நாம்தான் 'எள்' ன்னதும் எண்ணெயா இருப்போமே..... காலையில் ஆறரைக்கு அலார்ம் அடிச்சு நம்மைக் கூப்பிடுமுன்னே எழுந்து குளிச்சு முழுகி ரெடியாகிட்டோம். ஜன்னல் திரையைத் திறந்து பார்த்தால்..... ராத்திரியெல்லாம் நல்ல மழை போல! இன்னும் தூறல் நிக்கலை..... நல்லோர் ஒருவர் 'உளறேல்' நம்பொருட்டு.... எல்லோருக்கும் பெய்கிற மழை இது :-) நம்ம வண்டி அதுக்குள்ளே ஹொட்டேல் வாசலில் நின்னுருக்கு. அதுக்கும் மழைக்குளியல்!
ஏழுமணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போறோம். வழக்கம்போல் என்னென்னவோ இருக்குன்னாலும்.... எனக்கான தயிர், க்ராய்ஸென்ட், ஜாம் இருந்தது :-) கூடவே பழங்களும்!
இன்றைக்கு ராத்திரியும் இதே ஹொட்டேலில்தான் தங்கறோம் என்பதால் சின்னப்பெட்டியை இங்கேயே அறையில் விட்டுட்டுக் கீழே போறோம். 'டான்'னு எட்டுமணிக்கு வண்டி கிளம்பிருச்சு! மழையில் மான்ட்ரியல் பார்த்துக்கிட்டே ஒரு இருநூத்தி அம்பத்தாறு கிமீ பயணம் போகப்போறோம்.
நகரின் எல்லையை விட்டு வெளியே வந்து ஹைவே பிடிச்சதும், மழையும் காணாமல் போச்சு!
நேத்து ராத்திரி எல்லோரும் நம்மைப்போல் ஊர் சுத்திட்டு வந்துருக்காங்க போல..... வண்டி கிளம்புன கொஞ்ச நேரத்துலேயே நிறைஞ்ச வயிறும் நிறைஞ்ச மனசுமா..... கண்ணு அப்படியே மூடி....... வண்டி ஓடும் சத்தம் தவிர வேறு பேச்சு மூச்சு இல்லை.... நம்ம முன்ஸீட் தோழிகள் கூடத் தூங்கிட்டாங்கன்னா பாருங்க. கொட்டக்கொட்ட முழிச்சுருந்தது மூணே பேர்! அதுலே நானும் உண்டு :-)
இன்றைக்கு ஞாயித்துக்கிழமைன்றதால் சாலையில் போக்குவரத்து ரொம்பவே குறைச்சல். நல்ல பசுமையான காட்சிகள் எல்லாம் க்ளிக்ஸ்.
எலனாதான் வெவ்வேற ஸ்கார்ஃப், வெவ்வேற தலை அலங்காரமுன்னு ஆடை ஆபரண ஷோ காமிச்சுக்கிட்டு இருந்தாங்க!
ரெண்டரை மணி நேர ஓட்டத்துக்குப்பின்னே ஒரு சின்ன ஸ்டாப். இது ஹைவேயில்..... நகரத்துக்குள்ளே போக இருவது நிமிட்டுக்கு முன்னால் இருக்கு. வெல்கம் சென்டர் ஃபார் டூரிஸ்ட். நல்ல டாய்லெட் வசதிகள், ஊர் சுத்திப் பார்க்க வசதியா, வரை படங்கள், தகவல்கள்னு அருமை!
செயின்ட் லாரன்ஸ் நதியின் பாலம் கடந்து போறோம். அம்மாடி....... நம்ம கங்கையைப் பார்த்தாப்போல் இருக்கு! அன்டாரியோ ஏரியில் இருந்து கிளம்பும் இந்த நதி அது பாட்டுக்கு மூவாயிரத்து அம்பத்தியெட்டு கிமீ தூரத்துக்கு ஓடுதே! நம்ம கங்கையை விட நீளம் என்ற உண்மையை ஒத்துக்கணும், கேட்டோ! என்ன ஒன்னு, இது சுத்தமா இருக்கு !!
சொன்ன நேரத்துக்கு முன்னாடியே ஊருக்குள் நுழைஞ்சுட்டோம். இளம்பெண்கள் பலர், வைக்கிங் ஹெல்மெட் போட்டுக்கிட்டு போறவர்ற வண்டிகளைப் பார்த்துக் கையாட்டிக்கிட்டு இருந்தாங்க. வேஷக்கட்டு வேற! புள்ளெத்தாய்ச்சி வேஷமும் உண்டு! (ஏம்மா... இதெல்லாம் இருக்கவே இருக்கு... இப்போ நிம்மதியாப் படிச்சு முடிச்சுட்டு வாயேன்! )
மறுநாள் கல்லூரி திறக்கறாங்க. இன்றைக்கு ஓரியன்டேஷன் டே! காசு வசூல் செஞ்சு தர்மகாரியத்துக்குக் கொடுக்கறாங்களாம்! கார் மக்கள் காசு கொடுக்கறாங்க. நாம்தான் உயரத்துலே உக்கார்ந்துருக்கோமே....
Quebec City இது. க்யூபெக்னு சொல்லப்டாது. கெபாக்ன்னு சொல்லணுமாம்! டூர் டைரக்டர் எலனா உபயம் :-) வண்டி போய் நின்ன இடத்தில் நமக்காகக் காத்திருந்தார் கைடு. ஏற்கெனவே சொன்னாப்டி, அந்தந்த ஊருக்கு அங்கத்து கைடு வந்துதான் ஊர் சுத்திக் காமிக்கணும். இவர் பெயரைத்தான் மறந்துட்டேன். ஞாபகத்துக்கு வரலை..... :-(
வண்டிக்குள் வந்தவர் பயணிகளைப் பார்த்தபடி நின்னு விளக்கம் சொல்ல ஆரம்பிச்சார். கையில் மஞ்சக்கொடி ! மூணு மணி நேரம் இவரோடு சேர்ந்து ஊர் பார்க்கப்போறோம்.
இங்கே நகரின் முக்கிய சாலைகளில் கூட அந்தந்த சாப்பாட்டுக் கடைகளின் முன்னே நடைபாதையிலேயே கொஞ்சம் இடத்தை வளைச்சுப்போட்டு மேஜை நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க. போக்குவரத்தைப் பார்த்தபடியே உக்கார்ந்து சாப்பிடலாம். அழுக்கும் கண்ட குப்பைகளும் இல்லாத இடம் என்பதால் அடிக்கிற காத்து குப்பைகளைக் கொண்டாந்து நம்ம முகத்திலோ, சாப்புடற தட்டிலேயோ போடாது.
ஊர்சுத்திப் பார்க்க குதிரை வண்டியில் போகலாம். எனக்கு ஆசையாத்தான் இருக்கு. பாட்டு கூட ரெடி..... ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.... :-)
மொட்டைமாடி பஸ்களும் குறுக்கும் நெடுக்குமா பயணிகளுடன் !
இது உண்மையிலேயே ரொம்பப் பழைய ஊராம், வட அமெரிக்கக் கண்டத்துலேயே! 1535 ஆம் வருஷம் கால் குத்துனதுன்னு சரித்திரம் சொல்லுது!
சாலைகள் எல்லாம் பளிச். அங்கங்கே நகரை அழகுபடுத்தப் பூச்செடிகள்! செடி நட்டுவைக்க மண்தரை இல்லையேன்னு கவலைப்பட வேண்டியதில்லை!
மோட்டர்ஸைக்கிள் கார் சூப்பர்! வெறும் ஸைக்கிளே ஓட்டத்தெரியாத நான்கூட. இதை ஓட்டுவேன், அதான் மூணு சக்கரம் இருக்கே :-)
நகருக்குள் பழைமையான பகுதிக்குப் போய்ச்சேர்ந்தோம். ஓல்ட் கெபாக் :-) Rue Sous-Le-Fort என்ற இடத்துக்குக் கூட்டிப்போனார் கைடு. கல்பாவிய கட்டாந்தரை சந்துகளா இருக்கு இங்கெல்லாம். 'அங்கே பாருங்க'ன்னு கை காமிச்சதும் எல்லோரும் க்ளிக் க்ளிக் க்ளிக்ஸ்தான்! சின்ன குன்றின் உச்சியில் கோட்டை மாதிரி இருக்கு! மேலே போய் பார்க்க விஞ்ச்/ கேபிள் கார் இருந்தாலும், அதுக்கெல்லாம் நம்ம மூணுமணி டூரில் நேரமில்லை. இதுதான் இங்கே பழமையான ரெயில்வேயாம்.
ஒருகாலத்துலே (1879) நீராவி எஞ்சின் இழுத்துக்கிட்டு மேலேயும் கீழேயும் போய் வந்துருக்கு. அதுவும் வருசத்துலே ஒரு ஆறு மாசத்துக்குத்தான். குளிர் காலத்துலே மூடிருவாங்க போல. அப்புறம் 1907 இல் மின்சாரம் உபயோகத்தில் வந்த பிறகு வருசம் பூராவும் மேலேயும் கீழேயுமாப் போய் வருது! 125 வருசமாச்சுன்னு போர்டு வச்சுருக்காங்க. (இது வச்சே 13 வருசமாயிருக்கு !!)
சின்னதா சதுக்கம்போல இருக்கு இந்த சந்துகள் பிரியும் இடம். ஒருபக்கம் நாட்டர்டேம் சர்ச்! கல் கட்டடம். 1687 லே கட்ட ஆரம்பிச்சது. 1759 லே பிரிட்டிஷ்காரன் குண்டு போட்டு முக்கால்வாசி அழிஞ்சு போயிருக்கு. திருப்பியும் கட்டி இருக்காங்க. வெளியே பார்க்க ரொம்ப சாதாரணமா இருந்தாலும், உள்ளே அற்புதம்! சினிமாவில் கூட நடிச்சுருக்காமே!
கைடு சொல்லும் கதைகளை நான் கேட்டுக்கிட்டு நிக்கறேன், சட்னு பார்த்தா 'நம்மவரை'க் காணோம். உங்களுக்காக சர்ச்சுக்குள்ளே போய் படம் எடுத்துக்கிட்டு வந்தராம் :-)
ம்யூஸியத்துக்கும், சிலைகளுக்கும், கலைகளுக்கும் பஞ்சமே இல்லை! ஒரு பெரிய கட்டடத்துப் பக்கச்சுவரில் இருப்பது கையால் வரைஞ்சதுன்னா பாருங்க !!!
மோனா & லிஸா ன்னு ரெண்டு செல்லங்களுக்காகப் பாட்டுப்பாடிக்கிட்டு இருந்தார் ஒரு 'கலைஞர்' ! அழகுச் செல்லங்கள். அதுகளுக்குத் தெரியுமோ..... நமக்காக பா(ட்)டு படறார்னு!
சுற்றுலாப்பயணிகள் கூட்டம் எல்லாம் இங்கேதான்! இதுதான் அழகான பகுதி வித் ஃபுல் ஆஃப் சரித்திரம் ! இந்தப்பகுதி முழுசுமே உலகப் பாரம்பரியப் பகுதியா இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் இங்கே வராமப் போகமாட்டாங்க. அதான் கைடு முதலில் இங்கே கூட்டியாந்துருக்கார்!
சரித்திரமுன்னு நிரூபிக்கறதைப்போல பீரங்கிகள் ஒருபக்கம் நதிக்கு முகம் காட்டி நிக்குதுகள். எதிரி , படகில் வந்து இறங்குவான். உடனே பீரங்கி வெடிச்சுடும். அவன் காலி !
லாரன்ஸ் நதியில் படகுசவாரி உண்டு. சின்னப்படகெல்லாம் இல்லை. க்ரூஸ் போற பெரிய கப்பல்கள்தான்! அப்ப நல்ல ஆழம் இருக்கும், இல்லே!
நம்ம கைடுதான் முகத்தில் சிரிப்பே இல்லாம சீரியஸா இருக்கார்.
கடைகளும் கலைகளுமா இருக்குன்னாலும் ஒன்னும் வாங்கிக்கலை. கரடி நல்லா இருக்கு:-) ஆனா.... பெரூசு.....
ஒருமணி நேரம் இங்கே இருந்துருக்கோம். திரும்ப பஸ்ஸுக்குள் வந்தாச். ஒரு மேம்பாலத்துத் தூண்களையும் விடாம வரைஞ்சு வச்சுருக்காங்க.
அடுத்த ஸ்டாப் பார்லிமென்ட் கட்டடம். வெளிப்பக்கம் மட்டும்தான் பார்க்கலாம். உள்ளே மராமத்து வேலைகள் நடக்குதாம். சில க்ளிக்ஸ் ஆச்சு.
எதிரில் பெரிய செயற்கை நீரூற்று. புள்ளையும் குட்டியுமா குடும்பத்தினர் பொழுதுபோக்கிக்கிட்டு இருக்காங்க. ஸன்டே அவுட்டிங் !
வியூ பார்க்கன்னு ஒரு மேட்டுப் பகுதிக்குப் போனோம். (Armoury Grounds) நல்ல அழகான புல்வெளிகள், அருமையான பராமரிப்புன்னு எல்லாமே அட்டகாசம்தான். இதுக்குள்ளே மணி ரெண்டாகப்போகுதுன்னு இன்னும் கொஞ்சம் உசரமா இருக்கும் பாதையில் போய் Le Château Frontenac வாசலாண்டை இறக்கிவிட்டாங்க. கைடுக்கு ஆளுக்கு ரெண்டுன்னு பையில் போட்டுக் கொடுத்தோம்.
எங்கியோ வந்து இறங்கிட்டமேன்னு பார்த்தா.... இதுதான் நாம் கீழே சதுக்கத்தில் இருந்து பார்த்து க்ளிக்கின கும்மாச்சிகள் வச்ச கட்டடம் :-) அட! உண்மையில் இது ஒரு ஹொட்டேல். அறுநூறு அறைகளும் பதினெட்டு மாடியுமா இருக்கு,
இனி நாலே முக்காலுக்கு இதே இடத்துக்கு வந்துடணும்னு சொல்லி எங்களை அவுத்து விட்டுட்டாங்க எலனா :-)
இனி மகளே உன் சமர்த்துதான் !
தொடரும்............ :-)

5 comments:
படித்துக்கொண்டே... படக்காட்சிகளையும் ரசித்தபடி நானும் தொடர்கிறேன்.
//ஊர்சுத்திப் பார்க்க குதிரை வண்டியில் போகலாம். எனக்கு ஆசையாத்தான் இருக்கு.// குதிரையின் நலம் கருதி கோபால் சார் ஒத்துக்கலையாம்ல, சொன்னாரு.
வாங்க ஸ்ரீராம்,
தொடர் வருகைக்கு நன்றி !
வாங்க விஸ்வநாத்,
அய்ய..... வேணாம் வேணாமுன்னா பஸந்தி மேலே ஏத்திவிட்டவர் இவர்தான். அது ரொம்பவே தொத்தல்.
கனேடியன் குதிரை பலசாலி. குடும்பத்தையே இழுக்குமாக்கும்.... க்கும்.... :-)
கரடி பொம்மை ரொம்பவே அழகு....
தொடர்ந்து வருகிறேன்.
Post a Comment