Tuesday, June 28, 2005

உதயபானு!!!!

சினிமாவுலே ஜெயிச்சுக் காட்டணும்'ன்ற வெறியோட கோடம்பாக்கத்துலே அலைஞ்சுக்கிட்டு இருக்கற
எத்தனையோ ஆட்களில் ஒருவன்! உதவி இயக்குனர்ன்ற பேருலே அங்கெ இங்கென்னு சில படங்களிலே
வேலை செஞ்சிருந்தாலும், தன்னுடைய திறமையை முழுசா இந்த சினிமா உலகத்துக்குக் காட்டிரணும்,
எப்படியாவது ஒரு இயக்குனரா ஆகிரணும், அதுக்கு தான் எழுதுன கதையையே மூலதனமாக்கணும்
இப்படி எண்ணற்ற கனவோடு முழுமூச்சா திரைக்கதை எழுதிக்கிட்டு இருக்கான்!


ஒரு நண்பனுக்கு உதவப்போய் இவன் வாழ்க்கையே நாசமாகிடுது! தங்க இடமில்லாம அலையற
ராசப்பா என்ற ஒரு உதவி நடிகனைத் தன்கூட தங்க வைக்கிறான். அவனோ, இவனுடைய
கதையைத் திருடிக்கிட்டுப் போய் ஒரு தயாரிப்பாளர்கிட்டே கொடுத்துத் தானே எழுதுனதாச் சொல்றான்.
கூடவே ஒரு கண்டிஷனும் போடறான், அந்தக் கதையை சினிமா எடுத்தால் தானே ( ராசப்பா)தான்
கதாநாயகனாக நடிப்பான்Û!!!.முதலில் அந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் மறுத்தாலும், 'நல்ல கதை'யை
விட மனசில்லாம இவனையே நாயகனாப் போட்டுடறாங்க. முன்னணி நடிகை மதுமதிதான் நாயகி!!

இந்த விஷயமெல்லாம் தெரியாம ஒரு நல்ல தயாரிப்பாளரைப் பார்த்துத் தன் திரைக்கதையைச் சொல்றான்
உதயன். அவருக்கும் இது ரொம்பப் பிடிச்சுப் போய் இதைப் படமா எடுக்க ஏற்பாடு செய்றார். அப்பத்தான் தெரியுது
ராசப்பா செஞ்ச சதி!!! இதுக்குள்ளெ ராசப்பாவும் தன்பேரை சரோஜ் குமார்னு வச்சுக்கிட்டுஅந்தப் படத்துலே
நடிச்சுச் சூப்பர் ஸ்டாரா ஆயிடறான்.

கவனம் சிதறக்கூடாதுன்றதுக்காக 'கல்யாணம், காதல்' எல்லாத்தையும் கனவுலேகூட நினைக்காதவன்
திடீர்னு 250 ரூபா செலவழிச்சுக் கல்யாணம் கட்டவேண்டியதாப் போச்சு! அதுவும் யாரை? நடிகை மதுமதியை!!!

நடிகையின், அப்பாவும் அண்ணனும் பணம் பண்ணறதுலேயே குறியா இருக்கறாங்க. இதனாலே மன உளைச்சலுக்கு ஆளாகுற
நடிகைக்கு ஒரு நல்ல நண்பனா இருக்குற உதயபானு ஆறுதல் சொல்லி அமைதிப் படுத்தறான். இப்ப இந்தக் கதைத்
திருட்டால கனவெல்லாம் நொறுங்கிப்போன உதயபானுவைப் பார்த்துப் போகவந்த மதுமதியைத் தொடந்துவந்த
அப்பாவும் அண்ணனும் இவுங்க நட்பைக் கொச்சைப் படுத்தி, அவளை அங்கே இருந்து இழுத்துக்கிட்டுப்
போறாங்க. அசிங்கமாப் போயிருது!!! அதனாலே மதுமதியும் வீட்டைவிட்டுக் கிளம்பி உதயபானு வீட்டுக்கே வந்துடறதாலே
வேற வழியில்லாம நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கறான்.

குடும்பத்தைக் காப்பாத்தறதுக்காக ஒரு ரெஸ்டாரன்ட்டுலே வேலையும் செய்யவேண்டியாதாப்போச்சு! பணக்கஷ்டத்தைப்
பார்த்துட்டு நடிகை மறுபடி சினிமாவுலே நடிக்கப்போறென்னு சொன்னவுடனே குடும்பத்துலே சண்டை வந்துடுது!
மனைவியை அடிச்சுட்டு, கணவன் குடிக்கப்போயாச்சு! மறுநாள் குடிமயக்கம் தெளிஞ்சு பார்த்தா, மனைவி வீட்டை
விட்டுப் போனது தெரியுது! மறுபடி ஒரு கதை எழுதறான்.

இந்தக் கதை முந்தின கதையைப் போல பிரமாதமானது இல்லேன்னாலும் நல்ல கதைதான். அதை தயாரிக்க
உதவி செய்யறதாச் சொன்ன தயாரிப்பாளர், கதாநாயகனா அப்ப சூப்பர்ஸ்டாரா இருக்கற ராசப்பனை( சரோஜ் குமார்)
போட்டாத்தான் லாபம் பார்க்க முடியுமுன்னு சொல்லிடறார். உதயனுக்கு இஷ்டமில்லைன்னாலும் வேற வழியில்லாம
சம்மதிக்கிறான்.இந்தப் படத்துக்கு உதயந்தான் டைரக்ஷன்னு தெரிஞ்சதும் ராசப்பன் பலவிதமா'டார்ச்சர்' கொடுக்கறான்.
இப்படிப் போகுது கதை....

உதயன் டைரக்டரா ஜெயித்தானா? அவனுடைய மனைவிக்கு என்ன ஆச்சு? திரும்ப மனைவியோடு சேர்ந்தானா?
ராசப்பனுடைய நிலை என்ன ? இதற்கெல்லாம் விடை வெள்ளித்திரையில் காண்க! ( அல்லது வி.சி.டி.யிலும்
காணலாம்!!!)

ஒரு தயாரிப்பாளரோட அவஸ்தை, கதாநாயகனுங்க பாதிப் படம் முடிஞ்சபிறகு கொடுக்கற டார்ச்சர்ங்க, இயக்குனர்
படற கஷ்டம், அதுவும் முதல் முதல்லே ஒரு படத்தை இயக்குற ஆரம்பநிலை இயக்குனரோட எதிர்பார்ப்பு
இப்படி, பலவிஷயத்தைச் சொல்லுது இந்தப் படம்!!!! கூடவே 'கிசுகிசு' எழுதறவங்களையும் சாடுது!!!!

திரைக்குப் பின்னாலே இருக்கற இவ்வளவு கஷ்ட நஷ்டத்தையும் கணக்குலே எடுத்துக்காம, படம் வெளிவந்தவுடனே
அதைப் பார்த்துட்டு ஒரே வார்த்தையிலே, 'படுமோசம் சுமார், பார்க்கலாம்'னு கமெண்ட் அடிச்சுடறதையெல்லாம் இனிமே
நாம நிறுத்தணுமோன்னு என்னை யோசிக்க வைக்குது இந்தப் படம்!

படத்தோட பேர் 'உதயனாணு தாரம்' மலையாளப் படம்!!!!( உதயன்தான் நட்சத்திரம்)

உதயனா வர்றது மோஹன்லால், ராசப்பன் நம்ம சீனிவாசன், மதுமதி வந்து மீனா, தயாரிப்பாளரா முகேஷ் இப்படி
எல்லோருமே நல்லாப் பண்ணியிருக்காங்க.

ஆனா, பலகாட்சிகள்லே இப்ப சினிமாவுலே இருக்கறவங்களைப் பத்தின நினைவு வர்றதை தவிர்க்கமுடியலை!!!!14 comments:

said...

எதேது? மலையாளப்பட வாசம் அடிக்குன்னது?

உங்கட தமிழ்ப்பட விமர்சனச் சேவையெல்லம் நிறுத்திடுவீங்களோ என்று பயமாயிருக்கு! :o)

said...

அய்யய்ய, இதுக்கெல்லாமா பயப்படுறது?

நமக்கு வேற பாஷையும் தெரியும்னு அப்பப்ப எடுத்து வுடறதுதான்:-)))

என்றும் அன்புடன்,
துளசி.

said...

அப்பாடா...ஸ்பைஸ் கடையில போய் நானே படத்தைத் தேர்ந்தெடுக்க வந்திருமோ என்று பயந்து போனேன்!காப்பாத்திட்டீங்க! :o)

கடையில இருக்கும் படங்களில் அரைவாசிக்கு இருப்பதோ செந்தமிழ்ப் பேர்..படமோ குப்பையிலும் குப்பை (உதாரணம் : பவளக்கொடி! பவளக்'கடி' என்று இருந்திருக்க வேண்டியது)

said...

//பவளக்கொடி! பவளக்'கடி' என்று இருந்திருக்க வேண்டியது//

இதை எடுத்தது ரெண்டு சாஃப்ட்வேர் ஆளுங்க. அமெரிக்காபோய்வந்தவுங்க!!!!

said...

நல்ல விமர்சனம் துளசியக்கா !
நிஜங்கள் சுடும் என்பது போல நம் மக்கள் யதார்த உன்மைகளை திரையில் பார்த்தால் படுமோசன், சுமார் என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்.. செய்ய முடியாத சர்கஸ் வேலைகளை படத்தில் கான்பித்தால்..சூப்பர் என்பார்கள்.
மலையாள மக்கள் ஒரளவு உன்மைகளை ஏற்றுக்கொள்வார்கள்.. இந்த படம் அங்கே வெற்றியடையும் என நம்புவோம்..
வீ எம்

said...

ச்சை! "உதயபானு"ன்னு தலைப்பை பாத்தவுடனே இங்க தெலுகு தொலைக்காட்சியில தெறமையக் காட்டிகிட்டு இருக்கும் அம்மணியப் பத்தியோன்னு நெனச்சேன். :-)


//(உதாரணம் : பவளக்கொடி! பவளக்'கடி' என்று இருந்திருக்க வேண்டியது)//

எங்க ஊரு கடையில இந்தப் பிரச்சனையே இல்லீங்க.. முக்கால்வாசி படம் தலைப்பை கடைக்காரங்களே அப்படித்தான் கொலை பண்ணி எழுதி வச்சிருப்பாங்க :-)

said...

எண்ட ஊரு கேரளா
எண்ட எண்ணைய் கொப்பரை
எண்ட சி.எம்மு இ.கே நாயனாரு
எண்ட டான்ஸூ கதக்களி

வசன உதவி: விவேக் ஜோக்.

said...

வீ.எம்,

இந்தப் படம் கேரளாவிலே 'ஹிட்'தான்!!!

கோபி,
//ச்சை! "உதயபானு"ன்னு தலைப்பை பாத்தவுடனே இங்க தெலுகு தொலைக்காட்சியில
தெறமையக் காட்டிகிட்டு இருக்கும் அம்மணியப் பத்தியோன்னு நெனச்சேன். :-)//

அது என்ன உங்க ஊரு சமாச்சாரம்? கொஞ்சம் எடுத்து விடுங்க!

விஜய்,

உக்ரன்! நல்லோணம் மலையாளம் பரயான் படிச்சு! அல்லே!

என்றும் அன்புடன்,
துளசி.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//உக்ரன்! நல்லோணம் மலையாளம் பரயான் படிச்சு! அல்லே!//

அய்யோடா! சேச்சி கள்ளம் பரயான்.

said...

துளசியக்கா,

உதயபானுங்கறது இங்க தெலுங்கு தொலைக்காட்சிகள்ல(மா டிவி, ஜெமினி டிவி) பிரபலமான ஒரு பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெயர். நம்மூரு டிவி அம்மணிங்க மாதிரி இல்லாம நல்ல தெலுங்குல பேசும். அம்மணியும் நகைச்சுவை நடிகர் வேணு மாதவனும் தொகுத்து வழங்கும் "ஒன்ஸ் மோர் ப்ளீஸ்" (தனிப்பாடல்/குழுப்பாடல்/பலகுரல் போட்டி)ஜெமினி டிவியில் ஞாயிறு மாலை 4:00 முதல் 4:30 வரை ஒளிபரப்பாகிறது (மறு ஒளிபரப்பு வியாழன் இரவு 11:30 முதல் 00:00 வரை)

said...

ஞானபீடம்.said:

எண்ட குருவாயூரப்பா...
எனிக்கி வையாயே.......ய்
அடிபொலியாயி.
"துளசியானு தாரம்"

//ஒரு நண்பனுக்கு உதவப்போய் இவன் வாழ்க்கையே நாசமாகிடுது!//
எந்து செய்யானா...
கஷ்டகாலம் வரானுள்ளது வழியில் தங்கில்லா !
- ஞானபீடம்.

said...

ன்புள்ள விஜய் & ஞானபீடம்,

'நம்மட ப்ளொக் ரைட்டர்ஸ்' கொள்ளாம்லோ! வேகம் மலையாளம் சம்சாரிக்கான்
படிச்சு!!!! ஈ சேச்சிக்கு நிங்களோடே வளரே இஷ்டம் தோணிப்போயி!!!!!

மக்களே!!! நன்னாயிவரூ!!!!!

said...

அன்புள்ள கோபி,

நான் இதுவரை ஒரு டி.வி. நிகழ்ச்சியும் தமிழ்நாட்டிலே ( சன், சூர்யா, விஜய், ஜெமினி
இத்தியாதிகள்) பார்த்ததே இல்லை!!!

'ஜன்னல்'னு ஒண்ணு மட்டும் இங்கே ரெகார்ட்பண்ண டேப் கிடைச்சது! அதுகூட முடிவு
இல்லாம இருந்தது!

ஊருக்குப் போனாலும் நன் டி.வி. முன்னாலே உக்கார்றது இல்லே!! கிடைக்கற கொஞ்சநஞ்ச
சமயத்துலேயும் மகள் அனிமல் ஆன்டீக்ஸ், டிஸ்கவரி சேனல் னு பாக்க ஆரம்பிச்சுடுவா.

நான் தமிழ்நாட்டை விட்டே 31 வருசம் ஆச்சு! தமிழ் சினிமா மட்டுமே தவறாமப் பாக்கறேன்.
இங்கேயும் டி.வி. யிலே நியூஸ், வெதர், னு சிலது மட்டும்தான் பார்ப்பேன்.

அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு நாள் டி.வி. பாக்கணும்!!!!

என்றும் அன்புடன்,
துளசிஅக்கா