ஸாஃப்ரான் ரைஸ், பனீர் & மட்டர் சப்ஜி, ஆலூ கறி, தால், பஜ்ஜியா மாதிரி ஒரு
கைண்ட் ஆப்ஃ போண்டா, பப்படம், ஸாலட், இம்லி சட்னி, ரைத்தா, ஃப்ரூட்ஸ் கேஸரி & க்ரீம்,
பால் பாயாசம் இதுதான் மெனு!!!
போன வீக்கெண்ட் லாங்கா இருந்துச்சு, நம்ம எலிஸபெத் மஹாராணியோட பொறந்த நாள் விழாவால!!
இன்னும் ஒரு நாள் லீவு போட்டு அதை ஒரு லாங்கஸ்ட் வீக்கெண்டா மாத்திக்கிட்டோம்!!!!
மேலே சொன்ன சாப்பாட்டு ஐட்டங்கள் நம்ம ஊர் கோயில்லெ, தயாரிச்சதுதான்! என்னா 'ஸ்பெஷல்'னு
கேட்டீங்கன்னா அதுக்கும் பதில் ரெடியா இருக்கு! எங்க திருமணநாள் கொண்டாட்டத்தைக் கோவில்லெ
வச்சுக் கொண்டாடினதுக்குத்தான் இந்த மெனு!
'தானே தானே பர் லிகா ஹை, கானே வாலாகா நாம்'னு ஒரு பழஞ்சொல் இருக்கு! ஒவ்வொரு அரிசியிலும்
அதை சாப்புடப்போறவங்க பேரு இருக்குமாம்! அதனாலே கொண்டாட்டம்ன்னு யாரையும் தனியா அழைக்கலை.
யாருக்கு எழுதியிருக்கோ அவுங்க சாப்பிடட்டுமுன்னு விட்டுட்டோம். அறிமுகம் இல்லாதவங்களுக்கு இப்படிச்
செய்யறதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் இருக்கு!
அன்னைக்குச் சமையல் செஞ்சவங்களிலே ஒருத்தர் என்னிடம் கேட்டது இது.
" எத்தனையாவது கல்யாண நாள்?"
"முப்பத்தியொண்ணு"
" இதுவரைக்கும் எத்தனை முறை சண்டை போட்டிருப்பீங்க?"( கேக்கறதைப் பாருன்னானாம்!!!)
" முப்பத்தியொண்ணை ஆயிரத்தாலே பெருக்கிக்குங்க!!!"
கொஞ்சம் கணக்குப் போடத்தெரிஞ்சா புரிஞ்சிருக்கும், சராசரியா நாளுக்கு மூணு சண்டைன்றது:-)
இப்பப் பாருங்க தமிழ்மணத்துலே சண்டை போடறாங்கன்னு முகமூடி பதிவு போட்டிருக்காருல்லே,
அதேதான்!!!
குடும்பத்துலே இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா!!!!
இன்னைக்கு சண்டை போட்டுக்குவொம், நாளைக்கு கூடிக்குவோம்.
சண்டைன்னதும் ஞாபகத்து வருது ஒரு விஷயம்.
அந்தக் காலத்துலே ஏதாவது வாக்குவாதத்துலே( இதைத்தான் சண்டைன்னு தப்பா சொல்லிக்கிட்டு இருக்காங்க!)
காரசாரமா ஈடுபட்டுக்கிட்டு இருக்கறப்ப திடீர்னு யாராவது வீட்டுக்கு வந்துருவாங்க. அவுங்க முன்னாலெ இதை
வச்சுக்க வேணாம்னுட்டு, ரொம்பச் 'சமாதனப்புறா'வா 'சட்'னு மாறிடுவோம்.
அவுங்க இருந்து பேசி, காஃபியெல்லாம் குடிச்சுட்டுப் புறப்பட்டு போற ஒரு ரெண்டு மணி நேரத்துலே, உண்மைக்குமே
அந்த சண்டை நீத்துப் போயிருக்கும். ஆனாலும், அதை மனசுலெ வச்சு வளர்த்துக்கிட்டுக் 'கரம்கரம்'னு இருப்பேன்.
அவுங்க போனபிறகு, இவர் இயல்பா எதாவது பேச வருவார். இன்னும் சண்டை முடியலேன்னு குரல் கொடுப்பேன்!
சண்டையா, அது எப்பவோ முடிஞ்சிருச்சே! அவுங்க வந்ததும் நான் 'மூண்டுக்கிட்டிருந்ததை அணைச்சிட்டேனே'ன்னு
அப்பாவியா இவர் சொல்வார்.
எனக்கு 'ச்சே'ன்னு ஆயிரும். மனசு நிறைவா ஒரு சண்டையை, முழுசாப் போட விடாத ஜனங்களை சபிச்சுக்கிட்டே
அடுத்த சண்டை சமயத்துலேயாவது யாரும் வந்துராம இருக்கணுமேன்னு வேண்டிக்குவேன்!!!!
எப்படியும் வெற்றி எனக்குத்தான்!!! அத்தை அனுபவிக்க முடியலை பாருங்க:-)))))
பின்குறிப்பு: இது இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதது. ஆனா போன பதிவுக்கு சம்பந்தம் இருக்கறது.
நம்ம வீ.எம், வசந்தன், தேன் துளி, மீனாக்ஸ், பாண்டி, டுபுக்கு, எல்லேராம் இவுங்களுக்கெல்லாம்
பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி சொல்லிக்கறேன்.
'பின்னூட்டத்துக்கு எப்படி பின்னூட்டம் கொடுக்கறது, நாம அதே பதிவுலே போட்டாக்கா, பெரியமனசு பண்ணிப்
பின்னூட்டம் போட்ட நம் மக்கள் திரும்ப வந்து பாப்பாங்களா, இல்லே எல்லாம் ஒருக்கப் போட்டதோட சரின்னு
இருந்துடுவாங்களா? '
( இதுக்கே தனியா ஒரு பதிவு போடணுமேப்பா!)
இப்படிப் பலகுழப்பங்கள் மனசுக்குள்ளெ வந்துட்டதாலே, இந்தப் பதிவுலே பின்குறிப்பாப் போட்டுக்கலாமுன்னு
ஒரு எண்ணம்!
Wednesday, June 08, 2005
நாளுக்கு மூணு சண்டை!!!!!!
Posted by துளசி கோபால் at 6/08/2005 04:11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
மேலும் பல ஆயிரம் சண்டைகள் போட வாழ்த்துக்கள்!!!
யக்கா! சூப்பரா எழுதியிருக்கீங்க. அடடா... மனைவியோட அடிக்கடி சண்டை போடனும், சமாதானம் பேசனும், அப்புறம் கூடிக்கிடனும். இப்படி இருந்தா தான் வாழ்க்கையே சுவாரஸ்யம். அது விட்டுட்டு கல்யாணத்துக்கு முன்னால(இல்ல புதுசா கல்யாணம் ஆன) பண்ண மாதிரி ஆல்வேஸ் 'என் செல்லமே'ன்னு கொஞ்சிக்கிட்டு இருந்தா எப்பவுமே நல்லாவா இருக்கு.
ஆனா என்ன, சண்டையின் போது நான் தான் பலசாலின்னு நிரூபிக்கிறதுக்கு எதையாவது போட்டு உடைக்கனும். இல்லை எதிர்காப்புல இருக்கிற எதையாவது உதைக்கனும். நான் பொருளை தாங்க சொன்னேன். மனைவியை உதைச்சா, அடிச்சா நான் செத்தேன். அவுங்க பெண்ணியல்ல எம்.பில் பண்ணியிருக்காங்க. அப்புறம் மனித உரிமை கமிஷனுக்கு(மாமனார் வீட்டுகாரவுங்களுக்கு) யாரு பதில் சொல்றது. எல்லாமே முன்னேற்பாடு தான்.
ஆங்... சொல்ல வந்தது மறந்ததுப் போச்சி. இப்படி உடஞ்ச பொருள் வீட்டுல நிறைய இருக்கு. அப்படி ஜாஸ்தி அடி வாங்குறது டிவி ரிமோட் தான். கோபத்துல தூக்கி எறியும் போது 'டிவி ரிமோட்'டா என்று மனசு கூவ, "மொள்ளமா போடு'ன்னு மனசு சொல்ல அதுக்கு ஈகோ 'நீ பலசாலின்னு' நிரூபின்னு கத்த, அந்த மனப்போராட்டத்தையும் ரசிச்சுக் கிட்டே ரிமோட்டை தூக்கிப் போட "அடங்கொப்புரானே செஞ்சிட்டியே"ன்னு ரிமோட் வாயை பொளந்து பேட்டரிகளை துப்ப ஒரே 'அடிதடி' தான் போங்க.
// ஸாஃப்ரான் ரைஸ், பனீர் & மட்டர் சப்ஜி, ஆலூ கறி, தால், பஜ்ஜியா மாதிரி ஒரு
கைண்ட் ஆப்ஃ போண்டா, பப்படம், ஸாலட், இம்லி சட்னி, ரைத்தா, ஃப்ரூட்ஸ் கேஸரி & க்ரீம் // அய்யா குடிதாங்கிகளே, நகரத்து பொண்ணுங்க பீட்டர் உடுறதுக்கு எதாவது பண்ணுங்கைய்யா... உருளையின்னு அழகா சொல்லுறத ஆலுன்னே மாத்திட்டாய்ங்க. இவிங்களால ஆலும் வேலும் பல்லுக்கு உறுதின்னா பொட்டேடோல எப்படி பல்லு வெளக்குறதுன்னு கேக்குதுங்க பொடிசுங்க...
//"முப்பத்தியொண்ணு"// தெரியாத்தனமா இப்படி வயச சொல்லிபுட்டீங்களே...
// சண்டையா, அது எப்பவோ முடிஞ்சிருச்சே! அவுங்க வந்ததும் நான் 'மூண்டுக்கிட்டிருந்ததை அணைச்சிட்டேனே'ன்னு // உலகம் முழுக்க ஆம்பளங்கதான் சமாதானப்புறா பறக்க் விடுறாங்க போலருக்கு... பொண்டாட்டியிடம் புறமுதுகு காண்பிக்காத வருத்தமில்லா வாலிபர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும் போலருக்கே... (எண்ணிக்கை 2 இலக்கத்துக்கு வருமா?)
// 'பின்னூட்டத்துக்கு எப்படி பின்னூட்டம் கொடுக்கறது // அதுக்கு ப்ளாக் ரோல்னு என்னமோ இருக்கு போலருக்கு, யாராவது என்னான்னு கொஞ்சம் வெளங்க வெச்சா நல்லாருக்கும்...
அப்புறம் :: << என்னா கேக்குறாங்க?? அதூ... நமக்கு "எத்தனையாவது கல்யாண நாள்?"னு கேட்டாங்க, "எண்பத்தி ஒண்ணு"னு சொன்னேன்... கிழவிக்கு கழுகு கண்ணு, இன்னமும் யாராவது கொமரி பொண்ணுங்ககிட்ட நான் பேசுனா என்னான்னு வந்துருவா....>> என்பதான டயலாகை நாங்கள் கேட்டு ரசிக்க ஆண்டவன் அருள் பொழிவானாக //
//பொண்டாட்டியிடம் புறமுதுகு காண்பிக்காத வருத்தமில்லா வாலிபர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும் போலருக்கே... (எண்ணிக்கை 2 இலக்கத்துக்கு வருமா?)//
it may even go to 3 - 4- 5 digits, provided the wives approve the husbands to join in such groups!
//எப்படியும் வெற்றி எனக்குத்தான்!!! அத்தை அனுபவிக்க முடியலை பாருங்க//
Wife always win in any argument-- for, if you say anything more, it will be a start of a new argument!
முதல்ல கல்யாண நாள் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன். அப்புறம் பசிக்குது... மெனுவில எதுவும் மீதம் இருக்கா!
அன்புள்ள தாசரதி,
உங்க பேருலேயே இருக்கேப்பா 'ரதிக்கு தாசன்'ன்னு அந்த ரதி வந்துட்டாங்களா இல்லை
இன்னும் வரலையா?:-)))
அன்புள்ள விஜய்,
எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது, இந்த வீசி எறிய 'குணம்' எனக்கிருந்துச்சுன்னு!!!!
அப்பெல்லாம் 'ரிமோட் கண்ட்ரோல்' கிடையாது! வெறும் ஹேர் ஆயில் பாட்டில்,
அலாரம் கடியாரம் அதான்பா டைம்பீஸ், ட்ரான்சிஸ்டர் ரேடியோன்னு சிலது! மிஞ்சிப்
போனா பாத்திரங்கள்!!! பூரிக்கட்டை கூட அப்ப நம்ம வீட்டுலே இல்லை:-))))
அன்புள்ள முகமூடி,
ஹிந்தியிலே பீட்டர் விட்டாலும் தார் பூசிடுவாங்களா? இந்தியாவுக்கு வெளியிலே சாப்பாடுன்னா
ஒரே வட இந்தியாதான். இண்டியன் ரெஸ்டாரண்ட்ன்னு பொதுவாச் சொன்னாலும் வடக்கத்தி சாப்பாடுதான்.
அதுலே பாருங்க, எல்லாம் ஒரே வகைதான்! தந்தூரி, நான், மெட்ராஸ் லேம்ப் கறி இத்யாதிகள்!!!
இதுலே ஆலுக்கும் வேலுக்கும் எங்கே போறது?
//பொட்டேடோல எப்படி பல்லு வெளக்குறதுன்னு கேக்குதுங்க பொடிசுங்க..//
க்ரீன் ஆப்பிள்லே பல் விளக்குற மாதிரின்னு சொல்லுங்க!!!
இன்னும் 50 வருசமா? தாங்காது சாமி.......தாங்காது!!!!
அன்புள்ள சுரேஷ்,
சங்கத்தை ஆரம்பிச்சுருங்க. அதுக்கு தலைவரா இருக்க கோபாலுக்கு அனுமதி கொடுத்திருக்கேன்:-)
அன்புள்ள துடிப்புகள்,
என்னாப்பா பேரே ஒரே துடிப்பா இருக்கு! பாத்து... எதாவது ஆபத்து வந்துரப்போகுது!!!
எங்கே மிச்சம் இருக்கும்? அதுவும் மூணுநாளைக்குப் பிறகு?
அன்புள்ள மூர்த்தி,
//என் ஊட்டுக்காரிய ரெண்டு டோஸ் விட்டுட்டு வறேன்!!!//
இதென்ன ? அநியாயமா இருக்கு! எப்பக் கல்யாணம் முடிச்சீங்க? அதுக்குத்தான் ஒரு வாரம்
சென்னைப் பயணமா?
நீங்க 'பேச்சு இலர்' னுதானே நினைச்சிருக்கேன்? இப்படி அக்காவுக்குச் சொல்லாம அமுக்கமா
கல்யாணம் முடிச்சிட்டீரே!!!!
வாழ்த்துச் சொன்ன அன்புள்ளங்களுக்கு நன்றி!!!!
துளசி... வாழ்த்துகள். மெனு சூப்பர். தோஸ்துக்கும் வாழ்த்துகள் சொல்லிடுங்க.
நிர்மலா.
அன்பு நிர்மலா,
நன்றி!!! தோஸ்துக்குச் சொல்லிட்டேன்! அவரும் நன்றி சொல்லிக்கறாராம்!!!!
//Wife always win in any argument-- for, if you say anything more, it will be a start of a new argument!
//
Wish you many more victories tulasi !
எலிசபெத் பிறந்த நாள் என்று எங்களுக்கு வரும் திங்கள் லீலு விடுறாங்களே.
வாழ்த்துக்கள் துளசி.
அன்புள்ள சயந்தன்,
மஹாராணியோட உண்மையான பிறந்தநாள் ஏப்ரல் 21. அன்னைக்குத்தான் லண்டன்லே
ஹைட் பார்க்லே பீரங்கி வெடி போட்டுக் கொண்டாடுறாங்களாம்.
ஆனா அவுங்க ஆளுகைக்கு உட்பட்ட மத்த நாடுகளிலெ அவுங்கவுங்க செளகரியத்துக்காக
வெவ்வேறு நாளுலே கொண்டாட்டமுன்னு ஆயிடுச்சாம்!
ஜூன் 2 அவுங்க முடி சூட்டின நாள். அதனாலே அந்த மாசம் முதல் வாரம் வர்ற வீக் எண்டை
லாங் வீக்கெண்டா ஆக்கியாச்சு எங்க ஊருலே! எப்படியோ ஒரு நாள் லீவு கிடைச்சாச் சரி!
உங்க ஊர்லே நீங்க எப்பவுமே ஒரு வாரம் பிந்திதான் எதையும் செய்யறீங்கன்னு
நினைக்கிறேன். ஸ்கூல் ஹாலிடேஸ்கூட இங்கெயைவிட ஒரு கிழமை பிந்தித்தான்
அங்கெ வருது!
அன்புள்ள ரவியா, தேன் துளி, விசிதா
நன்றி!!!!
விசிதா,
இங்கே சிதம்பரம் போல வெளியாருக்குத் தோற்றம் தருகிற மதுரை:-))))
பி.கு: கோபாலுக்கு சொந்த ஊரு மதுரை மாவட்டம்தான்.
அடடே! கருத்து சொல்லிட்டு வாழ்த்தை சொல்லாம போய்ட்டேனே.
திருமண தின நல்வாழ்த்துக்கள் அக்கா.
//இங்கே சிதம்பரம் போல வெளியாருக்குத் தோற்றம் தருகிற மதுரை:-))))//
அங்கேமட்டுமல்லயக்கா எங்கேயுமே அப்படித்தான், வாழ்த்துக்கள்
//அங்கேமட்டுமல்லயக்கா எங்கேயுமே அப்படித்தான்//
ஹா ஹா ஹா ஹா..........
குழலி, விஜய்
நன்றி!!!
மூர்த்தி,
திருக்குறளைக் கரைச்சுக் குடிச்சாச்சா?
அன்பு துளசியக்காவுக்கு,
என் மனங்கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.
இணைபிரியாமல் சண்டை போட்டு எப்போதும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள். ஹஹஹா..
( கோபால்... கண்டுக்காதீங்க... சும்மானாச்சுக்கும்.. சரியா..? )
அக்கா,
திருமண வாழ்த்துக்கள்.
///எப்படியும் வெற்றி எனக்குத்தான்!!! அத்தை அனுபவிக்க முடியலை பாருங்க:-)))))///
:-)) :-)) :-))
//பொண்டாட்டியிடம் புறமுதுகு காண்பிக்காத வருத்தமில்லா வாலிபர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும் போலருக்கே... (எண்ணிக்கை 2 இலக்கத்துக்கு வருமா?)//
இலக்கம் கணக்குத் தேவையே இல்லை. கல்யாணம் முடித்து சில வருடம் ஆன எல்லா ஆண்களும் இந்தப் பட்டியலில் பெரும்பாலும் வந்துவிடுவார்கள்.
தம்பி முருகன்,
நன்றி!
தம்பி முத்து,
நன்றி!
//இலக்கம் கணக்குத் தேவையே இல்லை. கல்யாணம் முடித்து சில வருடம்
ஆன எல்லா ஆண்களும் இந்தப் பட்டியலில் பெரும்பாலும் வந்துவிடுவார்கள்.//
எதுக்கு சில வருடங்கள் ஆகணும்? உடனே சேர்ந்துடவேண்டியதுதான்!
உங்களுக்கும் 'சீட்' போட்டு வச்சாச்சு:-)))))
கணவம் மனைவி சண்டை பிடிப்பதற்கு வேறொரு காரணம் இருப்பதாக நான் இவ்வளாவு நாளும் தப்பா நினைச்சிட்டேன். கன்னத்திலை போட்டுக்கிறேன்.
Post a Comment