Friday, June 17, 2005

பக்கத்தூட்டுக்காரு !!!!

நம்ம பக்கத்து வூட்டுக்காரர் இங்கே ( நியூஸி) விருந்தாளியா வந்திருக்காரு.

'விருந்தும் மருந்தும் மூணுநாளு'ன்னு அவருக்கும் தெரிஞ்சிருக்கும் போல.


எங்க நாட்டு 'அம்மா'கூட பயங்கரவாதம், ஆஃப்கானிஸ்தான் விஷயத்துலே பாக்கிஸ்தானோட
சம்பந்தம் பத்தியெல்லாம் 'விலாவரியா' பேசப்போறாங்களாம்!!!!!

கூடவே, இப்ப வருசத்துக்கு 92 மில்லியன் டாலர்னு இருக்கற வியாபாரத்தை எப்படி
அதிகபடுத்தறதுன்னும் பேசிக்குவாங்களாம்!

கொஞ்சம் பொறுத்து இருந்தால் எல்லாம் விவரமா ரெண்டு நாளைக்குள்ளே
தெரியவரும்!!!!

அதனாலே இப்பத்தித் தேவை, கொஞ்சம் பொறுமை!அடாடா, யாருன்னு சொல்லலேல்ல? எல்லாம் நம்ம 'முஷாரஃப்' தான்!!!!


15 comments:

said...

அட...இங்கேயும் வந்திருந்தார். தீவிரவாதத்துக்கு பாக். துணை போகுது என்று சொல்லி காய்ச்சி எடுத்தாங்க. மனுசன் அயரவில்லை. தீவிரவாதத்தை தோற்கடிக்க ஒஸ்ரேலியாவின் உதவி தேவை என்று சொல்லி பெரியதொரு ஐஸ் கட்டியை ..இல்லல்ல..ஒரு பனிப்பாறையையே தூக்கி அரசியல்வாதிகள்ட தலையில வச்சுட்டு கொஞ்ச வர்த்தக ஒப்பந்தத்துல கையெழுத்தையும் வாங்கிட்டு உங்களிட்ட வந்திட்டார்!!

said...

lollu

said...

மனுசன் சிங்கப்பூர், மலேஷ்யா ஏற்போர்ட்ல சும்மா கும்முன்னு மகிழ்ச்சியா நடந்து வந்ததப் பாத்தா... என்னமோ ஒண்ணும் புரியமாட்டேங்குது!., அங்க(பாக்) போய்ட்டு வெளிய வர்ற எல்லாரும் பி.பியோட வாராக... ஆனா இவரு... வந்தமா டெல்லியச் சுத்திப் பாத்தமா... அப்பிடியே விருந்து சாப்பாடு சாப்டிட்டு சாவகாசமா கிரிக்கெட்டப் பாத்தமான்னு வாழ்றாரு மனுசன்!!. நம்ம கேஸ்களப் பாருங்க!.ம்ம் என்னாத்த சொல்றது போங்க!!.

said...

மேலே ?????? ஆகா பின்னுட்டம் போட்டது நாந்தான் "ஷ்ரேயா". (தற்சமயம் இதுவும் ????? ஆ வந்திட்டுதெண்டா! அதான்..முன் பாதுகாப்பு!) :o)

said...

அக்கா,
உங்க நடையே நடை. நான் கூட ஏதோ நம்ம வலைப்பதிவு நண்பர் யாரோ வந்தாங்களோன்னு நினைச்சுட்டேன். :)

said...

ஷ்ரேயா,

ச்சும்மா சொல்லக்கூடது, ஆளுக்கு முகத்துலே நல்ல 'வசீகர சிரிப்பு!'இல்லே?

???? இதுக்கும் பிரச்சனை கிளம்பி அப்புறம் 'எலிக்குட்டி'யை வச்சுப் பாக்கணுமுன்னு ஆயிருமோ?

ஒண்ணும் புரியலையே!

said...

நம்பி,

தேங்ஸ் ஃபார் த பின்னூட்டம்!!!!

said...

மரம்,

எதிரி குகைக்குப் போனா 'பீதி' வராதா? இல்லே பி.பி.தான் வராதா?

said...

தம்பி முத்து,

என்னதான் வேண்டாதவங்களா இருந்தாலும், பக்கத்து வீட்டு
ஆளு'ன்றப்ப ஒரு மருவாதி கொடுக்கத்தானே வேணும்?

நீங்க சொல்றதுபோல இங்கே வலைபதிவாளர் கூட்டம் அதிகமாயிருச்சு!

இப்ப மூவர் இருக்கோம்.
அதுலே ஒருத்தரை சந்திக்க முடிஞ்சாலும் அது வலைப்பதிவாளர் மகாநாடு ஆயிரும்:-)))))

said...
This comment has been removed by a blog administrator.
said...

two is a company; three is a crowd என்பார்களே அது இதுதானா

said...

//அங்க(பாக்) போய்ட்டு வெளிய வர்ற எல்லாரும் பி.பியோட வாராக... ஆனா இவரு... //

அப்டிப்போடு,
அவர் தன் சொந்த நாட்டிலேயே இருக்கும்போது அவரோட பி.பி. எவ்ளோ எகிறுதுன்னு அவரோட மருத்துவரைத்தான் கேட்கணும்

அங்கேயும் மருத்துவர் உண்டுதானே ? :-))

said...

சும்மா இருக்கு குழலியா .. நீங்க வம்புக்கு இஸ்குறீங்க லதா!!

துளசியக்க்கோவ் , இப்போ வந்துட்டு போன பக்கத்தூட்டுகாருக்கு பக்கதூட்டுகாரரை சீக்கிரம் அனுப்பறோம் அவுருகிட்டயும் உங்க (நியூசி) அம்மாவ கொஞ்சம் விலாவாரியா பேச சொல்லுங்க.. :)

வீ எம்

said...

ஞானபீடம் said:

ச்சே... காலாகாலத்துக்கும்

விருந்தும் மருந்தும் 3, 4. தானா?

ஒரு 5, 6 னு கூட்டக்கூடாதா?

இல்லே, ஒரு 1, 2 னு கம்மி பண்ணக் கூடாதா?

'எதையும் கேள்வி கேட்காமல் ஏறுக்கொள்ளாதே' அப்டீன்னு சமீபத்தில யாரோ வலைப்பதிந்தார்கள் ! (நம்ம வீ.எம்.ஆக இருக்குமோ? what a bright fellow !)


******************************
இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: உங்கள் அபிமான ஞானபீடம்
******************************

said...

?????, வீ.எம், ஞானபீடம்

'கருத்துக்களுக்கு' நன்றி


எப்பப்பார்த்தாலும் ????? னு வர்றதைப் பாத்து இப்ப எனக்கு பி.பி. எகிறுதுங்கோவ்:-))))