செகண்ட் கப்பாண்டை வந்துருன்னுட்டாங்க. முதல்லே இது என்னன்னே புரியலை. வில்ஸன் அவென்யூவாம். கூகுளார் சொல்றார் வெறும் 1.1 கிமீ தூரம்னு. ஆனா எக்ஸ்ப்ரெஸ் மோட்டர்வே தாண்டிப் போகணுமாம். ஆறரைக்கு அங்கே இருக்கணும். அதுதான் பிக்கப் பாய்ன்ட்.
சீக்கிரம் எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி ஆறேகாலுக்கு டாக்ஸி எடுத்தாச்சு. அஞ்சாறு நிமிட்லே கொண்டு போய் விட்டுட்டார் ட்ரைவர். அப்புறம்தான் தெரிஞ்சது, இந்த செகண்ட் கப், ஒரு கேஃபேன்னு! நாமும் ஒரு காஃபி குடிக்கலாமுன்னா எங்கே? ஏழுக்குத்தான் திறப்பாங்களாம்.
சரியான குளிர். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கார்பார்க் என்றதால் ஹோன்னு பெருசா இருக்கு இடம். இன்னொரு நாலுபேர் குழுவும் வந்து சேர்ந்தாங்க. ஆறு அம்பதுக்கு பஸ் வந்தது. ஏற்கெனவே ரெண்டு மூணு இடத்துலே இருந்து ஆட்களை ஏத்தியாச்சு.
டூர் டைரக்டர்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டாங்க ஒரு பெண்மணி. பெயர் எலனா. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம், ட்ரைவருக்குப் பின்னால் ரெண்டாம் வரிசை. முன்னால் ரெண்டு தோழிகள் ( 80+ வயசில் ) உக்கார்ந்துருந்தாங்க. வண்டி கிளம்பி அடுத்த பத்தாவது நிமிட்டில் இன்னொரு ஏழுபேர். பஸ் நிரம்பிருச்சு. அம்பது பயணிகள்!
இந்த டூர் கம்பெனியையும் வலையில்தான் பிடிச்சார் 'நம்மவர்'. கம்ஃபர்ட் டூர் னு பெயர். மூணுநாள், மூணு நகரங்கள் கொண்டுபோய் காமிச்சுட்டு, இங்கேயே கொண்டுவந்து விட்டுருவாங்க. ஒரு ஆயிரத்து எண்ணூறு கிமீ பயணம், மூணுபகல், ரெண்டு இரவுன்னு இவுங்களோடு இருக்கப்போறோம்.
வண்டி போகும்போதே சின்னதா ஒரு அறிமுகம் ஆச்சு. துள்ஸி அண்ட் கோபால் ஃப்ரம் நியூஸிலேண்ட். சட்னு தலை உயர்த்திக் கண்ணை விரிச்சுப் பார்த்து ஹை சொன்னாங்க எல்லோரும். ஆனா நாலைஞ்சு பேர் ' எங்களுக்கும் நியூஸிலேண்ட் வர்ற ஆசை இருக்கு'! னு சொன்னது எனக்குப் பிடிச்சுருந்தது!
நகரத்தை விட்டு, ஹைவேயில் வண்டி பறக்குது! ஒன்னரை மணி நேரத்தில் முதல் ஸ்டாப்!
'பெரிய'ஆப்பிளில் 'சின்ன' ப்ரேக்! அரைமணி நேரம். காஃபி அண்ட் ரெஸ்ட் ரூம் !
மிஸ்டர் ஆப்பிள்ஹெட்ன்னு பெயர் இருக்காம்.
கோல்பார்ன் (Colborne) என்ற ஊரில் இருக்கும் பெரிய பண்ணை. பிக் ஆப்பிள் என்ற பெயருக்குத் தகுந்தாப்லெ..... பெரிய ஆப்பிள் தோட்டத்துக்குள்ளே உண்மையாவே உலகின் மிகப்பெரிய ஆப்பிள் இருக்கு இங்கே!
1984 இல் ஆரம்பிச்ச பிஸினஸ், இப்போ நாடுமுழுசும் பெயர் வாங்கி இருக்கே! நம்ம கண் முன்னாலேயே ஆப்பிள் பைகளும் (Pie) ப்ரெட்களும் நம்ம கண் முன்னே தயாராகுது!
இதுநாள் வரை இங்கெ சமைச்சு, இங்கேயே வித்த பைகளின் எண்ணிக்கையை எழுதிப்போட்டு இருக்காங்க. அம்பத்தியொன்பது லட்சச் சொச்சமாம்............. அம்மாடியோ.... இதுதவிர மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கறதே இல்லையாம்!
நல்ல ரெஸ்ட்டாரண்ட், பழங்கள், மற்ற பழப்பொருட்கள், தீனி வகைகள் விற்கும் மார்கெட், நினைவுப்பொருட்கள் இப்படி எக்கச்சக்கமா இருக்கு!
நம்மூர் டைம்பாஸ் சமாச்சாரம்.... :-)
வெளியே பசங்களுக்கான பொழுதுபோக்குகளா..... மினி ட்ரெயின், மினி கோல்ஃப், Mini Zoo ... இப்படி மினிகள் ஏராளம்.
வெள்ளைக்காரனுக்குச் சுட்டுத்திங்கறது விருப்பம். அதிலும் புகை வாசனை அடிக்கும் வகையில் சுட்டுக்கறது விசேஷமாம்..... கரி எஞ்சின்போல உருளைகள் வச்சுச் சுட்டுக்கிட்டு இருக்காங்க!
(நம்மூர்களில் விறகடுப்பு இருந்த காலக்கட்டத்தில் ஈரவிறகால் அடுக்களை முழுக்கப் புகை மண்டிக்கிடக்கும். அந்த புகை மணம் சமைக்கும் பதார்த்தங்கள் எல்லாத்துலேயும் ஒட்டிக்கும்..... சாப்பிடும்போது.... ஐய்ய.... புகைநாத்தம் அடிக்குதுன்னு எனக்கு வேணாமுன்னு ஓடுனதெல்லாம் இப்ப எதுக்கு ஞாபகம் வருதுன்னு தெரியலையே! ஹாஹா...)
குழந்தைகுட்டி இருக்கறவங்க இங்கே வந்தால் ஒருநாள் பூரா பிக்னிக் அனுபவிச்சுட்டுப் போகலாம். அந்த மினி சமாச்சாரங்கள் எல்லாம் இலவசம்தான். திங்கமட்டும் காசு செலவளிச்சால் போதும்!
நானும் நினைவுப்பொருளா இருக்கட்டுமேன்னு ஒரு நாய்க்குட்டி வாங்கினேன். ஆப்பிளுக்கும் நாய்க்கும் என்ன சம்பந்தம்? :-) பைக்குள் கெமெராவைப்போட்டுட்டு, அப்புறம் குடோனுக்குள் போய்த் தேடும்படி ஆகிருதுன்னு நாயைக் கட்டி வச்சேன். நாயும் பைக்கு வெளியில் வேடிக்கை பார்த்துக்கிட்டே வரட்டுமே.... பெரிய பெரிய கண் இருக்குல்லெ :-)
இந்த ஆப்பிள் இருக்கு பாருங்க..... ஃபோட்டோ பாய்ண்ட் மட்டுமில்லே..... இதுக்குள்ளே ரெண்டு மாடிகள் இருக்கு! படிகளேறிப்போய்ப் பார்க்கலாமாம். உசரம் முப்பத்தியஞ்சு அடி. விட்டம் முப்பத்தியெட்டு அடி! மேலே இருந்து பார்த்தால் சுத்துப்புறம் எல்லாம் அட்டகாசமாத் தெரியுமாம். எல்லாம் நமக்கு மாம், மாம் தான். அரைமணிக்கூறு நேரத்தில் என்னன்னு பார்க்கிறது. கிடைச்சவரை க்ளிக் க்ளிக்ஸ் :-)
இதை வச்சே இந்த ஊர் வளர்ந்துருச்சு போல.... இங்கே தங்கிக்க நல்ல ஹொட்டேல்ஸ் கூட வந்துருச்சே!
இந்த வருசம் கனடா150னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. இந்தக் கணக்குலே பார்த்தா.... நாங்க மூத்த குடிகள். பதினொரு வயசு அதிகம். நியூஸி, அஸ்ட்ராலியா, கனடா எல்லாம் இன்னும் மாட்சிமை தாங்கிய மஹாராணியோடு தொப்புள்கொடி உறவில்தான் இருக்கோம். இன்னும் கொடியை முழுசுமா அறுத்து விடலையாக்கும். ராணியம்மாவின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல்தான் இந்நாடுகளின் தலைமை பீடம்.
நாங்க மூவரும் ஒன்னுக்குள் ஒன்னுன்னு இப்போ புரிஞ்சுருக்குமே!
அஸ்ட்ராலியா பெரியக்கா. நடுவுள்ளவ நியூஸி, சின்னக்கா. கடைசித் தங்காச்சி கனடா.
அரைமணின்னது கொஞ்சம் லேட்டாகிருச்சு. கடைக்குள் போன சனம் சட்னு வெளியே வரலையே.... டூர் டைரக்டரும் ட்ரைவருமா ..... பஸ்ஸாண்டை நிக்கறாங்க..... உம்.... சீக்கிரம்......
அடுத்த ஒன்னேமுக்கால் மணி பயணம்.... 182 கிமீ தூரத்தில் இருக்கும் மல்லோரி டவுன் ஆன்ரூட் ஷாப்பிங் வாசலில். ஹைவேயில் இருக்கும் சாப்பாட்டுக்கடைகள் தான் வேறென்ன....? லஞ்ச் ப்ரேக் :-)
காலையில் முதல் நிறுத்தமா பிக் ஆப்பிளில் இறங்கும்போதே.... டூர் டைரெக்டர் எலனா சொல்லிட்டாங்க . பஸ்ஸில் முதல் பாதி இப்ப முதலில் இறங்குனா..... அடுத்த நிறுத்ததில் பின்பாதி முதலில் இறங்கணும். பின்பாரம் இறங்கட்டுமுன்னு காத்திருந்தோம்.
நாலைஞ்சு கடைகள் இருக்கு. நமக்கு வேண்டியதைத் தேடி நடந்து உ கியை கண்டடைந்தோம்!
பயணிகளுக்கான கடைகளில் அழகான நாய் பொம்மைகள் குவிஞ்சு கிடக்கு. ட்ரூ நார்த் கனடாவைத் திருப்பிப் பார்த்தால்.... சீனா :-)
ஏற்கெனவே பிக் ஆப்பிளில் லேட் பண்ணிட்டோமுன்னு எல்லோரையும் முடுக்கி விட்டாங்க எலனா ! இங்கிருந்து இன்னும் ஒரு இருநூத்தி இருபத்தியேழு கிமீ பயணம் பாக்கி இருக்கு!
தொடரும்........... :-)

16 comments:
ஹூம், இப்படியெல்லாம் அனுபவிக்க பூர்வ ஜன்மத்தில நெறய புண்ணியம் பண்ணியிருக்கோணும்! நாங்க உங்க பதிவ படிக்கிறதோட சரி. அவ்வளவுதான் நாங்க செஞ்ச புண்ணியம்.
படிக்க நல்லா இருக்கு. படங்களும் அருமை. எனக்கெல்லாம் ஆப்பிள் தோட்டத்தில் உலவணும்னு எண்ணம். (கடைல உள்ள ஆப்பிள்கள் மிகவும் புதியதுதானே?). ஆனால் நீங்கள்தான் ஆப்பிள் மரங்களோடே வாழ்ந்தவங்களாச்சே. அதுனால அந்த ஆசை இருக்காதுன்னு நினைக்கிறேன்.
நல்லவேளை, ஆப்பிளில் எனக்கு பெரிய நாட்டமில்லை!
உடன்வருவதுபோன்ற உணர்வு. நம்மூர் டைம் பாஸ் சமாச்சாரத்தைக் கண்டதில் மகிழ்ச்சி.
போய் வந்த இடங்களை நினைவில் வரவழைக்க இந்தப் பதிவுகள் உதவும்
ஆஹா மூன்று நாள் பயணமா? பேருந்து பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.
எத்தனை அனுபவங்கள் இந்தப் பயணங்கள் தருகின்றன. தொடரட்டும் பயணங்கள்.
அருமை நன்றி சிறப்பு
புது எடங்களுக்குப் போறப்போ இந்த மாதிரியான டூர் சர்வீசுகள் வசதி. எல்லாரோடையும் சேந்து போன மாதிரியும் ஆச்சு. எந்த எடத்தையும் விடாமப் பாத்த மாதிரியும் ஆச்சு. அதோட பயண வழிகாட்டிகள் சொல்லும் நல்ல நல்ல தகவல்களும் ஆச்சு.
ஆப்பிளை வெச்சு ஒரு பெரிய கம்பெனியே கெட்டிட்டாங்களே. ஆப்பிள்பை சாப்பிட நல்லாருக்கும்னாலும் காலரி நிறைய. கண்ணால சாப்பிடுறதோட சரி. கடைல வெச்சிருக்கும் கடலைப் பருப்பு நல்ல பரும் கடலைப்பருப்பா இருக்கு. ஒடச்சுச் சாப்பிட்டா கழிவே இருக்காது போல.
நாய்க்குட்டி பொம்மைகள் அழகோ அழகு.
வாங்க கந்தசாமி ஐயா.
அனுபவிச்சதை எழுதவும், எழுதியதை வாசிக்கும் நண்பர்கள் அமைஞ்சதும் கூட பூர்வ ஜென்ம புண்ணியமாத்தான் இருக்க வேணும்!
வருகைக்கு நன்றி.
தாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....
வாங்க நெல்லைத் தமிழன்.
ஆப்பிளும் நம்மூர் மாமரங்கள் போலதான். ஒருமுறை பார்த்துட்டால்.... அதன்மேல் உள்ள ஈர்ப்பு போயிரும்!
தாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....
வாங்க ஸ்ரீராம்.
எனக்கும்தான். 'நம்மவர்' மட்டும் இங்கே நம்ம வீட்டில் ஆப்பிள் பிரியர்!
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வாசிக்கும்போது போரடியாக இல்லாமல் இருந்தால் போதும் என்றுதான் என் நினைப்பு.
வாங்க ஜிஎம்பி ஐயா.
உங்களுக்கும் கொசுவத்தி ஏத்திட்டேனா? ஹாஹா.... நீங்க போய் வந்தது எந்த வருஷம்?
வாங்க வெங்கட் நாகராஜ்.
பயணம் முழுசும் வெவ்வேற அனுபவங்கள்தான். அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை!
வாங்க விஸ்வநாத்.
நன்றீஸ் !
வாங்க ஜிரா,
அன்றன்று சுடச்சுட செய்துதரும் ஆப்பிள் பை சுவையாகத்தான் இருக்கும். எப்பவோ ஒருநாள்தானே.... கலோரிக் கணக்கெல்லாம் பார்க்கலை.
ஆனாலும் நாங்க வாங்கிக்கலைதான். தோணலை.....ப்ச்....
இன்னும் அழகழகான பொம்மைகளைப் பயணம் முழுசும் பார்த்தேன். !
Post a Comment