Wednesday, March 28, 2018

பேரருவியின் பின்பக்கம் போலாமா? (@அமெரிக்கா.... கனடா 22)

ட்ராவல் கவுன்ட்டரில் போய் நின்னதும்  ஆளுக்கொரு பேட்ஜ், (ஸ்டிக்கர்தான்) சட்டையில் ஒட்டிக்கக் கிடைச்சது.  'கொஞ்சம்  வெயிட் பண்ணுங்க'ன்னும்போதே  டூர் கைடுன்னு ஒருத்தர் வந்து, நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனார். இவர்தான் இந்த பஸ்ஸுக்கு ட்ரைவரும் கூட! ரெக்ஸ் என்ற பெயர்.

நம்மது விஐபி சம்மர் டூராம்.  அட!  மாலை மரியாதை எல்லாம் உண்டோ?  ஹிஹி....  ச்சும்மா...   எங்கேயும் வரிசையில் காத்திருக்க வேண்டாமாம். கைடு நம்மைக் கையோடு கூட்டிப்போய் எல்லாத்தையும் விளக்கிக் காமிச்சுட்டு, நம்ம ஹொட்டேலில் கொண்டு வந்து விட்டுடுவார்!  ரொம்ப நல்லதாப் போச்சு.
முந்தி இதுக்கு ஸினிக் டூர்னு பெயர். இப்ப அதை மாத்தி ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ்ன்னு (பிடுங்கித் தின்ற மாதிரி!) வச்சுருக்காங்க.....  நமக்கும் கற்பனை பிச்சுக்கிட்டுக் கிளம்புதுல்லே :-)

ஏற்கெனவே ஒரு சில ஹொட்டேல்களில் இருந்து பிக்கப் பண்ணிய மக்கள் பஸ்ஸில் இருந்தாங்க. மொத்தம் ஒரு இருபத்தியாறு பேர்!
நியாகராத் தண்ணீர்,  கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே இதைக்கூடக் கன்ட்ரோல் பண்ணி எவ்ளோ தண்ணி வினாடிக்குக் கொட்டணும் என்ற கணக்குபடி  அனுப்பறாங்களாம்!




அந்த  ஃப்ளோ கன்ட்ரோல் செய்யும் இன்ட்டர்நேஷனல் டேம் என்ற இடத்தாண்டை  முதலில் நம்மைக் கொண்டு போய் காட்டிட்டு (வண்டியை விட்டு இறங்க வைக்கலை) அப்படியே பார்க் வே வழியா நம்ம ஹொட்டேலுக்கு முன்னால்  கீழே அருவியாண்டை இருக்கும் டேபிள்ராக்   வெல்கம் சென்ட்டருக்கு வந்து  வண்டியை நிறுத்தினார்.

அந்த  டேம் கிட்டே இருந்துதான்  தண்ணீர்  ரெண்டு திசையில் பிரிஞ்சு, ஒன்னு அமெரிக்காவின் நியாகராவுக்கும், இன்னொன்னு கனேடியன் நியாகராவுக்குமா பாயுது!  The International Niagara Control Works அண்ட் குதிரை லாடத்துக்கும் ஒரு எண்ணூறு மீட்டர்தான் இடைவெளி.
பார்க் வே என்ற  சாலையே அருமை. நியாகரா நதியையொட்டியே பசும்புல்தரைகளும்,  பறவைகளும் பூக்களுமா கண்ணுக்கு நிறைவுதான்!  வாத்து இனத்தைச் சேர்ந்த  (Brant Goose)  கூட்டம் அட்டகாசம்!
நமக்கும், நடந்து போய்ப் பார்க்க நதியை ஒட்டியெ இருக்கும் நடைபாதையும் அருமை. நிதானமாப் பார்க்கணுமுன்னா நடைதான் பெஸ்ட்!
குதிரைலாடத்துலே பாயறதுக்குக் கொஞ்சம் முன்னால் ஒரு  படகின் அடிப்பாகம்  அப்படியே கல்லில் மாட்டிக்கிட்டு நிக்குது. இதுவும் ஒரு நூறு வருசத்துக்கு முன்னே நடந்த சம்பவத்தின் எச்சம்.

  நதியில் மிதந்துவந்த படகைக் கரைக்குக் கொண்டு போகும் முயற்சியில் ரெண்டு பேர் வந்து கடைசியில் இப்படி மாட்டிக்கிட்டு பதினேழு மணி நேரம் தவிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க. அப்புறமா கயிறு போட்டு இழுத்துக் காப்பாத்தி இருக்காங்க.    இந்த Scow கொஞ்சம் கொஞ்சமாத் துருப்பிடிச்சு 'இளைச்சுப்போய்க்கிட்டே ' இருக்கு என்பதால்  இந்த ரெண்டாயிரத்துமுப்பதாம் வருசத்துலே அடியோடு காணாமப்போயிருமுன்னு 'பாலத்து ஜோஸியர்' சொல்றாராம்!


கதை சொல்லி முடிச்ச கைடு, வெல்கம் சென்டர் உள்ளே ஒரு குறிப்பிட்ட பகுதிக்குக் கூட்டிப்போனார்.


அங்கெ நமக்கெல்லாம் மஞ்சக்கலர் ரெயின் கோட் கொடுத்தாங்க. அங்கிருக்கும்  லிஃப்ட் வழியா  நம்மை   நூத்தி இருபத்தியஞ்சு அடிக்குக் கீழே  கொண்டு போனதும் பார்த்தால்.... குகை !   மலையைக் குடைஞ்சு போட்டுருக்கும் முற்றத்துக்கு வந்துருக்கோம்.


பேரருவியின் சாரல், நம்ம மேல் கனத்த மழைபோல் கொட்டுது! மழைக்கோட்டுக்குள் கெமெராவால் க்ளிக்கறதும்,  அதைத் தண்ணீரில் நனையாமல் காப்பாத்தறதும்  ஒரு சேலஞ்சுதான் போங்க...

தடதடன்னு தண்ணீர் பாயும்  பேரருவியின் பெரிய இரைச்சல் சத்தமும்,  அடர்த்தியான புகைக்குள்ளேயே  நின்னு  பார்க்கறாப்போல இருக்கும் காட்சியுமா....  தொண்டை கிழியக் கத்திப்பேசுனாதான் பக்கத்துலே நிக்கறவங்களுக்கு, நாம் என்னமோ வாயைத் திறக்காறாப்படி இருக்கு :-)

 வாய்க்குள்ளே எல்லாம் தண்ணி வேற  போயிருது. நல்ல தண்ணிதான், பரவாயில்லை....   இதுலே போஸ் கொடுக்கச் சொல்றது எப்படியாம்?  கண்ணு வேற தெரியலை.... கண்ணாடியும் குளிச்சுக்கிட்டு இருக்கே :-)


அப்புறம் ஒரு டன்னலுக்குள்ளே போறோம். நீர்வீழ்ச்சியின் உள்பக்கமாப்போய்  தண்ணீர் திரைக்குப்பின்னே நின்னு பார்க்கிறோம். தரையெல்லாம் நதநதன்னு ஈரம்.  அம்பதடி தூரத்துலே  கம்பி இல்லா ஜன்னல்  (!) இருக்குப்பா! அதுகிட்டக்கப் போக முடியாமல் கம்பித்தடுப்பு இருக்கு!  போனால் நம்மை இழுத்துக் கடாசிடும் அந்த வேகம்..... இல்லே?
தலைக்குமேலே தண்ணீர் தடதடன்னு பாய்ஞ்சுக்கிட்டே இருக்க, மலையைக் குடைஞ்சு இவ்ளோ பெரிய டன்னல் (பத்து கிமீ தூரத்துக்கும் அதிகமாமே!) போட்டு, உள்ளேயே நாலுமாடி வச்சது  நினைச்சுப் பார்த்தால் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு !  

இப்போ கோடை காலம் முடிஞ்ச சமயம் ( ஸெப்டம்பர்) என்பதால்  காலநிலை நல்லாவே இருக்கு. குளிர்காலத்துலெ வந்தால்,  குகைக்குள் பனிக் கட்டிகள் பாளம்பாளமாக் கிடக்குமாமே!
இந்தமாதிரி அருவிக்குப்போகும் திறப்பு ரெண்டு இடத்துலே குகைக்குள்ளே இருக்கு. எல்லாம் பார்த்துட்டுத் திரும்ப அந்த லிஃப்ட் வழியா மேலே வந்துட்டோம். எல்லாம் ஆகக்கூடி ஒரு  அரை மணி நேர  அனுபவம்தான்! ஆனால் ரொம்பவே வித்தியாசமான ஒன்னு! 
நூத்திமுப்பது வயசு ஆச்சு,  இந்த  குகை அமைப்பை உண்டாக்கி, நம்மை பேரருவியின்   பின்னால் கொண்டு போய் நிறுத்தும் சமாச்சாரம்!   ஜர்னி பிஹைன்ட் த ஃபால்ஸ் ஓவர் நௌ ! நல்லா  இருந்ததோ?
கைடு ரெக்ஸ், எல்லோரும்  பஸ்ஸுக்குத் திரும்பி வந்துட்டமான்னு கணக்குப் பார்த்துட்டு,  அடுத்த இடத்துக்கு இப்போ கூட்டிப் போறார்!

வாங்க கூடவே.......

தொடரும்  ........  :-)


14 comments:

said...

//போனால் நம்மை இழுத்துக் கடாசிடும்...//

அப்பாடி!

அருவியின் பின்னால் இருக்கும் அனுபவம் திகில் அனுபவம்தான்.

said...

அருவிக்குப் பின்னால் அனுபவம் - ஆஹா.... இந்த இடத்தில் படம் எடுப்பது ஒரு சவாலான விஷயம் தான். கேமராவினைக் காப்பத்தணுமே!

தொடர்கிறேன்.

said...

நீர்வீழ்ச்சியின் உள்பக்கமாகச் சென்று தண்ணீர் திரைக்குப்பின்னே நின்று பார்க்கும் நிலையிலான புகைப்படங்கள். உடல் சிலிர்த்துவிட்டது.

said...

சூப்பர்..சூப்பர்...


பரவசமா இருக்கு...

said...

வருகிறோம் தொடர்ந்தே. நன்றி

said...

ஒரு அருவியை எப்படியெல்லாம் ரசிக்கலாம்னு யோசிச்சு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அதுவும் அருவிக்கு உள்ள போய் பாக்குற மாதிரியான அமைப்பு.

முன்னாடியெல்லாம் படகுல கூட்டீட்டுப் போவாங்களாமே. அதெல்லாம் இப்ப இல்ல போல.

said...

Did you t sketch ‘ Maid of the mist’ boat ride.? Post photos please Rajan

said...

வாங்க ஸ்ரீராம்..

அவ்வளவா திகில் இல்லை :-) எல்லா ஏற்பாடுகளும் 'பக்கா' வா செஞ்சு வச்சுருக்காங்க. குகையைத் துளைக்கும்போது பயங்கரமா இருந்துருக்கும், இல்லே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கெமெராவை, தண்ணிபடாமப் பார்த்துக்கறது கஷ்டமாத்தான் போச்சு. லென்ஸ் முழுக்கத் தண்ணீர் அபிஷேகம்.... கொஞ்சம் பயந்துட்டேன்....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இன்னொரு டூரும் இருக்கு.... அப்படியே தண்ணீர் நம்ம தலைமேலே வாரிக் கொட்டுமிடம்.... கொஞ்சம் நடக்கணும், படிகள் ஏறணும் என்பதால் போகலை....

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

சரியான சொல்! உண்மையில் 'பரவசம்'தான்!

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர்வருகைக்கு நன்றீஸ்!

said...

வாங்க ஜிரா.

இப்பவும் படகுப்பயணம் இருக்கு! அருமையான வியாபாரம். விட்டுடுவாங்களா என்ன?

இன்றையப்பதிவை எட்டிப் பாருங்களேன்.

said...

வாங்க ராஜன்.

நம்ம படகுப்பயணம் இன்றையப் பதிவில் இருக்கு, பாருங்க.

மெய்ட் ஆஃப் த மிஸ்ட் அமெரிக்கப்பகுதி. நம்மது ஹார்ன்ப்ளோயர் க்ரூஸ். கனடா.