சென்ற பதிவின் தொடர்ச்சி.....
நாங்க இருந்த ஒரு ச்சின்ன ஊர்லே கிட்டத்தட்ட 99 சதமானம் கிறிஸ்துவர்கள்தான். கத்தோலிக்கர்ங்க. எல்லோரும் தவறாமப்பள்ளி( சர்ச்)க்கு போவாங்க. ச்சின்ன ஊர்ன்ற படியாலே பாதிரியார்கள் உட்பட எல்லோருக்கும், எல்லோரையும் தெரியும்.வீட்டுலெ சண்டையோ,மனக்கஷ்டமோ எதா இருந்தாலும் பள்ளிக்குப் போய் பாவமன்னிப்புக் கேட்டுருவாங்க. நாங்க இருந்த வாடகைவீட்டுஉரிமையாளர் அன்னம்மா சேச்சி ரொம்ப நட்பா பழகுவாங்க. அது டூப்ளெக்ஸ் வீடு. எல்லாமே ஒண்ணுபோல இருக்கும் சைடு பை சைடா.
ரரத்திரி சாப்பாட்டு நேரத்துக்குத்தான் அவுங்க குடும்பம் முழுசும் ஒண்ணாச் சேர்ந்து சாப்புடுவாங்க. எட்டுமணி வாக்குலே எல்லோரும்சாப்பாட்டு மேசைக்கு வந்துருவாங்க, அன்னம்மா சேச்சியோட வீட்டுக்காரர், மூணு புள்ளைங்க. எட்டு, அஞ்சு, மூணுவயசுலே.
முதல்லே ஜெபம் . மெலிசா இருக்கற சுவர். துல்லியமா எல்லாம் கேக்கும், ரேடியோ நாடகம் போல.அப்புறம் ஜாலியாப் பேசிப்பேசி, பேசிப்பேசி பசங்க எல்லாம் பாதிச் சாப்பாட்டுலேயே மேசைமேலே சாய்ஞ்சுஅப்படியே தூங்கிருவாங்க. திடீர்னு பேச்சுச் சத்தம் நின்னு போச்சுன்னு வச்சுக்குங்க அன்னம்மா சேச்சியும் அவுட்.
ஆமா, இது எனெக்கெப்படித் தெரியும்? ஒரு நாள் வாடகைப் பணம் கொடுக்கறதுக்காக போனேன். அங்கெ பார்த்தாஎல்லோரும் எச்சில் கையைத் தள்ளி நீட்டிக்கிட்டு சாய்ஞ்சு கெடக்குறாங்க, சேட்டன் உட்பட! என்னவோ ஆயிருச்சுபோல,சாப்பாட்டுலே எதாவது மயக்கமருந்து இருந்துச்சோ? என்ன செய்யலாமுன்னு புரியாமத் திரும்புனப்ப அவுங்க வீட்டுலேஅடுக்களை ஜோலிக்கு 'நிக்கற' பொண்ணு, புஷ்பா என் காலடிச் சத்தம்கேட்டு அடுக்களையிலே இருந்து வந்துச்சு.
'இது எப்போழும் பதிவா. குட்டிகளானு ஆத்யம் தொடங்கும், பின்னே சேட்டனும் சேச்சியும்'னு சொல்லுது. எங்க பேச்சுச்சப்தம் சேச்சியை எழுப்பிடுச்சுபோல. திடுக்குன்னு முழிச்சுக்கிட்டு,'எண்டே ஈசோவே, இதெந்தா இவிடே, வந்நு குறே நேரமாயோ?'ன்னு கேட்டுட்டு ஒரே 'பொட்டிச்சிரி'.
நம்ம அன்னம்மா சேச்சி களங்கம் இல்லாத மனசு. மாமியார், நாத்தனார்கூட எதாவது வாக்குவாதம் வந்தா, தன்னோடஅபிப்ராயத்தை 'பட்'ன்னு சொல்லிருவாங்க. அப்புறம் 'ஏண்டா இப்படிச் சொன்னோமு'ன்னு மனசு போட்டுப் பிராண்டுமாம்.உடனே ஓடு பள்ளிக்கு. எதுக்கு? பாவமன்னிப்புக் கேக்கத்தான்!
அங்கே பள்ளியிலே எப்போதும் சில 'அச்சன்மார்' கூடுதலா இருப்பாங்க. புதுசா பயிற்சி முடிஞ்சு வர்ற 'ச்சிறுப்பக்காரஅச்சன்மார்'. பாவமன்னிப்புக்கு வந்திருக்கறதா அறிவிக்க அங்கே ஒரு ச்சின்ன மணி இருக்காம். அதை ஆட்டுனா,'கன்பெஷன் பாக்ஸ்'க்குள்ளெ அச்சன் வந்து உக்கார்ந்துக்குவார். நம்ம சேச்சிக்கோ எதையும் விஸ்தாரமாச் சொல்லித்தான்பழக்கம். எப்போ,என்ன பேசிக்கிட்டு இருந்தாங்க, சண்டை எப்படி ஆரம்பிச்சது, அவுங்க என்ன சொன்னாங்க, இவுங்க என்ன சொன்னாங்கன்னு..... போகும் பாவமன்னிப்பு கேக்கறது.
ஒருநாள் சேச்சி இப்படிச் சொல்லிக்கிட்டு இருக்கறப்ப ,'நம்மட ச்சிறுப்பக்கார அச்சன்' எல்லாத்தையும் 'ஊம்' கொட்டிக்கேட்டுக்கிட்டே இந்த கதை கேக்கற சுவாரசியத்துலே மூழ்கிட்டார் போலெ. ஒரு இடத்துலே சேச்சி சொல்றதை நிறுத்திட்டுஅப்புறம் என்ன நடந்துச்சுன்னு மனசுலே யோசிக்கறப்ப அச்சன் கேட்டாராம், 'ஊம், பின்னே எந்து பற்றி?'ன்னு!
வீட்டுக்கு ஓடிவந்த சேச்சி இதையெல்லாம் சொல்ல அங்கே 'வீண்டும் ஒரு பொட்டிச் சிரி'.
( இந்த வாரம் உங்களுக்கு சில மலையாள வார்த்தைகள் சொல்லித்தரப்படும். இப்பெல்லாம் மலையாளப்படங்கள்தமிழில் ரீமேக்கு நிறைய வருதுல்லே. அப்ப உங்களுக்குச் சுலபமா இருக்க இந்த ஏற்பாடு:-) சரியா?)
Tuesday, December 20, 2005
அன்னம்மாச் சேச்சியின் கும்பசாரம்
Posted by துளசி கோபால் at 12/20/2005 02:43:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
காத்திருக்கிறோம் மூத்த பதிவாளர் அவர்களே.
டி ராஜ்,
வீட்டுலேயே வாத்தியாரை வச்சுக்கிடு ப்ரைவேட் ட்யூஷன் நியாயமா?:-)
மூர்த்தி,
வருகைக்கு நன்றிங்க.
குழப்பம் இல்லாத வார்த்தைகளை மட்டும் சொல்லித்தரணும்:-))))
மலையாளக் கரையோரம் தமிழ்பாடும் குருவியா?
//கேட்டாராம், 'ஊம், பின்னே எந்து பற்றி?'ன்னு//
:)))
:O)
அடிப்பொளி சேச்சி!
அருஞ்சொற்பொருள்
அடிப்பொளி- தமிழில் "சூப்பர்" என்ற சொல்லுக்கு இணையானது. சகட்டு மேனிக்கு எதற்கு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
டி.ராஜ், வீட்டுல டீச்சர்... சரி, சரி கதை அப்படி போகுதா :-))
ஏங்க தமிழ்மகள்,
இந்த பின்னூட்டம் இங்கே ஏன்? புரியலைங்களே!
ராம்ஸ்,
வருகைக்கு நன்றி
டீச்சர், நீங்ஙள் பறஞ்ஞது மனசிலாயி. வளர நன்னாயிட்டு உண்டு.
தமிழ்மணத்தை மலயாளமணமாக்க முயற்சியா :))
அசலாயிட்டுண்டு:)
"அம்பலத்தில் வச்சிக் கண்டதாக்கும்.." அப்பிடின்னா என்னாங்கோ ???
ராகவன் & மணியன்,
வருகைக்கு ' நன்னி'
ரவிகுமார்,
'கோயிலிலே பார்த்தேன்' ன்னு அர்த்தம்.
எனக்கு ஒன்னுமே மனசிலாயிலே!
//மணியன் said...
தமிழ்மணத்தை மலயாளமணமாக்க முயற்சியா :))
அசலாயிட்டுண்டு:)//
அதே...:-) அதுசரி. எல்லாம் புரிஞ்š போயி. ( எப்படி என் மலையாளம் ?) ஆனா, "பொட்டிச் சிரி" ?? புரியலையே துளசி ...
அருணா
ஹைய்யா.... துளசியக்கோவ்... கும்புட்டுக்குறேன்க்கா...
வேல ரொம்பங்கிறதால வரல. இன்னைக்கு வந்து பாத்தா
இந்த வார நட்சத்திரமா அசத்திகிட்டு இருக்கீங்க...
சந்தோசமா இருக்குக்கா...!
தெரிஞ்ச வரைக்கும் மலையாளத்த சொல்லிக்கொடுங்கக்கா..
எனக்கும் நல்லா கத்துக்கணும்னு ஆசையா இருக்கு.
மலையாளக் கரையையும் விட்டு வைக்கலையா? அங்கே எவ்வளவு நாள் இருந்தீங்க?
சிங். செயகுமார்,
//ஒண்ணும் மனசிலாயிலே!//
அது சாரமில்லே போட்டே. =அது பரவாயில்லை போகட்டும்
அருணா,
பொட்டிச்சிரி + வெடிச்ச்சிரிப்பு.
இதுவே 'பொட்டிக் கரந்ஞு' = மனசு உடைஞ்சு அழறது.
பொட்டிச்சு = போட்டு உடைச்சு
முருகன்,
எப்படி இருக்கீங்க? நிங்க வேலை செய்யற இடத்துலே எங்கே பார்த்தாலும் மலையாளம் இருக்கே, இன்னுமா
பேசிப்பழகலை? அய்யடா...
தாணு,
அப்ப்டி வுட்டுற முடியுமா? எல்லா ஊர்லேயும் இருந்தாத்தானே
'இந்தியன்'ன்னு எங்கேயும் கலந்துக்க முடியுது:-)))
எங்கூர்லல்லாம் மலையாளப் படம்னா அதுக்கு அர்த்தமே வேறங்க. அதனாலத்தான் மலையாள வார்த்தை கத்து தரேன்னதும் சில பேர் சொல்லுங்க, சொல்லுங்கங்கறாங்கன்னு நினைக்கிறேன். இனிமே அந்த 'மாதிரி' படங்கள பாக்கும்போது அவங்க என்னத்த பேசறாங்கன்னு தெரிஞ்சிக்கலாமில்ல?
'சீத்த'யானதெல்லாம் சொல்லி தறாதீங்க? என்ன?
என்னெங்க டிபிஆர் ஜோ,
ஞான் அங்கெனச்சீத்தயெல்லாம் பறஞ்நு தருமோ?
ஈஸ்வர்,
சிறுப்பக்காரன் = சின்ன வயசு ஆள் , இளைஞன்
சிலப்போள் = சில சமயங்களில்
எந்து பற்றி= என்ன ஆச்சு?
எந்து வட்டி= எவ்வளவு வட்டி ( வட்டின்னா நம்ம வட்டியேதான்) கந்து வட்டி(!)
ஆமாம், இப்ப எதுக்குத் தீவிரமா 'வட்டி' பத்திக் கேக்கறிங்க? எந்து பற்றி? பறயூ
ஹா ஹா :) முதலில் முழுதும் புரியலை copy சர்ச் போட்டதும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் காட்டிடுச்சி கூகிள் ....செம காமெடி ஹா ஹா :)
Post a Comment