Saturday, December 31, 2005

கூட்டிக் கழிச்சுப் பாத்தா.......
இதோ அதோன்னு வருசம் முடியுற இடத்துக்கு வந்துட்டோம். கொஞ்சம் நின்னு திரும்பிப் பார்த்தா,'பரவாயில்லை'ன்னுதான் தோணுது.

மெய்யாலுமா?

வேற என்னா சொல்லச் சொல்றீங்க? தனி மனுஷனுக்கு லாபநஷ்டக் கணக்கு வேற, ஒரு சமூகம்,ஒரு நாடுன்னு வந்தா அதுங்கணக்கு வேறயில்லே?


நாடுன்னு வர்றப்ப எந்த நாட்டையின்னு சொல்றது? ஆனானப்பட்ட அமெரிக்காவைக்கூட விட்டுவைக்கலை விதி.கத்ரீனா போட்ட ஆட்டம் கொஞ்சநஞ்சமா?


தமிழ்நாட்டுலே தண்ணி இல்லேன்னு இனி பேச்சே வரக்கூடாதுன்னு எச்சரிக்கை செய்யறமாதிரி இந்தத் தண்ணியாலெயே கஷ்டம். எல்லாத்துலேயும் கோராமை எதுன்னா, நிவாரணம் வாங்கப்போய் சாகறது?இந்த அநியாயம் உலகத்துலே வேற எங்காவது நடக்குமா?


இயற்கை பண்ணற சதி ஒருபக்கமுன்னா, மனுஷன் பண்ணற அட்டூழியம் ஒருபக்கம். தேவை இல்லாம போர்நடக்குது. இவன் பத்துப்பேரைக் கொன்னா அவன் ஒருத்தரையாவது கொல்லமாட்டானாமா?


சமாதானப் பேச்சு நடத்தறொமுன்னு சொல்லிச் சொல்லியே வருசக்கணக்கா சமாதானமே இல்லாமப்போச்சு.தலைவன் என்ற பேர் இருக்கறவங்களுக்கு ஒண்ணும் ஆகறதுல்லே, ஆனா பஞ்சப்பரதேசிகளான பொது மக்களுக்குவிழுது அடி பலமா.

சாதாரண ஜனங்க போற விமானம் கடலுக்குள்ளெ விழுது. ஆனா மந்திரிமார் போற விமானமோ, ரயிலோ எதுவோஅதிர்ஷ்டவசமா விபத்துலே இருந்து தப்பிக்குதாம்( இதுவும் அபகடமாகணுமுன்னு சொல்ல வரலை. ஆனா இது மட்டும் எப்படித்தப்பிச்சுருதாம்? அதே கவனிப்பு சாதாரணனுக்கு வேணாமாமா?)


ரெண்டு நாளைக்கு முன்னாலே இ-பேப்பர் ஒண்ணு பார்த்தேன். அரசியல் தலைவருக்குப் பொறந்தநாளாம். நல்லது.கொண்டாடட்டும். ஆனா பக்கத்துக்குப் பக்கம் கோஷமெல்லாம் கூவி, 'எங்கள் முதல்வரே'ன்னு கூட ஒரு ஆர்வக்கோளாறுலேபோட்டிருக்காங்க இந்த வட்டம், சதுரம், செவ்வகமெல்லாம். பத்திரிக்கையிலே போடக் காசு செலவாயிருக்காதா? ( அந்த வட்டத்துக்கும் சதுரத்துக்கும் உள்ளெ ஒரு பொருமல், இப்படியெல்லாம் கோஷம் போடவேண்டியிருக்கே!நம்ம பேர் எப்ப இப்படி வரப்போகுதோ? ஹூம்....)


நாடு இப்ப இருக்கற நிலையிலே, அதே தலைவரே, 'இந்த ஆடம்பரமெல்லாம் வேணாம். கஷ்டப்படுற ஏழைக்கு உதவலாமு'ன்னுஒரு வாக்கு சொல்லியிருந்தாலே மக்கள் மனசுலே இடம் கிடைச்சிருக்காதா?


ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் ஒரு மினிமம் கேரண்ட்டி இருக்குதேப்பா, எப்படியும் நடத்திரலாமுன்னு!பேசாம நானே சிரமம் பார்க்காம ஒரு ஆ.....சிரமத்தை ஆரம்பிக்கலாமான்னு இருக்கு. நமக்கு நாலுபேரு இருக்கமாட்டாங்களா?காசுக்கும் பஞ்சமிருக்காது. கோபாலும் என் சிஷ்யகோடி/கேடியா வந்துரலாம்!


ஆன்மீகமுன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. புதுசுபுதுசா கோயில் கட்டிக்கிட்டு இருக்காங்க. நல்லதுதான்.ஆனா அதுக்கு முந்தி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செஞ்சு கொடுத்துட்டுச் சாமி கும்புடலாமுல்லே?அழுக்கும் புழுக்குமா இருந்துக்கிட்டா சாமி கும்புடணும்? சுத்தபத்தமா இருக்கத் தேவை இல்லையா?


எல்லாக் கிராமத்துக்கும் இண்டர்நெட் வசதி செஞ்சுதராங்களாமே. பேஷாச் செய்யட்டும். தண்ணீ, மருத்துவ வசதி, ரோடு வசதி,இன்னும் மக்களுக்குத் தேவையான பல வசதிகள், பல கிராமங்களுக்கு இன்னும் இல்லைன்னு கேள்வி. வறுமை தாங்காமவிவசாயிங்க எலிக்கறி ( இங்கே பழைய காலத்துலே மவோரிகள் உணவுலே எலிக்கறி இருந்தாத்தான் பிரமாதமான விருந்தாம்!) தின்னாங்கன்னு படிச்சேன். இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களாமா? செல் ஃபோனும், நெட்டும் கிடைச்சுட்டா ?ப்ளொக் எழுதினா பசி அடங்கிரும், இல்லே?)


ஒரு வீட்டுலே அம்மா, அப்பாவுக்கு அஞ்சு மகன்கள். அஞ்சு மருமக வந்தாச்சு. மாமியார் எல்லாருக்கும் ஒவ்வொருட்யூட்டி பிரிச்சுக் கொடுத்தாங்க.

வீடு வாசல் பெருக்கித் துடைச்சு வைக்கணும் மருமகள் நம்பர் 1

சமையலுக்குத் தேவையான காய்கறிகளை, அரிசி பருப்பை சேகரிச்சுக் கொடுக்கணும் மருமகள் நம்பர் 2

எல்லாத்தையும் அடுப்புலே ஏத்தி ஆக்கி வைக்கணும் மருமகள் நம்பர் 3

வாழை இலையைக் கொண்டுவந்து, சுத்தம் செஞ்சு, நடுக்கூடத்துலே வரிசையாப் போட்டுப் பறிமாறணும் மருமகள் நம்பர் 4

எல்லா இலையையும் எடுத்துக் கடாசிட்டு, பாத்திரம் பண்டம் தேச்சு வைக்கணும் மருமகள் நம்பர் 5.

லிஸ்ட் போட்டுக் கொடுத்தாச்சு.


மறுநாள் காலையிலே நம்பர் 1 தன்னுடைய வேலையைச் செஞ்சாச்சு.

தூங்கறவங்க எழுந்திரிக்க முந்தியே பாயிலே இருந்துஅவுங்களை உருட்டி விட்டுட்டு எல்லாத்தையும் சுருட்டி வச்சு, பெருக்கி சுத்தம் செஞ்சாச்சு.

நம்பர் 2ம் 3ம் அவுங்கவுங்க வேலையைச் செஞ்சாங்க.

நம்பர் நாலு பரபரன்னு எல்லாத்தையும் வாழை இலை போட்டுப் பறிமாறியாச்சு. கடமை முடிஞ்சதுன்னு நாலு மருமகளும்ரெஸ்ட் எடுக்கறாங்க.

நம்பர் 5 வேகம்வேகமா வந்துச்சு, எல்லா இலைகளையும் அப்படியே வாரி வெளியே போட்டுட்டு, பாத்திரம் பண்டம்தேச்சு வச்சுருச்சு.

சாப்புடவந்த மகன்களும், அப்பா அம்மாவும் பேய் முழி முழிச்சுக்கிட்டு நின்னாங்களாம்.


அவுங்கவுங்க வேலையைச் செஞ்சப்ப, ஆளுங்க வந்தாங்களா, சாப்புட்டாங்களா, இன்னும் இலையிலே கை வைக்கமுந்தியே எடுக்கறமேன்னு ஒரு விசாரம் இல்லே.


அவுங்கவுங்க வேலையைச் செய்யட்டும். ஆனா ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு, கூட்டாச் சேர்ந்து செஞ்சிருக்கலாம்தானே?


இதுபோலத்தான் அரசாங்கமும் நடக்குது. எது கேட்டாலும் இது எங்க டிபார்ட்மெண்ட் இல்லைன்னு ஒரு பதில் ரெடியா வச்சுருக்காங்க.
ஜனங்க இதாலே படற அல்லல் கொஞ்சநஞ்சமில்லை. ஒரு பில்லு கட்டப்போனா குறைஞ்சது நாலு கவுண்ட்டர்மாறிமாறி நிக்கணும்.

அரசாங்கமே மக்களுக்காகத்தான். அதை நினைப்புலே வச்சுக்கணும் இல்லையா?

'போதாக்குறைக்குப் பொன்னம்மா'ன்னு சாலை விபத்துலே தினம் கொறைஞ்சது பத்துப்பேர். தீவிரவாதிகள் பிடியிலேமாட்டிக்கிட்டுக் கொஞ்சம் பேர்ன்னு எமனுக்கு ஓவர்டைம்தான் எப்பவும்.

இதையெல்லாம் மறந்துட்டுப் பார்த்தா, ஓரளவு பரவாயில்லாத வருசமாத்தான் இருந்திருக்குல்லே?

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே. ஒரு வாரம் நட்சத்திரப் பதிவு முடிச்சவுடனே கொஞ்ச நாளைக்கு 'சுப்'ன்னு இருக்கணும்ங்கறசம்பிரதாயத்தை ஒட்டி நானும் இருக்கலாமுன்னா, இந்தப் புதுவருசம் வேற வந்துக்கிட்டு இருக்கு.


'வருசம் முழுவதும் வருசப்பிறப்பு'ன்னு இங்கே நம்ம தமிழருவிக்கு ( தமிழ்ச்சங்க வெளியீடு) ஒரு கட்டுரைஎழுதியிருந்தேன். ரெண்டு மூணு வருசமாச்சு. கிடைச்சா உங்களுக்காக ஒருக்கா இங்கேயும் போட்டாப்போச்சு.

இந்த 2006வது வருசம், மக்களுக்கு நன்மையா இருக்கட்டுமுன்னு வேண்டிக்கறதைத் தவிர வேற என்ன செய்யமுடியுது?


அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

19 comments:

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா.

said...

Karthik & Kumaran,

Thank you & wish you the same.

said...

மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிறக்கப் போகும் புதிய வருடம் எல்லோருக்கும் அமைதியைத் தரும் நல்ல ஆண்டாக அமையட்டும்.

said...

அன்பு அம்மையீர்,

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

அலர்மேல் மங்கைக்கு ஆசிகள்.

அண்ணன், அண்ணி.

said...

சத்தியா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

said...

ஞானவெட்டியார் அண்ணா,

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.
நன்றி. மகளும் சொல்லச் சொன்னாள்.

said...

துளசிக்காவுக்கும் ஊட்ல, ஊர்ல உள்ள அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

கூட்டி கழிச்சிப் பாத்தாலும்
நல்லா இருக்கணும் எல்லோரும்
இந்த ஆண்டில் 2006.

புத்தாண்டு வாழ்த்துகள்
அனைவருக்கும்.

said...

சிங்.செயகுமார்,

நன்றி.

உங்களுக்கும் புதுவருச வாழ்த்துக்கள்.

கொண்டாடியாச்சு இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி.

அதான் டேட்லைன்லே இருக்கோமே:-))))

said...

நன்றி மது.

வாழ்த்துக்கள்.

said...

புத்தாண்டு வாழ்த்துகள் டீச்சர். எல்லாம் நல்லபடியா நடக்குமுன்னு ஆண்டவன வேண்டுவோம்.

said...

புத்தாண்டு வாழ்த்துகள் !!!

said...

ராகவன் & கார்த்திக்

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

//நம்ம பேர் எப்ப இப்படி வரப்போகுதோ? ஹூம்....)
//
வலைப்பூக்கள்ல நிரந்தர 'அக்கா' நீங்கதானே. (அம்மாக்கள் மட்டுந்தான் ரவுசு பண்ணலாமா என்ன?)

//சாப்புடவந்த மகன்களும், அப்பா அம்மாவும் பேய் முழி முழிச்சுக்கிட்டு நின்னாங்களாம்//
:)))

உங்களுக்கும் மாமாவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பின்ன நேத்திக்கே உங்களுக்கு புதுவருஷம் வந்துருச்சு. இங்க இப்பதானே வந்து முக்கா மணிநேரம் ஆறது.

பிகு: ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள போட்டோ புடிச்சு போட்டாச்சா? ஃபோகஸ் பூமேல இல்லாம புல் மேல இருக்கு. இருந்தாலும் புற்களோட resolution is breathtaking. எனக்கும் ரொம்பவும் பிடிச்சுருக்கு. தொடர்ந்து கலக்குங்க.

said...

துளசி அவர்களே,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விவசாயிகளின் அவல நிலை கொடுமையானது. மழை பொய்த்தாலும் கஷ்டம். அதிகமாய்ப் பெய்தாலும் கஷ்டம். சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம் எனினும், ஏரைப்பற்றி W.T.O வும் கவலைப்படுவதில்லை. அரசியல் அதில் ஆயிரம்.
அரசியல்வாதிகள் பொருட்செலவைக் குறைக்க நினைக்கவேண்டுமென விரும்பியிருக்கிறீர்கள். புதுவருட ஆசைகளில் இதையும் எழுதிக்கொள்ளுங்கள். நிறைவேறாத பலதில் இதுவும் வரும் -2007ல்.
அன்புடன்
க.சுதாகர்

said...

Periyamma Happy 2006!!!

said...

சுதாகர்,

எப்படி இருக்கீங்க?

நீங்க சொன்னது முற்றிலும் சரி.

ஏதோ ஒரு நம்பிக்கையின் அடியிலேதான் வாழ்க்கை ஓடுது,இல்லே?

said...

சிநேகிதி,

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.