Thursday, December 15, 2005

கிருபா..... 'டாங்க்ஸ்'பா!

இதென்ன திடீர்னு இப்படி ஒரு பதிவுன்னு இருக்கா? எல்லாம் ஒரு நன்றி கூறல்தான். அது பாருங்க,நானே ஒரு க.கை.நா. என்றதாலே உங்க கம்ப்யூட்டர் சமாசாரெமெல்லாம் புரிபடாம /பிடிபடாம இருந்துச்சா, ( இப்ப மட்டும் எல்லாம் தெரிஞ்சுச்சான்னு ஏம்ப்பா இடையிலே குரல் விடறீங்க?)சரி, கொஞ்சம் கொஞ்சமாக் கத்துக்கிடலாமுன்னு 'விடா முயற்சியே வெற்றி தரும்'ன்னு பெரியவங்கச்சொல்லிவச்சுப் போனமாதிரியே இருந்தேன்.


படம் போடறதுக்கு எப்படியோ முக்கிமுனகிக் கத்துக்கிட்டு, கொஞ்சநாளா இதே வேலையா, பதிவுக்குச்சம்பந்தம் இருக்கோ இல்லையோ 'இதோ ஒரு படம்'னு இருந்தேன். எல்லாம், விஷயம் நல்லபடியா புரியறவரைக்கும்தான்.


அப்பப்ப நம்ம மக்கள் 'ஒரு லிங்க் கொடுக்கக்கூடாதா?'ன்னு கேக்கறப்பல்லாம் 'இதென்னடா வம்பாப் போச்சே.இதை எப்படிக் கொடுக்கறது? நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த 'லிங்க்(கு)சாமிதானே?'.( இதுக்குத்தான் பொழுதன்னிக்கும் சினிமா சினிமான்னு பர்த்துக்கிட்டு இருக்காதேன்னு எத்தனைதபாச் சொல்றது?)


ஆங்..... இன்னொரு லிங்க் கூடத்தெரியும். சங்கிலி இணைப்பு. நமக்குத் தெரியாத சங்கிலியா?:-)))


வி.மு.வெ.த.ன்னு அப்படியே போஸ்ட்டோட உர்ல், காப்பி & ஒட்டு முறையிலே போட்டுச் சமாளிச்சேன் சில இடங்களிலே.ஆனா பாருங்க இந்த 'இங்கே'தான் ஆட்டம் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. நம்ம ஜெயஸ்ரீயும் என் புலம்பலுக்குப் பதில் தர்றமாதிரி,விலாவரியாச் சொல்லி மடல் போட்டுருந்தாங்க. ஆனா என் மரமண்டைக்கு ஏறவேணாமா? ( நேரம் வரலைன்னு சொல்லலாம்)அதுக்கப்புறமும் சிலர்/பலர் ( பேரெல்லாம் போடலை. எனக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்துருச்சு. சஞ்ஜய் ராமசாமிக்கு வந்ததுன்னுநம்புனீங்கெல்லெ. அப்ப இதையும் நம்பணும், ஆமா) நானும் தலையாலே தண்ணி குடிச்சுப் பார்த்துட்டேன். ஊஹூம்...ஒண்ணும் வேலைக்காகலே.


நம்ம வலைஞர்களிலேயும் ஒரு சிலர் இப்படிச் சிலசமயம் 'இது' போட வரலை, 'அது'போட வரலைன்னு எழுதறதைப்படிக்கறப்பெல்லாம் உள்ளுக்குள்ளே ஒரு ச்சின்ன(!) சந்தோஷம். ஆஹா... நாம ஒற்றைப்பட்டுப் போகலை. நமக்கும் ஆளு இருக்காங்க.


என்னைப் போலவே மதுமிதா( கவிதாயினின்னு சொல்லணுமுல்லே) சமீபத்திய ஒரு பதிவுலே இங்கே (இதுக்கு முன்னாலே இருக்கற இங்கேயில் க்ளிக்கவும். ப்ரிவ்யூலே அழகா கலருலே வந்துச்சு. போஸ்டிங்குலே காலை வாரிடுச்சு. ஹெல்ப் ப்ளீஸ்!)உர்ல் போடத் தெரியலைன்னுசொன்னப்ப , வழக்கம்போல நல்லெண்ணம் கொண்ட நபர்களின் உதவி பின்னூட்டமா வந்துச்சு. அதைப் படிச்சப்பக்கொஞ்சம் புரியறாப்பலே இருந்துச்சு( நேரம்,காலம் வந்துருச்சு போல!!) வி.மு.வெ.த,ன்னு முயன்று சில 'சோதனைப்பதிவு' போட்டுப் பார்த்தப்பஅட...வருது! வந்துருச்சு. ஆஹா வந்துருச்சுன்னு பாடாத குறை. ஓக்கே ஓக்கே.


சொல்லித்தந்த 'ஆசானுக்கு' நன்றி சொல்லிக்கலாமுன்னு பார்த்தா அவரோட மெயில் ஐடி தெரியலை. ப்ளொக்கர்'புரோபைல்' இல்லேங்குது. இதுக்காக சோர்ந்து போயிரலாமா? எதுக்கு பின்னே நமக்குன்னு பதிவு வச்சிருக்கறது? அதுலே போட்டாப் போய்ச் சேர்ந்துராது?( ஆர்மி போஸ்ட் ஆபீஸ்லே லெட்டருங்க போய்ச் சேர்றமாதிரி )


ஆசான் கிருபாசங்கருக்கு நன்றி. மனமார்ந்த நன்றி. ( இப்பக் கத்துக்கிட்டது பதிவுலே லிங்க் கொடுக்க மட்டுமே.)ஆமாம் கிருபா, இந்தப் பின்னூட்டங்களிலேகூட சிலபேர் இங்கேன்னு ஒரு லிங்க் கொடுக்கறாங்களே அது எப்படின்னுகொஞ்சம் சொல்லித்தாங்களேன் ப்ளீஸ்.


( படிச்சா படிச்சபடி நடக்கணுமுன்ற முறைப்படி இங்கே ஒரு 'இங்கே' கொடுத்துட்டேன். சரியா வந்திருக்கா?)

31 comments:

said...

மாஞ்சுமாஞ்சு பதிவு எழுதிப்போட்டும் இப்படிக் காலைவாரும் ப்ளொக்கரின் செயலுக்கு வருந்துகிறேன்(-:

said...

அக்கா,
கமெண்ட்ல கொடுக்கறதும் ஈஸிதான்.

உதாரணம்.

<_a href="x">y<_/a>

இதில் x என்பதற்கு பதில் http://valaippadhivu.blogspot.com - அதாவது உரல்

y-க்கு பதில் -என் பதிவு இல்ல இங்கே-னு
என்னவேனா எழுதலாம்..

கடைசியா ரெண்டு _ யும் எடுத்திடுங்க. (ப்ளாக்கர் கமெண்ட்ல பிரச்சனை பண்றதால _ போட்டேன்)

எல்லாம் பண்ணீங்கன்னா, கீழேயிருக்கறா மாதிரி அழகா வரும்.
என் பதிவு

said...

தம்பி ராமநாதன்,

எப்படி இருக்கீங்க? ரொம்ப பிஸியா? பதிவுகூட ரொம்ப வரலையே?

இப்ப நீங்க சொல்லித்தந்த விவரத்துக்கு தேங்க்ஸ்பா:-)))

செஞ்சுபார்த்துடறேன்.

said...

இராமநாதா என்ன லேட்டா உரல் குடுக்கிற, சாரி குரல் குடுக்கிற, எங்க காணோம்!

said...

ஒரு க.கை.நா.-க்கு இன்னொரு க.கை.நா.எழுதிக்கிறது என்னன்னா,

இந்த லின்க் எல்லாம் நமக்குத் 'தண்ணி'(!!)பட்ட பாடு.
ஆனா, இந்த பின்னூட்டத்தில எல்லாம் படம் வர்ரது மாதிரி செய்றாங்களே, அதுதான் வரமாட்டேங்குது. ரெண்டு பேரு சொல்லிக்கொடுக்க வந்துட்டு, துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிட்டாங்க.:-( (எப்படி, ஸ்மைலி எல்லாம் போடுறேன், பாத்தீங்களா?)

said...

தருமி,

அதான் தமிழ்நாட்டுலே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தண்ணியாலே இப்பப் படற பாடு கொஞ்ச நஞ்சமில்லையாமே?

நம்ம அக்கவுண்ட்டுலே போனா போட்டொ போட்டுக்கன்னு சொல்லுதே, அதுலே ஒரு படம் போட்டுவச்சாப்போதுமாமே. எல்லா முன் பின் ஊட்டத்துலேயும் வரும்போல.

ஆனா நீங்க ப்ளொக்கர் கணக்குலே இல்லையே. வெப்லாக்லே தேடுங்க. கண்டடைவீர்கள்.

said...

Krupa, intha templatei konjam thooki kadasuppaaaa....!

Sairya akka?! :-)

said...

ராம்கி,

எந்த டெம்ப்ளேட்டை? பூனையையா? ஐய்யய்யோ!
ஆமா, கிருபா எப்படி இதைத் தூக்கிக் கடாச முடியும்?

said...

akka this template is really a bad one.
Will tell you some reason.
1. The background and foreground does not match each other.
2. Also if you want to play with Hyperlinks give a bright color for "a(normal)", "a Visited" and "a Hover" it will look great. (According to the current color combination it’s hard to identify the links in your post)
3. Obviously the fixed background will always irritate while reading a big post. It will distract our attention from the post when we scroll.
4. Also the menus in the bottom (in your old template) will get least attraction.

People those who working in the User Interface design may give you better Idea about this.
According to my opinion Badri’s Template is simple and powerful. But for that template your content must be strong enough. (Padam podra velai angka nalla erukkathu)
Evvalavum en solrenna template mathurathukku munthi unga pathivu ellaththaiyum padippen. Aana eppo niraya pathivukaLai thavirkkiren. Etharkku mukkiya karanam ungkal Template’m onru.

said...

அன்புள்ள சோழநாடன்,

நம்ம ராம்கியும் கூட இதையே சொல்லி இருக்கார் பார்த்தீங்களா?

படிக்கக் கஷ்டமா இருக்கறதுங்கறது ஒரு முக்கிய விஷயம்தான்.
கட்டாயம் இதைக் கவனிக்கணும்.

நம்ம வீட்டை அலங்கரிக்கற அலங்கார நிபுணர் கிட்டே தான் இதைச் சொல்லணும்.
எனக்கு இந்தத் தொழில் நுட்பம் ஒண்ணும் தெரியாதுல்லே. நான் கை வைக்கப்போய் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகி
முதலுக்கே மோசமாச்சுன்னா?

உங்க கருத்தை விளக்கிச் சொன்னதுக்கு நன்றி. ஒண்ணு வேணாமுன்னா, ஏன் வேணாமுன்னு விவரிச்சுச் சொல்றதுதான்
ஒரு ஆரோக்கியமான பழக்கம் இல்லையா?

விரைவில் சீரமைச்சுட்டாப் போச்சு. அதுவரை கொஞ்சம் அக்காமேலே கருணை காட்டலாமுல்லே?

said...

டீச்சர். ரஜினி ராம்கி சொல்றதுதான் என்னோட கருத்தும். இந்த டெம்புளேட்டை மாத்தக் கூடாதா? வீரண்ணா படத்தை இண்டெர்நெட்டில் பாக்குற ஃபீலிங்கு வருது.....(கோவிச்சுக்காதீங்க டீச்சர். டெம்புளேட்டை மாத்துங்க.)

said...

துளசி
எல்லர்கிட்டேயும் கேட்டு விளக்கமா படியுங்க. எனக்கு உங்க ட்யூஷந்தான். நான் முழு மண்டூகம். ப்ளாக் எல்லாம் ராம்கி (ஸ்டேஷன்பென்ச்) செட் பண்ணிக் கொடுத்தது, அதுக்குமேலே ஒண்ணும் படிக்கலை. எழுதறதோட சரி!

said...

துளசி, நம்ம பக்கம் பாத்தீங்கள? நேற்று உக்காந்து எப்படி மாத்தியிருக்கேன், பாருங்க. (மகள் உதவினாள்!!!)

said...

துளசிக்கா அழகான பூன குட்டிய தொலைச்சிட்டீங்களே!

said...

//ரொம்ப பிஸியா? பதிவுகூட ரொம்ப வரலையே?
//
//என்ன லேட்டா உரல் குடுக்கிற, சாரி குரல் குடுக்கிற, எங்க காணோம்!
//
அக்கா, வெளிகண்டநாதர்

அடடா,
தலைக்கு மேல வேல போங்க... :))

இன்னிக்கு ஒரு வெட்டி பதிவிட்டாச்சு.

கைமேல் பலன் கறது இதுதானா அக்கா? அதுக்குள்ள டெம்ப்ளேட் மாறியாச்சு. சின்ன வேண்டுகோள், நாமெல்லாம் மெகா எழுத்தாளர்களில்லையா? அதனால தயவு செஞ்சு உங்க பதிவில இருக்கற புறம்போக்கு (தெரியும்: நியுஸில தோட்டம்) இடத்த குறைங்களேன் ப்ளீஸ். ஸ்க்ரோல் பண்ணியே போரடிச்சிடுது. :))

said...

ராகவன்,

'மக்களின்' விருப்பப்படி, நம்ம அலங்கார நிபுணர்கிட்டே மனுப்போட்டு வச்சதுக்கு, இப்பசத்திக்கு

பூனையைத் தூக்கிட்டு ப்ரைமர் அடிச்சு( பச்சைக்கலர் ப்ரைமர்?) வச்சுருக்கு. பண்டிகை சீஸனாச்சேப்பா,
எல்லாரும் பயங்கர பிஸியாம்.

கொஞ்ச நாள் கழிச்சு வேற எதாவது 'திடுக்'னு வரப்போகுது பாருங்க:-)

said...

தாணு,

படிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதானே வாழ்க்கை! ( தத்துவம் அப்படியே தானா வருதுங்க)
ஸ்டேஷன் பெஞ்சு கூட ரொம்பநாளா ஒண்ணும் பதியலை போலிருக்கு, ஏஏஏஏஏஏஏஏஏன்?
( ஜில்ஜில் ரமாமணி ஸ்டைலில் படிக்கவும்)

said...

தருமி,

குடுத்துவச்ச ஆளய்யா நீர்! வீட்டுலேயே நிபுணர்! ரொம்ப ஹேண்டியா இருக்குமே!

said...

பூனையைத் தூக்கிட்டாங்களே!!

பச்சையா இருக்கறதைப் பார்த்ததும் ஒரு கேள்வி வந்துது...க்றிஸ்மசுக்கு ஏன் ஆஸ்தான நிறமா பச்சையும் சிவப்பும் பாவிக்கிறாங்க? எப்படி வந்துது? தெரிஞ்சா சொல்லுங்களேன்? (எனக்கு இன்டைக்கு "சொல்லுங்களேன்" என்டு கேட்கிற ராசி போல !! :O)

said...

துளசிம்மா
அநியாயத்துக்கு சீக்கிரமா கத்துக்கிறீங்க.
யானை இருக்கறப்ப நல்லா வாசிக்க முடிஞ்சது.பூனைதான் கொஞ்சம் தொந்தரவு செய்தது.
இப்ப நல்லா இருக்கு.

நன்றி க்ருபா.

இராமநாதன் இன்னும் இது புரியல.

said...

சிங்.செயகுமார்,

'எல்லாம் காலத்தின் கட்டாயம்'
என் பூனை & யானை போனதுலே இருந்து மனசு உடைஞ்சுபோய்க்கிடக்கறதை நீங்களாவது புரிஞ்சுக்குங்க.

said...

ஷ்ரேயா,

இந்த 'கண்டுபிடி' ஆட்டத்துக்கு நான் வரலை. வு ஜூட்:-))))

said...

இனிமேல் உங்க பதிவு 'லிங்கு'சாமியா மாறிடும்னு சொல்லுங்க.

இராமநாதன், ஹெச்.டி.எம்.எல். தெரிஞ்ச டாக்டரை இப்போதான் (ரெண்டாவதாக) மறுபடியும் பார்க்கறேன்.. :-)

said...

கிருபா,

இங்கே வந்ததுக்கும், மதுவோட பதிவுலே ட்யூஷன் சொல்லிக் கொடுத்ததுக்கும் நன்றிங்க.

இப்பல்லாம்' இங்கே' நல்லாவே வந்துக்கிட்டு இருக்கு:-)

said...

//நமக்குத் தெரியாத சங்கிலியா?:-)))//

அக்கா ..தங்கம்ன்னு சொல்வாங்களே அந்தச் சங்கிலி தானே...அதெல்லாம் உங்க்ளுக்குத்தெரியாததா... என்ன ? தங்கம் வகையராக்கள் உங்களுக்கு நல்லாத் தெரியுமின்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.

said...

க்ருபா,
// ஹெச்.டி.எம்.எல். தெரிஞ்ச டாக்டரை இப்போதான் (ரெண்டாவதாக) மறுபடியும் பார்க்கறேன்//

98-ல் geocities ல சைட் ஆரம்பிக்கணும்னா HTML தெரியாம பருப்பு வேகாது. நோட்பாடில தான் எல்லாம். :)))

ASP (.net பத்தி கேக்காதீங்க) கொஞ்சம் புரிஞ்சாலும் Javascript இன்னும் மிஸ்டரியாவே இருக்கு!! :(((

முதலாவது டாக்டர் யாரு?????? :)

said...

துளசி அவர்களே, இதை ரமணா பாணியில் படிக்கவும்:

'நன்றி'? தமிழ்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்த. :-))

மருத்துவர் ஐயா அவர்களே,

ஏ.எஸ்.பி. வேறவா? ஆமாம், உங்க கால் எங்க இருக்கு?

'முதலாவது டாக்டர்' கூட இணையத்துலதான் மொதல்ல பார்த்தேன், பொன்னியின் செல்வன் குழுல. அவர் ஹெச்.டி.எம்.எல். கூட ஃபோட்டோ்ஷாப், அனிமே்ஷன்னும் கலக்குவார். பேரு திலக்.

இப்போ பி.ஹெச்.டி./கோழியின் மூளையைப் பத்தின ஆராய்ச்சில இருக்கார். பி.ஹெச்.டி. கூட பி.ஹெச்.பி மாதிரியே இல்லை? ;-)

ஆனா அவருக்கு 55 வயசு எல்லாம் ஆகலை இன்னும். 30 வயசுதான்.

க்ருபா

said...

கல்வெட்டு,

சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க,என் தங்கம், சபாஷ்!

ராமநாதன்,

இன்னுமா புரியலை? அடுத்த பத்தியைப் பார்க்கவும்.

கிருபா,

நன்றி. இதை வடிவேலு பாணியில் படிக்கவும்.

ஆமாய்யா, அங்கிட்டு யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாய்ங்க, இந்த கோழி இருக்குல்லே கோழி.
அதும் மூளையை ஆராய்ச்சின்னு செய்றாய்ங்களாமே அவரு பேரு கிருபாவாமே! ஆங்...
அவரு ஒரு 'டாக்குட்டராமே!':-)))))

கிருபா,

மெர்ரி கிறிஸ்மஸ்

said...

நன்றியை எதுக்கு வடிவேலு பாணில படிக்கணும்ங்கறேன்!!!

அதான் அந்த டாக்டர் பேர் 'திலக்'ன்னு சொல்லிட்டேனே. :-( மத்தபடி நான் 'Talk'terதான். ;-)

வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்கும் அவ்வாறே உரித்தாகுக. தப்பு, தப்பு. கொஞ்சம் அரசியல் கலக்கணும். வாழ்த்த வயதில்லாததால் வணங்குகிறேன். ;-)

க்ருபா

said...

'talk'ter கிருபா,

தவறு நேர்ந்து போச்சு(-:

உங்க இ மெயில் ஐடி கொஞ்சம் வேணும், ஒரு விஷயம் கேக்கணும்.

என்னோடது tulsigopal@xtra.co.nz
ஒரு மயில் அனுப்பங்களேன் ப்ளீஸ்.

said...

என்னங்க தவறு துளசி அது?

என் மின்னஞ்சல் முகவரி shankarkrupa அட்டு yahoo.com

எவ்வளவு வர்ஷம் கழிச்சு பதில் சொல்றேன் பார்த்தீங்களா... இப்போதான் பாத்தேன் :-(

க்ருபா