Saturday, May 05, 2007

நியூஸிலாந்து பகுதி 55


ஒன்னுலே இருந்து நாப்பது வரை இருக்கும் எண்களில் எதாவது ஆறு எண்களைத் தேர்ந்தெடுத்துக்கணும். இப்படியே வேற வேற காம்பினேஷனில் குறைஞ்ச பட்சம் நாலு வரிசை எடுத்துக்கிட்டு, இதுக்குன்னே இருக்கும் தாளில் இந்த எண்களைக் குறிச்சுக் கொடுத்துக் கூடவே ரெண்டு டாலரையும் தந்தால், உங்களுக்கு நீங்க எழுதுன எண்கள் அடங்கிய லாட்டரிச்சீட்டுத் தருவாங்க. சனிக்கிழமை ராத்திரி எட்டு மணி அஞ்சு நிமிஷமானா நீங்க பணக்காரரா ஆனீங்களா,இல்லையான்னு தெரிஞ்சுருமாம்:-)


இந்த வருஷம்(1987) லேதான் 'லாட்டோ'ன்னு சொல்லும் ஒரு லாட்டரி விளையாட்டு(???) ஆரம்பிச்சாங்க. இதுலே கிடைக்கும் லாபம் எல்லாம் தர்ம காரியங்களுக்காக மட்டுமேன்னு சொன்னாங்க. தொலைக்காட்சியிலே நேரடி ஒளிபரப்பா,இந்தக் குலுக்கல் நடக்கும். ஏமாத்துவேலை ஒண்ணும் இல்லைன்னதும் மக்கள் ஆர்வமா லாட்டரிச் சீட்டுகளை வாங்குனாங்க. பரிசு கிடைச்சாச் சரி, இல்லேன்னா தர்மம் செஞ்சோமுன்னு நினைச்சுக்கலாமே! ஒவ்வொரு சனிக்கிழமையும்ராத்திரி எட்டு மணிக்கு குலுக்கல். அன்னிக்குச் சாயங்காலம் ஏழு மணிவரையும் டிக்கெட் விற்பனை உண்டு. அநேகமாஎல்லா சூப்பர் மார்கெட்லேயும் இதுக்குன்னே ஒரு தனி இடம் இருக்கு. மக்கள் உப்புப்புளி மொளகா வாங்கும்போதே இதையும் வாங்கிக்கலாமாம். அதுக்குன்னு ஒரு நடை நீங்க வரவேணாம்,பாருங்க :-))))


இதே வருஷம்தான், முதல் முறையா இங்கத்து நோயாளிக்கு இருதய மாற்று சிகிச்சை வெற்றிகரமா நடந்துச்சு. இதுக்குமுன்னே இப்படி பெரிய சிகிச்சைக்கு அண்டைநாடான ஆஸ்தராலியாவுக்குத்தான் போய்க்கிட்டு இருந்தாங்க. தனியார் மருத்துவ மனையெல்லாம் இங்கே இல்லை. எல்லாமே அரசாங்க மருத்துவமனைகள்தான். ஆனா ஆஸ்பத்திரிகள் சுமாரான பெரிய ஊர்களில்தான் இருக்கு. ஒவ்வொண்ணும் நல்ல தரமான சிகிச்சை. என்னமோ ஃபைவ் ஸ்டார் ஹொட்டேல் மாதிரிதான் இருக்கு.


மவோரிகள் தங்களுடைய மொழியை எப்படியாவது காப்பாத்திக்கணுமுன்னு போராடிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களோட வருங்கால சந்ததிகளுக்கு மவொரி மொழின்னு ஒண்ணு இருந்ததே தெரியாமப் போயிருமோன்னு கவலை. இவுங்கஆரம்பிச்ச 'கொஹங்கா ரிஓ' ( Kohanga Rio - Language Nest) நர்ஸரிப் பள்ளிகள் நல்லாவே நடந்துக்கிட்டு இருந்துச்சு. ரொம்ப இளவயசுப் பிள்ளைங்கன்றதாலே சட்ன்னு அவுங்களாலே புரிஞ்சுக்கவும் முடிஞ்சது. இனியும் இந்த மொழிக்கான அந்தஸ்தைக் கொடுக்கலைன்னா சரி இல்லைன்னுட்டு, மவோரி மொழியையும் அரசாங்கம் அதிகாரபூர்வமான மொழின்னு அங்கீகரிச்சது.


இப்பெல்லாம் அநேகமா எல்லா 'முக்கிய' விளையாட்டுகளிலும் உலகக்கோப்பைப் போட்டின்னு ஒண்ணு வந்துருச்சுல்லே?இந்த 1987வது வருஷம்தான் ரக்பி விளையாட்டுக்கும் உலகக்கோப்பைப் போட்டின்னு ஒண்ணு உலகில் முதல்முறையாஆரம்பிச்சது. நியூஸிலாந்துலே ரக்பிதான் தேசீய விளையாட்டு. இதை வச்சு எத்தனையோ தொழில்கள், வேலை வாய்ப்புகள் எல்லாம் சுத்துது. ரக்பின்னா சோறு, சரி ப்ரெட்ன்னு வச்சுக்கலாம். ப்ரெட், தண்ணி( இது யாருக்கு வேணும்?) இல்லாமக் கிடப்பாங்க மக்கள்ஸ். இந்த உலகக்கோப்பையை, உலகிலேயே முதல்முதலா ஜெயிச்சு வாங்கி வந்துட்டாங்க.


இந்த நாட்டுலே முக்கியமா பாராட்ட வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்குன்னா, இது இந்த வெற்றி விழாக்கள்தான்.நாட்டுக்கு எந்த வெற்றியா இருந்தாலும், அதை சாதாரண சாமானியர்கள் பார்வைக்கும் கொண்டு வருவாங்க. எல்லா ஊர்லேயும் இந்த கோப்பையைக் கொண்டுபோய் காமிச்சாங்க(ளாம்)


பொதுத்தேர்தல் வந்துச்சு. இந்த முறையும் லேபர் கட்சிக்குத்தான் வெற்றி. டேவிட் லாங்கேதான் பிரதமராத் தொடர்ந்தார். அணு சம்பந்தமான எதுவுமே கூடாதுன்ற கொள்கையில் பிடிப்பா இருந்துச்சு நாடு. இதுலே கட்சி வேறுபாடு இல்லாம நாடு முழுசும் ஒரே ஒற்றுமையா இருந்துச்சு.


16 comments:

said...

//ரொம்ப இளவயசுப் பிள்ளைங்கன்றதாலே சட்ன்னு அவுங்களாலே புரிஞ்சுக்கவும் முடிஞ்சது. இனியும் இந்த மொழிக்கான அந்தஸ்தைக் கொடுக்கலைன்னா சரி இல்லைன்னுட்டு,//

வெரி குட்! வெரி குட்!
இப்படி உணர்வு பூர்வமாகவும் கொஞ்சம் அணுகினாலே பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

//அணு சம்பந்தமான எதுவுமே கூடாதுன்ற கொள்கையில் பிடிப்பா இருந்துச்சு நாடு. இதுலே கட்சி வேறுபாடு இல்லாம நாடு முழுசும் ஒரே ஒற்றுமையா இருந்துச்சு.//

ஆகா, இது என்ன அதிசயம்!
வசவு வார்த்தைகள் மட்டும் எக்காரணம் கொண்டும் எந்தப் பதிவிலும் வரக் கூடாது என்று எல்லாக் கட்சிகளும் ஒற்றுமையா இருந்தா!
டீச்சர், நியூசி நல்ல நியூசி! :-)

said...

\\ரக்பின்னா சோறு, சரி ப்ரெட்ன்னு வச்சுக்கலாம். ப்ரெட், தண்ணி( இது யாருக்கு வேணும்?) இல்லாமக் கிடப்பாங்க மக்கள்ஸ். //

என்ன ஒரு முன்யோசனை..? :)

said...

//ஏமாத்துவேலை ஒண்ணும் இல்லைன்னதும் மக்கள் ஆர்வமா லாட்டரிச் சீட்டுகளை வாங்குனாங்க. பரிசு கிடைச்சாச் சரி, இல்லேன்னா தர்மம் செஞ்சோமுன்னு நினைச்சுக்கலாமே!//

இங்க அப்படியே உல்டா டீச்சர்..(கூப்பிடலாம்ல.. பயமாயிருக்கு சாமி யார்கிட்டேயும் பேசுறதுக்கு..) ஒரே நம்பர்ல ஆயிரம் சீட்டு கைல இருக்கும். அந்த ஆயிரம் சீட்டுக்கும் கண்டிப்பாக பரிசு கிடைக்காது. ஏன்னா அல்லாமே போலி.. 50 ரூபாய் பரிசு சீட்ட மட்டும்தான் இங்க குலுக்குவாங்க..

இன்னமும் இந்த லோட்டோ பரிசுச் சீட்டு இருக்கா டீச்சர்.. என் பேர்ல ஒண்ணு வாங்குங்க.. பரிசு விழுந்தா எனக்கு.. இல்லாட்டி மொய்க் கணக்குன்னு வைச்சுக்குங்க.. இது எப்படி இருக்கு டீச்சர்?)))))))))))))

said...

வாங்க KRS.

பாடம்ன்னு சொன்னதும் மக்கள்ஸ் கவனமா இருக்காங்க:-)

//வெரி குட்! வெரி குட்!
இப்படி உணர்வு பூர்வமாகவும் கொஞ்சம் அணுகினாலே
பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்.//

போனவாரம் சட்டசபையில் ஒரு மசோதாவில் திருத்தம் செஞ்சதுக்கும் இப்படித்தான்
ஆளும் கட்சியுடன், எதிர்கட்சியும் ஒற்றுமையா சேர்ந்துருச்சு.

இங்கே பாருங்க.

said...

வாங்க முத்துலெட்சுமி.

விழாவெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? ( அம்பதைச் சொன்னேன்)

உள்ளூர் ரக்பி மேட்சுன்னா பார்க்கணுமே, ஊரே புலி வேஷம் போட்டமாதிரி face painting
செஞ்சுக்கிட்டு இருக்கும். எனக்குத்தான் அதைப் பார்த்ததும் தமிழ்நாட்டு ஞாபகம் அதிகமாயிரும்.
எங்க உள்ளூருக்குன்னு இருக்கும் நிறம் கருப்பு& சிகப்பு:-)

said...

வாங்க உண்மைத்தமிழரே.

நமக்குத் 'துண்டு' வாங்கிப்போடும் உங்களுக்காக, ஒரு லாட்டரிச்சீட்டு வாங்கிவைக்கறது
பெரிய காரியமா என்ன? இப்பப் போன வருசத்துலே இருந்து அதுவும் விலைவாசியிலே
கூடிருச்சு. 40 செண்ட் கூட்டிட்டாங்க.

பதிவர்கள் யாராவது இந்தப் பக்கம் வந்தா ச்சீட்டு வாங்கி என்கிட்டே கொடுத்துட்டுப் போங்க.
பரிசு விழுந்தா வாங்கி வைக்கறேன்:-)

'டீச்சர்'னு தாராளமாக் கூப்புடலாம். இதுக்கெல்லாம் பெஞ்சுமேலே ஏத்தமாட்டேன்:-)))

said...

முதல்பகுதி, வகுப்பறை நோட்ஸ் மாதிரி விரிவா எழுதினீங்க...இப்ப
எக்ஸாம் ஹாலுக்கு எடுத்துப்போற
பிட்ஸ் மாதிரி எழுதுறீங்க
அவசரப் படேல்!

said...

வாங்க சிஜி.

சரித்திரம் எழுதறேன்னு நானே சரித்திரமாயிட்டா?

அதுவுமில்லாம ஒரு நாட்டின் சரித்திரத்துலே 20 வருஷங்கறது சமீபத்துலே
நடந்த வகையில்தானே வரும்? உண்மையான சரித்திரத்துலே நடந்தது எல்லாம்
அநேகமாச் சொல்லி முடிச்சாச்சு. இனி வர்றது 'மாடர்ன் ஹிஸ்டரி'யாப் போயிருமே:-)

ரொம்ப இழுத்தாலும் சுவாரசியப்படாது. வருங்காலத்துலே சரித்திரம் எழுதறவங்களுக்குக்
கொஞ்சம் மிச்சம் வச்சுட்டுப் போகலாமுன்னுதான்....................:-)))))

said...

வரலாற்றாளர் என்ற பட்டத்தையும் நியூசிலாந்தாலஜிஸ்ட் என்ற பட்டத்தையும் உங்களுக்கு ஒருங்கே அளித்து பெருமைப்படுகிறேன்.

லாட்டரி நல்ல லாட்டரியாவும் இருக்குதே. உப்பு...புளி...மிளகாய் வாங்கும் போதே லாட்டரியா. சரி. நல்லதுக்குப் பயன்படுத்துறாங்க. அதுனால நல்லதுதான்.

குழந்தைகள் தாய்மொழியைக் கற்க வேண்டும். அதற்காக மாவோரிகள் எடுத்துக் கொண்ட சிரமங்களுக்கும் முயற்சிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்.

said...

துளசி,
லேட்டா வரதுக்கு மன்னிக்கணும்.

ரொம்ப சுவையாப் படிக்கிறமாதிரி,சோறு,தண்ணி எல்லாம் சேத்திட்டீங்க.
எனக்கு உங்க ஊரு ரொம்பப் பிடிக்குதுங்க.
செட்டில் ஆயிடலாமானு யோசிக்கிறேன்.
பின்ன இப்படி ஏகத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே.:-0)

said...

வாங்க ராகவன்.

நம்மூர்லே 'கலைமாமணி' பட்டத்தை இப்படித்தான் பெருமாள் கோயில் சுண்டல் மாதிரி
எல்லாருக்கும் தராங்கன்னு எங்கியோ படிச்சேன்.
இங்கே என்னன்னா...........நீங்க வாரி வழங்கறீங்க:-))))


சரி. எதுக்கும் இருக்கட்டும். வர்ற 'பட்டத்தை' காத்துலே விட்டுறமுடியுமா?

மவொரி மொழிக்கு 'உருவம்' கிடையாது. எழுதறதுக்கு ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்தறாங்க.
ஃபிஜியன் மொழிக்கும் இப்படித்தான். பேச்சு மொழிதான்.

said...

வாங்க வல்லி.

அது ஒரு இருபது வருசம் முந்திவரை நல்ல ஊராத்தான் இருந்துச்சு.
இப்ப நாங்கெல்லாம் வந்துட்டம்லெ:-)))))

said...

இங்கேயும் இந்த டோடோ படாத பாடு படுத்துது.இன்னும் 1 தடவை கூட முயற்சிக்கவில்லை.

said...

//துளசி கோபால் said...
வாங்க வல்லி.

அது ஒரு இருபது வருசம் முந்திவரை நல்ல ஊராத்தான் இருந்துச்சு.
இப்ப நாங்கெல்லாம் வந்துட்டம்லெ:-)))))

//

அதான.... எங்க டீச்சர் நேர்மையா இல்லாம போயிருவாங்களோன்னு பயந்துட்டோமுல்ல.

said...

வாங்க குமார்.

//இன்னும் 1 தடவை கூட முயற்சிக்கவில்லை. //

அப்படியே வுட்டுறாதீங்க.

said...

வாங்க காட்டாறு.

//அதான.... எங்க டீச்சர் நேர்மையா இல்லாம
போயிருவாங்களோன்னு பயந்துட்டோமுல்ல//

அதெப்படி? உண்மையைச் சொல்லிர்றதுதானெ எப்பவும் நல்லது:-)))))