Tuesday, June 21, 2005

ச்சின்ன நாள் !!!!

அதென்ன ச்சின்ன நாள்? அப்பப் பெரிய நாள்னு ஒண்ணு இருக்கா? இருக்கே!!!!

அது ஒண்ணுமில்லைங்க. 'ச்சின்னப் பகல்'னு எழுத நினைச்சேன். அதை யாராவது
அவசரத்துலே 'ச்சின்னப் பயல்'னு படிச்சிட்டாங்கன்னா 'சண்டை'வந்துருமுல்லெ?

இன்னைக்கு என்னா தேதின்னு பாருங்க! ஜூன் மாசம் 21. உலகத்தோட தெற்குப்
பகுதிக்கு இன்னைக்குப் பகல் வெளிச்சம் ரொம்பவே குறைவான நாள்!!!


Shortest Day !!!! அப்படின்னு சொல்றாங்க. பூமி உருண்டை தன்னைத்தானே சுத்திக்கிட்டு
அப்படியே சூரியனையும் சுத்துதுன்னு சொல்றாங்கல்லே! அதுலே மேல்பக்கம் சூரியனை நோக்கிச்
சாஞ்சிருந்தா அங்கே வெய்யில் காலம் னு இருக்கறப்ப, கீழ்ப்பாகம் சூரியனில் இருந்து தள்ளிப்
போயிருதுல்லே, அது குளுர் காலமுன்னு ஆகிப் போச்சு!

ஐய்யோ, உங்களையெல்லாம் என்னான்னு நினைச்சுக்கிட்டு இப்படிப் பச்சப் புள்ளைங்களுக்குச்
சொல்றமாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன்? சரி, 'பெரியவ சொன்னா பெருமாள்சொன்ன மாதிரி'ன்னு
நினைச்சுக்குங்க.

குளுர் காலத்துலே சூரியனைப் பாக்கறதே அரிதாயிருது. அதுலே, ஐய்யா காலையிலே ரொம்ப லேட்டாத்தான்
வருவாரு. சாயந்திரமும் சீக்கிரம் போயிருவாரு! பல சமயத்துலே வானத்துலே 'நிலா' மாதிரி ச்சும்மா கிடப்பாரு!
அதே சமயம், நிஜமான நிலாவும் கொஞ்சம் தள்ளி நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கும்! எது யாருன்னு
நாங்க குழம்பறதும் உண்டு!!!!

சாயந்திரம் 5 மணிக்கு முன்னாலெயே இருட்ட ஆரம்பிச்சுடறதாலே இங்கெ நாங்கெல்லாம் குளிர் காலம்
வந்தவுடனேயே சமூக விரோதிங்களாட்டம் ( ஆமாம், anti social தமிழ்லே என்ன?) யாரும் யாரையும்
கண்டுக்காம, யார் வீட்டுக்கும் போகாம வேலை முடிஞ்சு வந்தவுடனே கூட்டுக்குள்ளே முடங்கிடுவோம்!!!

அப்புறம் வசந்தகாலம் வந்து( என்னாத்தை வசந்த காலம்? அதுவும் நமக்குக் குளுர் காலத்துலெ சேர்த்திதான்!!!)
கோடை ஆரம்பிச்சாவுட்டுத்தான் 'என்ன நல்லா இருக்கீங்களா?'ன்னு கேட்டுக்கிட்டு போக்குவரவு எல்லாம்
ஆரம்பிக்கும்.

இங்கே கோடையிலே வெய்யில், வெய்யில்ன்னா வெளிச்சம் ராத்திரி ஒம்போது, பத்துவரையும் இருக்கும்.
அதுதான் கொஞ்சம் கொஞ்சமாச் சுருங்கிக்கிட்டே வந்து, ஒருநாள் ஒரேடியாச் சுருங்கி, மறுநாளிலிருந்து
மறுபடிக் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிக்கும். இந்த சுழற்சியிலே இன்னைக்கு பகல் பொழுது
மிகவும் குறைஞ்ச நாள்!

இந்த நாளை நாங்க எப்பவும் கொண்டாடிடுவோம். ஏன்னா, நாளையிலே இருந்து இருட்ட நேரமாகுமில்லெ!!!!

எந்த மாதிரிக் கொண்டாட்டமா? அட, ஒரு பாயாசம் செஞ்சா அது கொண்டாட்டத்துலே சேர்த்தி இல்லையா?

உலகத்தோட தலைமேலே இருக்கற வடக்கத்தி ஆளுங்களுக்கு இதே நாள் நீண்ட பகல் நாளா இருக்கும்.

நீங்க வேற நாங்க வேறெல்லெ!!!!! எதிரும் புதிருமால்லெ இருக்க வச்சிருச்சு காலம்!!!!

எங்களுக்கு நீண்ட பகல் வர்றது டிசம்பர் 21க்கு. வோ தின் படா தின் ஹை!!!!!


கொண்டாட்டமுன்னு சொன்னதும் இன்னொண்ணும் நினைவுக்கு வருது. வர்ற சனிக்கிழமை ஜூன் 25
எங்களுக்கு 'மிட் வின்டர் கிறிஸ்மஸ் டே'!!!!

அது என்னன்னா, கிறிஸ்மஸ் பண்டிகையின்னாவே பனியில் முழுகிய வீடுகள், குளிர்காலக் கொண்டாட்டமுன்னு
ஒரு எண்ணம் உருவாயிடுச்சுல்லே. அப்படித்தானே வாழ்த்து அட்டைகளில் இருக்கற படங்கள் சொல்லுது!
ஆனா எங்களுக்கு டிசம்பர் மாசம் கோடையாச்சே!


குளிரும், பனியும் இல்லாத ஒரு கிறிஸ்மஸை , கிறிஸ்மஸ்ஸாவே நினைச்சுக்க முடியாதாம்.

அதனாலே?

என்ன அதனாலே? அப்படி விட்டுருவுமா? இல்லே, விட்டுறத்தான் முடியுமா?


அதுக்காக எங்க குளிருலே அதே 25 தேதியை வச்சுக்கிட்டு, சரியா கிறிஸ்மஸ் முடிஞ்ச ஆறாவது மாசம்
இந்த 'மிட் வின்டர் கிறிஸ்மஸ் டே' யை சம்பிரதாயமா 'மிஸ்ஸில் டோ, கிறிஸ்மஸ் புட்டிங், டர்க்கி'ன்னு
வச்சுக் கொண்டாடிருவம்லெ!!!

என்ன, கிறிஸ்மஸ் மரம் மட்டும் இல்லை(-:

அனைவருக்கும் 'ச்சின்ன தின நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!

19 comments:

said...

வேலைக்குப் போகும் போது கொஞ்ச வெளிச்சம், அது பரவாயில்ல..திரும்பி வீட்ட வரும் போது தான் இருட்டு.

ஆனாலும் இங்கைத்தேய 40+ கோடை வெப்பநிலையை விட குளிர் (-1 -> +4)எவ்வளவோ மேல்! (ஐரோப்பிய, கனேடிய,அமெரிக்க வாசிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டேனே...ஐயகோ!!)

நியுஸீக்கு அரிதாகத்தானாமே 30+ கோடையில்..உண்மையா?
கோடை காலத்தில இங்கே நான் 40+ இல் வெந்து கொண்டிருக்கும் போது "ஆஹா..சூப்பர் வெதர், 25 - 27 தான் வெப்பநிலை" என்கிற கணக்கில் எதாவது எழுதினீங்க.....கடுமையான கண்டனம் அவுஸ்திரேலியவாழ் வலைப்பதிவர்களால் தெரிவிக்கப்படும்! சொல்லிட்டேன்!

Anonymous said...

அக்கா.,

குட்டி நாள குதூகலமா கொண்ண்டாடிப்புடுங்க!

said...

ஷ்ரேயா,

இங்கே கோடையில் எப்பவாவதுதான் 30 வரும். அன்னைக்கு நம்மை வழியிலே பாக்கற கிவி ஆக்களெல்லாம், 'இண்டியன் சம்மர்' எஞ்சாய் செய்கிறாயா என்று மகிழ்வோடு (!) கேட்பார்கள்!!!!!

//"ஆஹா..சூப்பர் வெதர், 25 - 27 தான் வெப்பநிலை" என்கிற கணக்கில் எதாவது எழுதினீங்க.....//்

நான் இதை எழுதாம விட்டுட்டேன். அதான் நீங்களே எழுதிட்டீங்களே!!!!

said...

மூர்த்தி & மரம்,

நன்றி!!!! சாயந்திரம் 4.58க்கு சூரிய அஸ்தமனம் ஆயிருச்சு!!!

said...

துளசி அக்கா, இப்ப வடக்கே ஆர்டிக் பகுதியிலே பயணம் .. இங்கே எப்பவுமே பகல்தான் .. சூரியன் மருந்துக்கு கூட மறைய மாட்டீங்கராரு !!! இந்த வெளிச்சத்துலே தூக்கமே இல்லை போங்க..

- பரணீ

said...

துளசி அக்கா, உங்க பழைய மின்னஞ்சல் முகவரியை (tulsi.gopal@paradise.net.nz) ப்லாக்கர் ப்ரொஃபைலில் இருந்து மாற்றி விடுங்களேன்.

- பரணீ

said...

பரணித் தம்பி,

ஆர்டிக் பக்கமே இருந்தா எப்படி?
அண்டார்டிக் எப்ப வரப்போறீங்க?

எனக்கும் கப்பல்காரங்களைப் பத்தி எழுதறதுக்கு ஒரு விஷயம் இருக்கு. அதுக்கு ஒரு பதிவு போடணும்!கரைக்கு எப்ப வருவீங்க?



ப்ளொக்கர்லே எப்பவோ இமெயில் அட்ரசை மாத்தியாச்சே. இப்பப் போய் செக் செஞ்சாலும் சரியாத்தானே இருக்கு.

tulsigopal@xtra.co.nz என்னொடது.

said...

யக்கா! பூபூ... இவ்வளவு தானா? நான் சூரியனை பார்த்தே 2 நாள் ஆகிப்போச்சு. ஹி ஹி... வேலை ஜாஸ்தி. காலையில சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி ஆபீஸ் வந்து இரவு அவரு தூங்குன பிறகு தான் வீட்டுக்கே போறேன். எனக்கு சின்னபகல் இல்லை. பகலே இல்லை. :-)))

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

துளசியக்கா
உங்களுக்கும் ச்சின்ன தின வாழ்த்துக்கள்...

இந்த மாதிரி டமால் டுமீல்-னு facts-லாம் எடுத்து விடறீங்க.

இப்போதான் பாத்தேன்..
எங்களுக்கு மாஸ்கோவில 21/06 Length of Visible Light - 19h 37m ! நாங்களாவது பரவால்ல. பிட்டர்ஸ்பர்க்-லே..22h 10m :)

மிச்சவங்களுக்கு எப்படின்னு எழுதினா நல்லாருக்கும்...

பிகு:Length of Visible Light -க்கு பதில் Length of Day-னு தப்பா பதிச்சதால் மறுபதிவு

said...

அன்புள்ள இராமநாதன்,

இன்னும் மேலே(!) போகப்போக முழுக்கவே பகல்தானே! நம்ம பரணி புலம்பியிருக்காரு பாருங்க,
'தூங்கவே முடியறதில்லே'ன்னு!!!

said...

அன்புள்ள விஜய்,

வேலைன்னா அப்படித்தான் முன்னே பின்னே(!) இருக்கும். அதுக்காக ஜன்னல் வழியாக்கூட
சூரியனைப் பாக்கலேன்னா எப்படி?

said...

மாலை 5 மணிக்கெல்லாம் இருண்டு விட 6 மணிக்கு வகுப்புக்களுக்கு போகும் போது போகவே பிடிக்காது.

நாளை முதல் எனக்கு 12 மணி நேர பகல். 12 மணிநேர இரவு.(ஒரே ஒரு மாதத்திற்கு மட்டும்)

said...

ஆமாம் சயந்தன்.

இருட்டானபிறகு வெளிக்கிடணுமுன்னா ஒரே வெறுப்புதான்!!!

said...

2000ல (Oct2000 - Jan2001) நோர்வே போயிருந்தேன். தூரத்தில சூரியன் உதிச்சு (காலை 8- 9 ) மறையிற வரைக்கு(பின்மதியம் 3 - 3.30)வரை பயணிக்கிற பாதை குட்டியொரு அரை வட்டமாகத் தெரியும்.

எனக்கு கொஞ்சம் மனம் சரியில்லாமல் (depression மாதிரி)கூட இருந்துது. Winter Blues என்பாங்க. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பவர்களின் நிலமை பாவம்..எப்பிடி சமாளிப்பாங்களோ தெரியவில்லை. :o(

said...

ஷ்ரேயா,

அதுக்குத்தானே இந்த நாடுகளில் கண்ணாடிக்கதவு,ஜன்னல்னு ஏராளமான கண்ணாடி பாவிக்கிறாங்க!

வெளிச்சம் எப்படியாவது வீட்டுக்குள்ளெ வரணும்!

said...

துளசியக்கா,
இங்க ஜெர்மனியில் "பெரிய பகல்" . இரவு பத்து மணிவரை சூரியன் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் :-).

said...

முத்துத்தம்பி,

இருங்க இருங்க!!! 'எங்களுக்கும் காலம் வரும்'!!!