Friday, June 03, 2005

மும்பைமுகி!!!!

எல்லாரும் பார்த்து, மறந்துகூட இருப்பீங்கதான். ஆனா, நான் நேத்துதானே மும்பை எக்ஸ்பிரஸ் பாக்க முடிஞ்சது!
என்னாத்தைச் சொல்ல? பொதுவா 'கமல்'படமுன்னா விருப்பம் கூடுதல்தான்.ஆனா.... இதுலே கடி( குதிரையும்
கடிச்சுடுச்சேபா) கொஞ்சம் கூடிப் போச்சு!!!


ரசிச்ச ஒரே இடம்,'குரங்கு க்ரேன்லே ஏறிக்கிட்டு அதை ஏத்தி இறக்குறது'தான்! பள்ளிக்கூடப் பசங்களும்
குரங்கும், கம்பிலே தொங்கற கமலும் ஜோர்!!!!

கடைசியிலே ஒரு பத்து நிமிஷம் தூங்கிட்டேன் போல! திடீர்னு பார்த்தா சர்க்கஸ் கொட்டாய் வெளிச்சமா வருது!

நானு ரஜனி ரசிகை இல்லேதான், ஆனாலும் ரயிலுக்கு 'மு(கி)ழி' தேவலைன்னு இருக்கு! அதைப் பாத்தப்பவும்
இது மோஹன்லால் ரோலு, இது ஷோபனான்னு கொஞ்சம் புலம்பத்தான் செஞ்சேன்னாலும் இதுக்கு அது மேல்!!!!

சச்சின் வந்திருக்காஹ! கட்டாயம் பாக்கணுமான்னு ஒரே யோசனை! இதுமட்டுமில்லாம 6'2", ஜாலிமேன், செவ்வேல்
கிடைச்சது! இந்தவாரம் எங்களுக்கு 'லாங் வீகெண்ட்' !!! மஹாராணி சாஹிபாவோட பொறந்தநாளுன்னு!!!!

முகி அம்பதுநாளா வெற்றிகரமா ஓடுதுன்னு சொல்றதுல்லே தப்பேயில்லை!

எக்ஸ்பிரெஸ்தான் இப்படி டீரெயிலாகிக் கிடக்கே!!!! பி, சி, டி, இ, எஃப், ஜி ஏரியாவுலே எல்லாம் நோ ச்சான்ஸ்(-:

8 comments:

said...

கமல் ரசிகராக இருந்தும் , முகி யை பாராட்டியது நல்ல உதாரனம்... அனைவரும் இப்படி இருந்த்தால் எவ்ளோ நல்லா இருக்கும்...

வீ .எம்

said...

பாண்டியராஜனின் ஜொலி மேன் ஒரு ரி.வி. நாடகம் என்று நினைக்கிறேன். எதற்கும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

said...

யக்கோவ்! செவ்வேல், 6.2, ஜாலி மேன் இதெல்லாம் நீங்க பார்த்துச் சொல்லாட்டி அவியளப் பத்தி நாங்க எப்படித் தெரிஞ்சுக்கிறதாம்? க்கும்?!

said...

துளசி
கவலைப்படாதீர்கள். நான் இந்த படங்களை பார்க்க இன்னும் 2 வருடமாவது ஆகும். உங்களின் விமரிசனம் உபயோகப்படும்.

said...

அடடே ... என்னாங்க இது..முகியயியும் ரயிலையும் அடுத்தடுத்த நாள் பார்த்துட்டு.. எந்த படத்திற்கு அதிகம் சிரித்தேன் என்று யோசிக்கும்போது ரயிலுதாங்க முன்னாடி வந்திச்சி...

நான் நல்ல படத்துக்கு ரசிகன் :-)
கமல் கோட்டை விட்டது பி, சி, டி, இ, எஃப், ஜி ஏரியாவுலே எல்லாம் :(

said...

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

said...

யக்கா...நானும் இதே படங்கள பத்தி நேத்திக்குத் தான் எழுதினேன்..இத தான் "Greate people think alike "ன்னு வெள்ளக்காரன் சொன்னானா?

said...

இது முகியையோ, ரயிலையோ பற்றி அல்ல. உங்கள் தளத்தைப் பற்றி. இப்போது தான் கவனித்தேன்.

யானைகள்னா உங்களுக்கு அவ்வளவு பிரியமா? தளத்தின் மேலேயும் கீழேயும் ஒரே யானைக் கூட்டமா இருக்கே? நல்லாத்தான் இருக்கு.

உங்க சைட்டையும் என்னோட லிங்க்ஸ்ல சேர்த்துக்கப் போறேன்.

கலக்குங்க!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்