Tuesday, May 15, 2007

ப்ரிஸ்பேன்

மக்கள்ஸ், பிரிஸ்பேன் நகரில் இருந்து வலைபதியும் நண்பர்கள் யாராவதுஇருந்தால் பின்னூட்டத்தில் உங்க மெயில் ஐடியோ இல்லே தொலைபேசி எண்களோ தெரிவிச்சீங்கன்னா.............. சந்திக்க முயற்சிப்பேன்.


வரும் வாரம் முழுசும் அங்கேதான் கேம்ப்:-)


உங்கள் சொந்த விவரங்கள்(???) அடங்கிய பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.


என்றும் அன்புடன்,

துளசி.

16 comments:

said...

வலைபதிவர்கள்தான் வேணுமா? தனிமடலில் நண்பர் முகவரி அனுப்பியுள்ளேன் பார்க்கவும்

said...

எனக்குத் தெரிஞ்சு அங்கே செல்லிதான் இருக்காங்க. பொட்'டீ'க்கடையார் இருக்கற நகரம் கொஞ்சம் தள்ளி இருக்கு.

said...

வாங்க சுரேஷு.

நண்பர்கள் நிறைப்பேர் அங்கே இருக்காங்க.

ஒரு மாறுதலுக்கு 'பதிவர்களைச் சந்திச்சுக்கலாம்'னு கேட்டேன்.

தனிமடலுக்கு நன்றி.

said...

வாங்க ஷ்ரேயா.

செல்லி அங்கே இருந்து இடம் மாறிட்டாங்க.

பொட்'டீ'க் கடையாரை,நாம் சிட்னியில் சந்திச்சோமே, நினைவு இருக்கா?

பேசாம நீங்களும் பிரிஸ்பெனுக்கு ஒரு விசிட் அடிங்க. சந்திப்பை அங்கெ
வச்சுக்கலாம்:-))))

said...

நானும் வரட்டா,

டிக்கட்டை அனுப்பிடுங்க

said...

நான் விளாட்டுக்கு சொல்லலே.. பொட்டீக்கடையார் சிட்னிலதான் இருந்தார்..நாங்களும் சந்திச்சோம். இப்ப அவர் இருக்கறது டவுன்ஸ்வில்(என்று நினைக்கிறேன்)(திரும்ப சிட்னி வந்துட்டாரானு தெரியாது)

பிரிஸ்வேகஸ்ல வீடு தேடறீங்களா?

said...

துளசி,
நான் வரேனே..

நலமா.

said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஜமாய்ங்க...

பைநிறைய படங்களோட வாங்க..

said...

வாங்க பிரபா.
எங்கே அனுப்பணுமுன்னு அட்ரஸ் தெரியாததாலே உங்களுக்கெல்லாம் 'புக்' பண்ணி
வச்சுருந்ததைக் கேன்ஸல் பண்ண வேண்டியதாப் போச்சு(-:

என் டிக்கெட் 'பார்ட் ஆஃப் த மதர்ஸ் டே கிஃப்ட்' :-))))

said...

ஷ்ரேயா,

//பிரிஸ்வேகஸ்ல வீடு தேடறீங்களா? //

உங்களுக்காகத்தான் தேடணும். நீங்கதானெ வீடு பார்க்கறீங்க? கொஞ்சம் உதவி
செய்யலாமுன்னுதான்.........

said...

வாங்க வல்லி.

முதல்லே நியூஸி வந்துருங்க. இங்கிருந்து
ரெண்டு பேரும் ஜாலியா அங்கெ போகலாம்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

படங்களுக்கென்னங்க? போற போக்குலே எடுத்துக்கிட்டே போறதுதான்:-)
டிஜிடல் கேமெரா என்ன ஒரு 'வரம்' பார்த்தீங்களா? :-)

said...

இப்போதான் சரித்திர கிளாஸ் திரும்ப ஆரம்பிச்சுதேன்னு பார்த்தா, மீண்டும் சுற்றுப்பயணமும், பயணக்கட்டுரையுமா? சரிதான். எப்போ போர்ஷன் முடிச்சு, எப்போ படிச்சு, எப்போ பாஸாயி.... ஹூம்ம்ம்..

said...

உலகம் சுற்றும் வாலிபியே! நீவீர் வாழ்க! உம் சுற்றுப் பயணம் நல்விதமாக அமைந்து, புகைப் படங்கள் பல எடுத்து, கட்டுரை பல தொடுக்க.....

மூச்சி வாங்குது இப்போவே... ஜோடா குடிச்சிட்டு வாரேன்.

said...

வாங்க கொத்ஸ்.

எல்லாம் என் இனிய மாணவமணிகளுக்காத்தான் இந்த கஷ்டமெல்லாம்
நானே பட்டுக்கறேன்.:-))))

உங்களுக்கு ப்ரிஸ்பேன் சரித்திரமும் சொல்லணும்தானே?

said...

வாங்க காட்டாறு.

//உலகம் சுற்றும் வாலிபியே! //

இந்தப் பெயரில் இப்பப் புதுசா ஒருத்தர்
பின்னூட்டங்களில் வந்துக்கிட்டு இருக்கார்.

அதனால் எனக்கு வேற எதாவது 'பட்டம்' கொடுங்கப்பா:-)))))

எனக்கும் ஒரு ஜோடாவுக்குச் சொல்லுங்க.
பயணத்துக்குப் போறமுன்பு களைப்பாத்திக்கறேன்:-)