Thursday, June 30, 2005

நேர்கா(கோ)ணல்!!!!!

மொதல்லே நம்ம ஷ்ரேயாகிட்டே இருந்து 'தப்பிச்சுரணும்'னு திட்டம் போட்டேன். ஏற்கெனவே வீட்டுலே இருந்த
பாய்ங்கெல்லாம் பிராண்டியே கிழிஞ்சு போச்சுல்லெ! எப்படியா? அவுங்க ஒரு 'க்விஸ்' உலக அதிசயங்களை வச்சுப்
போட்டு என்னை இந்த 'கதி'க்கு ஆளாக்கிட்டாங்கல்லெ!!!அப்புறமும் மெதுவா அவுங்க பதிவைப் படிச்சபிறகுதான், இந்த முறை அவ்வளவு 'ஆபத்து' இல்லேன்னு புரிஞ்சது!
நம்மளை ஒரு 'ஆளா' மதிச்சுக் கேட்டிருக்காங்க. இப்பப் பாத்து ரொம்ப 'பிகி' பண்ணிக்க வேணாமுன்னுதான்
ஒழுங்கா மருவாதையா ஒரு இடத்துலே உக்காந்து நல்லா 'யோசிச்சு' இந்த பதிலுங்களை எழுதுனேன்!!!!

போடற மார்க்கைக் கொஞ்சம் பாத்துப் போடுங்கோவ்......


1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?

ஜாலி ஜாலி..... ஓடிப்போய் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லே சத்தமில்லாம குந்திக்கிட்டு 'ஊரை'ப்பாக்கப்
போயிரமாட்டேனா?

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

அது அது அதேதான், இந்த invisible மேட்டர் "-)))))

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

ஏங்க 'ஞாபகம்' னா எதுலே? மனுஷனுக்கு எத்தனை விஷயம் இருக்கு!!! எதுலேன்னு சொல்லுங்க அதுக்குள்ள தொடர்பான
ஞாபகத்தை வரவழைக்கப்பாக்கறேன்!!!!!


4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால்,
எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

நாட்டிலே பஞ்சம் பட்டினியெல்லாம் இல்லாத, தேனும் பாலுமா ஓடிக்கிட்டு இருந்த காலம்னு ஒண்ணு இருந்திருந்தா
அந்தக் 'காலத்துக்கு'தான்!!!!

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

அய்யய்யோ, அது 'சம்பத்து புருகு'ன்னு எங்க பாட்டி சொல்வாங்க!!! அதை அடிச்சா வீட்டிலுள்ள செல்வம்
போயிருமாம்!!!! அது அப்படியே இருக்கட்டும்னுதானே அது இல்லாத 'நியூஸிக்கு' வந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்:-)


பி.கு: இப்படி யாரு சொன்னாலும் 'கேட்டுக்குற புத்தி'யை மொதல்லே மாத்தப் பாக்கணும்!
அது என்ன 'நேர் முகமோ'?
9 comments:

said...

//நாட்டிலே பஞ்சம் பட்டினியெல்லாம் இல்லாத, தேனும் பாலுமா ஓடிக்கிட்டு இருந்த காலம்னு ஒண்ணு இருந்திருந்தா
அந்தக் 'காலத்துக்கு'தான்//

அப்படி இருந்திருந்தா அந்தக்காலத்துல வாழ்ந்த ஈ, எறும்பு வகை உயிரினத்துக்கு நல்ல சந்தோசமாயிருந்திருக்கும். (பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது, பொற்காலம் என்றெல்லாம் ஈ-எறும்பு தினப்பத்திரிகை/வலைப்பதிவுலயெல்லாம் வந்திருக்கும்) :o)

பஞ்சாமிர்தம் , தயிர் இவற்றிற்கெல்லாம் பஞ்சமே இருந்திருக்காது..ம்ம்ம்..(ஐயய்யோ வாயைத் துடைச்சுக் கொள்ளயாராவது ஒரு tissue தாங்களேன்)

said...

நீங்க யார் யாரைக் கூப்பிடுறீங்க என்று சொல்லவில்லையே? அவங்களிட்ட நீங்க கேட்கப்போகிற கேள்விகள் என்ன?

புத்தக விளையாட்டு மாதிரி ஆக்கலாமே என்று பாத்தேன்... :o\

said...

ஷ்ரேயா, நான் யாரையும் குறிப்பாக் கூப்புடலை! ஏன்னா கேள்வி கேக்க எனக்குத்தெரியாது:-))))

அவுங்கவுங்களே கேள்வியையும் கேட்டுத் தானே பதிலையும் எழுதிரலாம்!!!!

சில பத்திரிக்கைகளில் 'வாசகர் கேள்வி-பதில்' இப்படித்தானாமே:-)

துளசி.

said...

துளசி அக்கா,

நான் எடுத்துக்கறேன் உங்க கிட்ட இருந்து..

என் பதிவுல பதில தறென் பாருங்க..

அன்புடன்

விச்சு

said...

விச்சு,

காப்பாத்துனதுக்கு நன்றி!!!!

என்றும் அன்புடன்,
அக்கா

said...

துளசி......... நல்ல பதில்கள் ஷ்ரேயா அவர்களின் கேள்விகளுக்கு கொஞ்சம் fictious அறிவு தேவை. // அது அது அதேதான், இந்த invisible மேட்டர் "-))))) // இந்த பதிலில் உங்களின் அந்த அறிவு வெளிப்பட்டுள்ளது.
நானும் அந்த கேள்விகளுக்கு விடையளிக்கலாமென்றிருந்தேன்.... ஆனால்
// புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்? // இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை..... அதாங்க எனக்கு அந்த fictious அறிவு கொஞ்சம் கம்மி.

ஆனாலும் இப்படி மீமீங்கிற பேர்ல பதிவு போடுறதும் நல்லாத்தான் இருக்கு,,,,

said...

//அவுங்கவுங்களே கேள்வியையும் கேட்டுத் தானே பதிலையும் எழுதிரலாம்!!!!

சில பத்திரிக்கைகளில் 'வாசகர் கேள்வி-பதில்' இப்படித்தானாமே:-)//

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்!

சிறுபத்திரிக்கைளில் வேண்டுமானால் இந்த நிலைமை இருக்கலாம். ஆனால், பெரிய பத்திரிக்கைகளுக்கு இது பொருந்தாது. எட்டு வருஷத்துல மாங்கு மாங்குன்னு எத்தனையோ கேள்வி கேட்டிருக்கேன். கேட்டதில் எட்டில் ஒரு பங்கு கூட பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்ட்டதில்லை. பத்திரிக்கை ஆபிசில் வேலை பார்க்கிறவங்களை கேட்டுப் பாருங்க... மலை மலையா குவிஞ்சு கிடக்கும் லெட்டர்ஸ் பத்தி நிறைய சொல்லுவாங்க.

said...

கணேஷ்,

நன்றி!!! Wஇங்களும் இப்படிக் கேள்வியும் பதிலுமாய் ஜமாய்ங்க!!!

ராம்கி,

மெய்யாலுமா? அதுபாட்டுக்குக் குவிஞ்சுக்கிட்டு இருக்கும். அதைச் சட்டையே செய்யாம இவுங்களாவும் எழுதலாம்தானே?

துளசி.

said...

//இந்த முறை அவ்வளவு 'ஆபத்து' இல்லேன்னு புரிஞ்சது!//

இப்பிடிக் கடிக்கிறீங்களே துளசி..நியாயமா?

Go.கணேஷ் அது என்ன fictious அறிவு? அப்பிடியெல்லாம் யோசிச்சு நான் கேள்வி கேட்கல்ல!

//சில பத்திரிக்கைகளில் 'வாசகர் கேள்வி-பதில்' இப்படித்தானாமே//

பதில் தெரியாட்டி தூக்கி கடாசிட்டு பதில் தெரிஞ்ச கேள்வியாப் போடலாந்தானே..அதுக்காகவோ?