Thursday, December 22, 2005

தமிழும் மலையாளமும்

மலையாளம் படிக்கறது ரொம்பவே சுலபங்க. மலையாள எழுத்துக்களைப் பார்த்தீங்கன்னா, நம்ம எழுத்துக்கு கொஞ்சம்சம்பந்தம் இருக்கு.


ஒரு ஒண்ணாப்பு பாடப்பொஸ்தகம் கிடைச்சாப் போதுங்க. அப்படியே படம் பார்த்து எழுத்துக்கூட்டிப் படிச்சுரலாம்.'க' ன்ற எழுத்து 'சட்'னு பார்த்தா நம்ம 'க' மாதிரிதான், கொஞ்சம் இன்னொரு வளைவு சேர்ந்து இருக்கும். எப்படி விளக்கிச்சொல்றதுன்னு தெரியலை, ஆனா எங்கியாவது மலையாள எழுத்தைப் பார்த்தீங்கன்னா விடாதீங்க. மனசுக்குள்ளெ நம்மதமிழ் எழுத்தை நினைச்சுக்கிட்டுப் பாருங்க. கொஞ்சம் புரிஞ்சுரும்!


எழுத்தைப் பாக்கணுமுன்னா இங்கே பாருங்களேன். ஒரு பரிச்சயம் கிடைக்கும். பாடம் 2 லே இருந்து க்ளிக் பண்ணுங்க.


எழுத்து கிடக்கட்டும். மொதல்லே பேச வருமான்னு கேக்கறீங்களா?
தாராளமா வரும். எல்லாத்துக்கும் ஒரு 'சிம்பிள்' டெக்னிக் இருக்குல்லெ.
தெலுங்கு பேசணுமுன்னா எல்லாத்துலேயும் ஒரு 'லு' சேர்த்துக்கணுமுன்னு தமாஷ் செய்றொமுல்லே,அதே மாதிரி, கொஞ்சம் மூக்கைப் புடிச்சுக்கிட்டுத் தமிழ்ப் பேசிப்பாருங்க.


எங்கெ சொல்லுங்க ..வ ந் து வந்து.


எப்படிக் கேட்டுச்சு? 'வந்நு' தானே?


அதேதான் அதேதான். பாருங்க, மூக்கைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டே பேசணும். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.அப்புறம் பழகிரும்.


எது? மூக்கைப் பிடிக்கறதா?


அட போங்க நீங்க, எப்பவும் தமாஷ்.


நம்ம உஷா இருக்காங்களெ, அவுங்க சொன்னது இது.

//அடிப்பொளி சேச்சி!

அருஞ்சொற்பொருள்அடிப்பொளி- தமிழில் "சூப்பர்" என்ற சொல்லுக்கு இணையானது. சகட்டு மேனிக்கு எதற்கு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.//

ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாத்தான் சொன்னாங்க. இதை மறந்துராம மனசுலே போட்டு வச்சுக்குங்க. ஆச்சா?


ஒண்ணுத்துக்கு உதவாதது, மோசம். இதை எப்படிச் சொல்லலாம்?

'தள்ளிப் பொளி' 'ஒண்ணினும் கொள்ளில்லெ'

தூள் கிளப்பியாச்சு = பொடி பொடிச்சு! கேமம்! உக்ரன்!


ஈ போஸ்டிங் வளரே கேமமாயி = இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருக்கு


ஓஹ் எந்தொரொரு பொங்கச்சம்? = ஓ.. எவ்வளவு வீண்பெருமை?


ஆணோ? = அப்படியா?

அதே= ஆமாம்.

22 comments:

said...

ஈ போஸ்டிங் வளரே கேமமாயி

-theevu-

said...

தீவு,

'கற்பூர புத்தி' உங்களுக்கு.
'சட்'னு பாய்ண்ட்டைப் புடிச்சிட்டீங்க.

said...

என்னால் மலையாளத்தைத் தெளிவாகவும் வேகமாகவும் வாசிக்க இயலும் - கற்றுக் கொள்ள உதவியது - 30 நாட்களில் கற்றுக் கொள்ளுங்கள் புத்தகம் தான்.

கற்றுக் கொள்ள ஆவலை உண்டு பண்ணியது -

மம்முட்டி -மோஹன்லால் நடித்த சில அதியற்புத திரைப்படங்க்கள்...

said...

அக்கா,
எனக்கு தெரிஞ்ச மலையாள வார்த்தைகள்லாம் unpublishable களே.. என்ன செய்யறது.. காலேஜுல அப்படித்தானே? :)

என்ன மலையாள வாசம் ஜாஸ்தி வீசுது?? உங்கள எதிர்த்து கேஸ் எதுவும் டமில்நாட்டுல இல்லேங்கற தைரியமா?? :)))

said...

பூனை குட்டி தினம் ஒரு இடம் மாறுது!

said...

நண்பன்,

மோஹன்லால் ஆரம்பகாலத்தில் நடிச்ச பழைய படங்களைப் பாருங்க. ரொம்ப யதார்த்தமா இருக்கும்.
இப்ப வ்ர்ற 'வெல்லுவிளி'யெல்லாம் இல்லாம அற்புதமான படங்கள் அவை.

ராமநாதன்,
//அக்கா,
எனக்கு தெரிஞ்ச மலையாள வார்த்தைகள்லாம் unpublishable களே...//

தட்டிக் கேக்க அப்ப 'அக்கா' இருக்கலையில்லையா. அதான் இப்படி.....

டமில் பீப்பிள் கேஸ் போடுவாங்களா? ஒரு டமில் மேன் சொல்லிட்டுப் போயிருக்காரேப்பா
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'ன்னு.

சிங். செயகுமார்,

இது நாயா என்ன, ஒரே இடத்துலெ கட்டிப் போட்டுவைக்க?

பொறந்தவுடனேயே ஏழு இடம் மாறுகிற பழக்கமுள்ளதாச்சே!

said...
This comment has been removed by a blog administrator.
said...

என்டெ மலையாளம் அத்ரே நல்லதல்லா. அதினால் ஞான் இப்பொள் கூடுதல் ஒண்ணும் பறயுன்னில்லா!!

துளசி அம்மே.. என்டே மலையாளம் கேமமாணோ?

மலையாள அகராதி வாழ்க!! ;O)

p.s:எழுத்துப்பிழை இருந்தததால் இதுக்கு முதல் போட்ட பின்னூட்டம் நீக்கப்பட்டு, பிழைதிருத்திய இந்தப்பின்னூட்டம் இடப்படுகிறது.

said...

ஷ்ரேயா,

நீங்க இதுலே பாஸ் மார்க் வாங்கியாச்சு:-)

டி ராஜ்,

சுகம்தன்னே.
மலையாளம் க்ளாச் வளரே நன்னாயிட்டுண்டு. ஈ க்ளாஸில் ஞானும் ச்சேர்ந்தோட்டே?

உங்க வரிகளைத் திருத்தியிருக்கு. படிச்சுட்டு 100 தடவை இம்போஸிஷன் எழுதச் சொல்லவா?

ச்சும்மா :-)))

said...

க்ளாச் னு இருக்கறதை க்ளாஸ்னு படிக்கவும்

said...

அடிப்பொளி சேச்சி.

பாலக்காட்டு மாதவன் நாயர்,காமேஸ்வரன் சகாயத்தில எனிக்கு இப்போழ் கொறச்ச கொறச்ச மலயாளம் வரும்.

அப்படியே மலயாளத்தில இருந்து சில பழமொழிகளை எடுத்து விடுங்களேன்

said...

நல்ல காலத்திலேயே எங்க ஊர் தமிழ் பாதி மலையாள கலப்பில்தான் இரிக்கும் `மக்ளே’. ரொம்ப பேசினொமுன்ன ஆ மக்கள் கொன்னு களையும்.!!

said...

என்னாங்க துளசி இந்த மாதிரி பதிவையெல்லாம் நான் கேரளாவுக்கு போறதுக்கு முன்னால வந்திருந்தா எவ்வளவு நல்லாருக்கும்.

சூப்பர் லெசன் போங்க. வளர நண்ணி. (இதுக்கு மூனு சுழியா போடணும்? தெரியலையே!:-(

said...

ஓ எந்தா! மலையாளம் கிளாசே! நன்னாயிட்டு நடக்கட்டும். டீச்சர். கொறச்சி எனிக்கு பறஞ்ஞு கொடுக்கனும்.

said...

அடிப்பொளியை உபயோகப்படுத்தி எங்க ஆபிஸ் சேச்சிங்களை அசத்துக்கொண்டு உள்ளென்.நன்றி

said...

முத்து, எந்த இது? ஒத்த வார்த்த எனிக்கு நன்னி பறஞ்சில்லா?
அடுத்து "கொள்ளாம்"
அருஞ்சொற்பொருள்
கொள்ளாம்- ஓ.கே மாதிரி, இதையும் எங்கிட்டு வேணா போட்டுக்குங்க :-)))

said...

சுதர்சன், தாணு, ராகவன், டிபிஆர் ஜோ,முத்து

பின்னூட்டுனதுக்கு நன்னி.

சுதர்சன் ,

பழமொழிக்குத் தனியா ஒரு பதிவே போட்டுரலாம். இப்போள் இத்திரி மடி.

மடி= சோம்பல்.

உஷா,

கொள்ளாம். சகாயத்தினு நன்னி.

said...

ஒரு சமயம், ஒரு மலையாளப் பெண்ணுடன் யாகூ சாட்-டை அப்பத்தான் ஆரம்பிச்சு இருந்தது. எனக்கு மலையாளம் பேசத் தெரியுமா என்று கேட்டப்ப, 'ஜலதோசம் பிடிச்சிருக்கிற அன்னிக்கு மட்டும் பேச வரும்' அப்படீன்னு சொன்னேன். அதுக்கு பிறகு அப்பெண்ணிடமிருந்து பதிலையே காணோம் :(

said...

malik,

:-)))

இதுலேயும் கொஞ்சம் நம்ம உஷா சொன்னதுபோல 'அருஞ்சொற்பொருள்' படிக்கலாமா?

ஜலதோஷம்=நீர்வீழ்ச்ச
பனி= ஜுரம்
ச்சும= இருமல்
சுகக்கேடு= உடல் நிலை சரியில்லை. அசுகம்

said...

yakkow,

continue pannunga... nalla irukku!

said...

என்னங்க சரவணா,

கொறைஞ்ச பட்சம் மலையாள சினிமா பாக்கறப்ப வசனம் புரிஞ்சு பார்க்கலாமுல்லே?:-)


ராம்கி,

நலமா?

கண்டினியூ பண்ணாப் போச்சு.

said...

//டமில் பீப்பிள் கேஸ் போடுவாங்களா? ஒரு டமில் மேன் சொல்லிட்டுப் போயிருக்காரேப்பா
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'ன்னு.//

ஈழத்தமிழ் மலையாளம் கலந்திருப்பதாகவும் அதனால் சிங்கைத் தமிழர் ஈழத்தமிழை அதிகம் விரும்புவதில்லையாம். இப்படி ஒருவர் நேற்று அகத்தியர் யாஹூ குழுமத்தில் எழுதினார். அவர்கள் ஆங்கிலம் கலந்த தமிழ் நாட்டுத் தமிழை விரும்புகிறார்கள் போலும். என்ன சொல்கிறீர்கள்:-)