Wednesday, March 21, 2018

ஆத்துக்குள்ளே ஆயிரம் தீவு (@அமெரிக்கா.... கனடா 19)

சரியா ரெண்டே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்துட்டோம். இப்பதான் நம்ம எலனாவுக்கு நிம்மதியா இருக்கு! பயணம் நதிக்கரையை ஒட்டியே என்பதால் எங்கும் பசுமை!
எதுக்கு இப்படி அவசர அவசரமா அடிச்சுப்பிடிச்சுப் போய்க்கிட்டு இருக்கோம்?  இன்றைக்கு நம்ம மூணு நாள் சுற்றுலாவின் கடைசி நாள் வேற!

மூணேகாலுக்குக் கிளம்பும் படகில் ஒரு யாத்திரை இருக்காம் நமக்கு!  மொத்தம் ஒரு மணி நேர உலா!  எங்கெயாம்?
செயின்ட்  லாரன்ஸ் நதியில் இருக்கும் தௌஸன்ட் ஐலண்டுக்குப் போறோம். ஆ....

ஒரு பேச்சுக்கு ஆயிரம்னு சொல்றாங்களே தவிர மொத்தம் ஆயிரத்து எண்ணூறு தீவுகள் சின்னதும் பெருசுமா நதியில் கிடக்குதாமே!  ஐ மீன்   மிதக்குதாமே!

Ivy Lea  என்ற இடத்தில் இருந்து படகில் நம்மைக் கூட்டிக்கிட்டுப்போய் சுத்திக் காட்டிட்டுத் திரும்ப இதே இடத்தில் கொண்டுவந்து இறக்கிடுவாங்க.  எல்லா டூர் கம்பெனிகளும் ஒன்னுபோல இதை அவுங்க ஐட்டி'நரி'யில் சேர்த்துருக்காங்க :-)
டூரிஸ்ட் பஸ்கள் நிற்கும் வரிசையில் நம்ம பஸ்ஸும் இடம் பிடிச்சது :-)  படகுத்துறை நீட்டா இருக்கு!

நம்ம படகு இஸ் ரன்னிங் லேட். காத்திருந்தோம். அப்பதான் ஆடி அசைஞ்சு வந்து சேர்ந்துச்சு.  மக்கள்ஸ் இறங்கக் காத்திருந்து, நாங்க  உள்ளே போனதும் நேரா மொட்டை மாடிதான். என்ன இருந்தாலும் அனுபவசாலிகள் இல்லையோ?  படம் எடுக்கத் தோதுப்பட்ட இடம் தெரியாதா என்ன?  :-)
Gananoque Boat line என்ற கம்பெனி  நடத்தும் டூர் இது! பெரிய படகுதான்.  கட்டமரன். மூணு நிலை.  முன்னூத்தியம்பது பேர் போகலாம். இதைவிடப்பெருசும் இருக்கு. ஐநூறு நபர்கள். இது டின்னர் போட்.   அந்தி சாயும் பொழுதில் ரெண்டுமணி நேரம்  மூணு கோர்ஸ் டின்னர் சாப்பிட்டுக்கிட்டே அழகை  ரசிக்கலாமாம்.
(ஆமாம்.... பொல்லாத அழகு... இருட்டுலே என்ன தெரியுமாம்? நம்ம கெமெரா வேற இரவுக்காட்சிக்குச் சரிப்படாது......... ஹிஹி )
பகல் நேரத்துலே  அஞ்சுமணி நேரம், மூணு மணி நேரம்னு பலதரப்பட்ட சவாரிகள்   நாள் முழுசும் வச்சுருக்காங்க.
இது இல்லாம வெவ்வேற கம்பெனிகளும் படகு விட்டுக்கிட்டு இருக்காங்கதான். தனியார் படகுகளும் உண்டு.

படகுக்குக் காத்திருக்கும்போதே நதியின் குறுக்கா ஒரு பாலம் தெம்பட்டது. அதை நோக்கித்தான் இப்போ நம்ம படகு முதலில் போச்சு. பாலத்துக்கடியில் போய் அந்தாண்டை நின்னு, திரும்பி  அப்படியே போறோம்.  இந்தப் பாலம் தௌஸன்ட் ஐலண்ட் பாலமாம். கனடா, அமெரிக்கான்னு  ரெண்டு நாட்டையும் இணைக்குது!  ஆஹா.... அதானா.... ஏகப்பட்டப் போக்குவரத்து!
இந்த நதியில் இருக்கும் தீவுகளில் வீடெல்லாம் கட்டி இருக்காங்க. ஒவ்வொன்னும் ஒரு அழகு!    சின்னதா ஒன்னில்  குடி வந்துட்டாக்கூடத் தேவலை!  நிம்மதியா இருந்துடலாமேன்னு தோணுச்சு. ஆனால் அங்கெல்லாம் வீடு வாங்கிக்க நமக்கு ஐவேஜூ இல்லையே.....

நம்ம லாரன்ஸ் நதி எப்படி  ரெண்டு நாடுகளுக்குச் சொந்தமோ, அதைப்போலத்தான் இந்தத்தீவுகளையும்  ரெண்டுநாடுகளும் பங்கிட்டுக்கிட்டு இருக்காங்க.

ஒரு தீவில் செயின்ட் லாரன்ஸ் சிலை கூட இருக்கு!
அங்கங்கே விதவிதமான கட்டடங்கள்!  மேலெ பறக்கும் கொடியை வச்சு எது  எந்த நாட்டைச் சேர்ந்ததுன்னு  புரிஞ்சுக்கலாம்.





நல்ல நல்ல ரிஸார்ட்கள், ஹொட்டேல்கள் எல்லாம் இருக்குன்னாலும் வெவ்வேற நாடு என்பதால் விஸா வாங்கி வச்சுருந்தால்  இறங்கிப்போய் தங்கிட்டும் வரலாம். நம்மது ஜஸ்ட் ஒரு டேஸ்ட் காமிக்கும் சினிக் டூர். அம்புட்டுதான் !

நம்ம படகு லேட்டாப் புறப்பட்டதால்  திரும்பி கரைக்கு வரும்போது  மணி நாலே முக்கால்.  அடுத்த ட்ரிப்புக்குக் கூட்டம் காத்திருக்கு!  (நல்ல பிஸினெஸ் போல!)
ரெஸ்ட்ரூம் சமாச்சாரங்கள் முடிச்சுட்டுக் கிளம்பிட்டோம்.  சுமார் மூணு மணிநேரப் பயணம், முன்னூறு கிமீ தூரம்..... இப்போ..... டொரொன்டோவுக்குத் திரும்பி வர்றோம்.

முதல் ரெண்டு மணி நேரம் அனக்கமே இல்லை. அப்புறம் நம்ம  ட்ரைவருக்கும்  டூர் டைரக்டருக்கும் தனித்தனியா அன்பளிப்புக்கான பைகள் வலம் வந்துச்சு.   கம்பெனி நிர்ணயிச்சது  ஆளுக்கு பத்து டாலர்   ஒரு நாளைக்கு என்ற வீதம்,  நாம் கொடுக்கற முப்பதில் பதினைஞ்சு ட்ரைவருக்கும், பதினைஞ்சு டூர் டைரக்டருக்கும் என்ற  கணக்கு.

இந்த சம்ப்ரதாயம் முடிஞ்சவுடன்,  கம்பெனி வகையில் அவுங்க நடத்தும் இதே மாதிரி டூர்கள் விவரம் அடங்கிய ப்ரோஷர், ரெண்டு சவரனுடன் நமக்கெல்லாம்  :-)
'செகன்ட் கப்'புக்கு நுழையுமுன்னேயே  சாலையில்  அஞ்சு நிமிட் ஓரங்கட்டுனதில் நாங்களும் இறங்கிட்டோம்.  மணி இப்பவே ஒன்பதாச்சு.  அறைக்குப்போயிட்டுத் திரும்பி வரவேணாமேன்னு  ஒரு கடையில் ரெண்டு பீட்ஸா துண்டுகள்  வாங்கிக்கிட்டு பொடி நடையில் ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம்.

நம்ம மூணுநாள், மூணு ஊர் டூர் நல்லபடியா முடிஞ்சது.  இனி நாம் கனடா வந்த வேலையைப் பார்க்கணும்.

இதைப் பத்தி நினைப்பு வந்ததும்....  டூர் முடிச்ச களைப்பெல்லாம் பறந்தே போச்சு.  முதலில் ஸ்டோரேஜில் போட்டு வச்ச  பெரிய பெட்டிகளை எடுத்து வந்து கொஞ்சம் துணிமணிகளை ஸார்ட்டவுட் பண்ணிக்கிட்டு,  நாளைக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பார்க்கலாம்.


தொடரும்........ :-)


11 comments:

said...

படகுத்துறை : ஆரம்பிக்கும் இடம் அமைதியாகத்தான் இருக்கிறது! ஆயிரம் தீவுகளை நோக்கிப் போகிறோம் என்ற சுவடு கூடத் தெரியாமல்! ஒரு தீவிலாவது இறங்கிப் பார்த்திருக்கக் கூடாதோ...!

said...

வாங்க ஸ்ரீராம்.

தீவில் இறங்கணுமுன்னா வாட்டர் டாக்ஸியில் போகணும். இந்த ஸைட்ஸீயிங் படகு, அங்கெ நிற்கவோ, நிறுத்தவோ ஏற்பாடொன்னும் இல்லை. ஆழமும் வேணும், இல்லையோ....

பார்க்கலாம். அடுத்தமுறை (!) ரெண்டுநாள் ஒரு தீவில் தங்கினால் ஆச்சு!

said...

மாமி அங்க படகுதுறயண்ட நம்மூர் மாதிரி ஸ்னாக்ஸ் எல்லாம் விக்கறாளா

said...

அருமை நன்றி

said...

படங்கள் மட்டும் இல்லையென்றால் நினைவுகளில் இருந்துஎழுதுவது சிரம்ம்தானே

said...

டேஸ்ட் காண்பிக்கும் சீனிக் டூராக இருந்தால்கூட அருமை.

said...

வாங்க பார்த்தசாரதி,

ஆமாம்.... சுடச்சுட மொளகாய் பஜ்ஜி எல்லாம் போட்டு விக்கறான்னு சொல்லிக்க ஆசைதான்......... ஆனா..................... இல்லையே... :-)

said...

வாங்க விஸ்வநாத் .

நன்றீஸ் !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அப்டீங்கறீங்க? அப்படியும் வச்சுக்கலாம்தான் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆசையைக் காமிச்சுட்டா.... இன்னொருக்கா வந்து போவாங்கன்ற நம்பிக்கைதான் !!

நமக்கும் அப்படித்தானே இருக்கு :-)

said...

படகுப் பயணம் - வாவ்.

மத்தியப்பிரதேசத்தில் இப்படி ஒரு Cruise பயணம் செய்திருக்கிறேன் - ஆனால் அப்படி ஒரு பாட்டும் டான்ஸும் அதில் - நதியின் அழகை ரசிக்க விடாதபடி சப்தம்!