Monday, December 26, 2005

குயிலைப் புடிச்சுக் கூண்டிலடைச்சு.......

எல்லாரும் ஆழமாவும் அகலமாவும், அறிவுப்பூர்வமாவும் சிந்திச்சுப் பதிவுகள் எழுதிக்கிட்டு இருக்கீங்க. நல்லாதான் இருக்கு.ஆனா எனக்கு அந்த மாதிரியெல்லாம் எழுதவர்றது இல்லே. இணையம் மூலமா தமிழ் விளையாடற இடங்களைக் கண்டுக்கிட்டது முதல்வெகுதூரத்துலே இருந்தாலும் தனிமை உணர்வு அவ்வளவா பாதிக்கறதில்லை. மரத்தடியிலேயும்,தமிழ்மணத்துலேயும் நிறையப்பேரைநண்பர்களா ஆக்கிக்க வாய்ப்புக் கிடைச்சது இன்னும், கூடக் கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு.


நான் பாட்டுக்கு மனசுலே தோணறதையெல்லாம் கிறுக்கிக்கிட்டு இருந்தேன். தினமும் ஒரு பதிவு போடறதுகூட இருந்துச்சுதான்.ஆனா 'இந்த வாரம் நீ தினமும் ஒரு பதிவு போடணும்'னு சொன்னவுடனே என்ன எழுதறதுன்னே புரியலை. அப்பத்தான் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துச்சு,


குயிலைப் புடிச்சுக் கூண்டில் அடைச்சு பாடச் சொல்லுகிற உலகம்
மயிலைப் புடிச்சுக் காலை ஒடிச்சு ஆடச் சொல்லுகிற உலகம்......

ஐய்யய்யோ, தப்பா நினைச்சுக்காதீங்க. நல்லா பாடுவாங்க சிலர்.
யாராவது ஒரு பாட்டுப் பாடுங்கன்னு கேட்டாப்போதும், ஒரு பாட்டும் 'சட்'ன்னு நினைவு வராது. அதுபோலன்னு ...... ( குழப்மே உன் பேர் துளசியோ?)


எத்தனையோ பேர் நல்ல கருத்துக்களையெல்லாம் சொல்லி நட்சத்திரப்பதிவுகள் போட்டாங்க. இப்படி எல்லாமே சீரியஸ் பதிவா இருந்தா எப்படி? நாம சினிமாவெல்லாம் பாக்கறோம். எல்லாமேவா கருத்துள்ள படமா இருக்கு?எத்தனை படத்தை, மூளையைக் கழட்டிவச்சுட்டுப் பாக்கறோம். ஆங்.... அதேதான். இப்பப் புரியுதுல்லே என்னசொல்லவரேங்கறது?


இது பண்டிகைக் காலம்வேற, கூடவே விடுமுறைகளும் வந்துருது. அவனவனுக்கு ஆயிரம் வேலை. இதுலே எல்லாத்தையும் லேசா எடுத்துக்கிட்டாத்தான் குடும்பம், புள்ளைகுட்டி, ஹாலிடேஸ்னு எஞ்சாய் செய்ய முடியும்.அப்பத்தான் வரப்போற வருஷத்துலெ ஒரு புத்துணர்ச்சியோட நம்ம கடமைகளைச் செய்யமுடியும். எப்பவும்ஆனந்தமா இருக்கறதுதானே உசத்தின்னு பெரியவுங்க சொல்லிட்டுப் போயிருக்காங்க. இந்த அக்காவுக்கும் அதெ பாலிஸிதான்.


சந்தோஷமா இருங்க. மனசுலே வர்றதை அப்பப்ப உங்க பதிவுகளிலே போட்டு வையுங்க. நட்பு, நண்பர்கள்ன்னு சொல்றது அருமையான விஷயம். சிலபேர் சொல்வாங்க , நாங்கெல்லாம் ஒரே மாதிரி, கருத்துவேற்றுமையே வராதுன்னு. அதைமட்டும் நம்பவே நம்பாதீங்க. எல்லாருக்கும் அவரவருக்குன்னு ஒரு கருத்து கட்டாயம் இருக்கும்.இருக்கணும். நாமென்ன ஆட்டு மந்தையா? சுயமா சிந்திக்கத் தெரிஞ்ச மனுஷங்களாச்சே.ச்சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அதைப் பெருசு பண்ணாம நாமெல்லாம் ஒரு குடும்பம்னு நினைச்சுக்குங்க. எல்லாம் சரியாயிரும்.


முதல்லே சொன்னேன் பாருங்க, சர்க்கஸ் கூடாரமுன்னு. அதுலே நம்ம மேலே ஃபோகஸ் லைட்டைத் திருப்புன மதிக்கும், இந்த அரங்கத்தை ஆக்குன காசிக்கும், இன்னும் தமிழ்மண நிர்வாகத்துலெ பங்கெடுத்து 'பிஹைண்ட் த ஸீன்'னுசேவை செஞ்சுக்கிட்டு இருக்கறவங்களுக்கும், என்னை இந்த ஒரு வாரமா சகிச்சுக்கிட்டு இருந்த சக வலைஞர்களுக்கும் நன்றி. வணக்கம்.

நாளைய நட்சத்திரத்தை வாங்க வாங்கன்னு வரவேத்துட்டு நான் நைஸாக் கழண்டுக்கறேன்.


சொன்னது ஞாபகம் இருக்குல்லே?


ஹகூனா மட்டாடா.... நோ வொர்ரீஸ்!!!

27 comments:

said...

இன்னமும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன் மனத்தை ஒருநிலைப்படுத்த. கவலைகளை மறப்பதைவிட அவற்றை தீர்ப்பதே நலம் தரும்.

said...

பத்மா,

நம்மாலே முடிஞ்சதை தீர்க்கலாம். நம்ம சக்திக்கு உட்படாதவைகளை மறக்க முயற்சிக்கறதுதான் நல்லது,
இது என் அனுபவம்.

said...

துளசி
மறக்கறது நினைக்கிறதும் நம்ம கைக்குள்ள வரதான் மன கட்டுப்பாடு அவசியம். இன்னும் அதில தேர்ச்சி பெறவில்லை:(

said...

அக்கா! நல்லா இருந்தது வாரம்.

said...

மரம்,

நன்றி.

வாழ்த்துக்கள்(? ! )

said...

துளசிக்கா வாரம் கலக்கலா இருந்திச்சி!
ஏதோ இன்னிக்கும் ஒருபதிவு போட்டு இருக்காங்கன்னு பார்த்தா கடைசில நன்றி உரை.அடடே ஒருவாரம் அதுக்குள்ள ஓடி போய்ட்டா? புத்தாண்டு வாழ்த்துக்கள் துளசிக்கா! (நாந்தேன் முதல் வாழ்த்து!)

said...

சிங் செயகுமார்,

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அங்கே வர்றப்ப உங்களைச் சந்திக்கப்போறேன்.

said...

உங்கள் வருகை எப்போது ஆவலோடு சிங்கை நண்பர்கள்!
நம்ம ஊட்டு பக்கம் பக்கம் ஒருதபா கூட வரலியே!

said...

ஒரு வாரம் அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா

///எப்பவும்ஆனந்தமா இருக்கறதுதானே உசத்தி///

ஆயிரத்தில ஒரு வார்த்தை

///சந்தோஷமா இருங்க///

உங்க பதிவின் வெற்றிக்கு
இதுக்கு மேல என்ன (வெங்காயம்)வேணுங்கறேன்:-))))))

நன்றி துளசிம்மா
உங்க பதிவுகளைப் பார்த்து தான் எழுத ஆரம்பிச்சது.
யாராவது காற்றுவெளி படிச்சு திட்டணும்-னா அருணாவுக்கு அடுத்த படியா நீங்க தான் காரணம்.

said...

மது,

//உங்க பதிவுகளைப் பார்த்து தான் எழுத ஆரம்பிச்சது//

அதானே, இவளே எழுதறப்ப நாம் ஏன் எழுதக்கூடாதுன்னு? இல்லையா?:-))))

வெங்காயம்........

சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன/ :-)))))))))

said...

Teacher, it was a nice week with you as a star. Wish you all the happiness and success.

said...

ஆட்டம், கொண்டாட்டம் என்று பிசியான வாரத்தில் நன்றாகவும் எழுதிட்டீங்க. அதுக்கும், புத்தாண்டுக்கும் வாழ்த்துக்கள்.
பழைய சந்தோஷங்களை வெளிக் கொண்டு வந்து இனிய நினைவுகளில் ஆழ்த்தியதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி,

said...

அய்யோ துளசிம்மா

///அதானே, இவளே எழுதறப்ப நாம் ஏன் எழுதக்கூடாதுன்னு? இல்லையா?:-))))///

அப்படி இல்ல
மூளை எவ்வளவுதான் இருந்தாலும் இதயம் முக்கியம்
இல்லியாம்மா
இங்கே டாக்டருங்க இருக்காங்க
இதயம் னு சொல்றது அன்பா இருக்கறதச் சொல்றேன்.

ச்சே பார்க்காத எழுதறதால எப்படியெல்லாம் விளக்க வேண்டியிருக்கு

எத்தனைதான் இருந்தாலும் அன்பில்லாது சகோதரத்துவம் இல்லாது அணுசரணை இல்லாது இருப்பதால என்ன பிரயோசனம்.இது எல்லாமே இங்க உங்க பதிவில இருக்கிறதாலயும் எனக்கு உடன்பாடா இருந்ததாலயும் தான்
சொன்னது.
இதுக்கு மேல வேற என்ன வேணும் சொல்லுங்க

அப்பாடா
ஏதாவது புரியும்படி சொல்லிட்டேனா இல்லியா

said...

ராகவன்,

எல்லா லீவையும் நல்லா அனுபவிங்க.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

அன்பு உஷா,

பழசெல்லாம் 'நினைத்தாலே இனிக்கும்' ரகம்தான்!

உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த வாரம் பாத்தீங்களா? அப்படிப்போடு 'போடு போடு'ன்னு போடறாங்க.

said...

சூப்பரா இருந்திச்சு சூப்பர் ஸ்டார் துளசியக்கா வாரம்....லீவு எடுத்துக்கிட்டுப் போயிடாதீங்க அக்கா. தொடர்ந்து எழுதுங்க. தம்பி தங்கச்சிங்க எல்லாம் ஆவலா காத்துக்கிட்டு இருக்கோம்.

said...

எத்தனை படத்தை, மூளையைக் கழட்டிவச்சுட்டுப் பாக்கறோம்

நான் அப்படியெல்லாம் கழட்டிவெச்சுட்டுப் பார்க்கறதில்லை. இருந்தாதானே கழட்டி வேற வைக்கணும். ;-)

ச்சே பார்க்காத எழுதறதால எப்படியெல்லாம் விளக்க வேண்டியிருக்கு

அது எப்படிங்க மதுமிதா பார்க்காமலே எழுதறீங்க? மானிடரை அணைச்சுட்டு வெறும கீபோர்டல அப்படியே குத்துமதிப்பா டைப் பண்ணுவீங்களா?

க்ருபா

said...

குமரன்,

இந்த லீவு காலம் முடியட்டும். மக்கள் நார்மலானவுடனே எழுதித் தள்ளிரலாம் என்ன?

பாவம்ப்பா, ஜனங்கள் பிழைச்சுப் போட்டும். நிம்மதியா கொஞ்ச நாள் இருக்கட்டுமே!

said...

கிருபா,

:-)))))))))

said...

அய்யோ கடவுளே

க்ருபாஆஆஆஆஆ
///அது எப்படிங்க மதுமிதா பார்க்காமலே எழுதறீங்க?///

முகத்தை பார்க்காது,
தொலைபேசியில பேசாது இங்க
எழுதறோமில்லியா
அதைச் சொன்னேன்ப்பா

விளக்கத்துக்கே விளக்கமா:-)

துளசிம்மா
இடையில் பாடம் கவனிக்கலைன்னா
என்ன பண்ணுவீங்க
இம்போசிஷன் எதுனா
குடுங்க சொல்றேன்

said...

நன்றி.
வாழ்த்து சொன்னதுக்குப்பிறகு இன்று நன்றி சொல்லத்தான் வரமுடிந்தது... சென்றவாரம் சில காரணங்களால் இந்தப்பக்கம் வர இயலாமல் போய்விட்டது. நேரம்கிடைக்கும்போது மற்றபதிவுகளை வாசிக்கவேண்டும். நன்றி.

said...

அதுதான் ஹகூனா மட்டாடா.... நோ வொர்ரீஸ்!!!
சொல்லியாச்சுல்லே. நேரம் கிடைக்கும்போது படிச்சாப்போதும். ஆனா அததுக்குப் பின்னூட்டம் மட்டும் கொடுத்துரணும், ஆமா.

said...

". மக்கள் நார்மலானவுடனே எழுதித் தள்ளிரலாம் என்ன..."// என்ன சொல்றீங்க, துளசி? இந்த விடுமுறைக்காலத்தில எல்லாரும் sub-normal ஆக இருக்கிறாங்களா என்ன? :-) :-(

said...

மது,

என்ன தண்டனைன்னு நேரில் வந்து சொல்லவா?

said...

தருமி,

அந்த நார்மல் என்னன்னா, லீவு முடிச்சுட்டு வழக்கமான வேலை நாட்களுக்குத் திரும்ப வர்றது. பலர், வேலை இடங்களிலேயே தமிழ்மணம் பாக்கறாங்களாமே. அவுங்க இப்போ எப்படிப் படிப்பாங்க? அதனால்தான்...... இப்படி

said...

எல்லாரும் ஆழமாவும் அகலமாவும், அறிவுப்பூர்வமாவும் சிந்திச்சுப் பதிவுகள் எழுதிக்கிட்டு இருக்கீங்க. //

ஐயையோ யார சொல்றீங்க. நிச்சயமா நான் இல்லை.

என்னை இந்த ஒரு வாரமா சகிச்சுக்கிட்டு இருந்த சக வலைஞர்களுக்கும் //

சேச்சே.. என்னாங்க நீங்க.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நறுமணம் வீசும் பூவா மொட்டவிழ்ந்து (எப்படி கற்பனை? புல்லரிக்குது!) அசத்திடுச்சி போங்க.

said...

டிபிஆர் ஜோ,

துளசியோட மகிமை, அதாங்க துளசி என்ற ச் செடியோட மருத்துவ குணங்களிலே ஒன்று இதாங்க. கற்பனைத் திறனை அதிகமாக்குமாம்:-)