Wednesday, June 15, 2005

மேயராவே பொறந்தவர்!!!!!

மேயர் பதவின்றது மத்தவங்களுக்கு எப்படியோ, இங்கே நியூஸிலாந்துலே ஒருத்தர்
'மேயர் வேலைதான் செய்வேன், மத்த வேலை செய்ய முடியாது'ன்னு அடம் பிடிச்சுக்கிட்டு
இருக்கார். அதுலே ஜெயிச்சும் காட்டிட்டார்.


வடக்கே சில இடங்களிலே மேயரா இருந்த பிறகு, இன்னும் அங்கே ச்சான்ஸ் இல்லேன்னு தெரிஞ்சதும்
தெற்கே வந்துட்டார். இப்ப நாட்டின் தென்கோடியிலே இருக்கற ச்சின்ன ஊருக்கு மேயரா இருக்கார்!!!!

அவருக்கு 58 வயசாச்சு இப்ப. ஆனாலும் எல்லாத்தையும் ரொம்ப ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்டு
வாழ்க்கை நடத்தறார்.

இவர் ஒரு எழுத்தாளரும் கூட! ஒரு தினப்பத்திரிக்கையிலே 'பத்தி' எழுதியிருக்கார் ஒரு 15 வருஷகால்ம்!!!!
பல புத்தகங்களும் எழுதியிருக்கார். அதுலே பெத்தபேரு வாங்கினது அவருடைய சுயசரிதைதான்.
'புல்ஷிட்& ஜெல்லிபீன்ஸ்'ன்ற தலைப்புலே அந்தப் புத்தகம் வெளிவந்து இங்கே ச்சக்கைப் போடு போட்டுச்சு!!!!

விளம்பரப்படங்கள் சிலதிலும் நடிச்சிருக்கார். தொலைகாட்சி நிகழ்ச்சியான 'Intrepid Journey' வரிசையில்
பங்கெடுத்து, 'போர்னியோ' போய்வந்தது நல்லாத்தான் இருந்தது!

இப்ப என்னன்னா, 'டான்ஸிங் வித் ஸ்டார்ஸ்'ன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடனப் போட்டியிலே
ஆடு ஆடுன்னு ஆடிட்டார். இது வாராவாரம் நடந்துக்கிட்டு இருந்தது. நேத்துதான் செமி ஃபைனல்ஸ்
முடிஞ்சது. இதுலேதான் அவர் ஜெயிக்கலை. வேற ரெண்டு பேர் ஃபைனல்ஸ் போறாங்க!!!

இவருக்கு இந்த நிகழ்ச்சியிலே கலந்துகிட்டதுக்காக ஏராளமான பாராட்டுக்களும், அதே அளவு கண்டனங்களுமா
வந்து குவிஞ்சிடுச்சு!
'நீ ஆடறதை விட சாவறது மேல்'னுகூட ஒரு மின்னஞ்சல் வந்துச்சாம்:-))))

மனுஷன் அதுக்கெல்லாம் சளைக்கறவரில்லை!!!!

நல்லதோ கெட்டதோ ஜனங்க வாயிலே (மனசுலே)விழுந்துக்கிட்டே இருக்கணும் இவருக்கு! அந்த ஒளிவட்டத்தை
விடாம புடிச்சுக்கிட்டு இருக்கார்.

இப்ப 'இன்வர்கார்கில்' என்ற ஊருக்கு மூணாவது முறையா மேயராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார்.

பந்தா எதுவும் இல்லாம சராசரி சாதாரணனா இருக்கறதுதான் இவரோட தனித்தன்மை!!!

இவரோட பேரைச் சொல்லலேல்லெ? இவர்தான் 'டிம் ஷட்போல்ட்'!!!!!

ஆமாம், நம்ம சிங்காரச் சென்னைக்கு 'ஸ்டாலின்'தானே இப்ப மேயர்?


12 comments:

said...

நியுஸீலாந்தின் பிரதமர் ஒரு பெண் என்பது நானறிந்தவரைக்கும். மத்தபடி Peter Jackson- ம் Lord of the Rings-இன் cast-ந்தான் ஹீரொக்கள் என்பது இப்படங்களின் டிவிடி பார்த்தப்பின். நியுஸிலாந்து நாட்டினர் அனைவருமே இந்த படவிழாவிற்க்கு குழுமியிருந்தனர் என்பது இந்த படங்களின் EE-version களைப் பார்த்த வேறு நாட்டவரின் எண்ணமாகும்.அந்த நாட்டில் வசிப்போர் பகர்ந்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

said...

KIWIs are really sweet people. You cant see such a nice people anywhere in the world !

said...

கிவிக்காரங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டுவது தான் ஒஸிக்களுக்கு வேலை! வளவளவென்று பேசி சும்மா தம்பட்டம் அடித்து கடைசியில் தோத்துப் போகும் போது பாக்கணுமே!!

said...

அன்புள்ள இராமநாதன்,

இது ரொம்பவே ச்சின்ன நாடுன்றதாலே ஒரு கூட்டத்தைப் பார்த்ததும் 'நாட்டு மக்கள்
எல்லோருமே நேர்லே போய் கலந்துக்கிட்டாங்க'ன்னு நினைச்சுக்கறது சுலபம்!!!!

நாங்களும் கிட்டத்தட்ட 40 லட்சம் இருக்கோமே!!!!

LOTR படம்தான் இந்த நாட்டைப் பத்தி( இந்த மாதிரி ஒரு நாடு இருக்குன்னு!!!)
மற்ற நாடுகளில் இருக்கறவங்களுக்கு ஒரு அறிமுகமா ஆயிருச்சு!

பீட்டர் ஜாக்ஸன் இந்த நாட்டை சேர்ந்தவர். தேசாபிமானம் இருக்கறதாலே அவரோட படங்களுக்கு
லொகேஷன் அநேகமா இதுதான்!!! இதன் காரணம் எத்தனையோ பேருக்கு அந்த
சமயங்களில் வேலை வாய்ப்பும் கிடைச்சது. உண்மையாவே பாராட்டப்பட வேண்டியவர்

மத்தபடி கிரிக்கெட் அபிமானிகளுக்கு இந்த நாட்டைப் பத்தி ஓரளவு தெரிஞ்சிருக்குமே!!!!

நான் முந்தி இ-சங்கமம் இதழிலே 'நியூஸி'யைப் பத்தி ஒரு தொடர் எழுதினேன்.

அதை ஒருமுறை என் பதிவுலே போடலாமுன்னு இருக்கேன்.

சங்கமம் ஆசிரியருக்குச் சொல்லிட்டுச் செய்யலாமுன்னு இருக்கேன். பார்க்கலாம் !!!!

said...

அன்புள்ள நம்பி,

'கிவி ஆட்கள்' பொதுவா நல்லவர்கள்தான். மனுஷனை மனுஷனாத்தான் இன்னும் மதிக்கிறாங்க.
ஆனாலும், வெள்ளையரல்லாதவங்களைக் குறிச்சு ஒரு வேற்று எண்ணம் இருக்கறவங்க இல்லாமலில்லை!
ஆனா, அதை வெளியே காமிக்காம இருக்கறது ஒரு நல்ல விஷயம்தான்!

said...

ஷ்ரேயா,

நல்லாச் சொன்னீங்க. ஒரு லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப்:-)))))

ஆமாம், நீங்க எல்லாம் ஏன் ?????ஆயிட்டீங்க?

said...

//ஆமாம், நம்ம சிங்காரச் சென்னைக்கு 'ஸ்டாலின்'தானே இப்ப மேயர்?//

இது எந்தக் காலம்? அப்படின்னு கேள்வியை முழுசா முடிச்சிருக்கலாம்.

said...

அக்கா!., இருக்கிற ஊரப் பத்தி நல்லாத் தெரிஞ்சு வச்சுருக்கிங்க!.,. சென்னைக்கு ஸ்டாலினான்னு கேட்டு கிண்டல்தானே பண்றிங்க?

said...

கோபி,

என்ன செய்யறது? இப்பெல்லாம் மேயர் , மந்திரி இந்த மாதிரி பதவிகள் கூட 'குடும்ப சொத்து' ஆயிருச்சேப்பா!!!!

said...

மரம்,

18 வருஷமா இங்கே 'குப்பை' கொட்டிக்கிட்டு இருக்கேன். இதைக் கூடத் தெரிஞ்சு வச்சுக்காம இருந்தா நல்லாவா இருக்கும்?

said...

'டிம் ஷட்போல்ட்' பையன் மருமகள் ஒன்னு விட்ட மருமகன் எல்லாம் என்ன போஸ்ட்ல இருக்காங்கன்னு சொல்லவே இல்லையே துளசியக்கா...

said...

முகமூடி,

'ஷட்போல்ட்' குடும்ப ஆளுங்க சாதாரணமா ஜனங்க செய்யற வேற வேற தொழில்தான்
செய்யறாங்க.

மகனை 'மத்திய மந்திரி' ஆக்கலை!!!

மருமகனை 'மத்திய மந்திரி' ஆக்கலை!

மகனை எம்.பி. / எம். எல் ஏ இதொண்ணூம் ஆக்கறதுக்கு அவருக்குத் தெரியலையேப்பா!!

தமிழ்நாட்டுக்கு ஒரு 'ட்ரையினிங்' அனுப்பலாமா?:-))))