வைஃபை கிடைச்சதும்..... ராச்சாப்பாட்டுக்கு என்ன ஏதுன்னு 'நம்மவர்' தேடிக்கிட்டு இருந்தார். நான் நட்புகளுக்கு சமாச்சாரம், சேதி எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தேன் :-)
ஒரு ஏழேகால் போலக் கிளம்பினோம். நல்ல சென்ட்ரல் லொகேஷந்தான் இந்த ஹொட்டேல். பொடிநடையில் போய்ப் பார்க்கலாம்..... கையில்தான் மேப் இருக்கே !
நிறைய வெளிநாடுகளில் நகரின் வரைபடம் கிடைச்சுருது. இலவசம்தான்! இதை வச்சுக்கிட்டு, நாமும் நாலு இடங்கள் பார்க்கலாம். இதைப்போன்ற வசதிகள் எல்லாம் நம்ம 'நாட்டில்' ... ப்ச்..... மூச்......
செயின்ட் கேதரீன் தெருதான் முக்கியமான தெருவாம். நம்ம ஹொட்டேலில் இருந்து ரெண்டு நிமிஷ நடை! பொடிநடையில் நடந்து போறோம். பத்துப் பதினைஞ்சு நிமிஷத்தில் மத்யானம் நாம் போய் இறங்குன Dorchester ஸ்கொயர் வந்தாச். அழகான கம்பீரமான, பழைய கட்டடங்கள் இங்கே ஏழெட்டு இருக்கு! கொஞ்சம் இருட்டிப்போனதால்.... எடுத்த படங்கள் சரியா வரலை. சிங்கச்சிலை ஒன்னு...... இருட்டில் அசிங்கமாத்தான் வந்துருக்கு :-(
Mary Queen of the world Cathedral பிரமாண்டம் 1875 லே கட்ட ஆரம்பிச்சு 1894 இல் முடிச்சுருக்காங்க. பத்தொன்பது வருஷம்! இருக்காதா பின்னே..... கதீட்ரலின் நீளம் 333 அடி! அகலம் 150 அடி! ! உள்ளே போய்ப் பார்க்கத்தான் நமக்குச் சான்ஸ் இல்லை :-( நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு ஊரைவிட்டுக் கிளம்பணுமே....
இதுக்குத்தான் தனிப்பயணமா வரணுங்கறது....... நின்னு நிதானமா அக்கம்பக்கம் பார்த்து அனுபவிக்கலாம்..... இந்த டூரில் மூணு நாள் மூணு ஊர் என்ற கணக்கில் வந்துருக்கோம்... ப்ச்....
மான்ட்ரியல் நகரத்தைச் சுத்திப் பார்க்க மொட்டைமாடி பஸ் இருக்கு. ரெண்டு மணி நேரம் சுத்திக் காமிப்பாங்களாம். நமக்கு நேரம் இல்லை. ஒரே ஒரு ஆறுதல், நாம் மத்யானம் பீஏர் கூடப்போய்ப் பார்த்தோமே அதே இடங்களுக்குத்தான் இவுங்களும் கூட்டிப்போறாங்க. என்ன ஒன்னு மான்ட்ரியல் பை நைட் பார்க்கலாம் இந்த நேரத்துலே அதுலே போனால்.....
அதுக்காக, நாம் சும்மா இருக்கமுடியுமா? இதோ நாமும்தான் மான்ட்ரியல் பை நைட்ன்னு நடராஜா சர்வீஸில் போய்க்கிட்டு இருக்கோமே :-)
ஒரு சர்ச் வாசலுக்கு வந்துருந்தோம். இது இப்போ கச்சேரி ஹால் ஆகிப்போச்சாம்.
ம்யூஸியம் வாசலில் சூரியன் இருக்கான்! Dale Chihuly's glass tree! இதுக்கு அவர் கொடுத்த பெயர் சூரியன்! கண்ணாடியில் கலைப்பொருட்கள் செய்வதில் கில்லாடி. இப்போ எழுபத்தியாறு வயசு மனிதருக்கு ! அவருடைய இருபத்தியஞ்சாவது வயசில் ஒரு கார் விபத்தில் ஒரு கண் போயிருச்சு :-( அப்புறம் சிலபல வருசங்களுக்குப்பிறகு, இன்னொரு விபத்தில் தோள்பட்டை எலும்பு இறங்கிருச்சு. கனமான கண்ணாடிக்குழலைக் கையில் தூக்கி ஊதுவது சிரமம்தானாம். ப்ச்.... பாவம்....
தொட்டடுத்த தெருவில்..... தெருவை அடைச்சுக் கோலம் போட்டு வச்சுருக்காங்க. இந்தத் தெருவை இப்படி கலைக்காகவே நேர்ந்து விட்டாச்சு. சமயத்துக்கு ஏத்தாப்போல டிஸைன்ஸ் ! இப்போ இருக்கும் டிஸைன் என்னன்னு எனக்குப் புரியலை. டாப் ஆங்கிளில் முழுசாப் படம் எடுத்தால் புரியலாம். அநேகமா இந்த 'கனடா150' கொண்டாட்டம் சார்ந்துருக்கலாம்.....
இந்தத் தெருவுக்குள் வண்டிகளுக்கு அனுமதி இல்லை. ரெண்டு பக்கம் இருக்கும் நடைபாதைகளில் நாம் போய் வரலாம். அங்கேயும் இடத்தைச் சும்மா விட்டு வைக்கலை ! நம்ம யானையார் இருக்கார் :-) யானை மட்டுமா? இல்லையே..... ஏராளமான சிற்பங்கள் ..... பயங்கர கலை ஆர்வம் உள்ள ஊரா இருக்குப்பா !!!
கொஞ்சம் இடம் கிடைச்சால் போதும், எதாவது ஒரு அழகை அங்கே வச்சுடறாங்க !
பேசாம ஒரு வாரம், இல்லை பத்து நாள் தங்கி நிதானமாப் பார்க்க வேண்டிய ஊர் இது! ம்யூஸியம்னு சொன்னால் அதுலே ஒரு ஏழெட்டு, பெரிய சர்ச்சுன்னா அதுலே ஒரு பத்து பன்னெண்டுன்னு எதைச் சொன்னாலும் எண்ணிக்கை அதிகம்!
கிறைஸ்ட்சர்ச்ன்னு கூட ஒன்னு பார்த்தேன். பெயரே சுண்டி இழுக்குது :-) ஊர் அபிமானம்... இருக்காதா என்ன .... ஹிஹி...
ஊர்சுத்திக்கிட்டே சாப்பாட்டுக் கடைகள் அடுத்தடுத்து இருக்கும் தெருவுக்குள் போறோம். க்ரெசென்ட் தெரு. தேவி இண்டியன் ரெஸ்ட்டாரண்ட். வாசலில் பெரிய க்யூ. உள்ளே போகக் காத்திருக்காங்க. வாலில் போய் நின்னால் எப்படியும் முக்கால மணி நேரம் ஆகும் :-(
ஆனா காத்து நின்ன கூட்டத்தில் எல்லாம் வெவ்வேற நாட்டு மக்கள்ஸ். இண்டியன்ஸ் யாரும் இல்லை! ஹைய்யோ.... இத்தனை பேர் இந்திய சாப்பாட்டை விரும்பறாங்க பாரேன்னு கொஞ்சம் பெருமையா இருந்தது உண்மை :-)
வேறெதாவது இடம் இருக்குமான்னு இவர் செல்ஃபோனில் தேடறார். நாந்தான் கருமி. வைஃபை இருந்தால்தான் என் செல்ஃபோன் வேலை செய்யும். இவருடையது ரோமிங்லே இருப்பதால் அது போதுமுன்னு இருப்பேன்.
சென்னை எக்ஸ்ப்ரெஸ்ன்னு ஒன்னு இருக்குன்னார். ஆஹா.... போகலாம்!
கொஞ்சம் நடக்கணும். முடியுமான்னதுக்கு முழிச்சேன். காமணி ஆகுமாம். பொடிநடையில் வேடிக்கை பார்த்துக்கிட்டே போகலாம்....
இந்த தேவி, நம்ம ஹொட்டேலுக்கு ரொம்பப் பக்கம். அஞ்சு நிமிட் நடை. அதுக்காக சோறு திங்க வரிசையில் முக்காமணி நிக்க முடியாது....
சரி நடக்கலாமுன்னு தெருமுனை திரும்பி, செயின்ட் காதரீன் தெருவில் நடந்து போறோம். இதுலே 521 ஆம் நம்பரில் சென்னை எக்ஸ்ப்ரெஸ். ஒருவழியா அங்கே போய்ச் சேர்ந்து, போர்டு பார்த்தால் வேறென்னவோ கடை இருக்கு. ஃபலாஃபல் எக்ஸ்ப்ரெஸ்.... ப்ச்...... தொண்டையில் அடைச்சு விக்கல் வந்துரும்.
எனக்கு வேணாமுன்னு எதிர்ப்பக்கம் இருக்கும் தெருவில் வேறெதாவது ரெஸ்ட்டாரண்ட் கண்ணுக்குப் படாதான்னு போனால்.... ஒரு இடத்தில் நல்ல கூட்டம். உள்ளேதான். வாசலில் நாலு இளைஞர்கள். நம்மாட்களை நமக்குத் தெரியாதா என்ன? டூரிஸ்ட்டான்னு கேட்டுப் பேச்சுக்கொடுத்தேன். இல்லை(யாம்)! ஆஹா.... அடுத்த கேள்வி சென்னை எக்ஸ்ப்ரெஸ் எங்கே இருக்கு?
அதே ஃபலாஃபல் கடையைக் கைநீட்டிக் காமிச்சார் ஒருவர். அட! அதுவா? அதுக்குள்ளே நுழைஞ்சு போனால் சென்னை எக்ஸ்ப்ரெஸ் வருமாம்! நெசமாவா? ஆமாம் ஆமாம்......
திரும்பி அங்கே போறோம். ஒருவேளை உள்ளே எதாவது ஆர்கேட் இருக்கோ என்னவோ.....
வாசலில் சைனீஸ் வொக் எக்ஸ்ப்ரெஸ்ன்னு ஒருத்தர் பெரிய வாணலியில் நூடுல்ஸை கிளறிக்கிட்டு இருக்கார். வலது கைப்பக்கம் அந்த ஃபலாஃபல் கவுன்டர். இதென்னடா நமக்கு வந்த சோதனைன்னு கண்ணைச் சுத்தினால் கொஞ்சம் உயரத்துலே சென்னை எக்ஸ்ப்ரெஸ் போர்டு! ஆஹா.... இந்த போர்டை, வெளியில் தெருப்பக்கம் வைக்கக்கூடாதா?
இந்தாண்டை தலையைத் திருப்பினா உசரத்துலே மெனு!! தென்னிந்திய உணவகம் னு தமிழிலும் ! நாட்டர்டேமில் பார்த்த ஃப்ரெஞ்சு லேடி வித் பூடில் போல மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டே கடைக்குள் நடந்துருக்கணும் போல..... சட்னு போர்டுகள் பெயர்கள், தமிழ் எல்லாம் கண்ணுலே பட்டுருக்கும்!
கவுன்டரில் இருந்தவரிடம் ரெண்டு தோசை, ரெண்டு வடைன்னுட்டு காசு கட்டுனதும் ( கையிலே காசு, வாயிலே தோசை!) பத்து நிமிட் வெயிட்டிங் டைம் என்றார். இது ப்ரொப்பர் ரெஸ்ட்டாரண்ட் இல்லையாக்கும்...... ஒரு ஓரத்துலே ஹைசேர் நாலு போட்டு அதையொட்டி சுவத்துலே ஒரு பலகை. டேக் அவே வாங்கிப்போகும் வகைதான் இந்தக் கடைகள்.
கவுன்ட்டரில் மஞ்சள் குங்குமத்தோடு மகராசனா நம்ம புள்ளையார் இருக்கார்! தினம் தினம் தோசைதான் :-)
அப்போ ஒரு அஞ்சு பேர் கொண்ட குடும்பம் கடைக்குள் வந்தாங்க. ஏற்கெனவே ஆர்டர் சொல்லிட்டு அந்த பத்து நிமிட் வெளியே போய் வேடிக்க பார்த்துட்டு வர்றாங்களாம். நம்மாட்கள். நாகர்கோவில்! தின்னேலி..... சட்னு பதிவர் சாந்தி மாரியப்பன் ஞாபகம் !
அமெரிக்காவில் இருந்து வீக்கெண்ட் பயணமா வந்துருக்காங்க. அவுங்கம்மா, பாளையங்கோட்டையில் டீச்சரா இருந்து இப்போ ஓய்வில். உள்ளூர் பழமொழிகள் தொகுப்பு ஒரு புத்தகம் போட்டுருக்காங்களாம்! நம்ம எழுத்தாளர் ஜாதி :-)
நம்ம தோசை ரெடியானதும் விளம்பினாங்க. பரவாயில்லை.... நல்லாவே இருந்தது. ஆனால் சாம்பார் வைக்கத் தெரியலை...... ( இதானே வேணாங்கறது..... இம்மாந்தூரத்துலே தோசையைக் கண்ணுலே காட்டுனதைக் கொண்டாடமாட்டியா? நம்ம மனசுதான்..... பட் பட்னு மண்டையில் குட்டும்வகை இது... ஹிஹி )
கவுன்டருக்குப் பின்னால் சின்ன இடத்தில் அடுக்களை. தோசை தயாராகுது. தோசை மாஸ்டர்தான் கடையின் உரிமையாளர்! பெயர் சுந்தரம். ஊரு சேலம்! தோசை செய்யும் சேவையைப் பாராட்டி நல்லதா நாலு வார்த்தை சொன்னேன்.
இப்பக் கடை மூடும் நேரம். பகலில் எல்லா வகைகளும் கிடைக்குமுன்னு போர்டைக் காமிச்சார். பதினைஞ்சு வருசமாச்சாம் கனடா வந்து! இப்படித்தான் உலகத்தில பல மூலைகளில் எங்காவது நம்மாட்கள் எதிர்பாராம நம்ம வயித்தைக் குளிர வச்சுக்கிட்டு இருக்காங்க. நல்லா இருக்கட்டும்!
ஆமாம்..... வடை சொன்னோமே..... அது வரலை?
அடடா.... மாவு அரைச்சு எடுத்துவர ஆள் போயிருக்குன்னவர், இதோ வந்தாச்சுன்னு சுடச்சுட வடைகளைச் சுட்டுத்தந்தார்! தமிழ்க்குடும்பமும் வடைப்ரேமிகளாம்! அடடா.... என் ஜாதி :-)
தின்னேலிக்குட்டிப் பசங்க சிக்கன் தோசை நல்லா இருக்குன்னாங்க :-)
வடைகளைப் பேக் பண்ணிக் கொடுத்ததும், இதைப்பார்னு எடுத்துக் காமிச்சார் 'நம்மவர்' :-) பார்த்தால் விட முடியுதா? செயின்ட் கேதரீன் தெருவில் சுடான வடைகளைத் தின்னுக்கிட்டே இண்டியன்ஸ் ரெண்டு பேர் நடந்து போனாங்கன்னு மறுநாள் தினசரியில் வந்துருக்கலாம்.......
கலகலன்னு இருக்கும் தெருவை வேடிக்கை பார்த்துக்க்கிட்டே ஹொட்டேலுக்குத் திரும்பினோம்.
நல்லா தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து ரெடி ஆகணும்.
குட் நைட் :-)
தொடரும்............ :-)

14 comments:
வாவ்.... எட்டுத் திசையெங்கும் தோசை. சுந்தரம் போன்றவர்கள் நன்றாக இருக்கட்டும்....
தோசை என்ன விலைன்னு எழுதலையே டீச்சர்?
தோசை வடை அருமை. காபி இல்லியோ ? ஹிஹிஹி
(இவ்ளோ ம்யூஸியம் இருக்கு, சர்ச் இருக்கு, கலைப்பொருட்கள் இருக்கு ன்னு சொன்ன, அதைப்பத்தி ஒருத்தரும் கேட்கலை, தோசை ... தோசை ... வடை ... ம்க்கும் - டீச்சர் மைண்ட் வாய்ஸ்)
நமக்குப் பிடிச்ச சாப்பாடு கண்காணாத நாட்டுல கிடைச்சதும் வர்ர மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. தோசைன்னா எனக்கும் ஆசை. சாம்பாரெல்லாம் செய்றது லேசுதான். சரியான பக்குவமா இருக்கனும். அவ்வளவுதான். ஒருவேளை அடுத்த நாள் நல்லா அமைஞ்சிருக்கலாம். துவையல்கள் வைக்கலையா? வடைன்னதும் உழுந்துவடைன்னு நெனச்சேன். ஆமைவடை சாப்டிருக்கீங்க. பெங்களூர்ல உழுந்தவடை பெருசு பெருசா போடுறாங்கன்னு மக்கள் பெருமையாச் சொல்லிக்குவாங்க. ஆனா அதுல மைதாமாவு கலந்து போடுறாங்கன்னு தெரிஞ்சா என்னாவாங்களோ!
கண்ணாடி சூரியன் மிக அழகு. உயிரைக் கொடுத்து செஞ்சிருக்காருன்னு சொல்றது இவருக்குப் பொருத்தம்.
Masala Desai price is already posted in the photo of menu board. 7 Canadian dollar about 360 Indian rupees: may be there is also additional tax. ( this is in reply to a comment asking for disa prices)- Rajan
நாங்க இந்த ஊருக்குப் போனப்ப எங்களுக்கும் இதே கதை தான் அக்கா. சென்னை எக்ஸ்பிரஸ் தேடிப் போய் கிடைக்கலை. கடைக்கு முன்னாடி நின்னுக்கிட்டு அவங்களுக்கு தொலைபேசி (?!) அப்புறம் கடைக்கு உள்ள போனோம். இருந்த மூணு நாளும் டின்னர் அங்கே தான்.
நமக்குப் பிடிச்ச சாப்பாடு கண்காணாத நாட்டுல கிடைச்சதும் வர்ர மகிழ்ச்சிக்கு - ராகவன் சார்... உண்மைதான். நான் பிலிப்பைன்ஸில் தயிர் சாதம், ஊறுகாய், அவல் உப்புமா, ரவை உப்புமா போன்றவற்றை நான் தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பிட்டேன். உப்புமாக்கள் போன்றவற்றில் மசாலா, காரம் போன்றவை இல்லை என்றாலும், நம்ம ஊர் உணவைப் பார்ப்பதே மகிழ்ச்சிதான். நான் எந்த ஊருக்குப் போனாலும், கார எலுமிச்சை ஊறுகாய் மட்டும் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன். ஒண்ணும் கிடைக்கவில்லை என்றால், பிரெட், ஊறுகாய் சாப்பிடலாம்.
துளசி டீச்சர்... பிடிவாதமா தேடி தோசை சாப்பிட்டுட்டீங்க. எனக்கும் சில சமயம், எங்கிட்ட கிச்சனைக் கொடு, உடனே எப்படி பண்ணறதுன்னு சொல்றேன் என்று சொல்லத் தோன்றும்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
அந்த ஊர் தோசையில் நம்ம பெயரை எழுதிட்டானே ஆண்டவன்!
சுந்தரம் நல்லா இருக்கட்டும்!
வாங்க ஜோதிஜி,
உங்களுக்கு ராஜன் பதில் சொல்லிட்டார் :-)
வாங்க விஸ்வநாத் .
மைன்ட் வாய்ஸ் சொன்னது ரொம்பச் சரி :-)
வாங்க ஜிரா,
நாங்க கடை மூடும் நேரமால்லே போனோம்..... தேடி அலைஞ்சதுலே நேரம் வீணாப் போயிருச்சே!
உளுந்து வடையில் மைதாவா? நெசமாவா? அடராமா..... :-(
வாங்க ராஜன்.
மனம் நிறைந்த நன்றி!
வாங்க குமரன்.
உங்களுக்குமா?
ஒரு போர்டு வெளியே வைக்கப்டாதோ?
வாங்க நெல்லைத் தமிழன்.
கார எலுமிச்சை ஊறுகாய் நல்ல ஐடியாதான். ஆனால் ஒழுங்காப் பேக் பண்ணி வைக்கணும்.
சிலநாடுகளில் எந்த உணவையும் அனுமதிக்கறதில்லை..... இங்கே நியூஸியிலும் உலர்ந்த நார்த்தங்காய் உப்பிலிட்டது, சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் எல்லாம் ஏர்ப்போர்ட் குப்பைக்கூடைக்குள் போயிருக்கு :-(
Post a Comment