஒரு வேளை 'ஆஸ்தராலியா வேணாமுன்னு சொன்னவங்களுக்கு நாங்க எப்படி நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தோமு'ன்னு உலகத்துக்குக் காட்டிக்கிற ஆர்வமோ என்னவோ?

19 comments:

said...

good morning teacher

sorry for the english.

there is no e-kalappai, in this machine.

(that's why proxy att.)

tomorrow I will back to school,w/o fail. ( pls do not fail me)

said...

ஜடா முடி எம்.பி கிரிக்கெட் விளையாடுவாரா?
அவர் பந்து வீசும் போது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாக இருக்கு?
அவரோடு முடிந்தால் கபடி விளையாடனும்,ஈசியாக அந்த முடியை பிடிச்சிடலாம்.:-))

said...

உள்ளேன் டீச்சர், நானும் வேணா அகதியா அங்க வந்திடட்டுமா? பூட்டானில் இப்போதான் இணைய இணைப்பு வந்திருக்காம். அதனால நமக்கு வேண்டிய வேகத்தில் கிடைக்குமான்னு சந்தேகமா இருக்கு.

said...

ஸ்பீடு....ஸ்பீடு......என்னா ஸ்பீடா
போறீங்க..

said...

டீச்சர்.. நானும் ரெடியா இருக்கேன்.. ஆப்கானிஸ்தான்ல இருந்து வர்ற அகதின்ற மாதிரி அட்டையும், பாஸ்போர்ட்டும்தான.. இங்கனயே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துல பர்மா காலனில 5000 ரூபாய்க்கு கிடைக்கும். வாங்கிட்டு எப்படி வரணும்? கப்பல்லயா? கள்ளத்தோணில்லயா.. கொஞ்சம் சொன்னீங்கன்னா வர்றதுக்கு சவுகரியமா இருக்கும்.. உங்க பதிவுகளைப் படிக்கப் படிக்க எனக்கு பொறாமையா இருக்கு டீச்சர்..

said...

அக்கா திருமண நாள் வாழ்த்துக்கள்...

said...

மணநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சிஉம் இன்பமும் பொங்க கொண்டாடுங்கள்

said...

வாங்க பெருசு.

நேத்து எங்களுக்கு லீவுப்பா. ராணியம்மா பொறந்தநாள். அதான் இந்தப் பக்கம்
பாடம் எழுதிப்போட்டுட்டுப் போயிட்டேன். ஒழுங்கா படிச்சீங்கதானே? :-)

said...

வாங்க குமார்.

இவர் ஒரு பெரிய தொப்பி போட்டுக்குவார். 'கொண்டை' மறைஞ்சுரும்.
'கபடி' நீங்கதான் இவருக்குச் சொல்லிக் கொடுக்கணும்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

'அகதி'ங்க இப்படி வரட்டான்னு கேட்டுக்கிட்டா வருவாங்க?

அதென்ன ஒரேதா இப்பெல்லாம் 'பூட்டான்'?
ஓஓஓஓஓஓ பூட்டானா?

said...

உள்ளேன் டீச்சர்

மணநாள் வாழ்த்துக்கள்.

(லட்டும் போளியும் dhl செய்யவும்)

said...

வாங்க சிஜி.

உலகமே இப்ப ஸ்பீடாப் போகும்போது நான் மட்டும் 'பொடி'நடை போட்டா எப்படி?

அதுவுமில்லாம, சமகால சங்கதிகள் வேகமா ஓடும்தானே? இதுவே 'சரித்திரம்' ஆகும்போது
நிதானம் வருமுன்னு நினைக்கிறேன்:-)

said...

வாங்க உண்மைத் தமிழரே.

பொறாமையா ? எதுக்கு? நீங்க ரோஜாவை மட்டும் தூரமா இருந்து
பார்க்கறதாலே இப்படித் தெரியுது. பக்கத்துலே வந்து பார்த்தா...........

நிறைய முட்களும் இருக்குங்க.

said...

மீனா, தி.ரா.ச, பெருசு,

அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

கொண்டாட்டம் எல்லாம் கோயிலில்தான். வர்ற ஞாயிறு அங்கேதான்
ஒரு விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கு.

பெருசு,நேராக் கோயிலுக்கு வந்துருங்க. போளி , லட்டு எல்லாம் பழைய
ஸ்டைலாம். அங்கே வேற எதாவது இருக்கும்:-)))

said...

துளசி அக்கா கோபால் மாமா மணநாள் வாழ்த்து(க்)கள்

said...

டீச்சருக்கும் கோபாலுக்கும் வாழ்த்துக்கள்.

said...

வாங்க பாலராஜன்கீதா & கொத்ஸ்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

வகுப்புலேயே இப்படி மணநாள் கொண்டாடவேண்டியதாப் போச்சு. போகட்டும்.
( இதுக்காக ஒரு நாள் லீவு விடமுடியுமா என்ன? )

said...

பெருமாளுக்கு நேர்ந்துகிட்டு மறந்து போயிட்டாரோ..
மணநாள் கழிஞ்ச மறுவீட்டுநாள் வாழ்த்துக்கள்.
.:-)))))

said...

வல்லி,

இந்த 'மறுவீடு' பிஸினெஸ் எல்லாம் ஃபோர் மச்.
அதுவும் 33 வருஷத்துக்கப்புறம்?:-)))))