Wednesday, May 16, 2007

நியூஸிலாந்து பகுதி 60


போன தேர்தலில்(1990) முழுசா அதிக இடம் பிடிச்சு ஆட்சிக்கு வந்த நேஷனல் கட்சிதான் இப்பவும் ஜெயிச்சது. ஆனா 'கரணம் தப்புனா மரண'முன்னு சொல்றாப்போல ஒரே ஒரு ஸீட் மெஜாரிட்டி. இந்தத் தேர்தலுக்கு சில மாசத்துக்கு முன்னே, இன்னொரு புதுக் கட்சியும் உதயமாச்சு. இதுவரை மவொரி விஷயங்களுக்கான மந்திரியா இருந்த வின்ஸ்டன் பீட்டர் (இவர் மவொரி இனத்தைச் சேர்ந்தவர். ரொம்ப சுவாரசியமான நபர். இவரைப்பத்தி நிறையவே சொல்லலாம்) கருத்து வேறுபாடு காரணம் 'நியூஸிலாந்து ஃபர்ஸ்ட்' ( NZ First) ஆரம்பிச்சு,ரெண்டு ஸீட்டும் பிடிச்சிட்டார். அலையன்ஸ்-ம் ரெண்டு இடம். லேபர் 45. இவுங்க எல்லாரும் கூடிக்கிட்டாங்கன்னா49 ஆயிரும். இந்தத் தேர்தலில் ரெண்டு தொகுதி கூடுதலா ஆகி இருந்தது. மொத்தம் 99 தொகுதி. 50/49 னு இருந்துச்சு கட்சி நிலவரம். எப்பவும் எதுவும் நடக்கலாம்.

நேஷனல் அரசு ஒரு காரியம் செஞ்சது. கூடுதல் பலம் வேணுமே....... அதுக்கு எதாவது டானிக், தாதுபுஷ்டி லேகியம்,மருந்து மாத்திரை? சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒருத்தரைத் தேர்ந்தெடுத்துச்சு. தன் கட்சியில் இருந்துஎடுத்தா 49/49 ன்னு சரிசமமா ஆயிருமே! லேபர் கட்சியின் எம்.பி.யான, பீட்டர் டாப்செல்(Peter Tapsell)க்கு இந்தப் பதவியைக் கொடுத்தாங்க. இது லேபர் கட்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கலை. ஆனா பீட்டர் டாப்செல் இதுக்கெல்லாம் கவலைப்படலை. அவர் மவொரி இனத்தைச் சேர்ந்தவர்ன்றதாலே அவ்வளவா தகராறு இல்லை. இவர்தான் மவொரி இனத்தைச் சேர்ந்த முதல் சபாநாயகர் என்ற அந்தஸ்த்தும் கிடைச்சது.

இப்படி ஒரு கழுத்தைப் பிடிக்கும் நிலமை வந்ததுக்கு நிதியமைச்சரின் நடவடிக்கைதான் காரணமுன்னு நினைச்சுக்கிட்டு, இந்த முறை 'பில் பிர்ச்' என்றவருக்கு நிதி அமைச்சர் பதவியைக் கொடுத்தார் பிரதமர். போனமுறையே இவருக்குக் கொடுக்கணுமுன்னுதான் எண்ணம் இருந்துச்சு. ஆனா அப்ப ரூத் ரிச்சர்ட்ஸனுக்குத்தான் கட்சிக்குள்ளே பலத்த ஆதரவு. ஒருமாதிரி வண்டி ஓடுச்சு 3 வருசம்.

பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடு நியூஸிதான்னு உங்களுக்குத்தான் ஏற்கெனவெ தெரியுமில்லையா?அது 1893 வது வருஷம். இந்த வருஷம் நூற்றாண்டு விழா. கொண்டாட்டம்தான். உயர்நீதி மன்றதுக்கு டேம் சில்வியாகார்ட்ரைட்(Dame Silvia Cartwright) முதல் பெண் நீதிபதியா ஆனாங்க. சாண்ட்ரா லீ என்ற மவொரிப் பெண்மணி,முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள் இருக்கும் தொகுதியிலே, தேர்தலில் நின்னு ஜெயிச்சு எம்.பி. ஆனாங்க.( அடடாடா.....சாதி ஓட்டு இப்படியா ஆகணும்?) ஹெலன் க்ளார்க் என்ற லேபர் கட்சி எம்.பி. எதிர்க்கட்சித் தலைவியா ஆனாங்க.இதுவரை எந்தப் பெண்களுமே கட்சித் தலைமைவரை வந்ததில்லை. ரொம்பப் புரட்சிகரமா இருந்துச்சு.

எம் எம் பி ( MMP, மிக்ஸட் மெம்பர் ப்ரபோர்ஷனல்) முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாமான்னுகேட்டு ஒரு கருத்துக் கணிப்புத் தேர்தல் நடந்துச்சு. இது என்னன்னு விளக்கோ விளக்குன்னு மக்களுக்கு விளக்குனாங்க. பொதுத்தேர்தல் நடக்கும்போது எந்தெந்தக் கட்சிக்கு, மொத்தத்தில் எவ்வளவு ஓட்டு விழுதோ,அந்த விகிதாச்சாரப்படி அந்தந்தக் கட்சியில் இருந்து நபர்களைக் கட்சியின் மேலிடம் தெரிவு செஞ்சு அவுங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்(List M.P.) ஆக்குவாங்களாம். ( புகழ் பெற்ற(??) ஆளுங்களை நம்மூர் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கற மாதிரி இருக்கே)

ஒரு பெரிய கேக். அதை விகிதாசாரப்படி வெட்டிப் பங்கு போடற மாதிரி தொலைக்காட்சி, தினப்பத்திரிக்கை, இன்னும்வீட்டு வீட்டுக்கு வரும் ஜங்க் மெயில்னு எல்லா இடத்திலும் காட்டிக் காட்டிச் சொன்னாங்க. நாங்களும் அதைப் புரிஞ்சுக்கிட்டு(???)ஆகட்டுமுன்னு அதுக்கு ஒரு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தோம். அடுத்த பொதுத்தேர்தலில் இது நடைமுறைக்கு வருமுன்னு சொன்னாங்க. ஆகக்கூடி 'அல்வா'ன்ற ஒரு பொருள் இங்கே 'கேக்'காக மாறி இருந்துச்சு. அவுங்க ஊட்டுன அந்த(அல்வா) கேக்கை, 'ஆ.....'ன்னு வாய் திறந்து வாங்கிக்கிட்டோம்.

நியூஸியில் எடுத்த திரைப்படம் ' த பியானோ' உலக அளவுலே பேசப்பட்டுச்சு. காரணம் சில பல ஆஸ்கார்களை வாங்கிக் குவிச்சதால். சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த கதை, திரைக்கதைன்னு ரொம்பப் புகழ். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் வாங்கின 'ஆனா பேக்வின்'(Anna Paquin) வயசு வெறும் 11 தான்.

23 comments:

said...

கும்மானிங் டீச்சர்

நீங்க எந்தக்கட்சின்னு சொல்லவே இல்லியே.

// தாதுபுஷ்டி லேகியம் //
இதெல்லாம் கூட அங்க உண்டா ??

//அவுங்க ஊட்டுன அந்த(அல்வா) கேக்கை, 'ஆ.....'ன்னு வாய் திறந்து வாங்கிக்கிட்டோம்//

பீம புஷ்டி அல்வா ????

said...

டீச்சர் , டீச்சர்

கொத்தனாருகிட், அவுரு கிளாசுக்கு வராதப்போ, நீங்க ஒரு ரூபா கதை சொன்னீங்களே, அதை சொன்னா
கிள்ளி வெக்குறாரு

said...

1990ல ஜேனி ஷிப்லி இல்லியா? அப்பறம்தான் வந்தாங்களா

said...

வாங்க பெருசு.

கொத்தனார் லீவுலே போயிட்டு இப்பத்தான் வகுப்புக்கு வந்துருக்கார். அதுக்குள்ளெ
'கோள்' மூட்டியாச்சா? :-)))))

நான் எந்தக் கட்சின்னு தேர்தலில் நான் நிக்கறப்பச் சொல்வேன்.

//பீம புஷ்டி அல்வா ????//

கட்சி பலவீனமா இருக்கறப்ப எதாவது செஞ்சு தேத்தணும்தானெ?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நீங்க சொல்றது 'நடக்க'இதுக்கப்புறம் இன்னும் 3 வருஷமாச்சு!

said...

இந்த பாடத்துல பெயிலுதாங்க டீச்சர். நமக்கு பிரியாத அரிசியல் சொல்லிப் போட்டீகளே. :(

said...

பெண்களுமே கட்சித் தலைமைவரை வந்ததில்லை. ரொம்பப் புரட்சிகரமா இருந்துச்சு.

அவுங்க "புரட்சி தலைவி ஆனாங்களா? இல்லையா?"

said...

வாங்க காட்டாறு.

என்னாங்க இப்படி அரிசியல் பிரியலைன்னு..............

நம்ம உண்மைத்தமிழன் எழுதுனதைப் பாருங்க.( மாயாவதி)

லோகமந்த்தா............ ஒக்கட்டே:-)

said...

வாங்க குமார்.

புரட்சித்தலைவின்னு இன்னும் நாங்க மலர்க்ரீடம் வச்சு வீரவாள் கொடுக்காததுதான்
பாக்கி. இங்கே ரொம்ப மோசங்க. ஒருத்தருக்கும் ஆளுயர மாலை கட்டத் தெரியலைங்க(-:

( நான் ஒரு சமயம் பள்ளிக்கூடத்துப் பிக்னிக்லே பூ தொடுத்ததைப் பார்த்துட்டு, அதிசயப்பட்டு, சிட்டிக்கவுன்ஸில்
நடத்தும் ப்ளவர் ஷோவுக்கு அலங்காரத்துக்குக் கூப்ட்டாங்கன்னா பாருங்க)

said...

டீச்சர், அந்த மவோரி மாமா பத்தி கொஞ்சம் டீடெயில்ஸ் குடுங்க டீச்சர்.

இந்த பெருசு என்னமோ பிளான் போட்டு வம்பு பண்ணறாரு. சாக்கிரதை.

said...

வாப்பா கொத்ஸ்.

மவோரி அங்கிள்னு( கொஞ்சம் கவுரவமா) சொல்லக்கூடாதா? :-)))))
அவரைப் பத்திச் சொன்னாப் போச்சு. அப்புறம் ஒரு நாள் 'கதை' சொல்றேன்.

பெருசுக்கும், உங்களுக்கும் எதாவது ------ இருக்கா?

said...

டீச்சர் எப்படி இருக்கிறீங்க? இந்திய சுற்றுப்பயணப் பதிவிற்குப் பின் தங்களின் பதிவை படிக்கவில்லை மன்னிக்கவும், இப்பொழுதும் நேரமில்லை இருந்தாலும் உங்களின் பெயரைப் பார்த்ததும் ஒரு அட்டென்டென்ஸ் போடவே இந்தப் பின்னூட்டம்(டீச்சருக்கு மரியாதையாம்).
மீண்டும் வருவேன்.


அன்புடன்...
சரவணன்.

said...

வாங்க சரவணன்.

அடடா.. மரியாதை தெரிஞ்ச புள்ளை.

நம்ம வகுப்புலே எல்லாம் பாசக்காரப் பயலுக:-)

said...

டீச்சர், மாமான்னு சொல்லக்கூடாது ஆனா அங்கிள் அப்படின்னு சொன்ன கவுரதையா? பார்த்து உங்களுக்கு அப்புறம் முத்திரை கிடைக்கப் போகுது.

said...

டீச்சர்.. அந்த பியானோ படத்தை நான் பார்த்துட்டேன். சூப்பர் அன்ட் பெஸ்ட்..
அப்புறம் நியூஸிலாந்து நாட்டு அரசியல் புரிஞ்ச உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் கண்டிப்பா புரியாது.. இங்க எல்லாமே காசு, பணம், கான்ட்ராக்ட், பதவிதான்..
அப்புறம் என் பேரை இங்கனேயும் கொஞ்சம் எடுத்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ¤ங்கோ டீச்சர்.. உங்களுக்கு அடுத்த வருஷம் நல்லாசிரியர் விருது வழங்க என்னாலான முடிஞ்ச உதவிகளைச் செய்றேன்..
நீங்களும் பார்த்து எதுனாச்சும் செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும்..)))))))))))

said...

கொத்ஸ்,

நீங்கவேற......... ச்சும்மா இருக்கும் சங்கை ஊதாதீங்க:-)))))

said...

வாங்க உண்மைத் தமிழரே,

//அடுத்த வருஷம் நல்லாசிரியர் விருது வழங்க
என்னாலான முடிஞ்ச உதவிகளைச் செய்றேன்..
நீங்களும் பார்த்து எதுனாச்சும்
செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும்..))))))))))) //

அப்படின்னா 'உங்க அரசியல் மொழியில்' விருது
வழங்கும் கமிட்டிக்கு 'மால்' வெட்டணுமா?

அதென்னமோ போங்க இங்கத்து ஆட்களுக்கு 'பட்டம்'
கொடுக்கவே தெரியலைங்க (-:

எத்தனை 'வென்றான்', 'கொண்டான்' ன்னு கிடக்கு.
குறைஞ்சபட்சம் 'அன்னை' 'அம்மா' ஹூம்.........

said...

//துளசி கோபால் said...
வாங்க உண்மைத் தமிழரே,
அப்படின்னா 'உங்க அரசியல் மொழியில்' விருது வழங்கும் கமிட்டிக்கு 'மால்' வெட்டணுமா?//

அய்.. அய்.. டீச்சர் மேடம்.. 'மால்' வெட்டுற விஷயத்தையும் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு, நான் நாட்டை விட்டுப் போய் 33 வருஷமாச்சு. எதுவும் தெரியலைன்னு கதை வேற விடுறீங்க..

//அதென்னமோ போங்க இங்கத்து ஆட்களுக்கு 'பட்டம்' கொடுக்கவே தெரியலைங்க (-: எத்தனை 'வென்றான்', 'கொண்டான்' ன்னு கிடக்கு. குறைஞ்சபட்சம் 'அன்னை' 'அம்மா' ஹூம்.........//

அப்புறம்.. இதுக்குத்தாம்பா லேடீஸை நம்பவே கூடாது.. விட்டா நம்மளையே ரவுண்டு கட்டிருவீங்களே.. 'வென்றான்.. கொன்றான்'னு எடுத்து விடும்போதே தெரியுது.. தெரியுது.. உங்களுக்கா அரசியல் தெரியல..?

டீச்சர் மேடம்.. ஒரு ஸ்கூப் நியூஸ்..

'அம்மா' கட்சிக்கு நியூஸிலாந்துல கிளை ஆரம்பிக்கணுமாம். தயாரா?

நீங்கதான் நாட்டுக்கே பொதுச்செயலாளர்... ரெடிங்களா மேடம்..?

said...

என்னங்க உண்மைத்தமிழன்,

தமிழ்நாட்டு விவரமெல்லாம் அங்கே வந்துபோற சமயத்துலே தெருவெங்கும்
இருக்கற 'போஸ்டரைப் படிச்சு'த் தெரிஞ்சுக்கிட்டதுதாங்க.

//'அம்மா' கட்சிக்கு நியூஸிலாந்துல கிளை ஆரம்பிக்கணுமாம். தயாரா?

நீங்கதான் நாட்டுக்கே பொதுச்செயலாளர்... ரெடிங்களா மேடம்..? //

கிளை தழை எல்லாம் வேணாங்க. நானே கட்சி ஆரம்பிச்சு நானே 'அம்மா'வா
ஆகப்போறேன்:-)))))

நம்ம வழி தனி வழி:-))))

said...

எப்படியோ,எந்த வழியோ
நூசியைப் படிக்க வச்ச்ட்டீங்க.
யாரு கண்டா இப்படித்தான் புது கட்சியெல்லாம் உருவாகுத்ஹுனு ஒரு பட்சி சொல்லுது.
ஒரு சிரிப்பான் போட்டுக்குங்க.

said...

//துளசி கோபால் said...
என்னங்க உண்மைத்தமிழன்,

கிளை தழை எல்லாம் வேணாங்க. நானே கட்சி ஆரம்பிச்சு நானே 'அம்மா'வா
ஆகப்போறேன்:-)))))

நம்ம வழி தனி வழி:-))))//

அப்போ அங்கேயும் ஒரு புரட்சித்தலைவி உதயமா?

வாவ்.. மேடம்.. அம்மா.. தானைத்தலைவியே.. ஒரு சின்ன விண்ணப்பம்..

உங்கள் அன்புத் தொண்டனான எனக்கு கட்சில, வேற ஒண்ணும் வேணாம்.. பொருளாளர் பதவி மட்டும் கொடுங்க.. ஒரு ரெண்டு, மூணு வருஷத்துல என் பத்து தலைமுறை உக்காந்தே சாப்பிடுற அளவுக்குக் கொஞ்சுண்டு பொழைச்சுக்குவேன்..

said...

உண்மைத்தமிழரே,

கொஞ்சம் யோசிச்சுச்சொல்றேன், யாருக்குப் பதவின்னு:-)))))

said...

வாங்க வல்லி.

சிரிப்பானுக்கு என்ன பஞ்சம்?

நம்மகிட்டே ஏராளமாக் கொட்டிக்கிடக்கு.
உங்களுக்காக இதோ
:-)))))))))))))))))))))))))))))))))))))))))))