Thursday, September 17, 2015

புள்ளையாரின் சிம்ப்ளிஸிடியும், ஃப்லெக்ஸிபிலிடியும்!

நம்ம புள்ளையாரிடம் எனக்கு ரொம்பப்பிடிச்சதே இதுதான்.  மஞ்சப்பொடியைக் கொஞ்சம் ஈரமாக்கி பிடிச்சு வச்சாலும் அவர் புள்ளையார்தான். கிராமப்புறங்களில் சில சடங்குகளுக்கு  வெறும் பசுஞ்சாணகத்தில் கூட ஒரு பிடி அளவு எடுத்துப் பிள்ளையார் பிடிச்சு வைப்பதும் உண்டு.  வைரத்துலே செஞ்சாலும் சரி, வெறும் களிமண்ணுலே செஞ்சாலும் சரி அவருக்கு ஒன்னுமே பேதம் இல்லை. பிள்ளையார், புள்ளையார்னு எப்படிக் கூப்ட்டாலும் கூடக் கோச்சுக்கமாட்டார். இழுத்த இழுப்புக்கு வந்துருவார்!

சின்னப்பிள்ளையா இருந்த காலங்களில்  வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட அச்சு வச்சு செஞ்சு தரும்  பிள்ளையார் பொம்மைக் கடைக்குப்போய் களிமண் வாங்கி வருவேன். தாற்காலிகக் கடைதான். அன்றே முளைத்து அன்றே  முடிஞ்சுரும் இது.


அண்ணன்  பொம்மை செய்வதில் எக்ஸ்பர்ட்.  அவர் அழகாப் பிள்ளையார் சிலை(! )செஞ்சுட்டுக் கையோடு  மூஞ்சூறும் செஞ்சு கொடுப்பார். மீதி இருக்கும் களிமண் எனக்கு. செப்பு செஞ்சுக்குவேன்.


அப்புறம் கல்யாணம் ஆனபிறகு இந்த 41 வருசங்களா,  ஃப்ரெஷாக் களிமண் பிள்ளையார் வாங்குனதில்லை.  சென்னையில் இருந்த ஒரு சமயம்  ஆசைஆசையா பிள்ளையார் வாங்குனது தவிர. அதைப்பற்றி அப்பவே எழுதியும் ஆச்சு:-)


இங்கே நியூஸியில் இதெல்லாம் கனவுன்னே இருந்தேன்.  ஒருமுறை க்ராஃப்ட் ஷோ பார்க்கப்போனபோது அங்கே பாட்டரி வேலைகளும் வகுப்புகளும் எடுத்துக்கிட்டு இருக்கும் இடம் பார்த்தேன். எப்போ? அதான் சம்மரில் ஒட்டைச்சிவிங்கி பார்க்கப்போனோமே அப்போ!  அது ஆச்சே ஒரு ஆறேழு மாசம்.  சரியாச் சொன்னால்  ஃபிப்ரவரி 8, 2015.


இதுக்கு  எவ்ளோ  டூல்ஸ் பாருங்க!


அங்கே வெள்ளைக் களிமண் வச்சு பொருட்கள் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பார்வையாளர்களையும் களிமண் தொட்டுப்பார்க்க அனுமதிச்சும், சில டிசைன்களில் நாமும் பங்கெடுக்கலாமுன்னும் சொன்னது பிடிச்சுருந்தது.  அப்போதான்  தோணுச்சு, களிமண் கிடைச்சால் நாமே புள்ளையார் செஞ்சுக்கலாமேன்னு.  கேட்டுப் பார்க்கலாமுன்னு கேட்டால்..... வேற ஒரு ஊரில் (நியூஸிதான்) இருந்து  வருது 20 கிலோ பொதியாகன்னு சொன்னாங்க.  அவ்ளோ நமக்கெதுக்கு?  கொஞ்சம்னு கை காமிச்சதுக்கு  இவ்ளோ போதுமான்னு கேட்டு ஒரு புது பாக்கில் இருந்து நூல் வச்சு வெட்டிக் கொடுத்தாங்க.  ஒரு அஞ்சு கிலோ தேறும். 12 டாலர்.


என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டதுக்கு, ஜம்பமா 'எலெஃபெண்ட் காட்'னு  அளந்தேன்.  செஞ்சு முடிச்சதும் கொண்டு வாங்க. இங்கத்துச் சூளையில் சுட்டுத் தர்றோமுன்னாங்க.


வாங்கியாந்து வச்சதுதான். அப்புறம் அப்புறமுன்னு நாட்கள் ஓடியே  போனது மிச்சம். அப்பப்பத் தொட்டுப் பார்த்துக்குவேன்.  காய்ஞ்சு போயிருக்குமோன்னு.....  ஊஹூம்.  விரலுக்கு மெத்துமெத்துன்னுதான் இருந்துச்சு.


இந்த வருசம்  ஃப்ளூ காய்ச்சல்  குளிர்காலம் முடிஞ்சவுடனே வந்து ஊரையே பாழ்படுத்திக்கிட்டு இருக்கு. இதில் நானும் ஒரு  விக்டிம்.  ரெண்டு வாரமா ஜுரம் அடிச்சு ஓய்ஞ்சு இப்ப  வாய்ஸ் இல்லாம ஒரு வாரமாச்சு.  எல்லாம் கண் ஜாடை, கை ஜாடைதான். கோபாலைக்கூப்பிட பூஜை மணி ஒன்னு வச்சுருக்கேன் படுக்கைக்குப் பக்கத்தில்.  இப்பெல்லாம் மணி அடிச்சதும் ரஜ்ஜுகூட என்னன்னு கேக்கறான்:-)

இந்த அழகில்  பிள்ளையார் சதுர்த்திக்கு  ஒன்னும்தான் செய்யமுடியாதுன்னு  இருக்கு. க்ருஷ்ணாஷ்டமியும்  அப்படியே போனதுதான் மனக்குறை. ஆனால் புள்ளையார் மட்டும் மனசுக்குள் சந்தோஷப்பட்டு இருப்பார்.  கொழுக்கட்டை என்ற பெயரில் அவருக்கு நான் செஞ்ச கொடுமைகள் கொஞ்சநஞ்சமா என்ன?   ஆனாலும் அவருக்குப் பெரிய மனசு. எப்பவும் மன்னிச்சு....


நேத்துதான் இந்தக் களிமண் இருக்கே. புள்ளையார் செஞ்சு பார்க்கலாமேன்னு எடுத்து வெளியே வச்சேன். அதுக்கு முன்னால் யூட்யூபில் புள்ளையார் செய்யறதைப் பார்த்துக்கிட்டேன்.


அந்தப்புள்ளையாரையே வேண்டிக்கிட்டு, மனசை ஒருமாதிரி திடப்படுத்திக்கிட்டு புள்ளையாரைச் செஞ்சேன்.  பார்க்கப் புள்ளையார் மாதிரித்தான் இருக்கார்.  நீளப்பாம்பை திரிச்சு பூநூல் கூடப்போட்டாச்சு:-) ஊரில் இருந்து வாங்கியாந்த  ஒரு செட் கண்கள் கூட ஓக்கேதான்.  லேசா உலர்ந்ததும் கொஞ்சம் அலங்காரங்கள் செய்யணும்.


இப்ப மூஞ்சூறு செஞ்சுக்கணுமே....  பெரியதிருவடி கால்மடிச்சு உக்கார்ந்துருக்கும் போஸ். கண்களுக்குக் குறுமிளகுகள். நீ.....ள வால் புள்ளையாரைச் சுத்திக்கிட்டுப்போகுது.  இது அந்த  வகை இனம்  கேட்டோ:-)))))


கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் நாட் பேட். அதான் சிம்ப்ளிஸிட்டின்னு சொன்னேன் பாருங்க. இவர்  யுனீக்கா இருக்கார்!

பத்தாமப்போயிருமோன்னு பயந்து பயந்து செஞ்சதில் இன்னும் பாதிக்களிமண் பாக்கி இருக்கு.  இன்னொரு புள்ளையார் செஞ்சால் ஆச்சு. இப்பதான் டெக்னிக் தெரிஞ்சுபோச்சே:-))))


புள்ளையார் கொலு வச்சு,  தெரிஞ்சமாதிரி கொழுக்கட்டைக் கொடுமைகள் செய்து,  புள்ளையார் பூஜையை முடிச்சுட்டேன்.  நாள் ஆரம்பிக்கும்  நாடு என்பதால் முதல் பூஜை இங்கேதான்!


எண்ணி  11 இனிப்புக்கொழுக்கட்டை  , காய்கறிகள் தேங்காய்த்துருவல் சேர்த்தப் நவரத்ன  புட்டுக்கொழுக்கட்டை (உப்புப் பலகாரமாம்ப்பா!) கடலைப்பருப்பு சுண்டல், பழங்கள், வாசனை தூக்கலா இருக்கும்  நம்ம வீட்டு  மல்லிகைகள் (ஏர்லி ச்சியர்ஸ் என்னும் வகை)  எல்லாத்துக்கும் மேலா  என்  அன்பு. போதாதா என்ன?


 என்னோடு பேச மாட்டேங்கறா....  ஆனா என்னென்னவோ செஞ்சுக்கிட்டே இருக்காளே இந்த அம்மா! இவளும் என்னைப்போல சைலண்ட் ம்யாவ் போல :-)

விஐபி கள் வந்து சாமி கும்பிட்டாங்க:-)



நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.  நல்லா இருங்க.

ஹேப்பி பர்த்டே கணேஷா!



37 comments:

வெங்கட் நாகராஜ் said...

பிள்ளையார் அழகாவே வந்திருக்கார்......

கொழுக்கட்டை எடுத்துக் கொண்டேன்.... எல்லாருக்கும் வேணுமே அதனால ஒண்ணே ஒண்ணு மட்டும்....

அனைவருக்கும் நல்லதே கிடைக்க விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

ப.கந்தசாமி said...

கோபால் அழகா சாமி கும்பிடறார்.

அபயாஅருணா said...

ஃ பர்ஸ்ட் டயம் செஞ்ச புள்ளையார் நல்லாவே இருக்கார்

அபயாஅருணா said...

ஃ பர்ஸ்ட் டயம் செஞ்ச புள்ளையார் நல்லாவே இருக்கார்

Siva said...

Iniya pillayaar sadhurthi nalvaazhthukkal. .....
Madam, I'm using mob s660 lenova. Tamil LA type panna nalla idea kudunga..

Siva said...

Dhanapaal sir, Tamil LA type panna nalla idea kudunga

சாந்தி மாரியப்பன் said...

புள்ளையார் அழகா இருக்கார். நவரத்னக்கொழுக்கட்டை கண்ணைப்பறிக்குது.

ஜூரம் இப்பத்தேவலையா?. முடியலை.. முடியலைன்னு நாம படுத்துக்கிடந்தாலும் பண்டிகை கொண்டாடலைன்னா மனக்கிலேசம் வரத்தான் செய்யுது. தனக்கு வேண்டியதைத் தானே நடத்திக்கறாங்க இந்தக்கடவுள்கள் :-))

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதென்னமோ இந்த முறை வியக்கத்தக்க வண்ணம் கொழுக்கட்டை நல்லாவே வந்துருக்கு.

புள்ளையாருக்கே தாங்கலை போல. போதும் இவளைப் படுத்துனதுன்னு சமாதானத்துக்கு வந்துட்டார்:-))))

துளசி கோபால் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.


நன்றீஸ்.

துளசி கோபால் said...

வாங்க அபயா அருணா.

எனக்கும் மனசுக்குத் திருப்தியா இருந்துச்சுப்பா.

நன்றீஸ்.

துளசி கோபால் said...

வாங்க சிவா.


நான் ஸாம்ஸங் மொபைலில் தமிழ்விசைன்னு ஒரு கீபோர்ட் நிறுவி இருக்கேன். மத்தபடி ககைநா. நம்ம திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இதுலே நிபுணர். உங்க உதவிக்கு அவரை அழைக்கிறோம்!

துளசி கோபால் said...

வாங்க சாந்தி.

சரியாச் சொன்னீங்க. நம்ம க்ருஷ் பாப்பாதான் ஒன்னும் வேணாமுன்னு சொல்லிருச்சு. முறுக்கு போச்:-(

ஆனா...புள்ளையார் கெட்டி! சாதிச்சுக்கிட்டார் பாருங்க. இனிப்புக் கொழுக்கட்டையும் நல்லாவே அமைஞ்சுருச்சு!

ஜூரம் இப்ப மூணுநாளா இல்லை. வாய்ஸ் தான் காலி! ஓசைப்படாமல் இருக்கேன்:-)
விசாரிப்புக்கு டேங்கீஸ்.

உங்க மும்பை இப்போ தூம்தாமுன்னு அதிரும்! ஐ மிஸ் பூனா.

துளசி கோபால் said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

லஞ்சுக்கு வரும்போது எல்லாம் ரெடி. கும்பிடு போட்டுட்டு சாப்பிடவேண்டியதுதான் !

Geetha Sambasivam said...

பிள்ளையார் கொஞ்சம் பயந்துட்டே முழிச்சுப் பார்க்கிறார். மத்தபடி ஓகே. ஒரு வேளை கொழுக்கட்டைக்குப் பயந்திருப்பாரோ? இருக்கும்!

துளசி கோபால் said...

வாங்க கீதா.


அவருக்கும் முதல்முறை என்ற பயம் இருக்காதா? சரியா வரலைன்னா திட்டுவேனே!

அதான்.....

கொழுக்கட்டையும் நல்லாவே செஞ்சுட்டார். ஸ்டீம் பண்ணப்ப ஓப்பனே ஆகாமல் சமர்த்தா இருந்தது. உருவம்தான் மோதகமா இல்லாம உலக உருண்டையாப் போச்சு!

நெல்லைத் தமிழன் said...

ஒரு இனிப்புக் கொழுக்கட்டையைக்கூட திறந்து வைக்கலையே.. எப்படி பிள்ளையார் ருசி பார்த்திருப்பார்? இனிய சதுர்த்தி வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத் தமிழன்.

என்ன திறந்து வைக்கணுமா?

வருசா வருஷம் நீராவியில் இருந்து எடுப்பதற்கு முன்னே ஓப்பன் சிஸமேன்னு இருப்பவை, இந்த வருசம்தான் கொஞ்சம் மூடிக்கிட்டு ஒழுங்கா வெல்லத்தண்ணீர் வழியாம நீட்டா இருக்கு! அவருக்குத் தெரியும் அங்கே ரெண்டே வகைதான். ஒன்னு காய்கறின்னா இன்னொன்னு இனிப்புதானே:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

Unknown said...

Super amma...vinayagar chathurthi vazhthukal

ஹுஸைனம்மா said...

சீக்கிரம் உடல் நலம் பெற பிரார்த்தனைகள்.

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகளும்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

களி மண் பிள்ளையார் களிப்பா இருக்காரு டீச்சர்:)
உங்க "கை வண்ணம்" இங்கு கண்டேன்,
கால் வண்ணம் அங்கு கண்டேன் (in the beach) ha ha:)

ஆனா, என்னைக் கவர்ந்தது என்னமோ எலியார் தான்!
வித்தியாசமான கருடன் pose!
குறிப்பா அந்தக் கண்கள் - மிளகு வைச்ச கண்கள்..
நீங்க ஒரு கொடுமையான டீச்சர்:) ஊரு பக்கம், பசங்க கண்ணுல வெங்காயம் வைப்பாங்க தண்டனையா, நீங்க மிளகையே வைச்சிட்டீங்களே:))

உப்பு போட்ட "புட்டுக் கொழுக்கட்டை" அத்தை பண்ணும்.. செம ருசி!
வறுத்த கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, கடுகு-உளுந்து ஊடாட, தேங்காய்ப் பல்லும் எட்டிப் பாக்க, சூடா வாசனையா இருக்கும்!

அந்தச் சுண்டல் Bucket தான், பதிவிலேயே என்னை மிகவும் கவர்ந்தது!
இதுக்குன்னே, வாங்கி வச்சிருக்கீங்களா, சின்னச் சின்னச் ஏனமா? எங்கிட்டு வாங்குனீக இத்தினி சிறுசா bucket?

Abi Raja said...

பிள்ளையார் சூப்பரா இருக்கார் அம்மா. ஆனா மூஞ்சூறு பார்த்தவுடனே தான் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்....) வாழ்த்துக்கள் அம்மா. நான் இப்போதான் சுப்பிரமணியர் கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கேன். உங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிறேன்.

Abi Raja said...

நல்ல வேளை கொழுக்கட்டை நம்ம தான் ஒன்னொன்னும் ஒவ்வொரு டிசைனா பண்ணிருக்க மேனு நினைச்சா எனக்கும் ஜோடி கிடைச்சாச்சு தேங்க்யூ பிள்ளையாரப்பா...)

mera balaji said...

thulasi akka
how r u very nice .happy birthday for ganapathy pappa. very nice and cute .all yr preparation for ganapathy and kozhakattai. i am also doing pooja get well soon. kumkonam travel photos and ariticals are very niec last few days i am also not well tooth pain i an manage.ok bey

Unknown said...

pillaiyar churti valthukal amma

Unknown said...

pillayar chathurthi valthukkal amma

Ranjani Narayanan said...

ஒவ்வொரு வருடமும் கொழுக்கட்டை பண்ணி பயமுறுத்தியது போதாதுன்னு, இந்த முறை நம்மளையே செஞ்சுட்டாளேன்னு பிள்ளையார் நினைச்சிருப்பாரோ? ஆனா, பிள்ளையார் நல்லா வந்திருக்கார். மூஞ்சூறு class!
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!
சீக்கிரம் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

துளசி கோபால் said...

வாங்க அன்நோன்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ஹுஸைனம்மா.

உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி. இப்போ உடல்நலம் தேவலை.

உங்களுக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

துளசி கோபால் said...

வாங்க கேஆரெஸ்.

எனக்கும் வாகனம்தான் ரொம்பப் பிடிச்சது! குறுகுறுன்னு பார்க்குது இல்லே! ஏழறைப் பெட்டியில் கைவிட்டால் சட்னு ஒரே அளவு மிளகு கிடைக்கலைப்பா. ஆமாம்.... பள்ளிக்கூடத்துலே வெங்காயம் வைப்பாங்களா? அச்சச்சோ........

அந்த சுண்டல் பக்கெட், சண்டிகரில் வாங்கினேன். ஜஸ்ட் ஒரு ஸ்டேண்டர்ட் கப் பருப்போ, கொண்டைக் கடலையோ ஊறவச்சுச் சுண்டல் செஞ்சால் பக்கெட் நிறைய வந்து குமிச்சு நிக்கும்!

சாமி ப்ரஸாதங்களுக்குன்னே சின்னச் சின்ன ஏனம் (ஹைய்யோ.... இந்தச் சொல் கேட்டே பலநாளாச்சு!) வகைகள் வாங்கியாந்துருக்கேன். க்யூட்டா, அழகா இருந்தால் அது நம்ம பெருமாளுக்கு:-)

துளசி கோபால் said...

வாங்க அபிநயா.


இதுதாம்ப்பா...புள்ளையார் சமாச்சாரத்தில் பிடிச்சது. எப்படி இருந்தாலும் அவருக்கு நோ ஓர்ரீஸ். குழந்தைப்பா.... பேதம் தெரியாது! தலையில் குட்டிட்டுக் கையில் கொடுத்தால் வாங்கிக்கிக்கும்!

சுப்ரமணியரை எனக்காகவும் வேண்டுனதுக்கு நன்றீஸ். நேற்று நம்ம சண்டிகர் முருகன் கோவில் சதுர்த்தி விழாவுக்கு வான்னு அழைப்பு அனுப்பி இருந்தார்.

ஆமாம்... மூஞ்சூறு பிடிக்கலையா? அதுதான் மாஸ்டர்பீஸ் இங்கே:-))))

துளசி கோபால் said...

வாங்க மீரா.

அடடா... பல்வலியா? கொன்னுருமே..............ப்ச்

பூனாவில் புள்ளையார் விழா தூள் கிளப்ப ஆரம்பிச்சுருக்கும் இப்போ! நல்லா எஞ்சாய் பண்ணுங்கோ.

என் முதல் பல் பிடுங்குன டாக்குட்டர் கூட பூனா எம் ஜி ரோடுலேதான். ரெட்டை சகோதரர்கள். ஒருத்தரிடம் பல்லைக் காமிச்சுட்டு வெளியே வந்தால் பக்கத்து அறையில் இருந்தடச்சு அசலா அதே போல இன்னொரு டென்டிஸ்ட் வந்ததும் ஜெர்க் ஆகிட்டேன்:-)))

டேக் கேர்!

துளசி கோபால் said...

வாங்க கலையரசு.

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ரஞ்ஜனி.

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு இப்போ யானையையும் கடிச்சுன்னு.... பாவம். பயந்துட்டார் புள்ளையார்:-)

இப்போ உடல் ஓரளவு நலம்.

எங்க ரெண்டுபேருக்கும் ஒரே சமயம் உடம்புக்கு வந்ததுதான் கொடுமை. இனிமேல் நோய் வந்தால் ஒருத்தருக்கு மட்டும் தான்னு புள்ளையாரிடம் அப்பீல் பண்ணிக்கணும். சிசுருஷை பண்ணவும் ஒருத்தர் வேண்டித்தானே இருக்கார், இல்லையோ!

மூஞ்சூறு, கம்பீரமாப் பார்க்கிறது! ரசனைக்கு நன்றீஸ்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஏனம்= ஆளுறதுக்குன்னே பொறந்த சிறு பாத்திரம் டீச்சர்:)
கிராமத்துல, அத்தை வீட்டுல, சமையல் பாத்திரங்களை விட ஏனம் தான் மிகுதி:)
I am gonna buy that cute little bucket, fell in love:)

பித்தனின் வாக்கு said...

பிள்ளையார் நல்ல அழகா வந்துருக்கார். மோசிகன்( எலியும்) அழகு.

ஜோதிஜி said...

மகள்களின் மாறிய தலைமுறை சிந்தனைகளில் இன்னமும் மாறாமல் எங்களைப் போல இருப்பது கொழுக்கட்டை, இடியாப்பம். இந்த இரண்டும் தான்.