Friday, December 23, 2005

நிக்கொலஸ், ஏங்க இப்படிச் செஞ்சீங்க?

நம்ம கிறிஸ்மஸ் தாத்தா 'சேண்டா க்ளாஸ்' இருக்காரே, அவரோட பேருதாங்க இது.நிக்கொலஸ். அவருடைய மனைவி பேரு யாருக்காச்சும் தெரியுமா? தெரிஞ்சவங்ககை தூக்குங்க. அடடா, மன்னிக்கணும். ஸ்கூல் ஞாபகம். அந்தம்மா பேரு மேரி ஆன்.


விவரம் தெரியாத புள்ளைங்க உலகத்துலே இந்த சேண்டாவுக்கு ஒரு அற்புதமான இடம் இருக்கு.எது வேணுமுன்னாலும் அள்ளித்தர்ற வள்ளல். அப்பா அம்மாட்டே 'கொஞ்சமே கொஞ்சம்' நல்லபடியாநடந்துக்கிட்டா 'சேண்டா'வுக்கு குஷி கிளம்பிடும். அப்புறம்?


அப்புறமென்ன? வீட்டு ஷாப்பிங் லிஸ்டைவிட நீளமா பசங்க வச்சுருக்கற 'விஷ்' லிஸ்ட்டுலே முடிஞ்சவரைகொடுத்துட்டுத்தான் மறுவேலை.அதான் வீட்டு வீட்டுக்கு சேண்டா இருக்காங்களே, நிக்கொலஸ்க்கு அசிஸ்ட்டெண்ட்!
சேண்டாவுக்கு லெட்டர் போட்டு, லிஸ்ட் அனுப்பலாம். அதுக்கே இங்கே ஒரு அட்ரஸ்கூட இருக்கு. ஸ்டாம்புகூடஒட்டவேணாம்.


'லெட்டெர் ட்டு சேண்டா, நார்த் போல்.'


ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருதுன்னு எங்க நியூஸிலாந்து போஸ்ட் சொல்லுது.


பண்டிகை சமயத்துலே, டிசம்பர் ஒன்னு முதலே சேண்டாவுக்கு ஏக டிமாண்ட். எல்லா ஷாப்பிங் மால்களிலேயும்ஒரு அலங்கரிச்ச இடத்துலே சேண்டா மஜாவா ஒரு நாற்காலியிலே இருப்பார். கூடவே ஒரு ஃபோட்டொகிராஃபர்.உங்க புள்ளை சேண்டா மடியிலே இருக்கற கணத்தை, நீங்கமட்டும் அப்படியே மனசுக்குள்ளெ நிறுத்திக்கிட்டாப்போதுமா? வீட்டுலெ மத்தவங்க, ஊர்லே இருக்கற தாத்தா, பாட்டி, சித்தப்பு, பெரியப்பு, அத்தை சொத்தை( ஒரு ரைம்தான்)எல்லாம் பாக்கணுமா இல்லையா? 'கிளிக்' இப்பெல்லாம் டிஜிட்டல் ஃபோட்டோ வந்துருச்சுல்லே, உடனே ரெண்டேநிமிசத்துலே உங்க பணமும், படமும் இடம் மாறிடும். எல்லாமே யாவாரமாயிருச்சு.


இந்த மாசம் ஆரம்பத்துலே இருந்தெ கிறிஸ்மஸ் பார்ட்டிங்க வேற ஆரம்பிச்சுருதே. எங்கெங்கே கிறிஸ்மஸ் பார்ட்டியோ அங்கெல்லாம்சேண்டா இருக்கோணுமில்லையா? அப்படி இல்லேன்னா எப்படி? சேண்டா காஸ்ட்யூம் அமோக விற்பனை . இங்கேமுந்தியெல்லாம் 'காஸ்ட்யூம் ஹயர்' கடைகளிலே வாடகைக்கு எடுப்போம். அதுக்கு $20 தரணும். ஒரு உபயோகம்முடிஞ்சதும் அதை 'ட்ரை க்ளீன்' செய்யணுமுல்லே, அதுக்கான செலவும் இதுலே அடக்கம். ஒரு மாசத்துக்கு முன்னாலேயேஅட்வான்ஸ் புக்கிங் செய்யலேன்னா கிடைக்கறதும் கஷ்டம். இப்ப நிலமை வேற!


ச்சீனாக்காரங்க புண்ணியத்துலே(!) அதே 20 டாலருக்குச் சொந்தமாவே ஒண்ணு வாங்கிர முடியுது. அதுலேயும் கிறிஸ்மஸ்தினத்துக்கு மறுநாள் வாங்குனா 50% கழிவு. கெட்டுப்போற சாமானா என்ன? வாங்கி வச்சுக்கிட்டா அடுத்த வருசத்துக்கு ஆச்சு.கிறிஸ்மஸ் இருக்கறவரை சேண்டாவும் இருப்பார் தானே?


இப்ப,மத்த வியாபார நிறுவனம், ஆபீஸ், சர்ச்ன்னு பண்டிகை உணர்வை உண்டாக்க எங்கே பார்த்தாலும் சேண்டாக்களின்தேவை அதிகரிச்சுப் போச்சு. இங்கெ யுனிவர்சிட்டி, ஹைஸ்கூல் எல்லாம் விடுமுறை விட்டாச்சில்லையா, அந்தப்பசங்களுக்கும் வேலை வாய்ப்பு . மணிக்கு 10 டாலர் சம்பளம். இது நியூஸி நிலவரம். உலகத்துலே மத்த இடங்களிலும்முக்கியமா வெள்ளைக்கார நாடுகளிலேயும் இப்படித்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.


குழந்தை உலகத்தின் ஆதர்ஷ புருஷனாக 'வேஷம் கட்டுற' ஆட்கள் இப்ப இதையும் கேவலப்படுத்தற மாதிரி நடந்துக்கறாங்கன்னுஒரு பேச்சு கிளம்பியிருக்கு. வதந்தின்னு சொல்ல முடியாம ஆதாரபூர்வமா வெளியாகி இருக்கு.


குடிகார சேண்டா, கொள்ளையடிக்க வந்த சேண்டா, வேகக் கட்டுப்பாட்டை மீறிக் காரோட்டிக்கினு போன சேண்டா,அவுத்துப் போட்டுட்டுப் போன சேண்டான்னு ஒரே பேஜார். முழு விவரத்துக்கும் இங்கே பாருங்க.


நிக்கொலஸ், இது என்ன அக்கிரமம்? 'கலி முத்திப்போச்சு'ன்னு சொல்லிறலாமா?

13 comments:

said...

அக்கா,
நம்ம ஊர்ல இந்த பிள்ளையார பலவிதமா வச்சு அழகு பார்ப்பாங்க. கிரிக்கெட் விளையாடுறதுல இருந்து கில்லி வரைக்கும். அப்புறம் இந்த சினிமாவுல நம்ம எல்லாக் கடவுள்களும் டான்சு பாட்டு , அப்புறம் பல அவதாரம் எடுத்து கொலை கொள்ளை எல்லாம் செய்வாங்க.

பாருங்க இந்த ஜீசஸ் அப்படியில்ல. சும்மா ஆட மேச்சோமா தத்துவத்த சொன்னோமா நாலு மேஜிக் பண்ணுனமா அப்படீன்னு இருந்துருவார். சரி அப்ப எதெ வச்சு பொழுது போக்குறது. அங்கதான் வர்றார் நம்ம santa. தாத்தாதான் எல்லாத்துலேயும் புகுந்து விளையாடுறார். இவர் இல்லைனா இந்தப் பண்டிகை களைகட்டாது. சும்மா பண்ண்டிகையாப் போயிரும். இவராலதான் இது ஒரு கொண்டாட்டமா இருக்கு. இருந்திட்டுப் போட்டுமே.

இந்த வருசம் நான் பிள்ளைகளோட சான்டா படம் எடுக்கப் போனப்ப பார்த்தா இரண்டு கல்லூரிப் பெண்கள் தாத்தாவோட மடில ஒக்காந்து படம் புடிக்குதுங்க. இதெல்லாம் சமகசமக்கா.

இங்க பாருங்க அவர் ஒரு பாட்டியோட போஸ் கொடுக்கிற கம்பீரத்த.

http://members.dslextreme.com/users/klompen/Impacted%20Wisdom%20Truth/Santa%20Ron%20and%20Good%20Girl.jpg

ரொம்ப முக்கியமான வேண்டுகோள்:
அன்புள்ள நண்பர்களே நான் கடவுளைப் பற்றி சொன்னது தமிழ் படங்கள்ல பாத்த செய்திதான். மத்தபடி எந்த மத உணர்வாளர்களையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. அப்படிப்பட்டால் மன்னிச்சுருங்க ப்ளீஸ் பின்னிப் பெடலெத்துராதீங்க.

said...

துளசி,
- அன்பளிப்புக் கொடுக்கிற சான்டாவுக்கு யாராவது அன்பளிப்புச் செய்(த/ற)துண்டா?
- யாருக்காவது அன்பளிப்புக் கொடுக்க அவர் மறந்ததுண்டா?(hint.. hint)
- உண்மையான(!?)சான்டா செய்வது பரம்பரைத் தொழிலா?
- ஊதியம் உண்டா?

பதில் சொல்லாட்டி மண்டை காய்ந்துவிடும் (யாருக்கு என்றெல்லாம் கேட்கக் கூடாது) :O)

said...

ஆமாம் அக்கா. இங்க அமெரிக்காவுல கூட நீங்க சொன்ன மாதிரி தான். இந்த வருடம் எங்க பொண்ணு (இரண்டே முக்கால் வயசு) சாண்டாவப் பாக்கற இடத்துல எல்லாம் அவர் மடியில போயி உக்காந்துக்கிட்டு 'கிறிஸ்துமஸ்ஸுக்கு என்ன வேணும்?'னு சான்டா கேட்டா, சாக்லெட் வேணும்னு சொல்லிகிட்டு இருக்கா. இதுவரைக்கும் தண்டத்துக்கு மூணு சான்டாவுக்கு போட்டோ பிடிக்க டாலர் அழுதாச்சு. :-)

ஏதோ இந்த வருஷம் எங்க பொண்ணு சாக்லெட் தான் கேக்கறா. அதனால சான்டாவோட அஸிஸ்டன்டுக்கு அவ்வளவு செலவு இல்லை. அடுத்த வருஷத்துல இருந்து தான் இருக்கு காசுக்கு வேட்டு.

இந்த பேட் சான்டாக்களின் தொல்லை வேற இப்ப ஆரம்பிச்சிருச்சு. அதனால் குட் டச், பேட் டச் எல்லாம் சொல்லிக்கொடுக்கணும். :-(

said...

கல்வெட்டு,

நன்றி.

சேண்டா கட்டாயம் இருக்கோணும். இல்லைன்னா அந்த கிறிஸ்மஸ் மகிழ்ச்சி இருக்காது. பிரச்சனை என்னன்னா
அந்த உடுப்புப் போடும்போதாவது கொஞ்சம் கண்ணியமா நடந்துக்கலாம் தானே?

said...

ஷ்ரேயா,
நம்ம வீட்டுக்கு சேண்டா எப்ப வருவாருன்னே தெரியாது.
தீபாவளிக்குக்கூட வரலாம்.
பரிசு கொடுக்க மறக்கறதா? விட்டுருவோமா?:-))))

said...

குமரன்,

உலகம் எங்கும் ஒரே மொழிதான். 'குட் டச் பேட் டச்' சொல்லித்தரும் மொழி.
என்ன செய்யறது? வருத்தமா இருக்கு.

said...

சான்டாவோட பேட் டச் எல்லாம் நம்ம ஊர்லே கிடையாது. நம்ம சர்ச்லேயே உள்ள ஆளுங்கதானே அந்த வேஷம் கட்டிக்கிறாங்க. அதனாலே ரொம்ப ஹோம்லியா இருக்கும். எங்க குட்டி பையன்கூட லீவ் விட்டதும் சாண்டா வேசம் கட்றேன்னு அவங்க அக்காவோட சிகப்பு கலர் சுடிதார் எல்லாம் ஒருவழி பண்ணிட்டான். இப்போதைக்கு அந்த தொப்பிதான் அவர் தலையில் ஆடிகிட்டு இருக்குது!!

said...

தாணு,

தப்பிச்சீங்க.

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும்
எங்கள் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

said...

//பிரச்சனை என்னன்னா
அந்த உடுப்புப் போடும்போதாவது கொஞ்சம் கண்ணியமா நடந்துக்கலாம் தானே? //

நானும் உங்கள் கட்சியே.

said...

துளசிம்மா
சூப்பரா இங்கே போடறீங்க
கற்பூரம்

சாண்டா என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம்.
நம்ம தி.நகர் உஸ்மான் ரோடு கடைவீதிலயும் சாண்டாங்க கையில பரிசுப்பொருளோட இருக்காங்க.கிருஸ்துமஸ்
களைகட்டவேணாமா?

அந்த உடை போடறப்ப அந்த புனிதமான உணர்வோடயும் இருக்கணும் தான்.அப்படிதான் இருக்காங்க.இந்த விதிவிலக்குங்கள விட்டுத்தள்ளுங்க திருஷ்டி பொட்டு மாதிரி கண்ணுபடாம இருந்துட்டுப் போகட்டும்

said...

கல்வெட்டு
///ப்ளீஸ் பின்னிப் பெடலெத்துராதீங்க///
எழுதுனதால தப்பிச்சீங்க:-)

இங்க பாருங்க
http://madhumithaa.blogspot.com/2005/12/blog-post_113532280185201288.html

said...

கல்வெட்டு & மதுமிதா,

நன்றி.

மது,

'இங்கே ' உங்க தயவுதான்:-))))

said...

மதுமிதா,

--/ப்ளீஸ் பின்னிப் பெடலெத்துராதீங்க/-
எழுதுனதால தப்பிச்சீங்க:-)

//எழுதுனதால தப்பிச்சீங்க:-)//

ஹி..ஹி... நட்புன்னாலே மன்னிப்பதற்குத்தானே. எல்லாம் ஒரு பயம்தான். :-))))