Monday, May 07, 2007

நியூஸிலாந்து பகுதி 56

1988லே ரெண்டு முக்கிய நிகழ்ச்சிகள் இங்கே நடந்துச்சு. ரெண்டுமே ஒரு ரெண்டு வார இடைவெளியில்.


1988 பிப்ரவரி மாதம் 23ந்தேதி. சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாள்:-) உங்க டீச்சராகிய நான், நாலரை வயசான மகளொடும், கணவரோடும் இங்கே குடியேறினேன். எண்ணி ரெண்டாவது வாரம் மார்ச் 7 தேதி. புயல்'போலா' ஊரையே பிரிச்சு மேஞ்சிருச்சு. ஹிந்தியிலே 'போலா'ன்னு சொன்னால் 'அப்பாவி, வெகுளி'ன்னு அர்த்தம்.ஆனா இந்த 'சைக்ளோன் போலா' அடிச்ச அடியிலே 90 மில்லியன் டாலர் நஷ்டக்கணக்கு. வடக்குத் தீவின் கிழக்குப்பகுதி பூராவும் பயங்கர சேதம். உயிர்ச்சேதமுன்னு சொன்னால் 3 பேர். இந்தப் பக்கங்களில் பண்ணைகளும், பழத்தோட்டங்களும் அதிகம் இருக்கு. கிவிப் பழங்கள் மிகவும் கூடுதலா விளையும் தோட்டங்கள். எல்லாத்துக்கும் பயங்கர சேதம். 1765 பண்ணையாளர்களுக்கு பாதிப்பு. இனி வருங்காலத்தில் வெள்ளம் வந்தால் என்னென்ன ஏற்பாடுகள் செஞ்சுக்கவேண்டி இருக்குமுன்னு திட்டங்கள் எல்லாம் தயாரிச்சு வச்சுக்கிட்டாங்க. ஆனா இதெல்லாம் சொல்லிட்டா வருது?


இறந்த மூணு பேரும் காருலே பயணம் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப, ஆத்துலே வெள்ளம் எதிர்பாராம வந்து ரோடை அப்படியே அரிச்சுக் காரை உருட்டிக்கிட்டுப் போயிருச்சு. அப்படியும் அந்த வண்டியில் இருந்த மத்த ரெண்டுபேரை ஒரு வழியாக் காப்பாத்துனாங்கதான்.ஆனா பாவம், இந்த மூணு பேருக்கு தப்பிக்கச் சான்ஸ் கிடைக்கலை.


இந்த சமயத்துலே வேலை இல்லாத் திண்டாட்டம் வேற சேர்ந்துக்கிச்சு. ஒரு லட்சம் பேருக்கு மேலெ வேலை இல்லாம இருந்தாங்க. அரசாங்கத்துக்குச் செலவு அதிகமாகுதுன்னு சின்ன ஊர்களில் இருந்த 432 தபால் ஆபீஸுகளை மூடும்படியாச்சு.


ஆனா அரசாங்கம் ச்சின்னப்பிள்ளைகளுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்த அலவன்ஸை நிறுத்தலை. ஒரு ரெண்டு மூணுவருஷமாக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்களாம். தாய்தகப்பனோட வருமானம் கணக்கில் எடுத்துக்காம, 16 வயசுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாரம் 6 டாலர் அரசாங்கம் தந்துக்கிட்டு இருக்கு. அந்தக் குழந்தையின்பெயரில் ஒரு பேங்க் கணக்கு ஆரம்பிக்கணும். அந்தக் கணக்குக்கு வாராவாரம் தானாவே இந்தக் காசு வந்து சேர்ந்துரும்.சேமிப்பின் அவசியத்தைக் குழந்தைகள் உணரணுமுன்னு தபால் இலாக்கா மூலம் சேமிப்புக் கணக்குக்கு வாரம் ஒரு நாள்னு பள்ளிக்கூடத்துலேயே வந்து பிள்ளைங்கள் கொடுக்குற காசை வரவு வச்சு அவுங்களுக்குன்னே ஒரு பாஸ் புக் கொடுத்துவச்சிருந்தாங்க.( எல்லாம் நம்மூர் போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்க்ஸ் பேங்க்தான்)பிள்ளைகளும் ஒரு அம்பது செண்ட் கிடைச்சாலும் அதுலே போட்டுச்சுங்க.


மக்களுக்குக் குடி இருக்க வீடுகள் பற்றாக்குறை அதிகமா இருந்துச்சு. அரசாங்கத்தாலே எல்லாருக்கும் வீட்டைக் கட்டிக்கொடுக்க முடியலை. வீடு சொந்தமா வாங்கிக்கலாமுன்னா வீட்டுக் கடனுக்கு வட்டி ஏறக்குறைய 19 சதமானம்.வட்டி கட்டுறதுமில்லாம, மக்கள் 20 சதமானம் முதல் வச்சுக்கிட்டுத்தான் வீடு தேடணும். அவ்வளவு பணம் அப்ப யார் கிட்டே இருக்கு? எப்படியாவதுஒரு வழி வேணுமேன்னு அரசாங்கம் முதல்முறையா வீடு வாங்கறவங்களுக்குக் குறைஞ்ச வட்டியில் கொஞ்சம் தொகைகடன் கொடுக்க முன்வந்துச்சு. வங்கிகளும் தொலைக்காட்சியிலும் ரேடியோவிலும் 'நாங்க கடன் தரோம் வாங்க வாங்க'ன்னு இடைவிடாமக் கூப்புட்டுக்கிட்டு இருந்துச்சு. நிரந்தர வருமானம் இருக்கும் வேலையில் இருந்தால் 'இவ்வளவு தொகையைக்கடன் தர்றோம். வீடு வாங்கிக்க'ன்னு முன் அனுமதி வேற கொடுத்துச்சு. அந்தக் காசுக்குத் தகுந்தபடி வீடு வாங்கிக்கலாம்.ஆனா அந்தக் காசுக்குள்ளெ அடங்கும் வீடுகள் அவ்வளவா நல்லா இல்லைன்றது வேற கதை! எப்பவுமே வீடுன்றது நம்ம பட்ஜெட்டை மீறும் விஷயம்தானே?

இன்னொண்ணு , இந்த நாட்டுலே வீட்டுவாடகை வாரம் இவ்வளவுன்ற கணக்குதான். மாச வாடகை கிடையாது. சம்பளமும் வாரம் இவ்வளவுன்னு கிடைக்கும். சம்பளம் வாங்குன கையோடு வாடகை கொடுத்துடலாம். இருக்க இடம் ரொம்ப முக்கியமாச்சே. ரெண்டு வார வாடகை அட்வான்ஸ் கொடுக்கணும். அந்தக் காசு இங்கே இருக்கும் ஒரு தனி நிறுவனத்துக்குப் போய்ச்சேரும். வீட்டைக் காலி செய்யும்போது, வீட்டுக்குச் சொந்தக்காரர்
வந்து பார்த்து எல்லாம் ஒழுங்காக இருக்குன்னுன்னு கையெழுத்துப் போட்டுத்தரணும். அதை அனுப்புனதும், அந்த நிறுவனம் அட்வான்ஸ் காசைத்
திருப்பி நமக்கு அனுப்பிரும். நாம் குடியிருந்த வீட்டில் எதாவது உடைச்சுக்கிடைச்சு வச்சுருந்தோமுன்னு வையுங்க, அதுக்குண்டான செலவை
அட்வான்ஸ் தொகையிலிருந்து எடுத்து உடமையாளருக்குத் தந்துருவாங்க.


ஒருநாள் திடீர்னு ஒரு செய்தியைக் கேட்டுட்டு அப்படியே திகைச்சு நின்னுட்டேன். வேலையை வேணாமுன்னுசொல்லி விலகிட்டார் நாட்டின் பிரதமர்!! காரணம் ? உடல் நிலை சரி இல்லையாம். இன்னுமொரு அதிர்ச்சி. என்னதான்உடம்பு முடியாமப் போனாலும் விடாப்பிடியா பதவியில் இருக்கும் மந்திரிகளை மட்டுமேப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்த மனசுக்கு இது நம்ப முடியாத நிகழ்ச்சியா இருந்தது.' ஜெஃப்ரி பால்மர் என்ற உதவிப் பிரதமர் இப்போ பிரதமர் நாற்காலியில் உக்கார்ந்தார்.

16 comments:

said...

நீராரும் கடலுடுத்த பாடியாச்சா டீச்சர்

ஸ்கூல் தொறந்த உடனே வந்தாச்சு.

காலை வணக்கம் டீச்சர்

said...

வாங்க பெருசு. காலை வணக்கம்.
இங்கே 'God of Nations at thy feet' தான் பாடற வழக்கம்:-)
இந்த தேசியகீதத்துக்கு மவொரி வெர்ஷனும் இருக்கு.


பாடிப் பாருங்க. இது முதல் பாரா தான். இன்னும் 4 பாரா இருக்கு:-)

E Ihoa Atua,
0 nga Iwi! Matoura,
Ata whaka rongona;
Me aroha roa.
Kia hua ko te pai;
Kia tau to atawhai;
Manaakitia mai
Aotearoa.
Ona mano tangata

said...

தொடர் அருமையா போய்ட்ருக்கு அக்கா!!
தொடர்ந்து அசத்துங்க!! :-)

முடிஞ்சா மௌரி இனத்தின் வரலாறு பத்தி சொல்றீங்களா??
உங்க தேசிய கீதத்தை பார்த்த உடனே இதை பத்தி தெரிஞ்சிக்கனும்னு ஆசை வந்துருச்சு!! :-)

said...

வாங்க CVR.

என்ன மவோரிகள் பத்திச் சொல்லணுமா? சரியாப்போச்சு.
அர்ரியர்ஸ் ஒண்ணும் படிக்கலையா? ச்சும்மா ஒரு 55 பகுதிதான்
இருக்கும்:-))))))

சரி, போனாப்போட்டுமுன்னு பகுதி 15 இங்கே


மவொரிகளின் வருகைபடிங்க.

said...

அட்டெண்டன்ஸ் கொடுத்திட்டேன்

said...

வீடு என்றாலே பட்ஜெட்டை மீறுகிற விஷயம் தானே!!
100% உண்மை,உண்மை.

said...

வாங்க சிஜி.

வெறும் அட்டெண்டன்ஸா? கடைசி பெஞ்ச்?

said...

வாங்க குமார்.

//வீடு என்றாலே பட்ஜெட்டை மீறுகிற விஷயம் தானே!!
100% உண்மை,உண்மை. //


ரயில்தான் நேரத்துக்கு வர்றதில்லையே, அப்ப எதுக்கு ரயில்வே கைடு?
அப்பத்தானே எவ்வளோ லேட்டா வருதுன்னு தெரியும்?:-)

அதேபோலத்தான் பட்ஜெட்ன்னு ஒண்ணு போட்டுவச்சுக்கிட்டாத்தான் மேற்கொண்டு
எவ்வளவுக்கு பேய்முழி முழிக்கலாமுன்னு தெரியும்:-))))

said...

1988 பிப்ரவரி மாதம் 23ந்தேதி. சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாள்//

அட! இருபது வருசம் ஆகப்போவுது. அடுத்த இந்தியா வர்றப்போ மறுபடியும் ஒரு போண்டா காப்பி பார்ட்டி தந்துரணும்:-)

said...

அடடே! அது நீங்களா? அடையாளமே தெரியலை. நாங்கூட நடிகை பத்மினி ஒரு குழந்தையோட உக்காந்து எடுத்துக்கிட்ட படம்னு நெனச்சேன். ஹி ஹி. (உண்மையிலேயே அடையாளம் தெரியல. பயங்கர லாங்ஷாட் போட்டோ)

என்ன பிரதமரு அவரு? நம்மூர்ல பாத்தீங்கன்னா ஐசியூல இருந்தே ஐந்தாண்டுத் திட்டம் போடுறாங்க. அவரு மனுசன்னு நெனைக்கிறேன்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

அப்பவும் போண்டா தானா?

வேற எதாவது இருக்கட்டுமே ப்ளீஸ்:-))))

said...

வாங்க ராகவன்.

//(உண்மையிலேயே அடையாளம் தெரியல. பயங்கர லாங்ஷாட் போட்டோ)//


அடையாளம் தெரியக்கூடாதுன்ற ஐடியாவும் இருந்துருக்குமோ என்னவோ?


லாங், ஷார்ட் எல்லாம் என்ன தெரியும்? அப்பெல்லாம் டிஜிடல் கேமெரான்ற
நாமதேயமே தெரியாது.

யாஷிகா ஒண்ணு வச்சுக்கிட்டு ச்சும்மா எய்ம்& ஷூட்தான்:-))))

இப்படித்தாங்க இங்கே போலிஸ்லே பெரிய உத்தியோகத்துலே இருந்த நண்பர்,
வேலையில் ஸ்ட்ரெஸ் ஆகுதுன்னு சொல்லி வேலையை விட்டுட்டு, இப்ப ஒரு
சாதாரண வேலையில் இருக்கார். இந்த வேலைக்குச் சொன்னதைச் செஞ்சாப்போதுமாம்.
மூளையைப் பயன்படுத்த வேண்டியதில்லையாம். பைத்தார ஆளுங்க!

said...

ரொம்ப interesting-ஆ போய்ட்டு இருக்குதுங்க டீச்சர்.

said...

//தாய்தகப்பனோட வருமானம் கணக்கில் எடுத்துக்காம, 16 வயசுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாரம் 6 டாலர் அரசாங்கம் தந்துக்கிட்டு இருக்கு.//

இது கவர்ன்மெண்ட்டு.. இது ஜனநாயகம்.. இது நாடு..

//அரசாங்கம் முதல்முறையா வீடு வாங்கறவங்களுக்குக் குறைஞ்ச வட்டியில் கொஞ்சம் தொகைகடன் கொடுக்க முன்வந்துச்சு. வங்கிகளும் தொலைக்காட்சியிலும் ரேடியோவிலும் 'நாங்க கடன் தரோம் வாங்க வாங்க'ன்னு இடைவிடாமக் கூப்புட்டுக்கிட்டு இருந்துச்சு. நிரந்தர வருமானம் இருக்கும் வேலையில் இருந்தால் 'இவ்வளவு தொகையைக்கடன் தர்றோம். வீடு வாங்கிக்க'ன்னு முன் அனுமதி வேற கொடுத்துச்சு.//

இது கவர்ன்மெண்ட்டு.. இது ஜனநாயகம்.. இது நாடு..

said...

வாங்க காட்டாறு.

//ரொம்ப interesting-ஆ போய்ட்டு இருக்குதுங்க டீச்சர்.//

மெய்யாலுமா? நன்றி. ( உ.கு. இல்லை என்று நம்புவோமாக)

said...

வாங்க உண்மைத்தமிழரே.

//இது கவர்ன்மெண்ட்டு.. இது ஜனநாயகம்.. இது நாடு..//

அவசரப்பட்டா எப்படி? கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கறது:-)))