Tuesday, December 20, 2005

உண்மை விளம்பி

ஏங்க, நட்சத்திரம் உக்கார நாற்காலிக்கு மேலே ஒரு கத்தி தொங்குதா? இல்லே அந்த நாற்காலி இருக்கற இடத்துக்கு மேலே நீதிமன்றத்துலே இருக்கறமாதிரி 'சத்யமேவ ஜெயதே'ன்னு இருக்கா? அடடா, தெரிஞ்சவரைக்கும் தமிழிலே சொல்லணுமுல்லெ? அதாங்க 'வாய்மையே வெல்லும்'னு எழுதித் தொங்கவிட்டிருப்பாங்களே. பக்கத்துலேயே நீதி தேவதைகண்ணைக் கட்டிக்கிட்டு தராசு புடிச்சுக்கிட்டு நிக்குமே, அது.


இல்லேன்னா அது 'பள்ளி'யிலே கும்பசாரிக்கிற இடமா? மறுபடி குழப்பறேனா? இது மலையாளங்க. சர்ச்சுலேபாவமன்னிப்புக் கேக்கறதுக்கு ஒரு 'கன்ஃபெஷன் பாக்ஸ்' இருக்குமுல்லே, அதுவான்னு கேக்கறேன். இதைப்பத்திக் கடைசியிலே( இதே பதிவோட கடைசியிலேதாங்க) சொல்றேன்.


ஏன்னா, இப்ப சில மாசங்களா வர்ற நட்சத்திரங்கள் எல்லாம் , உண்மையை விளம்பிட்டுப் போறதனாலே இந்தசந்தேகம் வந்திருக்கு.


அவுங்கவுங்க பிட் அடிச்சது, சிகெரெட் புகைச்சது, கோவமாப் பேசுனது, வெவ்வேற பேருலே எழுதுனதுன்னு ரகம் ரகமாச் சொல்லிட்டாங்களேய்யா. நான் என்னத்தைச் சொல்றது?


ஐய்யோ இப்ப நான் என்ன செய்யணும்? எனக்கும் ஏதாவது உண்மையைச் சொல்லியே ஆகணும்போல இருக்கே.தேவுடா! இப்படி ஒரு நிலமை வருமுன்னு முந்தியே கோடி காமிச்சிருக்கக்கூடாதா? குறைஞ்சபட்சம் ஒரு பூனை..ச்சேச்சே.. புனைப்பெயராவது வச்சிக்கிட்டு இருந்திருக்கலாமே.
புனைப்பெயர் வச்சுக்கிட்டு இருந்த/இருக்குறவங்களைக் கவனிச்சீங்கன்னா, முக்காவாசிப்பேருக்கும் மேலே , பெண்கள் பேரைத்தான்வச்சிருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்?


அவுங்க எழுத்து ஒருவேளை மக்கள் மத்தியிலே எடுபடாமப்போனா, 'அந்தப் பொம்பளை எழுத்து ஒண்ணும் சரியில்லேப்பா'ன்னுபேசறது, இவுங்க காதுவரை எட்டுச்சுன்னா, இது அந்த 'யாரோ' பெண்ணுக்குக் கிடைச்ச அர்ச்சனை. நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஜாலியாப் போயிரலாமுன்னா? கொஞ்சம் விரசமா எழுதறவுங்க, 'அட!ஒரு பொம்பளை இப்படி எழுதறாளேய்யா'ன்னுமக்களைத் திகைக்கவச்சு அதுலே ஒரு சந்தோஷம் அடைஞ்சுடறாங்களோ?


இதுவரை ஆண்கள் பேருலே எழுதற பொண்கள் யாராவது இருக்காங்களா? எனக்கு ஒண்ணும் ஞாபகம் வரலையே!உங்களுக்கு யாராவது நினைவுக்கு வராங்களா?


பேசாம, என் வயசு 18தான். உங்ககிட்டேயெல்லாம் 50+ன்னு பொய் சொல்லிட்டேன்னு ஒரு ரீல் விட்டுப் பாக்கலாமா?அடடா, இப்படிப் புலம்ப வச்சுட்டாங்களேய்யா, புலம்ப வச்சுட்டாங்களே!


புலம்பல் தொடரும்.....

11 comments:

said...

அட.. நீங்க மதுட தங்கச்சின்னு சொல்லவேயில்லையே!! ;O)

அது சரி..நீங்க என்ன உண்மையை விளம்பியிருக்கிறீங்க?

said...

கமல் சாரோட எல்லாம் போட்டோ எடுத்துப் போட்டுட்டு இப்ப எனக்கு 18 வயசு 51 இல்லைன்னு எல்லாம் கதையடிக்காதீங்க அக்கா... :-) தமிழ்மண தம்பி தங்கச்சிங்களுக்கு எல்லாம் நீங்க தான் என்றைக்கு அக்கா...

புலம்பலைத் தொடருங்கள். நாங்களும் வந்து மொய்ப்புலம்பிட்டுப் போறோம் :-)

said...

ஷ்ரேயா,

//அது சரி..நீங்க என்ன உண்மையை விளம்பியிருக்கிறீங்க?//

அதான் குழப்பம். பொய் சொல்லி ச்சீச்சீ , உண்மையைச் சொல்லாம விட்டிருந்தாலாச்சும்
'இதோ இப்ப இது தான் உண்மை'ன்னு விளம்பியிருக்கலாம். அதுக்கும் வழி இல்லாம
வச்சுட்டேனேன்னுதான் இந்தத் தலைப்பு(-:

குமரன்,
//தமிழ்மண தம்பி தங்கச்சிங்களுக்கு எல்லாம் நீங்க தான் என்றைக்கு அக்கா... //

சந்தோஷமா இருக்குப்பா. நல்லா இருங்க.

தமிழ்மணம் திரட்ட மறுக்குது போல. காலையிலே 11.14க்குப் போட்ட போஸ்டிங் இன்னும் வரலை(-:

said...

தி க்ரேட் எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறீங்களா? சிங்கப்பூர் செம்மலையும் வலைப்பக்கம் காணோம். அதனால நீங்கதான் ஒட்டுமொத்த அத்தாரிட்டி..

என்றென்றும் தம்பியாகவே இருக்கும்..

said...

குழப்பத்தத் தீக்குற டீச்சருக்கே குழப்பம் வந்தா எந்தக் குழப்பத்தத் தீக்குற டீச்சருகிட்ட போய் குழப்பத்த தீக்குறது. வேண்டாம் டீச்சர். வேண்டாம். நீங்க...நீங்களாகவே இருங்க.

said...

ஹிஹி...

ஆளப்பார்த்தாதேன் ஒரு பய எட்டிப்பார்க்கமாட்டாய்ங்க.. நல்ல பேரு வைச்சாவாவது படிக்க வருவாங்கன்னுதேன்!!!

இளவஞ்சி ஆம்பள பேருங்க...

said...

விளம்பறதுக்கு எக்கச்சக்கம் விஷயங்கள் இருக்கே! உங்களுக்கும் கோபால் சாருக்கும் கல்யாணம் ஆன கதையிலிருந்து ஆரம்பியுங்களேன். உங்க நடையில் அதைக் கேட்டா சுவாரசியமாக இருக்கும்! ஏற்கனவே சொல்லீட்டீங்களா? லேட் ஆசாமிகளுக்காக மறுபடியும் கதைக்கவும்!!

said...

//அவுங்க எழுத்து ஒருவேளை மக்கள் மத்தியிலே எடுபடாமப்போனா, 'அந்தப் பொம்பளை எழுத்து ஒண்ணும் சரியில்லேப்பா'ன்னுபேசறது, இவுங்க காதுவரை எட்டுச்சுன்னா, இது அந்த 'யாரோ' பெண்ணுக்குக் கிடைச்ச அர்ச்சனை. நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஜாலியாப் போயிரலாமுன்னா? கொஞ்சம் விரசமா எழுதறவுங்க, 'அட!ஒரு பொம்பளை இப்படி எழுதறாளேய்யா'ன்னுமக்களைத் திகைக்கவச்சு அதுலே ஒரு சந்தோஷம் அடைஞ்சுடறாங்களோ?//

இதை பெண் பெயரில் எழுதிகிறவங்கிற முறையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். (பின்ன அரசியலை நானும் எப்பத்தான் கத்துக்கிறது. இந்த ரஜினி ராம்கியை வேற காணோம் அரசியல் படிக்கிறதுக்கு. :-))

பின்னாடி எங்க வாத்தியார் பெயரை இழுத்ததற்காகவும் வருந்துகிறேன்.(வாய்ஸ் உட்டுட்டோமுல்ல)

//பேசாம, என் வயசு 18தான். உங்ககிட்டேயெல்லாம் 50+ன்னு பொய் சொல்லிட்டேன்னு ஒரு ரீல் விட்டுப் பாக்கலாமா?//

நான் நம்பிட்டேன். :-)))))))

said...

இளவஞ்சி,

வருகைக்கு நன்றி.

ஆமா, இது நிஜமாவே ஆம்பளப் பேரா?

இள வஞ்சி= 'இளம் பெண்' இல்லையோ?

மோகன்தாஸ்,

நீங்க பலே ஆளுங்க.

எதுக்கு இப்போ ரஜினி ராம்ஜியையும் அவரோட தலையையும்
வம்புக்கு இழுத்துட்டு நைஸா ஒரு டிஸ்க்ளெய்மரும் வுட்டிருக்கீங்க?

said...

இதுவரை ஆண்கள் பேருலே எழுதற பொண்கள் யாராவது இருக்காங்களா?//

இருக்காங்களே! நான் ரொம்ப நாளா மதி கந்தசாமியை ஆம்பளைன்னுதான் நினைச்சிக்கிட்டிருந்தேன்!மதியழகன்னு.

அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க முழுபேறு சந்திரமதின்னு.. ஹி! ஹி!!

said...

டி பி ஆர் ஜோ,

சிலப்ப இப்படித்தாங்க 'மதி'இல்லாம யோசிக்கிறோம்:-)