Wednesday, December 14, 2005

வீரண்ணா

ரொம்பநாளா வராத அதாவது 'உங்களுக்கு' வராத படங்களைப் பத்தி ஒண்ணும் பேசலை. ஆனா இந்த மெளனம் இனியும் நீடிக்கமுடியாத நிலமை.


சிங்கப்பூர் சீமான்கள் தயாரிப்பு. செய்யட்டும் செய்யட்டும். தமிழ் சினிமா எடுக்கணுமுன்னு ஒரு ஆசை நெடுங்காலமாஇருந்துருக்கு போல. G.N. தாஸ், M. நேரு, G. ராமதாஸ் தயாரிப்பு. சிங்கை வலைஞர்கள் சந்தோஷப்படட்டுமுன்னு இவுங்க பேரைத் தேடிப் போட்டேன்:-)கதைக்காக அப்படி ஒண்ணும் மெனக்கெடலை. என்னாத்துக்குக் கஷ்டப்படறது? எல்லாம் தெரிஞ்ச கதையா இருந்தாலேபோதும். கண்டிப்பா 'பாஸ்' பண்ணிடலாம். பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வி மேலே, இருக்குற அதே நம்பிக்கை.அகம்பாவம் பிடிச்ச பணக்கார அம்மா( புருஷனை மதிக்க மாட்டாங்க)- ம்

அம்மாவின் ஒரே பொண்ணு,அதுவரை ஊர்ப்பக்கமே வராம இருந்த படிச்ச மகள்-ம்

அம்மாவுக்கு ஒரு தம்பி( அக்கா மகளைக் கல்யாணம் கட்டக் காத்திருக்கறவர்)- ம்

மிலிட்டரி ஆஃபீஸரா இருந்து, சரியான நேரத்துக்கு ஊர் திரும்பற கதாநாயகன் -ம்

பணக்கார அம்மாவின் நன்றியுள்ள வேலைக்காரர்( நாயகனின் அப்பாவும் இவர்தான்) -ம்

நாயகனுக்கு ஒரு மொறைப் பொண்ணு, கல்யாணக் கனவோட இருக்கணும்- ம்

அம்மாவுக்குக் கொத்தடிமையா இருக்குற வாயில்லாப் பூச்சிகளான ஊர் ஜனங்கள் -ம்

அம்மாவுக்கேத்த அடியாளுங்க( நாயகன் கிட்டே அடிவாங்கணும்)-ம்

லிஸ்ட்டு எல்லாம் சரியா இருக்கா. ஆமா.


அடுத்த அம்சங்கள்:

நாயகன் அம்மாவோட, பொண்ணை 'ஆடை இல்லாத' ஒரு சந்தர்ப்பத்தில் ( பொண்ணூ மயங்கிக் கிடந்துச்சுங்க) பார்த்துக்காப்பாத்தறாரு. தமிழ்ப் பண்பாடுன்னு பொண்ணு அவரையே கல்யாணம் செஞ்சுக்குது அம்மாவை எதிர்த்துக்கிட்டு.


எத்தனை ஆயிரம் படம் பாத்திருப்பீங்க. இப்ப நீங்களே கதையைச் சொல்லுங்க பார்ப்போம்.ம் அட.சரியாச் சொல்லிட்டீங்களே!சபாஷ்!


நடிகர்கள்:

'மாவீரன்' நெப்போலியன் எம் எல் ஏ - இரு வேடங்களில் கலக்குறாராம்( எதை?)


பணக்கார அம்மா - பழம் பெரும் நடிகை- மலையாள ஷீலா (செம்மீன்) ஆங்... வீட்டுலே உக்காந்து போரடிக்காம ஒரு படம் பண்ணேன்னு இருக்கலாம்.


மற்றும் மணிவண்ணன், வடிவுக்கரசி, சுந்தரராஜன் & பலர்

இசை...அய்யோ கேக்காதீங்க. செளந்தர்யனாம்.

இயக்கம் - கலாநிதி

சொல்ல மறந்துட்டேனே.... காமெடி நம்ம வடிவேலு. 'ஈ' க்குப் பயப்படறார்.

வீரண்ணா பயங்கரமா கடிச்சதாலே இப்பத் தட்டச்சு செய்ய ஏலாம ஒத்தை விரலில்' டொக் டொக்'னு அடிச்சுக்கிட்டு இருக்கேன்.


நன்றி. வணக்கம்.

14 comments:

said...

துளசி அக்கா, உங்களுடைய பர்சனல் விஷயங்களை இங்கே டிஸ்கஸ் செய்யறது சரிதானான்னு எண்ணிப்பாருங்க:-)))

said...

சுரேஷ்,

'எல்லாம் நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் ...' வகையறாதான்:-))))

said...

டீச்சர். இந்தப் படம் எப்ப வந்தது? இல்ல...இனிமேதான் ரிலீஸ் ஆகப் போகுதா? ஏன்னா....பாக்காம இருக்கலாம் பாத்தீங்களா!

said...

இன்னைக்குக் காலையில கே எல் ரேடியோவில ஒரு கண்றாவி பாட்டுப் போட்டான்... அது என்ன படமின்னு யோசிக்கையிலதான் இந்த வீரண்ணான்னு ஒரு படம் வந்திருக்குன்னு தெரியும்.

ஆனா, துளசியக்கா, நீங்க சொன்னது சரிதேன். உங்க சேவை எங்களுக்குத் தேவை - அதாவது இந்த மாதிரி திராபைகளைப் பத்தி முன்னாடியே சொல்றதைச் சொல்றேன் :)

said...

ராகவன்,

எப்ப எங்கேன்ற 'சினிமூலம்' தெரியாது. ஆனா வந்துருச்சு நம்ம வீட்டுக்கு:-))))

said...

பிரதீப்,

சிங்கைத் தயாரிப்பை கே.எல். ரேடியோவுலே போடாட்டி நல்லாவா இருக்கும்?

பக்கத்தூட்டுக்காரங்களாச்சேப்பா?;_)

said...

ஹலோ துளசி,

நாட்டுக்கு பிரயோசனமான விஷயத்தை அருமையா டிஸ்கஸ் பண்ணிட்டீங்க. தாங்க்ஸ். இந்த படத்த பார்த்து ஆளுக்காள் ஒரு மூனு மணி நேரத்த வீணடிச்சா என்ன ஆறது? அதான் சொல்றேன்.

அப்புறம், இப்பல்லாம் நம்ம நெப்போலியனோட மெய்ன் ஜாப் என்ன தெரியுமா?எம்.எல்.ஏ வேலையோ நடிக்கறதோ இல்ல. அவர் ஒரு பெரீய மென்பொருள் கம்பெனி வச்சிருக்கார். நம்ம பேங்க்லயும் வந்து முட்டி மோதி பார்த்தார் ஒன்னும் நடக்கலை. நடிப்பிலதான் சோ, சோன்னு பார்த்தா பிசின்ஸ்லயும் அப்படித்தான் போல.
நல்லாருக்கட்டும்.

said...

//இசை...அய்யோ கேக்காதீங்க.//

இப்போ நிறையப் படங்கள்ல அப்பிடித்தான் இருக்கு நிலமை!!!

said...

சேச்சி: யாரு இந்த படத்தை உங்களுக்கு கொடுத்தது? அவங்களுக்கு உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா?? :)

said...

டி ராஜ்,

நம்ம வீடியோ க்ளப்புக்கு வந்த படம்.

பிரச்சனை? நான் இந்த ஆங்கிள்லே யோசிக்கவேயில்லையே:-)

ஷ்ரேயா,

நல்லா சொன்னீங்க.

said...

டி ஆர் பி ஜோ,

படம் ரெண்டரை மணி நேரம்தாங்க .....ஹி ஹி ஹி
அதுலேயும் பாட்டு,பைட்டு எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செஞ்சா 1 மணி நேரம் இருக்கும்.


//சோ, சோன்னு //

பதிவுகளிலே இப்ப சோ பத்தி ஓடிக்கிட்டு இருக்குதே படிக்கலைங்களாங்க :-)))

said...

சேச்சி, என்னையும் ஒருத்தன் பிரண்டுன்னு சொல்லிகிட்டு ஒரு புது பாசில் படம் கொடுத்தான். பார்க்க முடியல. அவனுக்கு "வீரண்ணா"-வ ரெகமண்ட் பண்ண வேண்டியது தான் :)

said...

அக்கா (அக்கான்னு சொல்லலின்னா ஆட்டோ வருமாமில்ல)

கதை நல்லா இருக்கு.. உங்க பேஜ் பேக்ரவுண்ட் திக்கா இருக்கு படிக்க கஷ்டமா இருக்கு

said...

முத்து,
//அக்கான்னு சொல்லலின்னா ஆட்டோ.....//

நான் என்ன 'சொர்ணாக்காவா'?:-))))

தொழில் நுட்பம் நான் இல்லை. தோழி செஞ்சுதராங்க. அவுங்ககிட்டே உங்க 'முறையீடு' அனுப்பப்படுகிறது:-)))

ஆமா, 'எந்த'க் கதை 'நல்லா இருக்கு'?