Wednesday, May 30, 2007

நியூஸிலாந்து பகுதி 63

பிரதமர் ஜிம்(ஜேம்ஸ்) போல்ஜர், எப்ப என்ன ஆகுமோன்ற கவலையில் ரொம்பக் 'கவனமா' ஆட்சி செஞ்சுக்கிட்டு இருக்கார். கட்சிக்குள்ளில் தனக்கு ஆதரவு திரட்டிக்கிட்டு இருந்தாங்க ஜென்னி ஷெப்லி. இவுங்க நல்ல நேரமோ, இல்லை பிரதமரின் கெட்ட நேரமோ தெரியலை.ஒரு சமயம் பிரதமர் ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு கான்ஃபரன்ஸ்க்குப் போயிருந்தார். அவருக்கு ஆப்பு வைக்கச் சரியான சமயம் அகப்பட்டுருச்சு. ஷெப்லி தன்னோட ஆதரவாளர்களைத் திரட்டுனாங்க. நேஷனல் கட்சித் தலைவியா(வும்) ஆகிட்டாங்க. (இதுக்குத்தான் உக்கார்ந்த நாற்காலியை விட்டு எழுந்திரிக்கவே கூடாதுன்றது.) திரும்ப வந்த பிரதமர், இப்படி முதுகில் குத்து வாங்கின மனக்கஷ்டத்தில் ராஜினாமா செஞ்சுட்டார். ஷிப்லி பிரதமர் ஆனாங்க. நியூஸியின் முதல் பெண் பிரதமர். எங்க ( Beehive) தேன்கூட்டின் முதல் ராணித்தேனீ ! இந்த இடத்துலே ஒண்ணு சொல்லிக்கறேன். ஷிப்லி ஒரு டீச்சர். 19 வயசுலே டீச்சராகி அஞ்சு வருஷம் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையா இருந்து அரசியலுக்கு வந்தவுங்க.


எதிர்க்கட்சித் தலைவியா இருந்த ஹெலன் க்ளார்க்குக்கு பெரிய இடி! ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் தாந்தான் முதல் பெண் பிரதமரா ஆகப்போறொமுன்னு இருந்தாங்களே. சட்டசபையில் எதிரும் புதிருமா ரெண்டு பெண்கள்.இந்தக் கணக்குலே பார்த்தால் இதுவும் உலகில் முதல்முறைதானே?

இந்த மந்திரி சபைக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆயுள் இருக்கு.
சமையலில் குழம்பு தாக்குப் பிடிக்கிற மாதிரி கூட்டு இருக்காதுல்லே? சீக்கிரமாக் கெட்டுரும்தானே? அதே கதைதான் இந்த அரசியல் கூட்டுலேயும். உள்ளுக்குள்ளெ புகைய ஆரம்பிச்சது. இந்த அழகுலே போனா, வரப்போற தேர்தலில் நம்ம கட்சி நிலைக்கறது கஷ்டமுன்னு நியூஸி ஃபர்ஸ்ட்க்குத் தோணிருச்சு. இதே தோணல் பிரதமருக்கும். கூட்டோட ஸ்ட்ரெஸ் தாங்க முடியலை. இப்பப் பார்த்து ஆக்லாந்து பன்னாட்டு விமான நிலையத்தைத் தனியாருக்கு வித்தாங்க. இதனால் கூட்டுலே பிரதமருக்கும் உதவிப் பிரதமருக்கும் ஏகப்பட்ட கருத்து வேற்றுமை. முடிவு? உதவிப் பிரதமர் பதவிக்கு(ம்) ஆப்பு. பதவி பறிபோனாலும் கூடவே இருக்கணுமுன்னு தலையெழுத்தா என்ன? கொஞ்ச நாளில் வின்ஸ்டன் பீட்டர், கூட்டுக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கிட்டார். அவர் மட்டும்தான் வாபஸ். அவர் கட்சியில் இருந்த மத்தவங்க எல்லாரும் அல்வாக் கிண்டித் தலைவருக்கு ஊட்டிட்டுக் கட்சியில் இருந்து வெளியே வந்து, அலையன்ஸ் கட்சியில் சேர்ந்துக்கிட்டு ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்துட்டாங்க. அடுத்த தேர்தல்வரை வண்டி இப்படியே ஓடுச்சு. 'யஹாங் ஸே வஹாங், வஹாங்ஸே யஹாங்':-)))))

ச்சீனாவுக்கு(1997) ஹாங்காங் திரும்பக் கிடைச்ச சமயம், நிறையப்பேர் அங்கிருந்து பிஸினெஸ் மைக்ரேஷன்லே நியூஸி வர்றதுக்கு முயற்சி செஞ்சாங்க. குறைஞ்சது அரை மில்லியன் டாலர் இங்கே நியூஸியில் முதலீடு செய்யணுமுன்னு அரசாங்கம் சொல்லுச்சு. அதுவுமில்லாம அதுவரை ஹாங்காங் பிரிட்டிஷ் வசம்தானே இருந்துச்சு.அப்ப ஒரு அம்பதாயிரம் பேர் இங்கே வந்துட்டாங்க. கடந்த சில வருசங்களா ஃபிலிப்பினோப் பெண்கள், மலேசியப் பெண்கள் இங்கத்து 'கிவி' ஆட்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு நியூஸிக்கு குடிவந்தாங்க. அப்புறம் கொரியா, ஜப்பான்னு சில இடங்களில் இருந்து கொஞ்சமுன்னு வெவ்வேறு நாடுகளில் இருந்து புது ஜனங்கள் வந்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஐரோப்பியர்கள் வருவது ரொம்பவே குறைஞ்சு போச்சு.சீனாவிலே இருந்தும் ஏராளமான ஜனங்கள் வியாபார விஸா வாங்கி வந்து குடியேறுனாங்க.சமோவா, இன்னும் மத்த பஸிபிக் தீவுகளில் இருந்து நிறையப்பேர் வந்துக்கிட்டு இருந்தாங்க. நியூஸி பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்கள் இருக்கும் நாடா மாறிக்கிட்டு இருந்துச்சு. அரசியலில் பெண்களின் பங்கு கூடிக்கிட்டுப் போச்சு. ஒரு ச்சீனப் பெண்மணி பார்லிமெண்ட் அங்கத்தினராகவும்( லிஸ்ட் எம்.பி) ஆனாங்க.

குடும்ப வன்முறைகளில் கஷ்டப்பட்டவங்க எண்ணிக்கையில் ஆசியப் பெண்கள் நிறைய இருந்தாங்க. ஆங்கிலமொழி தெரியாத பலர், தேவையான சமயங்களில் உதவிக்கு எங்கே போய் யாரிடம் கஷ்டத்தை விளக்கிச் சொல்லறதுன்றது ஒருபிரச்சனையா இருந்துச்சு. அதுவுமில்லாம , குடும்பத்தில் நடக்கறதை வெளியே போய் சொல்றது ஒரு அவமானமுன்னு எண்ணம். இதைக் கவனிச்ச சில ஆசியப் பெண்கள் ஏழு பேர் சேர்ந்து 'சக்தி'ன்னு ஒரு அமைப்பைத் தொடங்குனாங்க. இது இப்பபெரிய அளவில் வளர்ந்து ஆசியப் பெண்களுக்கு மட்டுமில்லாம பொதுவா எல்லாருக்கும் உதவுது. எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் இருக்கு. சீனா, தாய்லாந்து, மலேயா, வியட்நாம், கம்போடியா, கொரியா, இந்தியா, ஜப்பான், பர்மா,பாகிஸ்தான், பங்களாதேஷ், இரான், இராக், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்ரிக்கா, ஸ்ரீலங்கான்னு பலநாடுகளைச் சேர்ந்த 20,000பெண்கள் இதன்மூலம் உதவியடைஞ்சிருக்காங்க. பல ஆசிய மொழிகளிலும் 'சக்தி' என்ற சொல்லுக்கு 'பலம் (ஸ்ட்ரெந்த்) என்ற பொருள் இருக்கறதாலே இந்தப் பெயர் ரொம்பப் பொருத்தமா அமைஞ்சுருச்சு. பெண்கள் நலனுக்காகவே அரசு ஒரு புது இலாக்கா ஏற்படுத்துச்சு.

20 comments:

said...

//இந்த மந்திரி சபைக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆயுள் இருக்கு.
சமையலில் குழம்பு தாக்குப் பிடிக்கிற மாதிரி கூட்டு இருக்காதுல்லே? சீக்கிரமாக் கெட்டுரும்தானே? அதே கதைதான் இந்த அரசியல் கூட்டுலேயும். உள்ளுக்குள்ளெ புகைய ஆரம்பிச்சது.//

ஆஹா!! ஆஹா!!
நீங்க எங்கேயோஓஓஓஓஓஓஓஓஓ போய்ட்டீங்க டீச்சர்!! :-D
நடத்துங்க!! :-D

said...

பெண், டீச்சர், ராணித்தேனி, தேன்கூடு - இது வரைக்கும் சரியா வந்தது. அப்புறம் சண்டை எல்லாம் போடணுமாமே. நீங்க இந்த பதவிக்கு சரி இல்லை போலத் தெரியுதே!!!

said...

good morning teacher

said...

"சக்தி" அமைப்பு கஷ்டம் உள்ள பெண்களுக்கு உதவி செய்கிற அமைப்பு- ஒத்துக்கிறோம் ஆனால் அந்த ஷெல்லி அதில் அங்கத்தினரா?
முதுகில் குத்த எங்கிருந்து கற்றுக்கொண்டார்? :-))

said...

வாங்க CVR.

இதுலே ஏதோ உ.கு. மாதிரி இருக்கேப்பா:.

சமீபத்துலே ச்சென்னையில் கத்துக்கிட்டதா? :-)

said...

வாங்க கொத்ஸ்.

'தம்பி(கள்) & தங்கை(கள்) உடையாள் படைக்கஞ்சாள்' கேள்விப்படலையா?
தம்பி தங்கைகள் கூட்டமில்லாம, இப்ப என் வகுப்பு (கலக) கண்மணிகள் நீங்கள்
எல்லாம் இருக்கும்போது சண்டைக்கு நிக்க என்ன பயம்?

அதெல்லாம் நேரம் வரட்டும். கொளுத்திப்பிடலாம். ( இது வேற மாதிரி கொளுத்தல்)

said...

வாங்க பெருசு.

ஆஜர் மட்டும் கொடுத்துட்டு, வகுப்புலே சைலண்டா இருந்தா.....( சைலண்ட் lamb?)

said...

வாங்க குமார்.

'அம்மணி' ஆட்சியில்தான் 'சக்தி' அமைப்புக்கே அஸ்திவாரம் போட்டது.
கஷ்டப்படும் 'எத்னிக்' மனிதர்களுக்கு(மட்டும்)!

முதுகில் குத்தவும் ட்ரெயினிங் எடுத்துக்கணுமா?
தானே வர்றதில்லையா இதெல்லாம்:-)

said...

ஆக எல்லா ஊர்லயும் இதே நாடகம்தான்;நடிகர்கள்தான் வெவ்வேறு
நபர்கள்.......

said...

இக்கினூண்டு நியூசிலாந்துக்கே இத்தன எபிஸோட்ன்னா, நீங்க இந்தியா பத்தி எழுதினா எம்மாம் பெருசு எழுதுவீங்க...யப்பா...

said...

சண்டை போட முடியாததினால நீங்க பதவிக்கு போட்டியிட முடியாதுன்னு கொத்தனார் சொல்லறாரா.இன்னிக்குதான் நியூஸ்ல படிச்சேன். நியூஸி is the second peaceful country in the world.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நல்ல விஷயம்தான்.
இப்பத்தான் நம்ம 'சற்றுமுன்'லே நம்மாட்களுக்கு இந்த
மகிழ்ச்சியான விவரத்தைத் தண்டோராப் போட்டுருக்கேன்:-)

said...

வாங்க சிஜி,

'ரத்தம் ஒரே நிறம்' ஆனால் தோல் மட்டும்தான் வெவ்வேறு நிறம்:-)

said...

வாங்க அபி அப்பா.

என்ன திடீர்னு இந்தப் பக்கம்:-)

இக்கினியூண்டு நியூஸியா?

சரியாப் போச்சு.
கட்டில் சின்னதுன்னாலும் காலு, நாலு வேணுமுல்லே? :-)))))

said...

//இந்த இடத்துலே ஒண்ணு சொல்லிக்கறேன். ஷிப்லி ஒரு டீச்சர்//

இந்த இடத்துலே நானும் ஒண்ணு சொல்லிக்கறேன். எங்க டீச்சரும் ஒரு டீச்சர்! :-)

டீச்சர்...நீங்க ஏன் இன்னும் அந்தக் கட்சி உறுப்பினர் ஆகாம இருக்கீங்க?
நீங்க சீக்கிரம் சேர்ந்தாத் தானே, மாணாக்கர்கள் நாங்க எல்லாம் சட்டசபைக்குள்ளார வர முடியும்!

சீக்கிரம் யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்க டீச்சர்! :-)))

said...

//சரியாப் போச்சு.
கட்டில் சின்னதுன்னாலும் காலு, நாலு வேணுமுல்லே? :-)))))//

சிவாஜி படம் பஞ்ச் டயலாக் ஏதாச்சும் ட்ரை பண்ணீங்க போலக் கீதே! :-))

said...

ரெண்டு பெண்கள் ஆட்சியா. சுவாரஸ்யமா இருக்குமே.
தினப்படி உடை அணிவகுப்பு இருக்குமா.

இவ்வளவு கோர்வையா நியூசி பத்திச் சொல்றதுக்காகவே உங்களுக்கு ஹிஸ்டரி டிபார்ட்மெண்ட் அமைச்சர் பதவி கொடுக்கணும். நான் வேணா ஜென்னி டீச்சருக்கு எழுதிப் போடட்டுமா.
நியூசி எப்பவுமே சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள்,

said...

வாங்க KRS.

ஷெப்லி கட்சியில் எல்லாம் சேரப் பிடிக்கலை. ஆனா போன தேர்தலில்
நம்ம வின்ஸ்டன் பீட்டர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகள், கொள்கைகள்
எல்லாம் சரின்னு தோணியதால் அவருக்கு ஒரு மெயில் அனுப்புனேன்.
உடனே அவர் கட்சி சார்பா நம்மூர்லே MP seat க்கு நின்னவர் நம்ம வீட்டுக்கே
வந்து என்னைச் சந்திச்சு கொள்கைகளை விவரிச்சு, என் கருத்தையும் கேட்டுட்டுப்போனார்.

பாவம். கூட ஆள் அம்பு இல்லாம தனியா தானே காரை ஓட்டிக்கிட்டு வந்தாருப்பா. நம்மூர்
நிலவரத்தை நினைச்சுப் பார்த்ததுலே இதுவே அப்ப எனக்கு வியப்பா இருந்துச்சு. அதுலே
இருந்து அவுங்க கட்சி விஷயமுள்ள நியூஸ் லெட்டர் தவறாம வந்த்துருது:-)


கட்டில் கால்.....இது பஞ்ச் டயலாக் இல்லை.
ஒரு மலையாளப் பழமொழி:-)))))

said...

வாங்க வல்லி.
//தினப்படி உடை அணிவகுப்பு இருக்குமா.//

இல்லைப்பா(-:

ஆளாளுக்கு ஒருத்தர் இருப்பாங்கல்லே அப்பியரன்ஸ் எப்படி இம்ப்ரூவ் பண்ணிக்கணுமுன்னு
சொல்லித்தர ஆலோசகர். அவுங்க பேச்சைக் கேப்பாங்க போல.

ஆனா பிரதமர் ஆனதும் உடையில் நளினம், பாலீஷ் எல்லாம் கூடித்தான் போச்சு. கெத்து
வேணுமுல்லே?

said...

அங்கேயும் இதேதானா டீச்சர்..? நடுவுல ஆட்சியைக் கவுக்குறது.. அப்பால புதுசா பதவியைப் பிடிக்கிறது.. சரி.. சரி.. நாங்க காலரைத் தூக்கி விட்டுக்கிறோம் எங்களுக்கும் தோஸ்துக இருக்காகன்னு..