Monday, May 14, 2007

நியூஸிலாந்து பகுதி 59

"சேர்த்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடுச் சின்னக்கண்ணு,
அவுங்க ஆறை நூறு ஆக்குவாங்கச் செல்லக்கண்ணு"காசுலே கண்ணும் கருத்துமா இருக்கறது பெண்களுக்கு மட்டும் கைவந்த கலையோ? அதிக செலவு எங்கெங்கே அனாவசியமா(??) ஆகுதுன்னு பார்த்து அங்கெல்லாம் ஒரே போடாப் போட்டாங்க நாட்டின் புது நிதி அமைச்சரம்மா.ரூத் ரிச்சர்ட்ஸன். இந்தப் பதவிக்கு வந்த முதல் பெண்மணி! முதல் என்ன முதல் ? இவுங்கதான் ஒரே பெண்மணி. இவுங்களுக்கப்புறம் இன்றுவரைக்கும் வேறு பெண்கள் யாருமே நிதியமைச்சரா வரவேயில்லை(-:பசங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்த ஆறு $க்கு முதல் ஆப்பு(-: வெல்ஃபேர் கவர்மெண்டு ஆச்சே இங்கே. யாரும்பட்டினியா இருக்கக்கூடாதுன்றதுலெ அரசு கவனமா இருக்கும். அரசு கொடுக்கும் காசையும் கண்டமாதிரி செலவு செஞ்சுட்டு, சாப்பாட்டுக்காக 'சூப் கிச்சன்' போற ஆட்களும் உண்டுதான். வெல்ஃபேர் காசைக் கொஞ்சம் குறைச்சதும் அதை வாங்கிக்கிட்டு இருந்தவங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுச்சு. ஆனா, ரூத் ரொம்பக் கண்டிப்பானவங்களா இருந்தாங்க.உண்மைக்கும் சொன்னா, இன்னொருத்தரை நிதியமைச்சரா ஆக்கணுமுன்னு பிரதமருக்கு விருப்பம் இருந்துச்சு. ஆனாகட்சியில் ரூத் ரிச்சர்ட்ஸனுக்கு ஆதரவு நிறைய இருந்தது.வேலை இல்லாதோர் எண்ணிக்கை ஏறிக்கிட்டே போச்சு. இதுவரை நியூஸியின் சரித்திரத்துலே முதல் முறையா ரெண்டு லட்சத்துக்கு மேல் வேலை இல்லாதவங்க. இவ்வளவு பேருக்கும் அரசாங்கம் காசு கொடுக்கணுமே! முழி பிதுங்கிப் போச்சு.


வேலை செய்யறவங்களுக்கும், முதலாளிகளுக்கும் ஒப்பந்தம் பண்ணிக்கிற சட்டம் ஒண்ணு கொண்டுவந்தாங்க.எம்ப்ளாய்மெண்ட் காண்ட்ராக்ட். தொழிற்சாலையில் வேலை செய்யறவங்கன்னா எல்லாத் தொழிலாளர்களுக்கும்சேர்த்து கலெக்டிவ்வா ஒரு ஒப்பந்தம். நிர்வாகத்துலே இருக்கறவங்களுக்கு தனித்தனி ஒப்பந்தமுன்னு ஆச்சு.வேலையில் இருந்து தூக்குனாங்கன்னா நஷ்ட ஈடு எவ்வளவு கிடைக்கும், வேலையில் இருந்தா எத்தனை நாள் சம்பளத்தோட லீவு, எத்தனை மணி நேர வேலை இப்படி எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் இந்த ஒப்பந்தங்கள்.இந்தக் காரணத்தாலே தொழிற்சங்கங்கள் கொஞ்சம் பலவீனமாச்சு.ஃப்ரீ மார்கெட் பாலிஸி கொண்டு வந்தாங்க. பல்கலைக் கழகங்கள், ஆஸ்பத்திரிகள் எல்லாம் சேவை மனப்பான்மையைக் கொஞ்சம் ஒதுக்கிட்டு, பயன்படுத்தறவங்க பணம்(User Pay) கொடுக்கணுமுன்னு ஒரு திட்டம் வந்துச்சு. மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் பல்கலைக் கழகங்களுக்கு வருமானம்னு ஆகிப்போனதால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெளிநாட்டு மாணவர்களை வருந்திக் கூப்புட ஆரம்பிச்சது. உள்ளூர் மாணவர்களுக்கு ஒரு பங்குக் கட்டணமுன்னா,அதே படிப்புப் படிக்க வெளிநாட்டிலே இருந்து வரும் மாணவர்களிடம் ரெண்டு மூணு மடங்கு அதிகம் வாங்கலாமே!ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 'புள்ளை புடிச்சுக்கிட்டு வர்றதுக்காக' ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புச்சு.'இங்கிலீஷ் டீச்சிங் ஸ்கூல்ஸ்' வேற முளைச்சது. எப்படி? மழை பேய்ஞ்ச மறுநாள் முளைக்கும் காளான்களைப்போல.முக்கியமா சீனர்கள் இங்கே ஆங்கிலம் படிக்கன்னு வந்தாங்க. இதெல்லாம் தனியார் செஞ்சுக்கிட்டது. அவுங்ககிட்டே இருந்து நல்ல பணவரவு. அந்தப் பசங்க இங்கே வெள்ளைக்காரர்கள் வீடுகளில் தங்கறதுக்கு இடம் ஏற்பாடு செஞ்சு கொடுக்கறது, இங்கே இருக்கறதுக்கு விஸா எல்லாம் அந்தப் பள்ளிக்கூடங்களே ஏற்பாடு செஞ்சாங்க. காசோ காசு மழைதான்.பள்ளிக்கூடம் முடிச்சுட்டு மேல்கொண்டு படிக்க உள்நாட்டு மாணவர்களுக்கு அரசாங்கமே 'ஸ்டுடண்ட்ஸ் லோன்'கொடுக்க ஆரம்பிச்சது. அதுக்கும் வட்டி உண்டு. ஆனா ரொம்பக் குறைஞ்ச விகிதம். படிச்சு முடிச்சுட்டு அப்புறம் கட்டலாமுன்னு சொன்னாங்க.அரசியல்வாதிகளுக்கு அவுங்க கவலை. ஒரு நாலு கட்சி ஒண்ணா சேர்ந்து ஒரு புது கட்சி ஆரம்பிச்சாங்க. லேபர் கட்சியிலே இருந்து பிரிஞ்சு போய், புது லேபர் கட்சின்னு தனிக்கட்சி ஆரம்பிச்ச ஜிம் ஆண்டர்டன்தான் இதையும் செஞ்சவர். நடந்து முடிஞ்ச தேர்தலில் இவர் மட்டும்தானே புது லேபர் சார்பா ஜெயிச்சார். ஒரே ஒரு ஸீட் வச்சுக்கிட்டு என்ன செய்யமுடியும்?இந்த சமயத்துலே நடந்த கல்ஃப் போரில், ஐக்கியநாடுகள் கேட்டுக்கிச்சுன்னு நியூஸியின் படைவீரர்கள் கலந்துக்கிட்டு இருந்தாங்க. இந்தப் புதுகட்சி ( அலையன்ஸ் கட்சி) அவுங்க கட்சிக் கொள்கைகளை அறிவிச்சது. என்னன்னா, எல்லாருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வேலையில்லாத் திண்டாத்தைக் குறைக்கிறது, மக்கள் நலத்துக்கான வெல்ஃபேர்திட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது, பெண்களுக்கான உரிமைகள், மவோரிகளுக்கான உரிமைகள், சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்கறதுன்னு அருமையான கொள்கைகள். இதுலே முக்கியமான, கவர்ச்சிகரமானது என்னன்னா, GST ன்னு இருந்த வரியைத் தூக்கிடறது. ஏற்கெனவே அரசாங்கம் நடத்துன பல நிறுவனங்களை வெளி நாட்டுக்காரர்கள் வாங்கியதையும் இவுங்க எதிர்த்தாங்க.
இந்த சமயத்துலேதான் பனி மழை கூடுதலா வந்து அதிகப்பனியைத் தாங்க முடியாம நாட்டின் மிக உயர்ந்த மலைச்சிகரம் 'மவுண்ட் குக்', அப்ப மலைக்கு அடியில் வந்த நிலநடுக்கத்தாலே உச்சி இடிஞ்சு அப்படியே பெயர்ந்து விழுந்துருச்சு.இதனாலே சிகரத்தோட உயரம் ஏறக்குறைய 20 மீட்டர் குறைஞ்சு போச்சு. ஆனாலும் இப்பவும் இதுதான் நாட்டின் உயர்ந்தசிகரம். இந்த மலையைப் பத்தி ஏற்கெனவே நியூசிலாந்து பகுதி 43 லே சொல்லி இருக்கு. பாருங்க.
உச்சி இடியும் முன்பு ( காலை வெயிலில் )
உச்சி இடிஞ்ச பிறகு ( கடும் பனியில்)


'உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' இது எப்படி இங்கத்து நிதி அமைச்சருக்குத் தெரிஞ்சது? நிதி நிலையைச் சரிக்கட்ட ரொம்பப் பாடு படவேண்டியதாப் போச்சு.நியூஸி வங்கியையே ஆஸ்தராலியா வாங்கிட்டாங்க. நியூஸி ரெயில்வேயைக்கூட அப்புறம் ஒரு தனியார் கம்பெனிக்கு வித்துட்டாங்க.


அரசாங்கம் வீடுகளை கட்டி வச்சு, குறைஞ்ச வாடகைக்குத் தந்துக்கிட்டு இருந்ததையும் நிப்பாட்டுனாங்க. வெளியிடத்தில் என்ன வாடகையோ அதேதான் இனிமேல் வசூலிக்கணுமுன்னு முடிவு செஞ்சாங்க. வருமானம் குறைச்சலா இருந்தவங்களுக்கு இது இன்னும் ஒரு இடியா விழுந்துச்சு.
போன அரசாங்கத்துலே 'ரோஜர்னாமிக்ஸ்' வந்ததைப்போல இப்ப 'Ruthanasia' (Ruth and euthanasia),என்ற சொல் பிரபலமாச்சு. மக்களுக்குப் பிடிக்காமப்போன நிதி அமைச்சரா இருந்தாங்க ரூத். அப்படியும் இவுங்க 3 வருஷம் பதவியிலே இருந்தாங்கதான். மூணு வருசம் ஓடி அடுத்த தேர்தல் வந்துச்சுங்க. ஜெயிச்சது யாரு?கொசுறுச் செய்தி: கருத்துக்கணிப்பு.


இன்னிக்குக் காலையில்( 14/05/07) வந்த இந்தக் கருத்துக் கணிப்பு உங்கள் பார்வைக்கு.
ச்சும்மா........... உங்களுக்குச் சொல்லணுமுனுன்னு தோணுச்சு. அதனாலேதான்.........

16 comments:

said...

//இவுங்கதான் ஒரே பெண்மணி. இவுங்களுக்கப்புறம் இன்றுவரைக்கும் வேறு பெண்கள் யாருமே நிதியமைச்சரா வரவேயில்லை(-://
அடுத்தவங்க ரெடியாத்தான் இருக்காங்க... என்ன, எங்களையெல்லாம் ஓட்டு போட விட்டாத்தானே!!!!

said...

20 மீட்டர் போனா என்ன? பக்கத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் இன்னொரு பூகம்பம் வந்த 100 மீட்டராக உயர்ந்திடப்போகுது!
GST அங்கு கிடையாதா?இங்கு ஏத்திட்டு போய்கிட்டிருங்காங்க.

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

பயணம் எல்லாம் நல்லபடி முடிச்சீங்களா?

உங்களுக்கில்லாத ஓட்டாங்க? பேசாம இங்கே வந்துருங்க:-))))

said...

வாங்க குமார்.

இது 100 மீட்டர் அதிகமாகரதுக்காக ஆஸியிலெ நிலநடுக்கமா?
வேணாங்க. பொழைச்சுப் போகட்டும் மக்கள்:-)

//GST அங்கு கிடையாதா?இங்கு
ஏத்திட்டு போய்கிட்டிருங்காங்க.//

ஆமாங்க 10% கிடையாது .இப்ப இது 12.5% ஆயாச்சு:-)

said...

நியுஸி தொடரை எல்லாம் படிச்சுட்டு பின்னுட்டம் போடரேன்.
பெங்களூரில் கணவரின் தம்பி திடீர்னு இறந்து விட்டார். இந்தியா போய்ட்டு இப்பதான் வந்தேன்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அடடா......... மச்சினர் இறந்துட்டாரா? ச்சின்ன வயசாத்தானே இருக்கணும்?

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மன ஆறுதலை அளிக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்.

உங்க தனி மெயில் ஐடி இல்லாததால் இங்கேயே எழுதவேண்டியதாப் போச்சு(-:
மன்னிக்கணும்.

said...

ஊருக்கு கிளம்ப பேக் செய்யற வேலை...இதுக்கு நடுவுல க்ளாஸ் அடிக்கடி கட் பண்ணறேன்...நடுவுல சேர்ந்தனா அப்புறம்..படிக்கற வயசு தாண்டிபோயிடுச்சா...கொஞ்சம் சோம்பேறித்தனம் வேற மன்னிக்கனும்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

பள்ளிக்கூட லீவா? டெல்லி வெயிலுக்கு தமிழ்நாடு வெயில் பரவாயில்லை:-)

ஆனா......... அங்கே அரசியல் பயங்கர சூடா இருக்கே இப்ப.

லீவு முடிஞ்சு வந்து அர்ரியர்ஸ் முடிக்கணும், ஆமா:-)))))

said...

Hope all of you are doing fine there. Heard about earthquakes in NZ.

said...

அரசியல்ல புகுந்து விளையாடறீங்க டீச்சர்!!
நீங்க மட்டும் தேர்தல்ல நிந்தீங்கன்னா நான் நாடு குடி பெயர்ந்து வந்து உங்களுக்கு வாக்கு சேகரிப்பேன்!!! :-D

கருத்துகணிப்பு வந்திருச்சா??
இனிமே உங்க ஊருல கொஞ்ச நாளைக்கு செய்திகளுக்கு பஞ்சமே இருக்கப்போறதில்லைனு சொல்லுங்க!! :-)

said...

வாங்க தேவா.

விசாரிச்சதுக்கு நன்றி.

பூகம்பம் இங்கே நம்ம ஊரில் இருந்து 220 கிலோ மீட்டர் தூரத்துலே. அதுவும்
அதிகாலை 5.45. நல்லதாப்போச்சு. நான் நல்ல தூக்கத்தில் கனவுலே ஊஞ்சலாடிக்கிட்டு
இருந்துருப்பேன்:-))) ரிக்டர் அளவு 4.1

அடிக்கடி இங்கே பூகம்பம் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. சுநாமியும் இங்கே ஒரு
ட்யூ இருக்காம்.

said...

வாங்க CVR.

கருத்துக்கணிப்பு வந்துருச்சாவா?

இங்கே ஆன்னா ஊன்னா எதுக்கெடுத்தாலும் கருத்துக்கணிப்புதான்.
வாராவாரம் கருத்துச் சொன்ன ஆட்களின் போட்டோவுடன் பேப்பரிலும்,
டிவியிலும் வந்துக் கிட்டேதான் இருக்கு.

அதைப் பார்த்த அரசியல்வாதிகள் எப்படித் தங்களை மாத்த்கிக்கிட்டா மக்கள் மனசுலே
இடம் பிடிக்கலாமுன்னு முயற்சிக்கறாங்க.

பொழைக்கத் தெரியாத மக்குங்க:-)

said...

டீச்சர்,

வந்தாச்சு. விட்ட பாடம் எல்லாம் படிச்சாச்சு. இனிமேல் ரெகுலர் அட்டெண்டன்ஸ் இருக்கும்.

லீவு தந்தமைக்கு நன்றி.

(அப்புறம் என்னமோ பதவி அது இதுன்னு பேசிக்கறாங்களே....) :-D

said...

வாங்க கொத்ஸ்.

ஒரு சரித்திரத்தையே நேரடியாப் பார்த்துட்டு வந்துருக்கீங்க. இப்படித்தான்
ஆர்வமா இருக்கணும்.

அந்தப் பதவி எல்லாம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக.

நம்ம வகுப்புலே ஏற்கெனவே உங்க பதவி 'இன்னும் பறி போகலை':-))))

said...

//இவுங்கதான் ஒரே பெண்மணி. இவுங்களுக்கப்புறம் இன்றுவரைக்கும் வேறு பெண்கள் யாருமே நிதியமைச்சரா வரவேயில்லை(-://

யாரங்கே... நம்ம டீச்சர் இருக்குறப்போ... வேறு நிதி அமிச்சரா....

உங்க மாணவப் படை சேர்ந்தாலே... வெற்றி உங்களுக்குத்தானே!

பின் குறிப்பு:
அரசியல் பாடத்துல பாசாக்கி உடனும் நீங்க. என் ஓட்டு எப்பவும் உங்களுக்குத் தாங்கோவ்!

said...

வாங்க காட்டாறு.

ஹூம்......... இங்கே நாட்டைப் பத்துன அக்கறை?
உங்களுக்குத் தெரியுது என் அருமை.

தட்டுத் தடுமாறியாவது படிச்சுருங்க. இங்கே தேர்வுலே 'பிட்'
அடிச்சான்னு ஒரு ச்சீன மாணவனைப் புடிச்சுட்டாங்க போன மாசம்(-: