Friday, May 11, 2007

நியூஸிலாந்து பகுதி 58



சரியா 150 வருசமாயிருச்சு, இங்கே பிரிட்டிஷ்காரங்க வந்து, உள்ளூர் மவொரிகளுடன் ஒப்பந்தம் போட்டு, கடைசியில்நாட்டையே வளைச்சுப்போட்டு............... இப்ப வருஷம் 1990 பிறந்துருச்சே.
இதைப் பெரிய அளவுலே கொண்டாடுனாங்க. எல்லா பெரிய நகரங்களிலும் தேர்த்திருவிழா போல கண்காட்சிகள்.ஒரு பத்து டாலர் நோட்டு இந்த விசேஷத்துக்காகவே புது டிசைனோட வந்துச்சு. மவொரித் தலைவர்களும் ஒண்ணு சேர்ந்து அவுங்க இனத்தையெல்லாம் கூட்டி நேஷனல் காங்ரெஸ் தொடங்குனாங்க. இந்த வைட்டாங்கி தினம் பிப்ரவரி மாசம் 6ஆம்தேதி கொண்டாடப்படுது. இந்த தினத்தை தேசீய விடுமுறையா அறிவிச்சது இப்ப ஒரு முப்பதுவருசத்துக்கு முந்திதான். அப்ப ஆண்டுக்கிட்டு இருந்த லேபர் கட்சிதான் இதுக்கு முன்கை எடுத்தது.



இந்தியா கிரிக்கெட் விளையாட்டுக்கு இங்கே வந்தாங்க. சச்சின் டெண்டூல்கர் ரொம்பச் சின்னப்பையனா இருந்தார்.காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டும் இந்த வருஷம் நியுஸிலாந்தில் நடந்துச்சு. அதுக்காக எலிஸபெத் மகாராணி வந்திருந்து விழாவை ஆரம்பிச்சு வச்சாங்க. ஒரே கோலாகலம்தான். விளையாட்டுப்போட்டிகள் ஆக்லாந்து நகரில்தான்னு இருந்தாலும், குடி மக்களைப் பார்க்க ராணியம்மா முக்கிய நகரங்கள் சிலதுக்குப் போனாங்க. அதுக்கென்ன? வடக்குத்தீவு,தெற்குத்தீவுலே ரெவ்வெண்டு ஊர்கள்தானே? எங்கூருக்கும் வந்தாங்க.நாங்களும் போய் 'பார்த்துட்டு' வந்தோம்:-)( இம்மாந்தூரம் வந்துருக்காங்க. நம்ம 'வீட்டுக்கு' வரலைன்னு நாம கோச்சுக்க முடியுமா?)




பெரிய நிறுவனங்கள் சில தனியார்வசம் விற்கப்பட்டன. அதுலே ஒண்ணு இங்கத்து டெலிகாம். இந்தியாவுக்குப் பேசணுமுன்னா நிமிஷத்துக்கு ரெண்டு டாலருக்கும் கூடுதலா வாங்கியே ரொம்பப் பணம் பண்ணிட்டாங்க. 'ஸ்டாப் வாட்ச்' வச்சுக்கிட்டுத்தான் தொலைபேசியையே தொடுவோம்.



செப்புக்காசுகள் ஒரு செண்ட், ரெண்டு செண்ட் காசுகள் இனிமே செல்லாதுன்னுமுடிவு செஞ்சு தூக்கிட்டாங்க. தயாரிப்புச் செலவு கூடுதலா ஆனதும் ஒரு காரணம். ஆனாலும் கடைகளில் ** 99 செண்ட்ன்னு அறிவிச்சுக்கிட்டு இருந்தாங்க.அதை ரவுண்டப் செய்யறோமுன்னு சில கடைகளில் 95 ன்னு 4 செண்ட் நஷ்டத்துக்கும், சில இடங்களில் முழு டாலராஎடுத்துக்கிட்டு ஒரு செண்ட் லாபமும் பார்த்தாங்க.



பூகம்பம் அடிக்கடிச் சின்னச்சின்னதா வரும் நாடுன்னாலும் 'பே ஆஃப் ப்ளெண்டி' என்ற ஊரில் ஒரு பூகம்பம் சொல்றாப்புலே வந்துச்சு. ஒரு அம்பத்தொம்பது வருசத்துக்கு முந்தி 1931 லே பெருசா ஒண்ணு வந்து 258 பேர் உயிரிழக்கும்படியானது. அந்தமாதிரி ஆகிருமோன்னு ரொம்பக் கவலையா இருந்துச்சு. ஆனா நல்லகாலம் அப்படிஉயிரிழப்புகள் நடக்கலை. ஒரே ஒருத்தர்தான் இறந்துட்டார். அதுவும், பூகம்பம் வந்துருச்சுன்ற செய்தியைக் கேட்டு,அதிர்ச்சியிலே இதயத்துடிப்பு நின்னு போச்சாம்(-:



கவர்னர் ஜெனரலின் பதவிக்காலம் முடிஞ்சு புது கவர்னர் ஜெனரல் வந்தாங்க.நாட்டின் சரித்திரத்துலே முதல் முறையா பெண் கவர்னர் ஜெனரல். அவுங்க பெயர் டேம் காதரீன் டிஸார்ட் (Dame Catherine Tizard )
கிறைஸ்ட்சர்ச் மாநகர வரலாற்றிலேயே முதல் பெண் மேயரா 'விக்கி பக்' ஆனதும் போனவருசம் (1989 லே)தான். இவுங்க தொடர்ந்து ஒன்பது வருஷம்( 3 தேர்தல்) இந்தப் பதவியில் இருந்தாங்க.



திடீர்னு இந்தப் பிரதமரும் வேலையை விட்டுட்டு விலகினார். அப்ப தேர்தலுக்கு ரெண்டு மாசம்தான் இருந்துச்சு. ஆட்சி சரியில்லை,சனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒண்ணும் செய்யலை, இந்தத் தேர்தலில் ஜெயிக்கறது ரொம்பக் கஷ்டமுன்னு ஆகியிருக்கு.அதான் விலகிட்டார்ன்னு சொன்னாங்க. மைக் மூர் என்பவர் பிரதமராப் பதவிக்கு வந்தார். சொல்லி வச்சது போலவே லேபர் தோத்துப் போச்சு. நேஷனல் கட்சி ஜெயிச்சாங்க. ஜிம் போல்ஜர் ( ஜேம்ஸ் போல்ஜர், செல்லமா ஜிம்னு கூப்புட்டாங்க)என்பவர் புதுப் பிரதமரா வந்தார். இந்த ஒரு வருஷம் மட்டும் 3 பிரதமர் பார்த்த நாடு இதுவாத்தான் இருக்கும்!




இங்கத்துப் பார்லிமெண்டில் அப்பெல்லாம் மொத்த சீட்கள் 97 தான். 18 வயசாச்சுன்னா நீங்க ஓட்டுப்போடலாம்.கிட்டத்தட்ட34 லட்சம் ஜனத்தொகை இருந்த காலக்கட்டம். P.R.லே இங்கே வந்தவங்களுக்கும் ஓட்டுரிமை இருக்கு. வாக்காளர்கள் எண்ணிக்கை 22 லட்சத்துக்குக் கொஞ்சம் கூடுதலா இருந்துச்சு. இந்தத் தேர்தலில் நேஷனல் கட்சி ஜெயிச்ச இடங்கள் 67. லேபருக்குச் சரியான அடி. வெறும் 29 இடம்தான் ஜெயிச்சாங்க. புது லேபர் கட்சி தொடங்குனாங்க பாருங்க, அவுங்களும் இந்த 97 இடத்திலும் போட்டி போட்டு ஒரே ஒரு இடம் ஜெயிச்சாங்க. ஜெயிச்சவர், அந்தக் கட்சியின் தலைவர் மட்டும்.



(இது அப்படியே நம்ம தமிழ்நாட்டுத் தேர்தலில் ஒருமுறை நடந்துச்சுலே?)



நேஷனல், லேபர், புது லேபர், க்ரீன்ஸ் ( வேல்யூஸ் கட்சிதான் க்ரீன்ஸ் கட்சின்னு இப்பப் புதுப்பெயர் மாத்திக்கிச்சு. வாஸ்து? )இப்படி பெரிய கட்சிகளா நாலு இருந்தாலும், 27 ச்சோட்டாமோட்டாக் கட்சிகள் இருக்கு. அவுங்களும் கொஞ்சம் இடங்களில் தேர்தலுக்கு நின்னாங்க. இதில்லாம சுயேட்சையா 39 பேர் நின்னாங்க. இவுங்களில் யாருமே ஜெயிக்கலை.


ஆன்னா ஊன்னா கட்சி ஆரம்பிக்கறது இங்கேயும் இருக்கு பார்த்தீங்களா?


மனுஷங்க எல்லோரும் ஒண்ணுதான்,இல்லே?

16 comments:

said...

கும்மானிங் டீச்சர்

நீங்களும் ஒரு ரூபா படம் போடுவீங்கன்னு பாத்தா பத்து டாலர்
நோட்டு படம் போட்டு கதைய சொல்லியிருக்கீங்க.

டீச்சர் மத்த பசங்களையெல்லாம் காணோம்.

அந்த ஒத்த ரூபா கதைய எனக்கு மட்டும் சொல்லுங்க.

said...

PR க்கும் ஓட்டா!! என்ன பெருந்தன்மை!
அல்லது இன்னும் கொஞ்ச நாள் ஓட்டை என்னலாம் என்று ஐடியா பண்ணி கொடுத்திட்டாங்களா?
ஆமாம் டென்டுல்கர் பக்கத்தில் நிற்பவர் யார் என்று சொல்லவில்லையே?? நிறைய இளமையாக இருக்கிறார்.:-))

said...

//அவுங்க பெயர் டேம் காதரீன் டிஸார்ட் (Dame Catherine Tizard )
கிறைஸ்ட்சர்ச் மாநகர வரலாற்றிலேயே முதல் பெண் மேயரா 'விக்கி பக்' ஆனதும் போனவருசம் (1989 லே)தான். இவுங்க தொடர்ந்து ஒன்பது வருஷம்( 3 தேர்தல்) இந்தப் பதவியில் இருந்தாங்க.
//

ஏனுங்க டீச்சர்... போன வருஷம் 2006ன்னு நெனச்சேன். தப்போ?

said...

வாங்க பெருசு.

குட் மார்னிங்.

இன்னிக்கு டீச்சருமே பதிவைப் போட்டுட்டு நகர்வலம் போயிட்டேன்:-)

ஒத்த ரூபாக் கதையா? இன்னுமா சொல்லாம விட்டுருக்கேன்?

said...

வாங்க குமார்.

//PR க்கும் ஓட்டா!! என்ன பெருந்தன்மை!//

நியூஸி குடிமக்களுக்கு உள்ள உரிமை எல்லாம் இவுங்களுக்கும் இருக்குங்க. ஆனா பாஸ்போர்ட் மட்டும்
அவங்க சொந்த நாட்டோடதா இருக்கும்.

பக்கத்துலே இளமையோடு நிக்கறவரா?

அதெல்லாம் 'முன்னம் ஒரு காலத்துலே' கதைதான்:-)

said...

வாங்க காட்டாறு.

வகுப்புலே கவனமே இல்லையா?(-:

சம்பவம் நடந்த 1990 வருசத்துக் கதையைச் சொல்லும்போது இது 'அந்த' போன வருஷம்!

புரிஞ்சிருக்குமே:-))))

said...

ரவுண்டாக்குறேன்னு 95ன்னு குறைச்ச பொழைக்கத் தெரியாதவங்கள என்ன செய்றது. 1ன்னு மாத்துனதுதான் சரி. இல்லைன்னா நாலு செண்ட் நட்டமாகுதல்ல.

தமிழ்நாட்டுலயும் ஒரு வாட்டி அப்படி நடந்துச்சு. ஒரே ஒரு வாட்டி. அதுக்கப்புறம் அப்படி நடக்கவேயில்லை. ஏன்னா யாரும் மண்டையப் போடலையே...அப்பத்தான அனுதாப அலையடிக்கும்.

said...

வடுவூர் குமார்:டெண்டூல்கர் பக்கத்தில நிற்பவர் யாருன்னு சொல்லலையே....?

அய்யோ பாவங்க
அவருதான் பொறுமைத்திலகம்..!

said...

வாங்க ராகவன்.

இவுங்களுக்கு அனுதாப அலை அடிக்கணுங்கறதுக்காகத்தான் அப்பாவிகளைப்
போட்டுத் தள்ளிடறாங்க போல(-:

பாவங்க நம்ம மக்கள்ஸ். திரும்பத் திரும்ப இவுங்களையே நம்பறது கொடுமை.

said...

வாங்க சிஜி.

//அவருதான் பொறுமைத்திலகம்..!//

பட்டமளிப்பு விழாவை எப்ப வச்சுக்கலாம்? :-)

said...

//பட்டமளிப்புவிழாவை எப்போ வச்சிக்கலாம்?//

பட்டம் வாங்கிக்கலாம்னு அவருக்கு பர்மிஷன் கொடுத்திட்டீங்கன்னா
அப்றம் விழாத் தேதிய நிர்ணயிக்கலாம்

said...

நல்லா போய்ட்டிருக்கு டீச்சர்!!
வாழ்த்துக்கள்!! :-)

said...

சிஜி,

ரொம்பத்தான் லொள்ளு:-)))))

said...

வாங்க CVR.

ஊர்லே போயும் தமிழ்மணம் விடலையா?

வகுப்புக்கு உலகில் எங்கிருந்தாலும் வரணுமுன்னு
நினைச்சதுக்கு ஒரு 100, க்ரேஸ் மார்க் போட்டுரவா? :-))))

said...

துளசி
நியுசி தொடர் திரும்ப ஆரம்பிச்சதுக்கு ஒரு நன்றி முதலில். படமெல்லாம் நல்லா போட்டு எழுதறீங்க

said...

வாங்க பத்மா.

எடுத்த காரியத்தை முடிச்சுறலாமுன்னுதான் திரும்ப ஆரம்பிச்சேன்:-)

இதுனாலெ யாருக்காவது பயன் இருக்குமோன்ற நப்பாசைதான்:-)