Tuesday, June 26, 2007

நோ பதிவு, நோ பின்னூட்டம்


தூங்கற குழந்தையை எழுப்ப முடியாது. அதனால் இன்னிக்குப் பதிவும் இல்லை,பின்னூட்டமும் இல்லை.:-)))))))

( மகள் அனுப்பிய படம்)

25 comments:

வைசா said...

"தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே!
தொடரும் கனவுகள் தொடரட்டுமே!"

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே!
அமைதியுன் நெஞ்சில் நிலவட்டுமே!
அக்கா!
தூக்கம் வந்தா பாய் தேவையில்லை
பசி வந்தால் உருசி தேவையில்லை
என்பாங்க அப்படி தான் இருக்கு

ILA (a) இளா said...

தூங்குறவங்களை எழுப்பிடலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது.!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹூம்...லேப்டாப் சூடு குழந்தைக்கு ஆகுமா டீச்சர்? ஏசி போடுங்க. ஃபேன் கிட்ட வையுங்க!

முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்
மியாவிற்கு கணிப்படுக்கை அளித்த காரிகை "துளசி" என்று உம் பெயர் வரலாற்றில் நீங்கா இடம் பெறுவதாக! :-)

CVR said...

ஆஹா!!
இந்த குழந்தையை எப்படி எழுப்ப முடியும்???
எங்க வீட்டுக்கு கொஞ்சம் அந்த பூனைக்குட்டியை அனுப்பி வையுங்களேன்???
ஒரு நாளுக்கு ஆணி பிடுங்காம தப்ப முடியுமான்னு பாக்குறேன்!! :-D

நாமக்கல் சிபி said...

:))

படம் நலா இருக்கு!

சுகமா தூங்குறாப்ல போல!

இலவசக்கொத்தனார் said...

ஓக்கே.

நோ பின்னூட்டம்ஸ்!! :))

மங்கை said...

தாலாட்டுப் பாடினீங்களா

ப்ரசன்னா said...

சரி நானும் பின்னூட்டம் போடலை...

கானா பிரபா said...

என்னக்கொடுமை இது மியாவ்

சிவபாலன் said...

Madam,

Nice Photo!

Unknown said...

:)))

வல்லிசிம்ஹன் said...

கண்ணு படப் போகுது.
ஜிகே கண்ணில படப் போகுது.
அப்புறம் அவன் பாயற பாய்ச்சலில்
இந்த சொ..கொசம்மா தூக்கம் காணாமப்போயிடும்.
அருமையான படம்.
அம்மாவைப் புரிஞ்சிட்ட மகள்.:)))))

siva gnanamji(#18100882083107547329) said...

கண்ணே கண்ணுறங்கு
கண்மணியே நீயுறங்கு..

நாடு சுத்தும் கோபாலின்
நன்மகளே கண்ணுறங்கு..

ஊரு சுத்தும் துளசிக்கு
ஓய்வளிக்கக் கண்ணுறங்கு...

பாவப்பட்ட மாணவர்க்கு
வகுப்பில்லே கண்ணுறங்கு...

தகடூர் கோபி(Gopi) said...

:-))

அட! இப்படி கூட தூங்க முடியுமா?

லக்ஷ்மி said...

யப்பாடி... இன்னிக்கு மட்டுந்தானே... தலைப்பை பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்... என்னடா இது, தமிழ் வலையுலகுக்கு வந்த சோதனை அப்படின்னு.... :)

Jazeela said...

பக்கத்துல உட்கார்ந்து தாலாட்டு பாடுவது உங்க மகளா? ;-)

உண்மைத்தமிழன் said...

ம்.. இப்படியாச்சும் பொறந்து தொலைஞ்சிருக்கலாம்.. என்ன மனுஷப் பொழப்பு இது..?

கண்மணி/kanmani said...

lap topன்னு 'மியா' கிட்ட சொன்னீங்களா அதான் லேப் டாப்புல
தூங்கறா[ன்]????//

அத்தைமடி மெத்தையடி
கணிணி மடி சுடுமடி
இங்க வா செல்லம்.=))
ச்சுப்பு உன்னைப் பார்த்துப்பான் ஹி..ஹி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

மன்னிக்க உங்களையும் மாட்டி விட்டுட்டேன்..கலந்து கொள்ளுங்கள்..

http://nilavunanban.blogspot.com/2007/06/blog-post_26.html

துளசி கோபால் said...

இந்தப் பூனைக்குட்டி எத்தனைபேரை இழுத்துருச்சுன்னு பார்த்தால்....................!!!!!!!

வைசா, யோகன், இளா, ச்சின்ன அம்மிணி, KRS, CVR, நாமக்கல் சிபி,
கொத்ஸ், டெல்ஃபீன், மங்கை, ப்ரசன்னா, பிரபா, சிவபாலன், தேவ், வல்லி,
சிஜி, கோபி, லக்ஷ்மி, ஜெஸிலா, உண்மைத்தமிழன், கண்மணி & நிலவு நண்பன்

( கொஞ்சம் இருங்க எல்லார் பேரும் இருக்கான்னு பார்த்துக்கறேன்)

உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது

அந்தப்பூனைக்குட்டி(தான்)

சிஜியின் தாலாட்டுலே தூங்கி இப்பத்தான் எந்திருச்சேனாக்கும்:-))))

Osai Chella said...

Poonai en thoonguthu. Mouse ai saappituviity oru siru kuttithtookkam!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\யப்பாடி... இன்னிக்கு மட்டுந்தானே... தலைப்பை பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்... என்னடா இது, தமிழ் வலையுலகுக்கு வந்த சோதனை அப்படின்னு.... :)//

அதே அதே...
(சென்ஷியோட பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சே :( )

துளசி கோபால் said...

வாங்க ஓசை செல்லா.

//Poonai en thoonguthu. Mouse ai saappituviity
oru siru kuttithtookkam//

அட! எனக்கு இது தோணலை பாருங்க. தூக்கத்தைப் பார்த்தா ஏப்பம் விட்டபிறகு
மாதிரிதான் இருக்கு:-))))

துளசி கோபால் said...

வாங்க முத்துலெட்சுமி.

தமிழ்நாடு பூராவும் சூறாவளி சுற்றுப்பயணம்
செஞ்சுக்கிட்டு இருக்கீங்க போல!!!

//........ என்னடா இது, தமிழ் வலையுலகுக்கு வந்த
சோதனை அப்படின்னு.... :)//

அவ்வளவு சீக்கிரம் உங்களையெல்லாம் விடறதா இல்லை:-)))))