எல்லாத்துக்கும் ஒரு முடிவு வர்றமாதிரி இந்தத் 'தங்கம்'தோண்டறதுக்கும் ஒரு முடிவுக்கு வந்துச்சு. அதானே அந்த
சுரங்கங்கள் எல்லாம் அக்ஷய பாத்திரமா என்ன? 1863 லெயே ஒட்டாகோ தங்க வயலிலே தங்கம் தீர்ந்து போச்சாம்.
அந்த இடத்தை விட்டுட்டு வேற இடங்களிலே தங்கம் தேடிப் போனாங்க. இதுலே பாருங்க இந்த வெள்ளைக்காரங்க
செஞ்சதை! ச்சைனாக்காரங்கவந்துட்டாங்கன்னு சொன்னேன்லெ? அவுங்களோட எலிவால் பின்னலும், மூங்கில் தொப்பியும்,
சாமான்களை குச்சிலே ரெண்டுபக்கமும் காவடி கட்டி எடுத்துக்கிட்டுப் போற பழக்கமும் இவுங்களுக்கு ஒரே பரிகாசமா
இருந்திருக்கு. நல்ல இடத்துலே அவுங்களை விடறதில்லை. எதுக்கும் உதவாத இடங்களிலேயும், ஏற்கெனவே தோண்டி,
தங்கம் சுரண்டிட்ட இடங்களிலேயும்தான் இவுங்களுக்கு அனுமதி.
ஆனா, ச்சும்மா சொல்லக்கூடாது, இந்தச் சைனாக்காரங்க கடின உழைப்பாளிகள். பொறுமையா வேலை செஞ்சு, 'அதே
இடத்துலே' நிறைய தங்கம் தோண்டி எடுத்திருக்காங்க! கெட்டிக்காரங்க! Gold dredging system எல்லாம் செஞ்சு
மத்தவங்களுக்கு ஒரு வழிகாட்டியா இருந்திருக்காங்க. இதான் சொல்றதுபோல 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்'னு.
தப்பான பழமொழி போட்டுட்டேனோ? 'விலை மோர்லெ வெண்ணெய் எடுக்கறது' சரியா இருக்குமுல்லே?
அழுக்கும் சகதியும் செங்குத்தாப் போற சின்னப் பாதையிலே நடக்கணுமுன்னு, அங்கே இருந்த நிலமை கொஞ்சம் ஆபத்தாவே
இருந்திருக்கு. சதசதன்னு இருந்த இடத்துலே எல்லாம் 'சேண்ட் ப்ளை'ன்னு சொல்ற கொசு மாதிரி சமாச்சாரம் இவுங்களைப்
போட்டுப் புடுங்கியிருக்கு. கடிச்சா, அந்த இடத்துலே ஒரே அரிப்புதான் போங்க. (இப்பவும் ரெயின் ஃபாரஸ்ட்டுக்குள்ளே இருக்கு.
அதுக்குன்னு இருக்கற ஸ்ப்ரே போட்டுக்கிட்டுத்தான் போகணும்.) எலிங்க எங்கே பார்த்தாலும் இருந்துருக்கு. குடிதண்ணி எடுக்கற
இடத்துலே இருந்த கழிவு எல்லாம் சேர்ந்து மக்களுக்கு 'டைஃபாய்டு'ஜுரம் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க. அதனாலே
'பூனை' இவுங்களுக்கு ஒரு சொத்தா இருந்துச்சு. அந்த எலிகளை ஒழிக்க வேற வழி இல்லையே. பூனைக்கு மட்டுமில்லே,
பொண்ணுக்கும் பயங்கர டிமாண்ட்டு. அந்தப் பக்கம் கல்யாணத்துக்கு தயாரா இருக்கற பொண்ணுக்கு ஒரே வாரத்துக்குள்ளே
மாப்பிள்ளை கிடைச்சதாம். பொண்ணுக்குத்தான் இப்பக்கஷ்டம்,யாரைத் தேர்ந்தெடுக்கணுமுன்னு!
பொண்ணுங்களுக்குள்ளே ,'ஓஹ்... 50 ஆளுங்க என்னைக் கட்டிக்கப் போட்டி போட்டாங்க'ன்னு பெருமைப்பீத்தல் வேறயாம்!
பொம்பளைங்க இப்படிக் கூடிப் பெருமைகளை அளந்துக்கிட்டு இருந்தப்ப பொழுது போக்கா இருக்க ஆம்பளைங்க
'எலிப் பந்தயம் ( எலி ரேஸ்) விட்டுக்கிட்டு, 'பப்' தொடங்கி அங்கே மஜாவா இருந்திருக்காங்க. காசு வந்தவுடனே
குடி அது இதுன்னு எல்லாம் ஆரம்பிச்சிருச்சு. வாரத்துலே 6 நாள் வேலை. ஞாயித்துக்கிழமை ஓய்வு. அதென்ன ஓய்வோ,
துணி துவைக்கறதும், கிழிசலைத் தைக்கறதும், அக்கம்பக்கத்துலெ எதாவது பறவையை அடிச்சுக்கிட்டுவரக் கிளம்பறதும்,
இது ஒன்னும் இல்லைன்னா 'பைப்' புகைச்சுக்கிட்டுக் கதையடிக்கறதுமுன்னு நாள் போயிரும். சிலர் ஆட்டுமந்தையிலே இருந்து
ஒரு ஆட்டைத் திருடிக்கிட்டு வந்து பொலி போட்டுறதுகூட இருந்துச்சாம். அடுப்பெரிக்க விறகு வேணுமே. அதனாலெ சுள்ளி
பொறுக்க 20 கிலோ மீட்டர்கூட சிலசமயம் நடக்கவேண்டி இருக்குமாம்.
நாலே வருஷம்தான் இந்த வாழ்க்கை. அப்புறம் பெரிய பெரிய மெஷினுங்களைக் கொண்டு ஆழமாத் தோண்டி சுரங்கம்
அமைக்க கம்பெனிங்க வந்துருச்சு. சாதாரண ஆளுங்களாலே இதெல்லாம் செய்ய முடியாமப் போச்சு. அப்படியே இந்த
'கோல்ட் ரஷ்' ஒருமாதிரி அடங்கிடுச்சு.
இப்ப சுத்தமா ஒன்னுமே இல்லையாம். எல்லாச் சுரங்கத்தையும் மூடிட்டாங்க. என்ன இருந்து என்ன? அந்த ஒம்போது
காரட் தங்கம்தான் நகையா வருது இங்கே. திருப்பி வித்தா சல்லி தேறாதுல்லே. ஆனா டிசைனுங்க அருமையா இருக்கு.
அதுக்குப் பார்த்தா, போட்ட காசு? நமக்கு தங்கம்னு சொல்றதே ஒரு சேமிப்புக்காகத்தானே? தங்கம் விலை ராக்கெட்டுலே
ஏறி உக்காந்துக்கிடுச்சுன்னு பேசிக்கறாங்க. ஹூம்....
Friday, December 16, 2005
நியூஸிலாந்து பகுதி 35
Posted by துளசி கோபால் at 12/16/2005 09:57:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
சுரங்கம் எல்லாம் மூடிட்டாங்களா? நானும் என் பங்குக்கு வந்து கொஞ்சம் அரிக்கலாம்னு இருந்தேன். போச்சு. என்ன அடிக்கடி ப்ளாக் அலங்காரம் மாத்திக்குது!!!
சுரங்கம் மூடுனா என்ன , டூரிஸ்ட்டுங்களுக்கு அரிக்கரதுக்கு ஒரு சில இடம் இன்னும் இருக்கு.
'ஷாண்ட்டீ டவுன்' னு ஒரு இடத்துலே அப்ப 144/150 வருஷத்துக்கு முன்னாலெ இருந்தது அப்படியே மாடல் வில்லேஜா வச்சிருக்காங்க.
ஸ்டீம் ட்ரெயின் கூட இருக்கு.
அலங்காரம்? அது ச்சும்மா கொஞ்சம் பச்சைப் பெய்ண்ட் இலவசமாக் கிடைச்சது ஹி ஹி ஹி ஹி
அடடே, இது நம்ம பழைய அலங்காரமில்லா! (சும்மா, மதியை கலாய்க்கிறதுதான்!!)
இங்க கோலார்லயும் தங்கச் சுரங்கத்த மூடீட்டாங்க.
கொஞ்ச நாள் கழிச்சு....தங்கத்துக்கு மவுசே இல்லாமப் போயிரும். இன்னும் இருவது வருசந்தான். அதுக்கப்புறம் தங்கத்தச் சீண்ட ஆளிருக்காதுன்னு தங்கமலைச் சித்தரு சொல்றாரு. டுரிங் டுரிங் டுரிங்
துளசி,
அடிக்கடி மார்ற உங்க ப்ளாக் அலங்காரமும் சரி, சரித்திரத்தையும் உங்க நக்கல் மொழியில வக்கணையா சொல்றதும் சரி சூப்பர்தான் போங்க.
சரி, ச்சைனாக்காரங்கன்னு பார்த்துட்டு யூனிகோட் கன்வர்ட் பண்ணும்போது 'ஆ' விட்டுப் போயிருமே அதுமாதிரி ஏதாச்சும் எழுத்து விட்டு போயிருக்குமோன்னு கொஞ்ச நேரம் முட்டி மோதி பார்த்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது சைனாக்காரன்னு. அஞ்சே அஞ்சி செகண்ட்ல படிச்சி முடிக்க வேண்டிய சமாச்சாரத்த படிச்சி முடிக்க அஞ்சி நிமிஷமாச்சி. அது சரி.. நீங்க என்னைய சொல்லிட்டு இப்பல்லாம் ரெண்டே பக்கத்துல முடிச்சிர்றீங்க? ராம்கி சொன்ன அட்வைசா?
சித்தர்கள் சொன்னது போல் ரசவாதம் செய்து தங்கம் தயார் செய்து விடலாம், "எங்கே அந்த மூலிகை பெட்ரோல் ராமபிள்ளை"
எனக்கும் மூலிகையைக் கொண்டு தங்கம் தயார் செய்யமுடியும் வேண்டாம் எனக்கு ஆசையில்லை யாருக்காவது தேவையென்றால் சொல்லுங்கள் அந்த ரகசியத்தை நான் யாருக்கும் தெரியாமல் கூறுகிறேன்.
நன்றாக எழுதுகிறீர்கள். நேரில் உக்கார்ந்து கதை கேட்பது போல் இருக்கிறது :)
வாழ்த்துக்கள்
சுகா
Periyamma enga en yanai kutty ponai kutty?
தருமி,
உங்க பழசு( அலங்காரத்தைச் சொன்னேங்க) உங்களுக்கே மறந்துறப் போகுதேன்னுதான்
இப்படி ஒரு ஏற்பாடு:-)))
ராகவன்,
என்ன சொன்னீங்க இன்னும் இருவது வருஷம் கழிச்சு.... மவுசு போயிருமா?
அடடா... ஆனா அதுக்கு பதிலா ப்ளாட்டினம் அது இதுன்னு எதாவது வந்துருமேங்க.
இப்பவே வந்துக்கிட்டும் இருக்குங்களே. சரி. பொழைச்சுக் கிடந்தாப் பார்க்கறேன்.
டிஆர்பிஜோ,
ஏங்க இப்பத்தானே உச்சரிப்பைப் பத்தி நம்ம மதுமிதா சொன்னாங்க. 'சைனா' வை sainaa ன்னு
சொல்லிட்டீங்கன்னா? அதுக்குத்தான் நான் ஆரம்பத்துலே இருந்தே (மெய் எழுத்து வார்த்தையோட
ஆரம்பத்துலே வரக்கூடாதுன்னு விதி இருந்தாலும்) சும்மா, சைனா போலவர்ற வார்த்தைகளுக்கு
ச்சும்மா, ச்சைனா னே எழுதிடறது. எனக்குத் தமிழ் அவ்வளவாத் தெரியாதுங்க.(ஆமா இப்படிச் சொல்றது
தமிழ்நாட்டுலே இப்ப ஃபேஷனாமே?)
அந்த ரெண்டு பக்கம்- எல்லாம் உங்க ப்ளொக்குலே கத்துக்கிட்ட பாடம்தாங்க. நல்லது எங்கே இருந்தாலும்
எடுத்துக்கணுமாமே?
என்னார்,
பேசாம அந்த ரகசியத்தை யாருக்கும் தெரியாம உங்க ப்ளொக்லே போட்டுருங்க.
மனசுலே வச்சுருக்கற ரகசியம் ஒரு 'பாரம்', இல்லீங்களா?
சுகா,
வருகைக்கு நன்றி. எல்லாம் டிவி கிட்டே இருந்து படிச்சதுங்க. ச்சும்மா கேமெராவைப்
பார்த்துக்கிட்டு (லட்சோபலட்சம் மக்கள் முன்னாலே இருக்கறமாதிரி) நமக்கே நமக்குன்னு சொல்றதைப்
பாக்கறீங்கதானே?
சிநேகிதி,
யானை 'சம்மர் கேம்ப்'க்குப் போயிருக்கு. பூனை. அது அங்கேதான் போயிருக்கான்னு உளவு
பார்க்கப் பின்னாலேயே போயிருக்கு.:-)))
புது பூனைகுட்டிகள் கன ஜோர். அலங்காரங்கள் மாறினாலும் கைவண்ணம் மாறாது சிறப்பாக உள்ளது.
நன்றி மணியன்.
எனக்கும் இப்பத்தான் மனசு நிறைஞ்சிருக்கு.
யானையும், பூனையும் நல்லா இருக்கணும்.
துளசியக்கா,
நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய இடங்கள்ல 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்ன்னு NDTVல சொன்னாங்க. பயப்படும்படியா ஒன்னும் இல்லைன்னு நெனைக்கிறேன்.(ஏன்னா இந்த செய்திக்கு அவங்க அவ்வளவா முக்கியத்துவம் கொடுக்கலை)
உங்கள் நலத்தை தெரியப்படுத்தவும்.
கோபி,
விசாரிப்புக்கு நன்றி.
எனக்கு இன்னும் ஒண்ணும் ஆகலே.
தனி மயில் பாருங்க.
என்னங்க..நினச்சா எல்லாமே மாறுது, அதுவும் நித்தம் நித்தம்...ம்ம்..
தருமி,
எப்படி? புடிச்சிருக்கா? எல்லாம் நமக்கும் உதவி செய்யறதுக்கு 'மகளை'ப்போல ஒருத்தர் இருக்காங்கன்னு காமிக்கத்தான்:-))))
அந்தப் பூனைக்குட்டிங்க பட்டுப்போல இருக்குல்லெ?
dharumi,
ellaam oru kaaraNamaaththaan. ;)
-Mathy
அப்பாடி...இப்பத்தான் டீச்சர். உங்க பிளக்குல நிம்மதியா பாத்துட்டு நிம்மதியா பின்னூட்டம் போட முடியுது. அப்புறம் அந்த ரெண்டு பூனைக்குட்டிகளும் அழகோ அழகு.
ராகவன்,
நன்றி. எனக்கும் அந்த பூனைக்குட்டிங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
முன்னாலே உக்கார்ந்துருக்கே அதுபேர் 'மணி' பின்னாலெ அதோட தலையைத் தடவறது ஜிஞ்ஜு.
பேர் வைக்காட்டா என் தலை வெடிச்சுறாதா? :-)))
Post a Comment