வரவர எதுக்குத்தான் பயப்படறதுன்னே விவஸ்தை இல்லாமப் போச்சுப் பார்த்தீங்களா?
ஒரு அழகான குழந்தையோ, ச்சின்னப் பசங்களோ கண்ணுலே பட்டா அவுங்களைப் பார்த்து இயல்பாவே நமக்கும்ஒரு சந்தோஷம் வந்துருது. உடனே அவுங்ககிட்டே கொஞ்சம் பேசலாமுன்னும் தோணுது. இனிமே அது ஒண்ணும்நடக்காது.
எங்கே பார்த்தாலும் ஒரு சந்தேகப்பேய் வந்து உக்கார்ந்துக்கிட்டுச் சத்தம் போட்டுச் சிரிக்குது. சில வக்கிர மனசுடையமனிதர்(?)களாலே, பலர் இயல்பான சந்தோஷத்தையும் செயல்படுத்த முடியாமப் போறது ரொம்ப விசனம்தான்.
குடும்பச் சண்டை, கணவன் மனைவி ஒற்றுமை இல்லாம ஒருத்தரை ஒருத்தர் சில பல விஷயங்களில் ஏமாத்தறது,இதன்காரணமாக் குடும்பக்கோர்ட்டுக்குப் போறதுன்னு உறவுகளிலே விரிசல் வர ஆரம்பிச்சதே மனசுக்குக் கஷ்டமாப் போச்சுன்னா,இப்ப சக மனுஷனை நம்ம முடியாமப்போறது இன்னும் அதிர்ச்சி தர்றதுதானே?
இப்பெல்லாம் ச்சின்னப்பசங்க அதாவது 16 வயசுக்குக்கீழே இருக்கறவங்க தனியா விமானப்பயணம் போறது சகஜமாப் போச்சுல்லே. இப்படி ஒரு பையன் தனியா போறப்ப, அந்தப் பையனுக்குப் பக்கத்து சீட்டுலே ஒருத்தருக்கு இடம்போட்டுருந்தாங்களாம். விமானம் கிளம்பறதுக்கு முன்னாலே அவரை வேற இருக்கைக்கு மாத்துனாங்களாம்.
காரணம் ? .....தனியாப்போற பசங்களுக்குப் பக்கத்துலே ஆம்பளை உக்காரக்கூடாதாம்! ஏனாம்? கேட்டதுக்குக் கிடைச்ச பதில்,அந்தப் பையனோட பாதுகாப்பை முன்னிட்டாம்!! ஆளுங்க உக்கார்ந்தாப் பயணம் முடியற நேரத்துக்குள்ளே அந்தப் புள்ளையை 'அப்யூஸ்'செஞ்சுருவாங்களாம். இது கொஞ்சம் அக்கிரமமா இல்லே? அந்த ஆளுக்கு எப்படி இருந்திருக்கும்? இதெல்லாம்நடந்தது இங்கேதான். க்வான்டாஸ் & ஏர் நியூஸிலாண்ட் ஃப்ளைட்டுங்களிலேதான்!
அவமானப்பட்டுப்போன அந்த மனுஷர் இப்ப மனித உரிமைக் கழகத்துலே முறையீடு செஞ்சிருக்கார். இந்த விமானக்கம்பெனிஉத்தியோகஸ்தரைக் கேட்டதுக்கு, அவுங்க சொன்னாங்களாம், 'இது இப்பெல்லாம் பிள்ளைங்களைத் தனியா அனுப்பற பெற்றோர்களின் கோரிக்கை'ன்னு.
இது இப்படி இருக்கும்போது, இங்கே எங்க ஊர்லே ஒரு பள்ளிக்கூட மாணவன், கூடப்படிக்கிற பொண்களைத் தேவையில்லாம 'கண்ட' இடத்தில் தொட்டும், அவுங்களைக் கீழே தள்ளியும், ஹிம்சை செய்யறான். இதனாலேஅந்தப் பெண்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்துலே முறையீடு செஞ்சிருக்காங்கன்னு டிவி செய்தி. இந்த 'செக்ஸ் அஃபெண்டர்' பள்ளிக்கூடத்துலே இருக்கக்கூடாதுன்னு அவுங்க சொல்றாங்க. பையனோட அம்மா 'அப்படியெல்லாம் இல்லை'ன்னு சொல்லாம மெளனமா இருக்காங்க. இந்த 'செக்ஸ் அஃபெண்டரோ'ட வயசு என்ன தெரியுமா? ஆறு! ஆறே வயசு!
இதையெல்லாம் பார்க்கறப்பப் பக்கத்து வீட்டுப் பசங்க நம்ம வீட்டுக்கு வந்தாலும், நாம பயந்துக்கிட்டு அதுங்களை நம்ம விருந்தோம்பல்படி வீட்டுக்குள்ளே கூப்புடாம நாங்க வெளியே வந்து தெருவுலே நின்னுக்கிட்டுப் பேசும்படியா இருக்கு!
இப்படி ச்சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தொலைச்சுட்டு நிக்குறோமே(-:
என்ன நடக்குது இங்கே?
பி.கு: இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கமனசுக்குள்ளெ என்ன தோணுச்சு?
பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கா? சொல்லுங்களேன்.
Wednesday, December 21, 2005
பயம்
Posted by துளசி கோபால் at 12/21/2005 08:48:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
தாமரை இலைமேலே மார்கழிப்பனிபோலே
பட்டும் படாமலும் இருந்துட்டுப் போகணும் போல இருக்கேங்கறீங்களா?
துளசிக்கா,
நல்ல பதிவு. குழந்தைகளை வளர்ப்பது பொருளாதார ரீதியான சவால் மட்டுமில்லை; உளவியல் ரீதியானதும்தான். அவர்கள் விதை மட்டுமே. வளர்த்து ஆளாகி நிற்பது எல்லாமே நாம் வளர்க்கும் முறையைப் பொருத்தே அமைகிறது என்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
Attitude எனப்படும் தனக்கே உரித்தான குணநலன்கள் கூட வளர்க்கப்படும் சூழ்நிலையைப் பொருத்து மாறுகிறது / தீர்மானிக்கப் படுகிறது.
படத்தைப் பார்த்தால் இந்தக் காலத்துல "தாமரை இலைத்தண்ணீர் அளவுக்குக் கூட மென்மையா இருக்க முடியாது. பனிக்கட்டி மாதிரி மனசை இறுக வச்சிட்டுத்தான் - கல் மனசோடதான் - பழக வேண்டியிருக்கு"ன்னு சொல்ல வர்றீங்களா? :))
பிஞ்சு மனசு தெளிந்த நீர் மாதிரி!அது எப்பிடி வேணுமினாலும் மாறும்.இருக்கும் சூழலை பொருத்து.(சும்மா சொல்லி வச்சேன் டீச்சர். தப்பா இருந்தா இம்ப்போசீசன் கொடுத்துராதியே! நானும் சின்ன பயதேன் !)
//இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கமனசுக்குள்ளெ என்ன தோணுச்சு?
பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கா? சொல்லுங்களேன்.//
we are becoming cold hearted?
என்னமோ போங்க
பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.
குமரன்,
கோதையைப் பத்தி எழுதிக்கிட்டு வர்றதாலெ இது மார்கழிப்பனி, தாமரை இலைன்னு
கவிதையாச் சொல்லி இருக்கீங்க.
சுந்தர்,
பனிக்கட்டி, கல்மனசு, தாமரை இலைத் தண்ணீர் - கவிதையேதான்.
சிங். செயகுமார்,
தெளிந்த நீர்
ஷ்ரேயா,
இப்படி 'கோல்ட் ஹார்ட்'டா இருக்கலாமா? நீங்க gold heartஆ இருக்கக்கூடாதா?
என் மனசுலே வந்தது என்னன்னா, புள்ளைங்க 'பட்டை தீட்டாத வைரம்'
ஹூம்.... அக்காவை இன்னும் புரிஞ்சுக்கலை:-)))))
என்னார்
வருகைக்கு நன்றி
டி ராஜ்,
இந்த இழப்போட அருமை நாள் போகப்போகத்தான் புரியும், இல்லே?
சதீஷ்,
இதுதான் great men/women think alike ஆ ?:-))))
டீச்சர். ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க.
குழந்தைகளின் குழந்தைத் தன்மையை நாம கொஞ்சம் கொஞ்சமா பிடுங்கிக்கிட்டு வர்ரோம். good touch bad touch சொல்லிக் குடுக்க வேண்டிதான் இருக்கு. நாம என்ன செய்ய முடியும். குழந்தையைக் காப்பாத்த குழந்தைத்தனத்தப் பலி கொடுக்க வேண்டியிருக்கு.
இது தொடர்பா....மனைவி கணவனுக்குக் கட்டிய சேலைன்னு ஒரு பதிவு முந்தி போட்டேன். சின்ன வயதில் ஏற்பட்ட விளைவு பின்னாளில் கிளர்ந்தது தொடர்ப்பான பதிவு.
அப்புறம் படத்துக்கு வருவோம். படம் தலைகீழா இருக்குன்னு நெனைக்கிறேன். அதுல ஐஸ்கட்டி தொங்கிக்கிட்டு இருக்கு. இப்ப விழுமோ. அப்ப விழுமோன்னு இருக்கு.
ஆமாம் துளசி,
நிறைய சந்தர்ப்பங்களில் இப்படி ஆகும். ட்ரெயினில் போகும்போது, எதிர் சீட் குழந்தையைப் பார்க்க வைச்சி சாப்பிடவும் முடியாது, கொடுக்கவும் முடியாது.
அழகா இருக்கேன்னு தூக்கிக் கொஞ்சவும் முடியாது;
விமானத்தில் ஒருவிதமான பாதுகாப்பு தேவைப்படுது. செக்க்ஷுவல் பாதுகாப்பு. நம்மூரில் திருட்டு பயம்.
உலகம் எங்க போயிட்டிருக்குன்னே தெரியலைங்க துளசி.
சென்னையில சமீபத்துல ஒரு ஏழு வயசு பொண்ண மொட்டை மாடிக்கு ஏமாத்தி கூட்டிக்கிட்டு போயி சில்மிஷம் பண்ண முயன்ற ஒரு அறுபது வயசு முதியவரை (அதே குடியிருப்பில் இருப்பவர் என்பது அதைவிட வேதனை!) கைது செய்த விஷயத்தை பத்திரிகையில் படித்ததை உங்கள் பதிவைப் படிக்கும்போது நினைத்துக்கொண்டேன்.
ஒரு டெலிகேட்டான விஷயத்தை ரொம்ப அருமையா பதிஞ்சிருக்கீங்க துளசி. வாழ்த்துக்கள்.
தாணு,
நன்றி. என்ன செய்யறது? ம்ம்ம்ம்
டி பி ஆர் ஜோ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
நல்ல பதிவு. உலகம் போகிற போக்கில் குழந்தைகள் இழக்கும் சந்தோஷங்களுடன், நாம் இழக்கும் சந்தோஷங்களையும் சொல்லி இருக்கிறீங்க.
துளசிக்கா,
நல்ல பதிவு. இப்படி நடக்குதான்னு கொஞ்சம் ஆச்சரியமாயிருக்கு !!!
நட்சத்திரக் கலக்கு கலக்குவீங்கன்னு எதிர்பார்க்கிறேன் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment