ஹைய்யா, நம்ம 'டுபுக்கு' சினிமாவுலே வந்துட்டாரே!!!!!
நேத்திக்கு ஒரு படம் பார்த்தேன். படத்தோட பேரு 'ஜித்தன்'!!!
எல்லாராலும் வெறுக்கப்படற, கேலிக்குள்ளாகற 19 வயசுப் பையன்
எதிர்பாராமக் கிடைச்ச ஒரு ' அபூர்வசக்தி'யாலே யார் கண்ணுக்கும் புலப்படாத
மாயாவியா ஆயிடறதும், அதை வச்சு எப்படி 'அவன்' விரும்பற பொண்ணோட
அன்பை அடையறான்னும் கதை போகுது!
இதுலே டுபுக்கு என்னவா வராரு?
ஐய்யோ ஐய்யோ! அவரு, அவரா வரலே. அவரோட 'பேரு' வருது!!!!
ஒரு காட்சியிலே 'டாக்டரை'ப் பார்க்க அந்தப் பொண்ணும், அவளோட காதலனும்
( காதலன்னா இந்த மாயாவி இல்லை! வேற ஆள்) போகும்படியாகுது.
அப்ப இந்த மாயாவி 'டுபுக்கு டுபுக்கு'ன்னு அசரீரியாச் சொல்லிக்கிட்டு இருக்காரு!
அப்பெல்லாம் எனக்கு நம்ம 'சக வலைப் பதிவாளர் டுபுக்கு' வோட ஞாபகம்தான்
வந்துக்கிட்டே இருந்தது:-)))))
படம் பரவாயில்லை. ஒருக்கா பார்க்கலாம். எல்லாப் பாட்டுகளும் பழைய பாட்டோட
ரீமிக்ஸ்தான்.
அதுலே நளினி கொடுமைக்கார, கோபக்கார அம்மாவா வராங்க. அதைப் பார்த்துட்டு
எங்க இவர் சொல்றார், 'இந்த ரோல் எல்லாம் நீ நல்லா பண்ணுவேல்லெ'
ஆஆஆஆ........சண்டைக்கு அச்சாரம் போட்டாச்சு:-)
Saturday, June 11, 2005
சினிமாலெ நம்ம டுபுக்கு!!!!
Posted by துளசி கோபால் at 6/11/2005 11:39:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
நானும் அந்தப்படம் பார்த்;தேன்.
எல்லோரும் தங்களது பாத்திரத்தைச் சரியாகச் செய்திருந்தார்கள்.
அதுக்குள்ள எஸ்.வி. சேகரின்ர நாடகப்பாணி நகைச்சுவைகள் கலந்திருந்தாலும் ரசிக்கலாம்.
ஒரே மாதிரி வந்துகொண்டிருந்த படங்களுக்குள்ள கொஞ்சம் மாறுதல் அவ்வளவுதான்.
அதுசரி, அவனுக்கு ஏன் அந்தச் சக்தி இல்லாமல் போகிறது என்று சொல்லப்படவில்லையே.
சொல்லப்பட்டும் எனக்குத்தான் புரியவில்லையோ?
வசந்தன்,
அந்த சக்தி எங்கே இல்லாமப் போகுது? அவன் ஏகதேசம் நின்னுருக்கர இடத்தைப் பார்த்துச் சுட்டவுடனே அவன் செத்துப் போயிடறானே!
உருவம் மட்டும் கண்ணுக்குத் தெரியாதே ஒழிய, மத்ததெல்லாம் மனுஷன் பொலத்தான். ஆனா அந்த சக்தி உடம்புலே உயிர் இருக்கற வரைதான்!!!!
இல்லையே துளசியக்கா!
அந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பிக்கப்போய்த்தானே எல்லோரும் திகைத்து நிற்க, கலாபவன் மணி சுடுகிறார்.(நாயகி துப்பட்டா போடவில்லை. வெறுமனே நிற்கும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பிக்கிறான்)
சில வேளை உன் அசை நிறைவேறிவிட்டால் அந்த சக்தி போய்விடும் என்ற நிபந்தனையேதும் அந்த வரத்தில் உண்டோ தெரியவில்லை.
இருக்குமோ என்னவோ? நாந்தான் சரியாப் பாக்கலையா?
அடக்கடவுளே!!!!
அந்த சக்தி இல்லாமல் போவதில்லை, மழைப்பெய்யும் போது மழை நீர் நாயகனின் மேல் படும்போது அவரின் உருவம் நீர் வடிவாக தெரிகின்றது.
சரத்குமாருடன் ஒரு முறை நாயகன் பேசும் போது அவரின் மேல் ஒரு இறகு இருக்கும், அதை வைத்து சரத்குமார் நாயகன் வந்திருப்பதை சொல்லுவார்,
படம் ஒருமுறை பார்க்கலாம் ரகமாக இருந்தலும் "Memorisable of invisible man" என்கிற ஆங்கிலப்படத்தின் நினைவு வருகின்றது, ஒரு 12 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப்படத்தை மிக நேர்த்தியாக எடுத்திருந்தனர்
குழலி,
//சரத்குமாருடன் ஒரு முறை நாயகன் பேசும் போது அவரின் மேல் ஒரு இறகு இருக்கும், அதை வைத்து சரத்குமார் நாயகன் வந்திருப்பதை சொல்லுவார்//
இதைக் கோட்டை விட்டுட்டேனே(((-:
ஒரு 40/45 வருசத்துக்கு முந்தி 'மாயமனிதன்'னு ஒரு படம் வந்துச்சு. ஸ்ரீராம் தான் நாயகன்!
போங்கய்யா டுபுக்கு.. இந்தப்படத்துக்கெல்லாம் ஒரு விவாதம்
குமுதத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கண்ணுக்குத்தெரியாதவன் காதலிக்கிறான் என்ற ஒரு மொழிபெயர்ப்பு தொடர் கதை வெளியாகியிருந்தது, அந்த கதையிலிருந்து பல காட்சிகள் இந்தப்படத்திலும் உள்ளன, ஒரு வேளை இயக்குனரும் அந்த கதையை படித்திருப்பாரோ
அட இதுக்கெல்லாம் ஒரு விவாதமா?
சந்திரமுகிக்கு செய்யுங்கம்மா வி(தண்டா)வாதம்.
மாயவரத்தான், குழலி, கொழுவி,
நன்றி!!!!
'விவாதம்' ஆரம்பிக்கற அடையாளம் இருந்தும்கூட தீ அணைஞ்சு போச்சு போல!
துளசியம்மா!
மும்பை முகி பாத்தேன்.
உங்களாலகூட சந்திரமுகி ஜால்ராவ கைவிட முடியல.
இதுக்குள்ள விவாதம் எங்கயிருந்து வரும்?
அய்யோ கொழுவி!
மும்பைக்கு முகி பரவாயில்லேன்ற உண்மைச் சொன்னது உங்களுக்கு 'ஜால்ரா'வாப் போச்சே!!!!!
ஆஆஆஆ........சண்டைக்கு அச்சாரம் போட்டாச்சு:-)
பிறகு அந்த மீதி இரண்டு சண்டைகள் பற்றியும் எழுத வேண்டுகின்றேன். :-))
இந்தப் பதிவ இவ்வளவு நாளா எப்பிடி பார்க்காம போனேன்....ரொம்ப நன்றி துளசியக்கா...
(ஆனாலும் இவ்வளவு சீக்கிரமா வந்து நன்றி சொல்லிட்டேன் பார்த்தீங்களா?)
சரி விடுங்க டுபுக்கு.
அததுக்கு நேரங்காலம் வரணுமுல்லெ?
Post a Comment