Sunday, June 19, 2005

குள்ளமா வளர்றது எப்படி?

அடடே, வாங்க, வாங்க!!!

எப்படி இருக்கீங்க? போனமுறை பார்த்ததைவிட ரொம்ப இளைச்சுட்டீங்களே!

இப்படி யாராவது நம்மைப் பாத்துச் சொன்னா எவ்வளவு 'திருப்தி'யா இருக்கும்!!!!

இப்ப அடுத்த சீன்!



முதல் வரிதான் இப்பவும். ரெண்டாவதுதான் வேற!

எப்படி இருக்கீங்க? போனமுறை பார்த்ததுக்கு இப்ப ரொம்பக் குள்ளமா இருக்கீங்களே!

இப்பிடிச் சொன்னா எப்படி இருக்கும்?

மனுஷன்/மனுஷி ஒரு வயதுக்கு அப்புறம் உயரமா வளரமுடியாதுன்றது எவ்வளவு நிஜமோ
அவ்வளவு நிஜம் உயரம் குறைஞ்சுக்கிட்டு வர்றதும்!!!!!!

நம்ம ஈஸ்வரி( கற்பனைப் பேருதாங்க!!! இல்லாட்டா பெயர் மாற்றப்பட்டுள்ளதுன்னு கவுரவமாப் போடலாமா?)

அவுங்களுக்கும் அவுங்க கணவருக்கும் கல்யாணமான புதுசுலே வெறும் ரெண்டே ரெண்டு அங்குல
வித்தியாசம் மட்டுமே அவுங்க உயரத்துலே!

புடவையெல்லாம் சல்வாரா மாறிப்போன காலக்கட்டத்திலேதான் இந்த உயரம் குறையறதுன்றது கொஞ்சம்
கொஞ்சமா நிகழ்ந்திருக்கு! அதாலே இதை யாருமே 'சட்'ன்னு கவனிக்கலை!

அப்புறம் எப்பத்தான் கவனிச்சாங்க? கணவரோட பக்கத்துலே நின்னப்பயா?

சொல்றேன், சொல்றேன்!!! ஆமாம். நீங்க எந்தக் காலத்துலே இருக்கீங்க? கல்யாணத்தன்னிக்கு எடுக்கற
ஃபோட்டோவைத்தவிர, சாதாரணமா எப்ப கணவன் பக்கத்துலே 'நின்னு' போட்டோ புடிச்சுக்கறாங்க?

ஃபோட்டோன்னாவே ஒரு 'ஸ்டுடியோ'வுக்குப் போறதுன்ற காலம் மாறிக் கைக் கேமெரா வந்தப்பவே
சம்பிரதாயமான படம் எடுக்கறதுன்றது போயிருச்சுல்லே?

ஃபோட்டோன்னதும் ஞாபகம் வருது, இந்த வாரத் 'திண்ணை'யிலே நம்ம ஷங்கரநாராயணன் 'குடும்பப்
புகைப்படம்'னு ஒரு கதை எழுதியிருக்காரு. போய்ப் படிச்சுட்டு நல்லா சிரிச்சிட்டு வாங்க:-)

இன்னொண்ணுக்கூட ஞாபகம் வருது. நேத்து நண்பர் குழந்தைக்குப் பொறந்தநாள் விழா. ஜஸ்ட் ஒரு வயசே
ஆன பிஞ்சு!!!! எங்களையெல்லாம் கூட்டமாப் பாத்ததும் பயந்திருச்சு போல:-)))

ஒரே அழுகை. அவுங்க அம்மாவுக்குச் சங்கடமாப் போச்சு! அப்புறம் அழுகையை ஒரு மாதிரி நிப்பாட்டிட்டாலும்
அழுத வேகம் தாங்காம ரொம்ப நேரத்துக்கு 'விக்கி'க்கிட்டே இருந்துச்சு புள்ளை!!!!

அப்ப நிகழ்ச்சிக்கு வந்த இன்னொரு நண்பரை, (இவர் இன்னும் கண்ணாலம் கட்டாதவர், பொண்ணு பாத்துக்கிட்டு
இருக்காங்களாம் ஊருலே! ) மற்ற ஒரு நண்பர் கைத்தொலைபேசியிலே படம் புடிச்சு பொண்ணு வீட்டுக்கு
அனுப்பலாமுன்னு நினைச்சு, அவரைப் படம் எடுக்க நிக்க வச்சாச்சு!

முகத்துலே சிரிப்பே இல்லாம கன கம்பீரமா(!) நிக்கறார் நண்பர். நாங்கெல்லாம் சேர்ந்துக்கிட்டு, 'இப்படி ஃபோட்டோ
எடுத்து அனுப்பினா பொண்ணு ஓடிப்போயிரும். நல்லா சிரிச்ச முகத்தோட நில்லுங்க'ன்னு சொல்லிக்கிட்டு
இருந்தோம். நாங்க சொல்லச் சொல்ல ,அவருக்கு முகத்துலே இருந்த கொஞ்சம்நஞ்சம் சிரிப்பும் போயிடுச்சு!
கைகளைக் குறுக்காக் கட்டிக்கிட்டு அட்டென்ஷன்லே நிக்கறார். நாங்கெல்லாம் கலாய்ச்சுக்கிட்டே இருக்கோம்.
வாயை எப்படி வச்சுக்கறதுன்னு யோசிச்சு, சிரிக்கறதுக்கு பிரம்மபிரயத்தனம் செய்றார்.ஆனா சிரிப்புமட்டும் வரலே
அவருக்கு. எங்களுக்கெல்லாம் சிரியோ சிரி!!!! 'நெர்வஸ் ஆக வேணாம். இயல்பா நில்லுங்கோ,'ச்சீஸ்'ன்னு
சொல்லுங்கோ'ன்னு ஆளாளுக்குக் சவுண்டு விடறோம். அசையாம நின்னபடி, குரலுங்க வர்ற பக்கமெல்லாம்
கண்ணைமட்டும் அனுப்பி எங்க 'அன்புக் கட்டளைகளுக்கு' ஆடிக்கிட்டு இருந்தார்!
எப்படியோ ஒருவிதமா அவரைப் படம் புடிச்சாச்சு!

வழக்கம் போல என்னவோ சொல்ல வந்து இப்ப ட்ராக் மாறி எங்கெயோ போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க!

வெளிநாட்டுக்கு வந்தப்புறம் சேலை கட்டுற பழக்கமே அநேகமா இல்லாமப் போயிருச்சு. ஆனாலும் இருக்கற நல்ல
சேலைங்களை அப்பப்ப ஏதாவது விசேஷங்களுக்காவது கட்டிக்கிட்டுப் போனாத்தானே நம்ம கிட்ட இருக்கற சேலைகளின்
எண்ணிக்கை, கலர், வெரைய்ட்டி எல்லாம் நம்மஆளுங்களுக்குத் தெரியவரும்? அந்த சம்பிரதாயத்தை அனுசரிச்சு
ஒரு நாள் சேலை கட்டிக்கிட்டு ஆளுயரக் கண்ணாடியிலே பார்க்கறாங்க நம்ம ஈஸ்வரி. எல்லாம் சரிதான், ஆனா என்னமோ
சரியில்லாத மாதிரி இருக்கேன்னு பார்த்தா, அட, இந்த உள் பாவாடை என்னாத்துக்கு இவ்வளவு வெளியிலே தெரியுது?

படிக்கிற காலத்துலே, எப்பவாவது இப்படி புடவைக்கு வெளியிலே கொஞ்சம் பெட்டிக்கோட் தெரிஞ்சா, சிநேகிதிகள்
எல்லாம், 'சன் டே இஸ் லாங்கர் தேன் மண் டே'ன்னு கலாட்டா செய்வாங்க!! சரி. இப்பக் கொஞ்சமாத்தானே
தெரியுதுன்னு விடமுடியாம அது ஒரு முழ நீளம், (ச்சும்மா ஒரு பேச்சுக்கு) தெரியுதே!

என்ன காரணமா இருக்குமுன்னு யோசிச்சிட்டு, ரொம்பவே இறக்கிக் கட்டிட்டோம் போலென்னு பார்த்தாச் சரியாத்தான்
இடுப்பிலே நிக்குது! பாவாடை எப்படி வளர்ந்திருக்கும்? என்னவா இருக்குமுன்னு ஒரே குழப்பம்.

வேற ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டுக் கிளம்பலாமுன்னு பாத்தா அதுவும் அப்படித்தான் இருக்கு. இன்னொண்ணு? அதுவும்
அதே கதை. ஐய்யய்யோ, நாம குள்ளமா ஆகிட்டோம்!!!!! வீட்டுக்காரர்கிட்டே இதைச் சொன்னப்ப அவர் சிரிக்கறார்.
புள்ளைங்களும் சிரிக்குதுங்க. அதெப்படி ஒருத்தர் 'குள்ளமா' ஆவாங்கன்றது அவுங்களுக்குப் புரியலை? ஏன், பாவம்
ஈஸ்வரிக்கே புரியலை!

'கண்ணாலம் கட்டுன புதுசுலே நான், உங்க அப்பாவோட காது உசரத்துக்கு இருந்தேன். ஏங்க, நான் சொல்றது நிசம்
தானே?' புருஷனை சப்போர்ட்டுக்குக் கூப்புட்டாங்க.

அப்பத்தான் அவருக்கும் இது ஞாபகம் வருது! 'ஆமா, இப்ப என் பக்கத்துலே வந்து நில்லு'ன்னார். நின்னு பாத்தா...
என்னன்னு சொல்ல? கழுத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்கு உசரம்!!!!!

எதுன்னாலும், டாக்டரைப் பாத்துக் கேட்டுக்கலாமுன்னு டாக்டரைப் போய்ப் பார்த்தாங்க. இந்த மருத்துவர் கிட்டே
மொதமொதல்லே போய் (அது ஆச்சு பல வருசங்கள்) இவுங்க பதிஞ்சுகிட்டப்ப, அப்ப இருந்த உயரம், எடை எல்லாம்
சோதிச்சு எழுதியிருந்தாங்கல்லே அது நினைவுக்கு வந்துச்சு. இவுங்க பிரச்சனையைக் கேட்ட டாக்டரம்மா இப்ப
என்ன உயரம் இருக்காங்கன்னு அளந்து பார்த்தாங்க. அவுங்க ஃபைலில் இருந்த உயரத்துக்கும், இப்ப இருக்கறதுக்கும்
சரியா நாலு இஞ்சு கம்மி!!!!!!

அப்புறம் பலவிதமான பரிசோதனைகள் செஞ்சாங்க. இந்த சம்பவம் நடக்கறதுக்கு சில வருசங்களுக்கு முன்னே
நம்ம ஈஸ்வரிக்கு வேற ஏதோ கோளாறாலே கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சைவேற நடந்திருந்துச்சு.
எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்துட்டு, ஒரு விசேஷ மருத்துவரைப் பார்க்கணுமுன்னு பரிந்துரை
செஞ்சு, இவுங்களும் போய்ப் பார்த்து அங்கேயும் பலவிதப் பரிசோதனை செஞ்சுக்கும்படி ஆச்சு. கடைசியிலே
இப்படி ஆகறதுக்குப் பலவித காரணங்கள் இருக்கு. இவுங்க உடம்புலே 'கால்சியம் சத்து' குறைஞ்சு போச்சுன்னு
சொல்லி அதுக்கு சில மருந்துகளும் எழுதிக்குடுத்து இப்ப சாப்பிட்டுக்கிட்டு வராங்க.


இந்த விவரம் எனக்குத் தெரிஞ்சப்ப, 'இது மற்ற பெண்களுக்குத் தெரியவேண்டியது ரொம்ப அவசியம். இது போல
ஏதாவது பிரச்சனை வந்தா, அதைத் தள்ளிராம, உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கறதுக்கு முக்கியம்'. இதைப் பத்தின
ஒரு விழிப்புணர்வு பெண்களுக்குத் தேவைன்னு தோணிப் போச்சு!!! பொதுவா இப்படி நடக்குமுன்னு நாம
நினைச்சுக்கூடப் பாத்திருக்க மாட்டோம் இல்லையா?

இப்ப எல்லாம் ஈஸ்வரி புடவை கட்டுனா, பெட்டிக்கோட் வெளியே தெரியறதில்லை!!!!! நாலு இஞ்சு மறுபடி
சரியாயிடுச்சான்னுதானே கேக்கறீங்க?

எல்லா உள்பாவாடையையும் நாலு இஞ்சு மடிச்சுத் தைச்சுட்டாங்க!!!!!!! ஆனது ஆச்சு. இனிமேலும் உசரம்
குறைஞ்சுடக்கூடாதுன்றதுதான் இப்பத்துக் கவலை.






32 comments:

said...

துளசியக்கா,
ஆச்சரியமா இருக்கு, இப்படியெல்லாம்கூட நடக்குமா?.

said...

முத்துத் தம்பி,

நம்ம வீட்டுலேயும் மொதல்லே நம்பலை. அப்புறம் அந்த 'ஸ்பெஷலிஸ்ட்' இதைப் பத்தி ஒரு ஆர்ட்டிகிள் இதுக்குத் தமிழிலே என்ன சொல்லணும்? பதிவுன்னு சொல்லலாமா? உள்ளூர் பேப்பர்லெ வெளியிட்டிருந்தார்.

நம்ம ஜனங்க எதையும் அச்சுலே
பார்த்தால்தானே நம்புவாங்க. அதன்படி இப்ப நம்ப ஆரம்பிச்சிருக்காங்க!

said...

மஞுளா,

நிஜமாவே நடந்ததுங்க. கதை இல்லைங்க!!!!

said...

// 'ச்சீஸ்'ன்னு
சொல்லுங்கோ'ன்னு ஆளாளுக்குக் சவுண்டு விடறோம் //
பாலாடைக்கட்டி என்று சக தமிழனை சொல்ல விடாமல் ஆங்கில வார்த்தையை உச்சரிக்க வற்புறுத்திய தமிழ் துரோகிகளை பச்சோந்தி மக்கள் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...

said...

முகமூடி,
உங்க பச்சோந்தி மக்கள் கட்சியோட பயங்கரமான தொந்தரவுன்னு வலைப்பதிவு மக்கள் புலம்பப்போறாங்க. அது சரி. உங்க கட்சியில தலைவர், செயலாளர், தொண்டர் எல்லாமே நீங்கதானா ?, ஒருவர் கமிஷன் மாதிரி ஒருவர் கட்சியா? :-).

said...

///
நம்ம வீட்டுலேயும் மொதல்லே நம்பலை. அப்புறம் அந்த 'ஸ்பெஷலிஸ்ட்' இதைப் பத்தி ஒரு ஆர்ட்டிகிள் இதுக்குத் தமிழிலே என்ன சொல்லணும்? பதிவுன்னு சொல்லலாமா? உள்ளூர் பேப்பர்லெ வெளியிட்டிருந்தார்.//

ஸ்பெஷலிஸ்ட் - துறைவல்லுநர்
ஆர்டிகிள் - கட்டுரை

said...

// உங்க கட்சியில தலைவர், செயலாளர், தொண்டர் எல்லாமே நீங்கதானா ? // முத்து என் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்காதீர்கள்... நானே எல்லாம் என நினைக்க நான் என்ன அவரா?? என் சொந்தக்காரர்கள் பலருக்கு பதவியை பகிர்ந்து கொடுத்திருக்கிறேன். பதவிக்கு நான் வந்தால் என்னை சாட்டையால் அடியுங்கள். மேலும் என் கட்சியால் எத்தனை குடும்பங்கள் முன்னேறியிருக்கின்றன தெரியுமா?? (யார்ராவன் அங்க எல்லாமே அவரு மாமா குடும்பம், மச்சான் குடும்பம், மருமகன் குடும்பம்னு சவுண்டு கொடுக்கறது?)

//உங்க பச்சோந்தி மக்கள் கட்சியோட பயங்கரமான தொந்தரவுன்னு வலைப்பதிவு மக்கள் புலம்பப்போறாங்க.// பொதுவாழ்க்கையின்னு வந்திட்டா இதெல்லாம் பார்க்க முடியுமா... தியாகம் செய்வதையே மூச்சாக இருக்கும் என்னை தூற்றுவார் தூற்றட்டும் (யார்ரா அவன் திருப்பியும் மானங்கெட்ட பொளப்புன்னு சொல்றது)

என் கட்சியை பலப்படுத்த எண்ணமுள்ளது... நிரந்தர no.2 பதவி தாரேன் சேந்துகரீங்களா (துளசியக்கா கொ.ப.செ. பதவி வேணுமா? - எதிர்கால முதலமைச்சர்)

said...

மஞ்சுளா உங்க பேரை தப்பா
தட்டச்சு செஞ்சதுக்கு மன்னிச்சுடுங்க.

ஏங்க முகமூடி,

அவரே அந்த 'ச்சீஸ்'ன்றதை உதட்டை அசைக்காம வாய்க்குள்ளெயே சொல்லிக்கிட்டு இருந்தாரு. இதுலே 'பாலாடைக்கட்டி'ன்னு வாயத்திறந்து சொல்லிட்டாலும்.....


முத்துத்தம்பி,

அப்பப்ப எனக்குத் தமிழ் 'ஆசானா' இருக்கறதுக்கு நன்றி.

இந்த அக்காவுக்குத் தமிழ் கொஞ்சம் தராறு என்பதை அந்தப் பச்சோந்தி மக்கள் கட்சி மொத்தத்துக்கும்( ஒருத்தர்தானே அங்கே எல்லாம்!)
சொல்லிறாதீங்க.

said...

'தகராறு'ன்றதைத் 'தராறு னு போட்ட இந்தத்தமிழ் துரோகியை
மன்னிக்க மாட்டீர்களா?

இதே ஒரு தகராறாயிடுமோ?

said...

//இந்த அக்காவுக்குத் தமிழ் கொஞ்சம் தராறு //
அடடே... இதான் தேவை. தமில் தெரியாம இருக்கணும்.. அதான் வேணும் பி.எம்.கே.வுக்கு(பச்சோந்தி மக்கள் கட்சியை சொன்னேன்ப்பா!). அடுத்த ஆளுங்க மாதிரி தமிழிலே பேசி வெளுத்துக் கட்ட முடியலை. வாயை தொறந்தாலே (கப்?!) அடுத்த ஆளுங்களை, முக்கியமா பத்திரிகையாளர்களை திட்டதான் முடிகிறது. அதான் தமிழ் மேல பற்று மாதிரி ஒரு டிராமா. எனவே, பி.எம்.கே.வுக்கு (மறுபடியும் பச்சோந்தி மக்கள் கட்சியை தான் சொன்னேன்) நீங்க பொருத்தமான சாய்ஸ் தான் அக்கா..!! ஆனா தொடர்ந்து உங்களை அந்த பதவியிலே வெச்சிருக்க மாட்டோம். தலையோட ஒண்ணு விட்ட பெரியப்பா பேரன் இப்போ தான் இஸ்கூலிலே படிச்சிகிட்டு இருக்காரு. அவருக்கு இப்பவே அரசியலிலே ஆர்வம் அதிகமா இருக்கு புரிஞ்சுக்கோங்க. வேணும்னா உங்களுக்காக தலையோட வீட்டிலே ஒரு ரூமுக்கு உங்க பேரை வெச்சிடறோம். ஓ.கே.வா?!

said...

எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!
கொ.ப.செ பதவியை எடுத்துக்கறதா வேணாமான்னு!
அப்புறம் 'ரூம்'க்கெல்லாம் பேர் வச்சா நல்லா இருக்குமான்றது!

said...

சரி தொலையட்டும்னு பார்த்தா, அந்த 'ரூம்' பாத் ரூமா இருந்தா?

said...

$$நம்ம ஜனங்க எதையும் அச்சுலே
பார்த்தால்தானே நம்புவாங்க. அதன்படி இப்ப நம்ப ஆரம்பிச்சிருக்காங்க!$$

முன்னெல்லாம் தினத்தந்தில படிச்சேம்பாங்க. கொஞ்சம் முன்னேறி Hindu ல ஒரு Article வந்ததுன்னாங்க. இப்ப Net ல படிச்சேன், என் அமெரிக்க நண்பர் Email போட்டுருந்தார், நேத்து ஒரு SMS வந்துச்சு etc...இதான் லேட்டஸ்ட். மக்களை நம்ப வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு!

said...

பாத் ரூமா... அல்லது கிச்சனாங்கிறது நீங்க கட்சியிலே நடந்துக்கறதை பொறுத்து. போனா போகுதுன்னு உங்களுக்கு அமைச்சர் பதவி வாங்கி தந்தா நீங்க மக்கள் சேவைன்னு சொல்லிட்டு மக்கள் கிட்டே பேரு வாங்கிட்டு போயிடலாம்ன்னு பார்த்தீங்கன்ன, அடுத்த தேர்தலிலே உங்களுக்கு சீட் கொடுக்க மாட்டோம் ஜாக்கிரதை. இதான் உண்மையான ஜனநாயகம்.

said...

Partha,

Thanks for the link.

said...

நன்றி பார்த்தா,

ரொம்ப சைலண்ட்டா இது நடந்துறதாலே 'சட்'ன்னு கவனிக்க முடியறது இல்லைன்றதுதான் பரிதாபம்!

said...

இன்று முதல் இனிய உதயம் :: பச்சோந்தி மக்கள் கட்சி

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

பின்னூட்டம் வரவில்லை என்று 2-3 தரம் க்ளிக் பண்ணிட்டன். மன்னிக்கவும்!

அம்மா (சண்டைக்குப் போகாமலே!) எலும்பெல்லாம் முறிச்சுட்டு 2 மாசமா வீட்டோடயே இருந்தா தானே...அப்ப வைத்தியரிடம் போன போது சொல்லியிருக்கிறார் இவக்கு ஒஸ்டியோபொரோஸிஸ்(எலும்புருக்கி நோய்??) என்று. கல்சிய மாத்திரைகள் எடுக்கச் சொல்லியிருந்தாராம். இவ வந்து என்னிடம் சொல்கிறா "நான் ஊருக்குப் போனா அக்க காய்ச்சித் தாற பால் ஒவ்வொரு நாளும் குடிக்கிறனான்..கல்சியம் இல்லாமலில்லை".
ஊருக்கு எத்தனை தரம் போவது என்று சொல்லவில்லையே...வருஷத்துக்கு 1 / 2 தரம்...ஒவ்வொரு கிழமைக்கு!! எங்கே போய் சொல்ல!

>>ஷ்ரேயா<<

said...

அய்யைய்யோ!

என்னக்கா இப்புடி குண்டு தூக்கி தலையில பொடுறீங்க!

ஆம்பளைங்க குள்ளமா வளர்றதுக்கு எதுனா வழி இருக்கா? (ஹும்.. என்னத்த சொல்ல..)

said...

துளசி மேடம் ,
வழக்கம் போல என்னவோ சொல்ல வந்து இப்ப ட்ராக் மாறி எங்கெயோ போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க!

நானும் கொஞ்சம் குழம்பிட்டேன்.. இந்த பதிவு "குள்ளமா வளருவது எப்படி" பற்றியா இல்லை..
நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி" என்பது பற்றியானு.. நல்லவேளை திரும்பவும் track வந்துட்டீங்க..

இது உன்மைதானு தோனுது.. என் 98 வயது பாட்டி இறந்தப்ப ரொம்ப சுருங்கி தான் இருந்தாங்க..
குள்ளமாவதானு தெரியலை..ஆனா வயசாக வயசாக இப்படி உடல் சுருங்கும் போல..

இனி பொன்னு பாக்கறப்பா..நம்மள விட ஒரு 2 இன்ச் ஒசரமா பாக்கனும் போல :)
அப்போதான் ஒரு 5 , 6 வருசம் கழித்து சரியா இருக்கும் :)
வீ எம்

said...

கோபி, வீ.எம்,

இப்ப எதுக்குப் பதட்டம்? பொதுவா பொம்பளைங்க தன்னுடைய உடம்பைச் சரியாக் கவனிச்சுக்க
மாட்டாங்க. புள்ளைங்களுக்கும், புருஷனுக்கும் எதாவது உடம்பு சரியில்லைன்னா உடனே
டாக்டரைப் பாக்க ஓடுவாங்களே தவிர தனக்குன்னா அவ்வளவுதான். நாளைக்குப் பாத்துக்கலாம்,
இன்னைக்கு வேற வேலை இருக்குன்ற எண்ணம்தான். அதே போலத்தான் நல்ல ஆகாரம் எடுக்கறதும்!

தனக்குன்னா இது போதும், 'சல் ஜாயேகா' ன்றதுதான்.

சினிமாங்களிலே பாக்குறமே, ஒரு ஆம்பிளை தனக்காக சமைச்சா, ஊருலே இருக்கற அத்தனை காய்கறியையும்
வெட்டுவாங்க. ஒண்ணு குறைஞ்சுறக்கூடாது! பதினாறு வகை சமைச்சுச் சம்பிரதாயமா சாப்பிடுவாங்க!
ஆனா இதே ஒரு பொம்பளை? சினிமான்னாலும் சரி, நிஜத்துலே ஆனாலும் சரி தனக்காகன்னு மெனக்கெட்டு
சமைக்கறது இல்லை. ஒரு மோர் சாதமோ, ரசஞ்சாதமோ போதுமுன்னு இருந்துருவாங்க.

அதே போலத்தான் பால் குடிக்கறதும். நல்லாத்தெரியும் கால்சியம் வேணுமுன்னு! ஆனாலும் ச்சும்மா காஃபியா
குடிச்சுருவாங்களெ தவிர, பால் னு குடிக்க சோம்பல்.

இதையெல்லாம் கொஞ்சம் மாத்தணும். நீங்க ஆம்பிளைகள் எல்லாம் குடும்பத்திலே இருக்கற பெண் அங்கத்தினர்கள்,
அதிலும் கொஞ்சம் 30 வயசுக்கு மேலே இருக்கறவங்களுக்கு, கட்டாயம் பால் எடுத்துக்கணும், தினம் கொஞ்ச நேரம் நடைபயிற்சி
செய்யணும் னு சொல்லிக் கட்டாயப்படுத்தணும்!

ரெகுலரா, கால்சியம் போதுமான அளவு கிடைச்சா, இப்படி ஆவறதுக்கு ச்சான்ஸ் கம்மிதான்!!!!

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி!!!!

said...

//காஃபியா குடிச்சுருவாங்களெ தவிர, பால் னு குடிக்க சோம்பல்.
எனக்கு ஒரு சந்தேகம் துளசி மேடம், ல் கா·பி னா பால் எடுத்து, அப்புறம் காபி தூள் போட்டு , சர்க்கரை போட்டு .. நல்லா கலக்கி செய்யறதுதானே (இன்ஸ்டன்ட் கா·பி) இல்லை ·பில்டர்ல காபி தூள் போட்டு , சுடு தண்ணி ஊற்றி, டிகாஷன் இறக்கி, அதை பால்ல கலந்து , சர்க்கரை போட்டு..கலக்கி (·பில்டர் கா·பி) ..
அப்படி இருக்கும் போது.... எப்படி பால்னு குடிக்க சோம்பல்னு எப்படி சொல்றீங்க????
வீ எம்?

said...

வீ.எம்,

நானும் இப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் டாக்ட்டரு அம்மாகிட்டே
பேசிக்கிட்டு இருந்தப்ப இதைப் பத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தேன். அப்ப அவுங்க சொன்னது
காஃபியாக் குடிக்கரது கணக்குலே இல்லையாம். பாலாத்தான் குடிக்கணுமாம்.

நானும் நினைச்சுக்கிட்டேன், இங்கே வெள்ளைக்காரங்க காஃபியிலே பால் ச்சும்மா ஒரு சொட்டு
( பேருக்குத்தான் இப்படிச் சொன்னேன். உடனே எத்தனை சொட்டுன்னு ஆரம்பிச்சுராதீங்க:-) !
அதாவது பேருக்கு இத்துனூண்டு சேர்த்துக்குவாங்க!

ஆக மொத்தம் காபியா குடிக்கறது கணக்குலே இல்லெ!!!!

ஆமாம், நீங்க வரிக்கொருதடவை 'ஃபில்டர் காஃபி'ன்னு எழுதியிருக்கறதைப் பார்த்தா நீங்க ஒருவேளை
'அவரோ'ன்னு இருக்கு!!!!!

( ஆரம்பிச்சுட்டாடா, அடுத்ததுக்கு!!!!!!)

said...

எவ்வளவு தெகிரியம் இருந்தா ராமநாதன் வூட்டு பொதுக்கூட்டத்துல " ஏற்கெனவே கொ.ப.செ.யா ஒரு பதவி கிடைச்சிருக்கு.( எதுலேன்னு தான் நினைவில்லே!) " அப்படீன்னு வசனம் விட்டுருப்பீங்க... இன்னா பொட்டி வாங்கிட்டீங்களா.... இப்படி கொ.ப.சே வே கட்சி பேர மறந்தா அப்புறம் கட்சி எப்பிடி உருப்படும்.... ஒழுங்கா தினமும் "நான் ப.ம.கவின் கொ.ப.ச"ன்னு நூறு முறை எழுதுங்க... அல்லாகாட்டி கட்சி வளர்ச்சி நிதி கொடுத்து செயற்குழுவுல மன்னிப்பு கேளுங்க

said...

ஐய்யோ முகமூடி,

கொ.ப.செ க்கு ஞாபகமறதி வந்துக்கிட்டு இருக்கு! கட்சியிலே சேர இது ஒரு நல்ல
சகுனமாச்சே!

பொட்டி இன்னும் யாரும் தரலைபா! வாழ்நாளுலே மொதப் பெட்டி எப்படியாவது
வாங்கிரணும்!!!!

கடைசிப் பொட்டித் தானா வந்துருமில்லெ!!!

எதுக்குபா நூறு முறை எழுதணும்? நான் ஒரு தடவை எழுதுனா நூறு தடவை எழுதுனதுக்கு
சமம் இல்லையா?

இப்படிக்கு
ப.ம.க. வின் கொ.ப.செ.
துளசி

( இன்னும் என் பதவி பறி போகலைதானே?)

said...

இப்படியெல்லாம்கூட நடக்குமா?.

said...

//ஒரு நாள் டாக்ட்டரு அம்மாகிட்டே
பேசிக்கிட்டு/////

அதென்ன சுத்தி வளைச்சி டாக்டரு அம்மானு சொல்றீங்க... நேரடியா "புரட்சி தலைவி" "முதல்வர்" னு சொல்ல மாட்டீங்களா?? :)


/////'அவரோ'ன்னு இருக்கு!!!!! ////

நேத்து எங்க வீட்ல, மட்டன் ·பிரை, சிக்கன் குருமா.. எனக்கு ரொம்ப பிடிக்கும்னு கொஞ்சம் வஞ்சரம் மீன் வறுத்தாங்க துளசி அக்கோவ்..... இருந்தாலும் எதித்தாதுல அவா செஞ்ச வத்த குழம்பும் , சுட்ட அப்பளமும், மாவடுவும் துளி தந்தா பாருங்கோ, அது ருசியே தனி ... ரொம்ப நன்னா இருந்துச்சு போங்கோ துளிசி..

புரிஞ்சதா துளசியக்கா???
வீ எம்

said...

அன்புள்ள சந்திரவதனா( மறுபடியும் சொல்றேன், எவ்வளவு அழகானபெயர்!!!)

//இப்படியெல்லாம்கூட நடக்குமா?.//

நீங்க எதைப் பத்திக் கேக்கறீங்க?

பெட்டி, கொ.ப.செ விஷயமுன்னா 'எதுவும்' நடக்கும்!!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

என்ன ஓய் வீ.எம்,

ஏங்காணும் இப்படி பொறத்தியாரைப் பழிச்சிண்டு இருக்குறீர்? ]
இவர் 'அவர்' இல்லை!

நான் நினைச்சுண்ட 'அவர்' வேற! போனாப்போட்டுமுன்னு ஒரு 'க்ளூ' கொடுக்கறேன்.
நான் நினைச்ச நபர்.'புச்சாக் கல்யாணம் கட்டியிருக்கார்'

என்றும் அன்புடன்,
துளசி.

said...

துளசி இதை முன்னயே படிச்சிருக்கேன். இவள் புதியவள் ல வந்திருக்கா. !

நானும் இப்ப கொஞ்சம் கட்டை குட்டையா ஆகிட்டு வர்றமாதிரி ஃபீலிங்க் :(