நம்ம புழக்கடைத் தோட்டத்தில் இந்த வருஷமும் திராக்ஷை பழுத்துத் தொங்கலாச்சு. இந்த ஊரில் நரி இல்லாததால்...... வேற வழி இல்லாம நானே பழங்களைப் பறிக்கலானேன். எல்லா வருசங்களையும் போல டைனிங் டேபிளில் வச்சுட்டுப் போகவர ஒன்னு ரெண்டுன்னு எடுத்துத் தின்னது போக மீதியை 'அச்சச்சோ..... கெட ஆரம்பிச்சுருச்சே.... தூக்கி வீச வேண்டியதுதான் இனி'ன்னு அதை ஒரு வழி பண்ணாமல், இந்த வருசம் உருப்படியா எதாவது செய்யலாமேன்னு ஒரு எண்ணம் திடீர்னு வந்தது!
கொஞ்சம் பழங்களை அறுவடை செஞ்சேன் !
க்ரேப் ஜூஸ் பண்ணி, 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு'ன்னு பாடிக்கிட்டே ஊத்திக்கலாமுன்னு முடிவு.
இதுலே ரெண்டு செய்முறைகள் இருக்கு.
முதலாவது ஈஸிபீஸி. திராக்ஷைகளைக் கழுவிட்டு அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு பத்திருவது விநாடி ஓடவிட்டு வடிகட்டினால் ஆச்சு. நம்மூர் (சென்னை)கடைகளில் இப்படிச் செய்வதைப் பார்த்திருக்கேன். லேசா ஒரு பச்சை வாசனை இருக்கும்..... ப்ச்....
ரெண்டாவது கொஞ்சம் வேலை வாங்கும் ப்ராசஸ். வெள்ளையர்கள் உலக ரெஸிபி :-) அப்படியே செஞ்சுடலாமே..... ஐ மீன் செஞ்சு பார்க்கலாமே......
எதுக்கும் முதலில் பரிசோதனைக்குக் கொஞ்சமா செஞ்சு பார்த்தால் ஆச்சுன்னு மூணு குலை திராக்ஷைகளைக் கழுவி, பழங்களை மட்டும் கொத்தில் இருந்து பிரிச்செடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும்வரை தண்ணீர் ஊத்தி அடுப்பில் வச்சேன். அஞ்சு நிமிட்டில் கொதி வந்ததும், அடுப்பை ஸிம்மில் போட்டாச். இன்னும் ஒரு பத்து நிமிட் மெள்ளக் கொதிச்சுக்கிட்டே இருக்கட்டும். அதுவரை?
ஃபேஸ்புக், வாட்ஸப்ன்னு எத்தனை வேலை கிடக்கு.....
ஆனால் நடுவில் அஞ்சு நிமிட்டுக்கு ஒருமுறை மத்து எடுத்து மசிச்சு விடணும். மாடர்ன் மத்து இப்போதைக்கு உருளைக்கிழங்கு நசுக்கி எடுக்கும் பொட்டேட்டோ மேஷர் :-)
திராக்ஷையின் தோலும் விதைகளும் பிரிஞ்சு வந்துருக்கும். கொஞ்சம் ஆறினதும் பெரிய வடிகட்டி எடுத்து அதில் ஊத்தி வடிகட்டிக்கணும். வடிகட்டியில் தங்கி இருக்கும் கூழை, அப்படியே இன்னொருக்கா மசிச்சு விட்டு அழுத்தினால் எல்லா ஜூஸும் கீழே பாத்திரத்தில் இறங்கிடும்.
ஜூஸ் நமக்கு, வண்டல் குப்பைக்கு! (இது தோட்டத்துக்கு நல்ல உரமும் கூட !)
ஜூஸ் பாத்திரத்தைக் கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் வச்செடுத்து, ஜூஸைக் கப்பில் ஊத்திக் குளிரக்குளிரக் குடிக்கலாம். இன்னும் கொஞ்சம் இனிப்பா இருக்கணுமுன்னு நினைச்சால் ஜூஸை வடிகட்டி எடுத்ததும் சக்கரை சேர்த்து ஒரு அஞ்சு நிமிட் அடுப்பில் வச்சுக் காய்ச்சிட்டு ஆறினதும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
சக்கரையைப் பாகாக் காய்ச்சியும் கலக்கலாம். அவரவர் வசதி! (பாருங்க உங்களுக்கெல்லாம் எவ்ளோ ச்சாய்ஸ் கொடுக்கறேன் !!!)
செஞ்சுவச்சதை ருசி பார்க்க..... சோதனை எலிக்குக் கொடுக்கணும். பெரிய பரீட்சை இது :-)
Doing things in style என்ற வழியில், அன்றைக்கு டின்னரில் இதைப் பரிமாறணும். அன்றைய ஸ்பெஷல் மெத்து மெத்து இட்லி, கோங்கூரா பச்சடி. கூடவே ரெண்டு ஒயின் க்ளாஸில் நம்ம 'ரஸம்' !
குடிக்கும் எலியின் முகத்தில் புஞ்சிரி! 'ஆத்தா..... நான் பாஸாயிட்டேன்'....... :-)
மறுநாள் நம்ம தோழிகள் இருவர் (ஃப்ரம் மலேசியா) வந்துருந்தாங்க. 'கொஞ்சம் குடிங்க' ன்னதும் ஆஹான்னாங்க. இருநூறு மார்க், நூத்துக்கு!
நாலுநாள் இப்படிக் குடியும் குடித்தனமுமா இருந்தேன்.
இன்றைக்கு மீதி இருக்கும் திராக்ஷைகள் அடுப்புலே கொதிக்குது. கொஞ்சம் வேறு வகையில் பரிமாறணும் :-) யோசனையோடு பதிவை எழுத ஆரம்பிச்சேனா............
இப்ப ரஸம் ஃப்ரிட்ஜுக்குப் போக ரெடியா இருக்கு!
இந்த ரெண்டாவது முறைப்படி செஞ்சால் ..... ஒரு வாரம் பத்து நாள் ஃப்ரிட்ஜில் வச்சுப் பயன்படுத்திக்கலாம். கெடாது! (கேரண்டீ!!!)
பதிவு எழுதி முடிச்சதும், இப்போ நம்ம வீட்டு திராக்ஷைத் தோட்டத்தை (!) படம் எடுக்கலாமுன்னு போனால்.... உள்ளே இப்படி இருக்கு!
ஐயோ.... பெருமாளே..... எப்படி இதை குடிச்சுத் தீர்க்கப்போறேன்.......... :-)
வேறென்ன செய்யலாம்? புது ரெஸிபிகள் வரவேற்கப்படுகின்றன !!

14 comments:
ரசித்தேன், ருசித்தேன்.
பளபளக்கும் திராச்சைகள்...
அருமையான ரசம்...ம்ம்..
வேற ரெசிப்பி...frost பண்ணி ஐஸ் கிரீம் செய்யலாம் ...ஜாம் செய்யலாம்...
நான் வாழ்க்கைல வரமா நினைக்கறதெல்லாம் (திராட்சைத் தோட்டம், ஆப்பிள் மரங்கள், வெள்ள ஐஸ் பாளங்கள் போன்ற பனிப்பொழிவில் அமைந்த வீடு) மற்றவர்கள் பெரியதாக நினைப்பதில்லையே. கடவுள் வேலைக்கு வைத்திருக்கற போஸ்ட் மாஸ்டர் எல்லா லெட்டர்ஸையும் wrong addressக்குள் கன்னா பின்னான்னு அனுப்பிடறாரோ? கொடியில் இருக்கும் திராட்சை, அதுவும் குளுகுளுன்னு இருந்தால், நமக்கு வேறென்ன வேண்டும். எதற்கு ஜூஸ் போன்றவைகள்?
New recipe ? pack it in a carton box and send to Pune; with mangoes & apples (optional).
You can add yeast and make wine Thulasi ma. in my previous birth I used to do that. hahhaa.
திராட்சைகளைக் கழுவி நீர்ப்பசை போகத் துடைத்து ... ஒரு கொத்துக்கு ஒரு காகிதப்பை (brown paper bag) என்ற கணக்கில் … சிறு சிறு காகிதப் பைகளில் போட்டு … உங்கள் வீட்டுக் குளிர்பதனப்பெட்டியில் பின்னால் இடம் பிடித்து வைத்துவிடவும். ஒரு வாரத்துக்கு ஒருமுறை எடுத்துக் குலுக்கி மீண்டும் அதே பெட்டியில் வைத்துவிடவும்.
சில மாதங்கள் கழித்து … ஆஆஆங்? ஆம், சில மாதங்களில் அந்தப் பைகளில் உலர்திராட்சை உருவாகிவிடும்.
அடுத்த கிறித்துமஸ் காலத்தில் கேக் செய்யப் பயன்படுத்துவீர்கள்; அதுக்குமுன்னே வெறுமே சுவைத்து மகிழ்வீர்கள்!
இது தற்செயலாக நான் கண்டுபிடித்த செய்முறை. ஒருமுறை Whole Foods கடையில் நான் வாங்கிவந்த பழங்கள் மீந்துபோக, அவற்றை நான் குளிர்பதனப்பெட்டியில் வைத்து மறந்துபோக, ஒரு சில மாதங்கள் கழித்து நான் கண்டுகொள்ள, எனக்குக் கிடைத்த அற்புத ரத்தினங்கள்! சுவையோ சுவை!
--rajam
அடேங்கப்பா... ஆர்கானிக் திராச்சைப் பழங்கள் கொத்துக் கொத்தா தொங்குதே.
நீங்க காய்ச்சிய திராச்சை ரசத்தை அப்படியே புளிக்க வெச்சு எடுத்தா இன்னும் நல்லாருக்குமாமே :)
வாங்க அனுராதா ப்ரேம்.
ஐஸ்க்ரீம், ஜாம் எல்லாம் சக்கரை இல்லாமல் எப்படிச் செய்றதாம் ?
வாங்க நெல்லைத் தமிழன்.
கொடியிலே விட்டு வச்சால் குளுகுளுன்னு இருக்காதே.... கெட்டுப்போய் தோட்டம் முழுசும் ஈ வந்துருமே :-(
வாங்க விஸ்வநாத்,
ஆஹா... அதுக்கென்ன அனுப்பினால் ஆச்சு.... ஆமாம் அந்த மேங்கோஸ் உங்க வகையா இல்லே என் வகையா? :-)
வாங்க வல்லி.
நம்ம வீட்டுலே ஒயின் குடிக்க ஆளில்லை. ரஜ்ஜு கூடக் குடிக்காதேப்பா.....
வாங்க ராஜம்.
பேசாம பேக்கிங் ட்ரேயில் பரத்தி அவன்லே வச்சால் ஆச்சு உலர் திராக்ஷைக்கு, இல்லையோ!
ஒரு முறை தேங்காய்ச்சில்லை மறந்துபோய் ஃப்ரிட்ஜிலே விட்டுட்டு, அது பிஸ்கெட் ஆக ஆச்சு. கொப்பரைத்தேங்காய் பிஸ்கெட். தொட்டதும் உடையும். சின்னத் துண்டு எடுத்து வாயிலே போட்டுக்கலாம் :-)
உங்க 'செய்முறை'யையும் ஒரு முறை செஞ்சு பார்க்கணும். மறக்காம, அதை மறக்கணும், இல்லை :-)
வாங்க ஜிரா,
புளிக்க வைக்க மாட்டேன். வச்சால் அது எனக்கில்லை பாருங்க :-)
திராட்சை ரசம்.... வாவ்.
இரண்டாம் முறை தான் நல்லா இருக்கு! செய்து பார்த்துடணும்....
Post a Comment