Wednesday, June 01, 2005

பயணம் பயங்கரம்!!!!!

ரொம்ப நாளா எங்கேயும் போகாம வேலை, வேலைன்னே இருக்கறமே, ச்சும்மா ஒரு வாரம், பத்துநாளுன்னு
எங்கெயாவது ஓய்வாப் போயிட்டு வரலாமுன்னு போறோம். இதுக்கு வேணுங்கற காசு, லீவு, போற இடத்தைப்
பத்தி தகவல் சேகரிக்கறதுன்னு அந்தத் தலைவலி வேற விஷயம்!!!!! அது கிடக்கட்டும்,போற இடத்துலே நாம
செய்யாத ஒரு தப்புக்காக பத்து, இருபது வருசம் ஜெயில் தண்டனைன்னா நமக்கு எப்படி இருக்கும்?


நம்ம பக்கத்து நாடான ஆஸ்தராலியாவுலே இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு! உங்களுக்கு அநேகமாத்
தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு இது.....

ஆஸ்தராலியா பிரிஸ்பேன்லே இருந்து இவுங்க ( பேரு ஷெப்பல் கோர்பி) இந்தோனேஷியாவுக்கு ஹாலிடே
போயிருக்காங்க. அவுங்களுக்கு கடல்லே சர்ஃபிங் செய்யறது பிடிக்குமாம். அதனாலே ஒரு பாடி போர்டு
( இது சர்ஃப் போர்டுமாதிரிதான், ஆனா அவ்வளவு நீளம் இருக்காது. சின்னதா இருக்கும்.) கொண்டு
போயிருக்காங்க.அவுங்க ஊர்லே இருந்து 'சிட்னி' வந்து அங்கெருந்து ப்ளேன் மாத்திப் போறாங்க!!!
அதனாலே ப்ரிஸ்பேன் லேயே பேக்கேஜ் செக் இன் செஞ்சாச்சு. இதுவரை எல்லாம் சரி!

இப்ப இந்தோனேஷியாப் போய்ச் சேர்ந்தபிறகு, அவுங்க கொண்டு வந்த 'பாடி போர்டு' இருந்த பையிலே
நாலரைக் கிலோ போதைப் பொருள் இருந்ததாக் கண்டுபிடிச்சு அவுங்களைக் கைது செஞ்சுட்டாங்க!!!

இந்தோனேஷியாவிலே மத்த எல்லாம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் இந்த போதை மருந்து
விஷயத்துலே மட்டும் சட்டம் ரொம்ப உறுதியா இருக்குன்றதும், பிடிபட்டால் தண்டனை மிகவும்
கடுமையா இருக்கும் என்றதும் உலகறிஞ்சது!!! இதை, அங்கே போன/ போக இருக்கும் சுற்றுலாப் பயணிகள்
கட்டாயம் தெரிஞ்சுவச்சிருப்பாங்க. இப்படி இருக்கும்போது ஒருத்தி/ ஒருவர் கொஞ்சநஞ்சமில்லை, நாலரைக்கிலோ
மரியுவானாவை அசால்ட்டா ஒரு பையிலே வச்சுக் கொண்டு போயிருப்பாங்களா?

கஸ்டம்ஸ் அதிகாரிங்ககிட்டே அந்தப் பொருள் அவுங்களோடது இல்லைன்னு( பிடிபட்ட எல்லாக் குற்றவாளிகளையும் போல)
சொல்லியிருக்காங்க கோர்பி. அதிகாரிங்க நம்பலை!

இது இப்படி இருக்க, இந்த விஷயம் இந்த மீடியாக்கள் தயவாலே ரொம்ப பெருசாப் போயிருச்சு! யாரோ இந்த
போதைப்பொருள் கடத்தற நெட்நொர்க்லே இருக்கறவங்க, பிரிஸ்பேன்லே இருந்து சிட்னிக்கு அனுப்பியிருக்காங்க. சிட்னியிலே
இதை வெளியே எடுத்து இருக்கவேண்டிய ஆள், தன்னோட 'ட்யூட்டி'யைச் செய்யத் தவறியதாலே இந்தப் பை, அப்படியே
சம்பந்தப்பட்டப் பொருளோடவே இந்தோனேஷியாப் போய்ச் சேர்ந்துடுச்சு! பேக்கேஜ் ஹேண்டில் செய்யற ஆளுங்கள்தான்
காரணமா இருக்கும்ன்ற ஊகத்துலே 'ஏர்ப்போர்ட்லே' ரகசியக் கேமரா வச்சுப் பார்த்திருக்காங்க. இவுங்க சந்தேகம்
உண்மை ஆயிருச்சு!!!!

இந்த சம்பவம் நடந்து 'கோர்பி' பிடிபட்டதெல்லாம் போன வருசக் கடைசியிலே. இப்ப இந்தக் கேஸ் விசாரணைக்கு
வந்து முடிஞ்சிருக்கு. அவுங்களுக்கு 20 வருச ஜெயில் தண்டனை கொடுத்திருக்காங்க!!!!

கேஸோட தீர்ப்புக்கு முதல்நாள், மீடியாக்காரங்க தீர்ப்பு சொல்லப்போற நீதிபதியைப் பேட்டி கண்டு அதை டி.வி.யிலேயும்
காமிச்சாங்க. அப்ப அந்த, 'நீதிபதி' சொன்னார், 'இவுங்க கண்ணீரைக் கண்டெல்லாம் நாங்க அனுதாபப்படமுடியாது!
பிடிபட்ட குற்றவாளிங்க இப்படித்தான் அழுவாங்க. நான் இதுவரைக்கும் 500க்கு மேற்பட்ட இந்தமாதிரிக் குற்றங்களை
விசாரிச்சிருக்கேன். இதுவரை யாருக்கும் தண்டனை தராமல் விட்டதில்லை'!!!!

போனவாரம் பத்திரிக்கை செய்தி ஒண்ணு இது சம்பந்தமா வந்தது. ஒரு ஆஸ்தராலியர், கொஞ்ச நாளைக்கு முன்னே
இப்படித்தான் இந்தோனேஷியாப் போயிருக்கார். அவரு ஏர்போர்டைவிட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குப் போய்ச்
சேர்ந்து, அவரோட பெட்டியைத் திறந்தப்ப அதுக்குள்ளே புதுசா ஒரு பொட்டலம் இருந்ததைப் பார்த்திருக்கார். அது
போதைப் பொருள்னு தெரிஞ்சிருக்கு. உடனே அங்கே இருக்கற ஆஸ்தராலியன் ஹை கமிஷனோட தொடர்பு கொண்டு
விஷயத்தைச் சொல்லி இருக்கார். அவுங்க சொன்னாங்களாம்,'யாருக்கும் சொல்லாம உடனே அதை டிஸ்போஸ்
செஞ்சிருங்க'ன்னு!!! இந்த விஷயம் இதுவரை வெளிவராம இருந்து இப்போ வெளிவந்திருக்கு.

அப்ப இதுலேயிருந்து தெரியுது, யாரோ இப்படி அடுத்தவுங்க பெட்டியிலே இதையெல்லாம் வச்சுக் கடத்தறாங்கன்னு!!!
இல்லையா?

பூட்டுப் போட்டிருக்கலாம்னு சொல்லாதீங்க. இந்தப் பூட்டெல்லாம் இந்த ஆளுங்களுக்கு 'ஜுஜுபி!!!'

இந்தோனேஷியா ஜட்ஜ் சொல்றது என்னன்னா, 'உண்மையான குற்றவாளியைப் பிடிச்சுத்தாங்க. அப்ப கோர்பியை
விட்டுடறோம்'னு!!!!

இதனாலே இந்த ரெண்டு நாடுகளுக்குள்ளெ ஒரு பகைமை உருவாகிக்கிட்டு இருக்கு!!!!

இப்ப,பயணம் போற நமக்கு என்ன பாதுகாப்பு இருக்குன்றதுதான் என்னோட கேள்வி!!! இந்தோனேஷியான்னு இல்லே, எந்த
நாடானாலும் சரி! விமான விபத்து, போற ஊருலே நடக்கற சாலை விபத்து இப்படி நடக்கற விபத்துக்களிலே
மாட்டிக்காம பத்திரமாத் திரும்பி வரணுமுன்னுதானே நாம எல்லோரும் நினைப்போம். இதுலே இந்த போதைமருந்து
கடத்தல் விவகாரம்வேற பயணிகள் அடிமடியிலே கைவச்சா எப்படித் தப்பறது?

ஏற்கெனவே, நம்ம பெட்டிங்களைத் திறந்து சாமான்களைத் திருடிக்கறாங்க, சிலசமயம் பெட்டியே காணாமப் போயிடுதுன்னு
நடந்துக்கிட்டு இருக்கு. இதுலே இது வேற!!!!

நான் இது விஷயமா யோசனை செஞ்சப்ப, பயணிகள் பாதுகாப்புப் பத்தி எனக்குத் தோணியது என்னனா,

நாம ஏர்ப்போர்ட்லே செக் இன் செய்யறப்பவே, அங்கு இதுக்காக நியமிக்கப்பட்ட ஆட்கள்கிட்டே நம்ம பெட்டியைத்
திறந்து காமிச்சு,'அதுலே சந்தேகமான பொருட்கள் ஒண்ணும் இல்லே'ன்னு அதிகாரபூர்வமான ஒரு கடுதாசு வாங்கி
நம்ம பாஸ்போர்ட்டோட வச்சுக்கறது!

(செக்யூரிட்டி செக் முடிச்சு ஒரு டேப் போட்டுவுடறாங்களேன்னு சொன்னாலும், இந்த கடத்தல் ஆளுங்கதான்
ஏர்போர்ட்லேயே வேலை செய்யறவங்களாச்சே! அவுங்களுக்கு இந்த டேப் ஈஸியா கிடைச்சுறாதா? போதைப்
பொருளை வச்சுட்டுத் திரும்ப டேப் போட்டுடலாம் இல்லையா?)

அப்படி நம்ம பெட்டியிலே ஏதாவது பிடிபட்டால், நாம செக் இன் செஞ்சப்ப அது இல்லேன்னும், அதுக்கப்புறம்
பேக்கேஜ் ஹேண்ட்லர் யாரோ வச்சிருக்காங்கன்னும் நிரூபணமாயிடும், இல்லையா?

என்ன ஒண்ணு, இப்ப இங்கெல்லாம் ஜஸ்ட் ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே போய் செக் இன் செஞ்சுக்கறமே
அது முடியாது. நேரஞ்செல்லும். அதுக்குப் பார்த்தா முடியுமா? ஒரு ரெண்டு மணி நேரத்துக்குப் பால்மாறிட்டு,
20 வருசம் ஜெயிலுக்குள்ளே இருக்கமுடியுமா?

அப்புறம், 'இதுக்கெல்லாம் தனி அதிகாரிங்களைப் போடறதாலே செலவு அதிகமாகும் அரசாங்கத்துக்கு'ன்னு கூவுவாங்க.
வேணாம்! நாங்களே ஒரு பெட்டிக்கு 5 ரூபா/டாலர்னு வேணுமுன்னா தாரோம். ஏர்போர்ட் டாக்ஸ் கட்டறோம் இல்லையா,
அதுகூடவே சேர்த்துக் கட்டிரலாம். பாதுகாப்புக்கு முன்னாலே இந்தக் காசு ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!

இந்த சாக்குலே ஜனங்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்குமே!!!!

எப்படியோ வம்பு தும்பு இல்லாம ஊர்ப் போய்ச் சேர்ந்து நல்லபடியாத் திரும்பி வரணும்!!!!

இந்தப் பயணிகள் பாதுகாப்பு விஷயமா உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க. ஒரே குழப்பமா இருக்கு!!!





5 comments:

said...

இதுக்கு இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. இப்போது ஒரு வகையான ப்லாஸ்டிக் பையை உபயோகித்து பேக்கேக் புக் செய்த உடனேயெ அதை வைத்து சீல் செய்துவிடவேண்டியது. போய் சேர்ந்த இடத்தில் அது சேதமடைந்திருந்தால் (கன்வேயர் பெல்டிலேயே தெரிந்துவிடும்) உடனே சமந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் காட்ட வேண்டியது. வேலை சுலபம்.
கூடுதல் ஆடக்கள், செலவு அது இது என்று போக வேண்டாம். (அதுவும் நம்ம NZ இதெல்லாம் ரொம்பவே கஷ்டம்)

அது சரி ஒரே விஷயத்தை இரண்டு வேறு விதமான பார்வைகளுடன் சொல்லறது இதுதானோ?

said...

இன்னும் கொஞ்சம் பேருக்கு வேலை கிடைக்கட்டுமே!!!

said...

சுரேஷ் சொல்ற மாதிரி ப்ளாஸ்டிக் பேப்பரை வச்சி பெட்டியை சுத்துறதை பார்த்திருக்கேன். அது சென்னை ஏர்போர்டுல கூட இருக்கு. தனிய 50 & 100 ரூபாயோ என்னமோ கொடுக்கனும் அதுக்கு. உண்மையில அதனோட பயன் இன்னிக்கு தான் புரியுதுக்கா.

said...

ஆமாம் விஜய்,
100 ரூபாய் கொடுக்கணும். அப்படித்தான் சில பெட்டிகளை கோபால் கொண்டுவந்தார் போனமுறை!

said...

சிட்னியிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கை போக இருக்கிறேனே! ஏம்பா சிங்கப்பூர் காரர்களே இதுக்கெல்லாம் அங்கே மரண தண்டனையாமே!
பேசாமல் கையை வீசிட்டே தனியாளா போயிட்டு வந்திடலாமோ?