Tuesday, December 13, 2005

நியூஸிலாந்து பகுதி 34

அங்கங்கே சில ஆடுங்கன்னு மேய்ஞ்சுக்கிட்டு இருந்ததெல்லாம், ஒரு பத்து வருசத்துலே அஞ்சு லட்சமாப் போச்சு.ஏகப்பட்ட ஆளுங்க வரத்தொடங்கி, இப்ப என்னன்னா வேலை கொஞ்சமாவும், வேலையாளுங்க அதிகமாவும் ஆச்சுது.திடுக்குன்னு வேலை இல்லாம முழிச்சு நின்ன சிலர், ஆடுங்களை நிறைய வாங்கி அதை மந்தையாக்கி வளர்க்க ஆரம்பிச்சாங்க.


என்னாத்தை வளர்க்கறது? சோறு ஆக்கிப் போட்டா? அதான் மானாவரியா நிலம் கிடக்குல்லே. ஒரு அல்பத்தொகைகொடுத்தா பத்தாயிரம் ஏக்கர் பூமியை 'அரசாங்கம்' ஒத்திக்குக் கொடுத்துச்சாம். எங்கே பார்த்தாலும் பச்சைப்பசேர்னுஇருந்த புல்லுங்களைத் தின்னுட்டு அதுங்க பல்கிப் பெருகியதுமில்லாம மேல்வரும்படிக்கு வழி செஞ்சுச்சுங்க.ஆட்டு ரோமத்தை எடுத்து கம்பளி தயாரிக்க விக்க ஆரம்பிச்சாங்க. இதுலே சிலர், அண்டை நாடான 'ஆஸ்தராலியா'லேஇருந்து ஆடுங்களையே கப்பலிலே வரவழைச்சாங்க. 'ஆஸ்தராலியன் மெரீனோ ஆடு' ரொம்ப உயர்ந்த ரகமாம். வுல்பெரிய பிஸினஸ் ஆகிப் போச்சு.


அஞ்சு லட்சமா இருந்த ஆடுங்க இன்னும் ஒரு பத்து வருசத்துலே முப்பது லட்சமா ஆயி, இப்ப இன்னிக்குக் கணக்குலேஎங்களுக்கு ஆளுக்கு 12 ஆடு! நானூத்து எம்பது (480) லட்சம். போதுமா?


இப்பப் புதுத் தொழில் உருவாச்சு. ஆட்டுமந்தையை மேய்ப்பவர்கள். நிலத்துக்கு வேலி, எல்லைன்னு ஒண்ணும் இல்லாததாலேஅங்கங்கே குடிசை போட்டுக்கிட்டு மலைப் பாங்கான இடத்துலே ஆளுங்க மேய்ப்பர்களா வேலை செஞ்சாங்க. தினந்தினம்யாரு பத்தாயிரம் ஏக்கரைச் சுத்தி வர்றது? அதான் நாய் இருக்கே! நாய்ங்களுக்குத் தொழில் கிடைச்சது:-)


'ஷீப் டாக்'. ஷெப்பர்டு நாய் வளர்த்தா, நாய்ங்க ஆடுங்களை கூட்டமாக் கொண்டு போய் கொண்டுவந்துச்சுங்க.


புல் மட்டுமா இருக்கு? அங்கங்கே தானாய் வளந்து வானை முட்டற உசரத்துலே ஓங்கி நிக்கற மரங்களுக்குஅடுத்த ஆபத்து வந்துச்சு. மரங்களை வெட்டி, மரப்பலகையா அறுத்து வீடுங்க, கடைங்க, சர்ச்சு, பொதுக்கூடம்னு கட்டவும் ஆரம்பிச்சதுலே, குடிசை வீடுங்கல்லாம், மரவீடுங்களா மாற ஆரம்பிச்சது. ரிமு, கவ்ரின்னு தரமானமரங்கள். கவ்ரியெல்லாம் இங்கிலாந்துக்குப் போச்சு, கப்பல் கட்ட!. கவ்ரி மரங்களிலே இருந்து பிசின் வரும்பாருங்க,அதுக்கும் தேவை இருந்துச்சு. எதுக்கு? பெயிண்ட்டு, வார்னிஷ், கோந்துன்னு பலவித உபயோகம்.


சில மரங்கள் பிரமாண்டமான சைஸு. மரம் அறுக்கற ரம்பம் சிலது மூணரை மீட்டர் நீளமாம். அம்மாடியோவ்!


மண்ணாசை கூடவே 'மூவாசை' யிலே இன்னொரு ஆசையும் ஏற்பட்டுச்சு. 1862லே தங்கம் இங்கே இருக்கறது தெரிஞ்சது. தெற்குத்தீவுலே 'ஒடாகோ' என்ற இடத்துலே இருக்கற நகர சபை சொல்லுச்சு, தங்கம் இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சுச் சொல்றவங்களுக்கு இனாம் 500 பவுண்டு. அப்ப்பா, எவ்வ்ளோ காசு!


டுஆபெகா(Tuapeka) என்ற இடத்துலே தங்கம் இருக்கறதா அரசப் புரசலாப் பேச்சு வந்தவுடனே இங்கே அப்பஇருந்த ஒரு ஆஸ்தராலியர், கேப்ரியல் ரீட் என்றவர் ஒரு டெண்ட், ஸ்பேடு, இறைச்சிவெட்டற கத்தி, கம்பளிப்போர்வைகளோட ( இதைத்தான் கத்தி கப்டான்னு சொல்றது இல்லே?) ஒரு தகரடின்னையும் எடுத்துக்கிட்டுக் கிளம்பினார்.


ஒரு பத்துமணி நேர உழைப்புலே 7 அவுன்ஸ் தங்கத்தைச் சுரண்டிட்டார். இந்த விஷயம் வெளியிலே தெரிஞ்சதும்கூட்டங்கூட்டமா ஜனங்க 'தங்கமே தங்கம்'னு படையெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சொன்னா நம்பமாட்டீங்க, ஏறக்குறைய11000 பேர் டெண்ட் போட்டுக்கிட்டு அந்தப் பக்கத்துலே தங்கம் தேடிக்கிட்டு இருந்தாங்களாம்.


1862 லே தங்க நிறைய இருக்கறது உறுதிப்பட்டுப் போனவுடனே கொஞ்சம் கொஞ்சமா தங்கச் சுரங்கம் தோண்டறகம்பெனிங்க உருவாச்சு. அப்பவே ச்சைனாவுலே இருந்து கொஞ்சம் பேர் இந்த வேலைக்கு வந்துட்டாங்களாம். இந்தச்சுரங்கத் தொழிலாளர்களுக்கான சாமான்கள், ஸ்பெஷல் உடுப்பு, தங்கம் அரிச்செடுக்கற பாத்திரம்னு விக்கற கடைகளும்ஆரம்பிச்சது. 1874 முதல் 1881 வரை அந்த 7 வருசத்துலெ இங்கெ வந்து சேர்ந்த ச்சைனாக்காரங்க சுமார் 5000.இதுலே சிலர் மட்டும்தான் திரும்ப அவுங்க ஊருக்குப் போனவுங்க. மத்தவங்க எல்லாம் இங்கேயே தங்கிட்டாங்க.ஆச்சுஏழெட்டு தலைமுறை!


நம்ம ஊர்லே கட்டிடவேலை செய்யற சித்தாளுங்க 'பாண்டி'ன்னு, தகரத்துலே செஞ்ச அதிகம் குழி இல்லாதஒண்ணு வச்சிருப்பாங்க. அதுலேதான் சிமெண்டுக் கலவையைத் தூக்கிக்கிட்டு சாரத்துமேலே எல்லாம் கொண்டு போவாங்க.அதுபோல ஒண்ணுதான் இங்கே தங்கம் அரிச்செடுக்கற பாத்திரம். தங்கச் சுரங்கத்துலே இருந்து வெளியே வர்றதண்ணீர் ஒரு கால்வாயா ஓடுமில்லையா? அங்கே தண்ணீரோடு சேர்த்து மண்ணை அள்ளி, மெதுமெதுவா ஆட்டி ஆட்டிஅப்படியே அரிச்செடுப்பாங்க. நம்மூர்லே சோறாக்கறதுக்கு அரிசி அரிப்பாங்களெ அது போல. மண்ணெல்லாம் போகப் போகஅடியிலே தங்கம் மணல்போல நிக்கும்.


இங்கே இன்னும் சில இடங்களிலே 'கோல்ட் பானிங்' (Gold Panning) ஒரு டூரிஸ்ட்டு அட்ராக்ஷன். அஞ்சு டாலர்கொடுத்தா ஒரு தகரத் தட்டும் ச்சின்ன மண்வெட்டியும் குடுப்பாங்க. அவுங்க ஒரு இடத்தையும் காமிப்பாங்க. அங்கே கால்வாய் ஓடிக்கிட்டு இருக்கும். அந்தமண்வெட்டியாலே மண்ணை வாரி அந்தத் தட்டுலே போட்டுக்கிட்டு தண்ணிக்கிட்டேஉக்காந்து அரிச்சு அரிச்சு எடுக்கணும். நாங்களும் ஒருக்கா இங்கே போனோம். அரிச்சு அரிச்சுப் பார்த்தாலும் ஒண்ணும்வர்றமாதிரி இல்லே. ரொம்பக் கொஞ்சமா மினுக் மினுக்குன்னு தூளா அடியிலே தங்குச்சு. நான் மகள் பார்க்காத சமயம்மெதுவா என் கழுத்துச் செயினை மண்ணுக்குள்ளே நுழைச்சுட்டு அப்படியே உக்காந்து அரிச்சுக்கிட்டே இருந்தேன்.மகள் பாக்கற சமயம் இன்னும் கொஞ்சம் தண்ணீருலே அரிச்சப்ப பளிச்சுன்னு தங்கம் தெரிஞ்சது. மகளுக்குஆச்சரியமாப் போச்சு,' டாடி டாடி, அம்மாவுக்குத் தங்கம் கிடைச்சிருச்சு'ன்னு கத்துனதும் இவரும் ஓடிவந்தார்.அலசுனதும் செயின் ஜொலிச்சது. நான் சொன்னேன், 'இப்பெல்லாம் சுரங்கத்துலே நகையாவே கிடைக்குது போல!'ன்னு.உத்துப் பாத்துக்கிட்டிருந்த மகள், 'இது நம்ம செயின் போல இருக்கேன்னு அப்பவே நினைச்சேன்'னு சொன்னா. அப்ப அரிச்சமணல் தங்கப் பொடி இன்னும் நம்ம வீட்டுலே இருக்கு. கஷ்டப்பட்டுச் சேர்த்த தங்கத்தை விட்டுற முடியுமா?:-)


டேன் எல்லிஸனும், 'ஹகரிஆ ஹயிரோ' வும் அந்தக் காலத்துலே கோல்ட் பானிங் செய்ய 'ஷார்டோவர்'நதியைக்கடந்து போனப்ப அவுங்க நாய் தண்ணிலே அடிச்சுக்கிட்டுப் போயிருச்சு. கொஞ்சதூரம் தண்ணியிலே போனநாய்,மெதுவா நீந்தி தண்ணியிலே மூழ்கிக்கிடந்த ஒரு பாறையிலே ஏறித் தப்பிச்சுக்கிச்சு. அங்கே இருந்து குலைச்சுக்கிட்டேஇருந்துச்சு. அந்தச் சத்தம் வந்த திசையிலே நாயைத் தேடிக்கிட்டே போன இவுங்க ரெண்டு பேரும் , மெதுவாஅந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்தாங்க. அந்தப் பாறை இடுக்குலே பார்த்தா....... தங்ங்ங்ங்கம்! ஜொலிக்குது!! ரெண்டுபேரும்அங்கேயே உக்கார்ந்து மெதுமெதுவா சுரண்டி எடுத்த தங்கம் எவ்வளவு தெரியுமா? எட்டரைக் கிலோ!!!!!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

14 comments:

said...

மனுசங்களை விட ஆட்டு தொகை அதிகமா இருக்கே!ஆனா ஆட்டுக் கறி அதிகமா இன்கிலீஷ்காரங்க சாப்பட மாட்டாங்களே, மாடு,கோழி தானே என்ன செய்யுறாங்க எல்லாத்தையும் இப்ப?

said...

வாங்க உதயகுமார்.

ஆடுன்னா எல்லாம் செம்மறி ஆடுங்கதான். Lamb. இங்கே எல்லாரும் நல்லாத்தான் இதுங்களைச்
சாப்புடறாங்க. விலையும் கொஞ்சம் ஜாஸ்திதான். துண்டு துண்டா வெட்டப்பட்ட கொழுப்பில்லாத
இறைச்சி கிலோ 22$க்கு விக்குது சூப்பர் மார்கெட்டுலே. உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே, நம்ம ஊர்லே
ஆடுன்னா எல்லாபாகத்துக்கும் ஒரே விலை. இங்கே ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை.

மேலும் எக்ஸ்போர்ட் ஆவுது. மிடில் ஈஸ்ட், பிஜி, இங்கிலாந்துன்னு பல இடங்களுக்கும் மற்றும் அக்கம்பக்கம்
இருக்கர ஐலண்டுகளுக்கும் போகுது.

said...

சரி ஆடுமேய்க்க வரலாமா ஆடுகிடைக்கமா

said...

என்னார்,

இப்பெல்லாம் நாய்ங்களே ஆட்டை மேய்ச்சிருதுங்க. ச்சும்மா பேருக்குத்தான் ஷெப்பர்ட்.

அதுவுமில்லாம இந்த வேலைக்கு 'வொர்க் பர்மிட்' கிடைக்குமான்னு தெரியலை:-)))))

said...

தங்கம் அரித்தெடுத்த தங்கத் தலைவி டீச்சர் வாழ்க!
(இந்தப் பட்டம் எப்படியிருக்கு?)

டீச்சர், பெங்களூருல ஆட்டுக்கறி கிலோ நூற்று அறுபது ரூபாய். தனிக்கறியா கேட்டா வெலையக் கூட்டுறாங்க. பலரு தரமாட்டேன்னு சொல்றாங்க.

said...

பாடம் வரலாற்றிலிருந்து புவியியலுக்கு மாறி விட்டதோ ?

இங்கிருந்து வந்து போற செலவுக்கு தங்கம் கிடைக்குமானால் ஒரு 'பொடி' நடையா அங்கு வரலாம் :)

said...

வரப்புயர...ன்னு அவ்வை சொன்னது மாதிரி...ஆடு வளர...ன்னு வாழ்த்தலாமோ?

said...

நீங்களும் ஆடு கதைக்கு வந்துட்டீங்களா?

இங்கே தங்கம் விலை ராக்கெட்லே பறந்திட்டு இருக்கு, தெரியுமா?

said...

ராகவன்,

நீங்க ஏன் கடைக்கெல்லாம் போறீங்க? அதான் பெர்ஷியா இருக்குல்லே?:-))))

said...

மணியன்,

வரலாறுலேயும் புவியியல் கலந்துருமில்லே? இனி 'பொடி'நடையா வந்தாலும் பிரயோசனமில்லை.
பெரிய கம்பெனிங்க வந்து எல்லாத் தங்கத்தையும் தோண்டிக்கிட்டுப் போயிட்டாங்கல்லே, மத்த காலனி
நாடுகளிலே செஞ்சாப்புலே(-:

சுரண்ட இவுங்களுக்குச் சொல்லித்தரணுமா?

said...

தருமி,

வாங்க வாங்க. என்ன ரொம்ப நாளா வகுப்புக்கு மட்டம்?

'ஆடுயர'ன்னு தாராளமாச் சொல்லலாம். இப்ப இந்த ஆடுகள்தான் நாட்டோட
பாதி வருமானம் கொண்டு வருதுங்க. பாருங்க, ஆடு சம்பாரிக்க, மனுஷன் சாப்புடறான்:-)

said...

தாணு,

நானும் இ பேப்பரிலே பார்த்தேன், தங்கம் விலை மேலே...... போகுது. இதனாலே பட்டுப் பொடவைங்களுக்கும்
விலை ஏறிடுச்சாமே!

இங்கே வெறும் 9 காரட் நகைக்கு இருக்கற விலையைப் பார்த்தா மயக்கம் வந்துரும். நம்ம சித்ரா ரமெஷ் வந்தப்ப ஒரு நகைகடைக்கு
ச்சும்மாப் போய் காமிச்சேன். ஒரு செயின் $2595 போட்டுருந்தான். இதே காசுலே அங்கே சிங்கையிலே வாங்குனா 22 காரட்,100 கிராம் வரும்.
பின்னாளிலே வேணாமுன்னு வித்தாலும் காசு தேறும். இதுலே போட்ட காசு வெறும் எள்ளும் தண்ணியும்தான்னு சொல்லி அவுங்க மயக்கத்தைத்
தெளியவைச்சேன்:-)))))

மேரி சுகமானது சந்தோஷம்.

said...

துளசியக்கா,
பழைய பகுதிகளுக்கெல்லாம் ஒரு லிங்க் தரலாமே..

said...

பிரதீப்,

அக்கா ஒரு கணினி கைநாட்டுப்பா. லிங்கு கிங்கு ஒண்ணும் கொடுக்கத்தெரியாது!

செப்டம்பர் மாசத்துலே இருந்து ஆரம்பிச்சது இந்தத் தொடர். அதுலே archives லே போய் அப்படியே படிச்சுக்க வேண்டியதுதான்.(-: