Monday, June 13, 2005

சமீபத்துலே பார்த்த(!) படங்கள்.

குளுர் தொடங்கிட்டது. ரொம்ப அத்தியாவசியமான காரியத்துக்கு மட்டும் வெளியே போறது, வாரது எல்லாம்.
போதாக்குறைக்கு பொன்னம்மான்னு மழை வேற சேந்துக்கிச்சு. வீக்கெண்டு வேற.
வந்துருக்கற படத்தையெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு எத்தைப் பாக்கலாமுன்னு நோட்டம் விட்டதுலே
தேறினது இதுங்கதான்!விமரிசனம் எல்லாம் இல்லை. ச்சும்மா மேலாக ஒரு அலசல். அவ்வளவுதான்!

6'2'' ( கதாநாயகனின் உயரம் மட்டுமல்லன்னு அட்டையிலே இருக்கு! அப்புறம்?)

சத்யராஜ் நடிச்ச படம். நம்ம வலைப் பதிவுகளிலே ரெண்டு வாரத்துக்கு முன்னாலே, 'கால் செண்டர்'லே
வேலை செய்யறவங்க எப்படிப் பேர் மாத்திவச்சுக்கிட்டு, 'அமெரிக்கன் ஆக்ஸெண்ட்'லே பேசறாங்கன்னு
வந்துச்சுலெ! அதேதான்! சத்யராஜ் 'ஜேம்ஸ்' அப்புறம் வடிவேலு 'மிஸ்டர் ஒயிட்'!!!!

ஆரம்பமே நல்ல கலாட்டாதான்! அப்புறமும் விறுவிறுப்பாத்தான் போகுது! ஒரு கொலைக்கு
'ஐ விட்ன்ஸ்' ஆகறார் சத்யராஜ். கடைசியிலேதான் தங்கச்சி சென்டிமெண்ட், பழிக்குப் பழின்னு
நம்மைப் பழிதீத்துடறாங்க:-)

முக்கியமா சொல்லவேண்டியது, சத்யராஜின் உடம்பு! தப்பா நினைக்காதீங்க. இந்த 'வயசிலும்'
தொப்பை போடாமல் 'ட்ரிம்'மா இருக்கார்.

அப்புறம் சொல்லவேண்டியது கதாநாயகி . களையான முகம். நடிப்பும் பரவாயில்லை.
வட இந்திய நடிகைகளுக்குக் கொட்டிக் கொடுத்து, இங்கெ கூட்டிக்கிட்டு வந்து கூத்தாட
வைக்கறதுக்கு இவுங்க எவ்வளவோ தேவலை!!!!

அடுத்த படம் திரு திரு.

பாண்டியராஜனோடது. வழக்கமான 'அசட்டுக் காமெடி' அச்சுபிச்சுன்னு இருக்கு.
அதுசரி, இன்னுமா இந்த மாதிரி படங்கள் எடுக்கத் துணிவு வருது? ஒருவேளை
தயாரிப்பாளர் 'தமிழ்வாணனின்' ரசிகரோ?


அடுத்து ஒரு மலையாளப் படம்.

பேரு, 'சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்'

ரொம்பப் பழைய படம்தான். ஆனா இப்பத்தான் பார்க்கக் கிடைச்சது.

மோஹன்லால், கார்த்திகா, கெ.பி.ஏ.சி. லலிதா, சுகுமாரி மற்றும் பலர்...

லாலின் ஆரம்ப காலப் படம்! ஒல்லியான லால். அருமையான நடிப்பு.

வீட்டுச் சொந்தக்காரனான 'லால்' எப்படி குடித்தனக்காரரான கார்த்திகாவைக் காலி ( வீட்டைத்தான்) செய்ய
'படிச்ச உபாயம் பதினெட்டும் பிரயோகிக்கின்றார்'ன்றதுதான் கதை.

மொத்தத்தில் நல்ல படம்!!!! 'நல்ல ச்சிரி'யாணு!!!

இன்னும் 'அறிந்தும் அறியாமலும்' வந்திருக்கு, ஆனால் பார்க்கலை. தெம்பு இல்லை தற்சமயம்!
ரெண்டு நாளாகட்டும்!!!!

பொழுதன்னிக்கும் என்ன சினிமா, சினிமான்னு? மத்தவிசயத்தையும் கொஞ்சம் பாக்கலாம்!14 comments:

said...

சத்தியராஜ் மற்றும் வடிவேலுவின் நகைச்சுவை பரவாயில்லை. அனால் எதையுமே நக்கலடிக்கலாம் என்று சத்தியராஜ் புறப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் தமிழ் மீட்புப் போராட்டம் பற்றி நையாண்டி பண்ணுகிறார். நடிகனொருவனிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்? ஆனால் சத்தியராஜ் அதைத்தாண்டி சில கொள்கைகள் கொண்டவர். இப்போது அவர் அடித்த கூத்து தான் சார்ந்த கூட்டத்தையே கேவலப்படுத்துவது. இதில் இயக்குநரைச் சொல்லி அவர் தப்பிக்க முடியாது. அதில்வரும் அத்தனையும் சத்தியராஜின் லொள்ளுக்கள் தாம்.

said...

'அறிந்தும் அறியாமலும்' நல்ல பட்மென்று விமர்சனங்கள் சொல்கின்றன, பார்த்துவிட்டு சொல்லுங்க!

said...

கொளுவி,

நீரும் ஒரு படம் வுடறதில்லை போல!!!

said...

ஜீவா,

அ அ நல்ல படமா? பாத்துட்டாப் போச்சு:-)

said...

இப்பத்தான் நினைவுக்கு வருது இந்த சந்தேகம்!

ஆமா, சினிமாப் பேருக்கு 'நம்பர்கள்' வச்சாப் பரவாயில்லையாமா இல்லை அதுக்கும் 'தார் தானா?

said...

//ஆமா, சினிமாப் பேருக்கு 'நம்பர்கள்' வச்சாப் பரவாயில்லையாமா இல்லை அதுக்கும் 'தார் தானா? //

யக்கா எதுக்கு தேவையில்லாம இந்த டவுட்டெல்லாம். அரபிக் நம்பர்ன்னு தமிழ்ல நம்பர் வைக்க சொல்ல போறாங்க. ஒருவாட்டி வண்டியோட நம்பர் ப்ளேட் நம்பரை தமிழ்ல எழுதனும்னு ரவுசு விட்டது பத்தாதா?

said...

புதுசு புதுசா என்னன்னமோ பேர் எல்லாம் சொல்லி அத தமிழ் படம்னு வேற சொல்றீங்க.. "தமிழ் படத்தை தனக்கு மட்டும் தணிக்கை செய்யும் தங்க தாரகை" அப்படிங்கற பட்டம் அகில உலக துளசியக்கா பேரவை சார்பா தரலாம்னு இருக்கோம் என்ன சொல்றீங்க (அப்படியே பேரவை செலவுக்கு கொஞ்சம் நிதி ஒதுக்குங்க)

அப்புறம் நீங்க பாக்குற படம் பட்டியல் ஒன்னு கொடுத்தீங்கன்னா அடுத்த தபா கூட்டு சோறு (பாட் லக்க இப்படி சொல்லலாமா?) சாப்பிட போகும்போது சினிமா படம் கண்டுபிடிக்கும் விளையாட்டு விளையாட வசதியா இருக்கும். செய்வீங்களா?

said...

உருப்படியா பொழுது போக்கி இருகீங்க துளசி !! :) என்ஜாய் பன்னுங்க!!

///அடுத்த படம் திரு திரு..,.//

இந்த படத்தை பார்கனும்னு எப்படி உங்களுக்கு தோனிச்சு?? :)
வீ எம்

said...

அறிந்தும் அறியாமலும் ஓரளவு இரசிக்கலாம். (அதுதான் நம்ம பிரகாஷ்ராஜ் இருக்காருல்ல.)

'உள்ளம் கேட்குமே' பார்க்கலாம்.

அதவிட 'இவன் யாரோ' பாத்தீங்களா? கில்லி மாதிரி விறுவிறுப்புப்படம். (படத்தில நாயகனே சொல்லுறார் கில்லி மாதிரியின்னு) ஆனா கில்லிக்குக் கிடைச்ச வரவேற்பு இதுக்குக் கிடைக்கலயே. இதுக்குத்தான் சொல்லுறது முகராசி வேணுமுன்னு.

said...

விஜய்,

//ஒருவாட்டி வண்டியோட நம்பர் ப்ளேட் நம்பரை தமிழ்ல எழுதனும்னு ரவுசு
விட்டது பத்தாதா?//

இது எப்ப? என்ன நடந்துச்சு?

முகமூடி,

சினிமா பட்டியல் ஒண்ணு போட்டுட்டாப் போச்சு!

வி.எம்,

/////அடுத்த படம் திரு திரு..,.//

இந்த படத்தை பார்கனும்னு எப்படி உங்களுக்கு தோனிச்சு?? :)
வீ எம்//

எனக்கெங்கே தோனுச்சு? நம்ம லைப்ரரிக்கு வந்த படங்களிலே ஒண்ணுதான் இது!


வசந்தன்,
அ.அ. இப்பத்தான் பார்த்து முடிச்சேன். பிரகாஷ் ராஜ் நல்லா செஞ்சிருக்காரு!!!

இவன் யாரோ கூடப் பார்த்தாச்சு. ஆனா 'கதையை' மறந்துட்டேனே!

கணக்கு வழக்கில்லாமப் பாத்தா இந்த 'கதி'தான்:-))))

said...

http://penathal.blogspot.com/2005/06/blog-post_13.html

ennai mannikka maatteengala?

said...

சுரேஷூ,

பதிலை உங்க பதிவுலே போட்டிருக்கேன்!

said...

துளசியக்கா 'அமுதே' எப்படிக்காகீது? இந்த தபா அமுதே வும் 'அறிந்தும் அறியாமலும்' பாக்கபோறேன்...

said...

அமுதே இன்னும் வரலையேப்பா?

வந்தாவுட்டுச் சொல்றேன்!

அறிந்தும் அறியாமலும் நல்லாக்கீது!!!!!