ஒன்னையும் காணோமே.... இருட்டில் எட்டிப்பார்த்து மனம் குழம்பி நாலெட்டு எடுத்து வச்சுப்போனவர் காதில் விழுந்ததும் சட்னு திரும்பிப் பார்த்தார்! யாரையும் காணோம். நமக்கு ப்ரமைன்னு நினைச்சு நடக்க ஆரம்பிக்கும்போது, இங்கே வந்து பாரும் என்றது யார்? 'யாராக்கும்? இப்படி ஆளில்லாத இடத்தில் என்னோடு பேசறது? இப்படி முன்னால் வந்து பேசும்' என்றவாறே திரும்பி சப்தம் வந்த திசைக்குப்போறார் திருமங்கை ஆழ்வார்.
'நான் கிடப்பில். சட்னு எழுந்துக்க முடியாது. இங்கே இந்தப்பக்கம் பார்வையைத் திருப்பும்' என்றதும், இருட்டில் எட்டிப் பார்க்கிறார். கண்ணுக்கு இருட்டு பழகினதும்தான் தெரியறது, கிடக்கும் உருவம். சதுர்புஜங்களோடு, சங்கும் சக்கரமும் ஏந்தியவாறு தனிமையில் கிடப்பது..... கோதண்டத்தைக் கையில் ஏந்திய ஸ்ரீராமன்!
அட ராமா..... இங்கென்ன செய்கிறீர்?
"அது ஒன்னுமில்லை. நம்ம ஜடாயு போயிட்டார் தெரியுமோ? அவருக்கான கர்மங்களை செஞ்சு முடிச்ச களைப்பில் சித்தப் படுத்தேன்."
விடுவாரோ ஆழ்வார்? பாடு ஒரு பத்து..
அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான்
குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம்
நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட
பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே.
பூதப்புரின்னு பழய காலத்துப்பெயர். சீதையை ராவணன் தூக்கிட்டுப்போயிட்டான். கதறி அழும் ஜானகியைப் பார்த்த ஜடாயு, பறந்துபோய் ராவணனுடன் சண்டை போடுது. அரக்கன் சும்மா இருப்பானோ? வாளால் அதன் சிறகுகளை வெட்டி வீசிட்டான். தொப்னு மேலேயிருந்து கீழே விழுந்து, குற்றுருயிரும் கொலையுயிருமாய் (?) ராமா ராமான்னு அனத்திக்கிட்டே இருக்கும் சமயம், ராமலக்ஷ்மணர்கள் அந்தப்பக்கம் வர்றாங்க. அனத்தல் கேட்டு ஓடிப்போய்ப் பார்த்தால் தந்தையின் நண்பர்! சேதி சொல்லி முடிச்சதும் உயிர் பிரிஞ்சது.
ஐயோ.... தந்தை ஸ்தானத்தில் இருக்கும் இவருக்கு நானே நீர்க்கடன் செய்வேன்னு ராமன் சொல்ல, 'ராமா... இந்த சடங்குகளுக்கெல்லாம் கூடவே மனைவி இருந்தாகணுமே'ன்னு சாஸ்த்திரம் சம்ப்ரதாயமெல்லாம் கவனத்துக்கு வர, இந்த சமயத்துலே இப்படிப் பெண்டாட்டியைத் தொலைச்சுப்புட்டு நிக்கறேனேன்னு ராமன் அழ, பூமா தேவி அங்கே மானசீகமாத் தோன்றி உடனிருந்து கர்மகாரியங்களுக்குத் துணை நின்னாள்னு போகுது புராணக் கதை!
அப்ப இருந்த நிலையில்தான் கருவறையில் சேவை சாதிக்கிறார் பெருமாள். ஸ்ரீராமன் கோலத்தில். புஜங்க சயனம். ஒரு ஓரமா பூமாதேவி இருக்காள்.
தாராசுரத்தில் இருந்து கிளம்புன நாங்கள், ஒரு பத்தேகால் மீட்டர் பயணம் செஞ்சு அரசிலாறு, காவிரி பாலங்கள் கடந்து ஆரூரான் சக்கரை மில் தாண்டி திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமனை தரிசிக்கப்போய்க்கிட்டு இருக்கோம். இன்னொரு பெருமாள் கோவில் கண்ணுலே ஆப்டவுடன், இறங்கிப்போய் கும்பிடு போட்டுக்கிட்டுக் கொக்குக்கு ஒன்றே மதின்னு போய் புள்ளம்பூதங்குடியில் போய் நின்னாச்சு.
நமக்காகக் கண்லே ஆப்ட கோவிலும் நூற்றியெட்டில் ஒன்னான ஆண்டளக்கும் ஐயன் பெருமாள்னு தெரியாமலேயே போய் கும்பிட்டு இருக்கோம். கும்மோணத்தைச் சுற்றி இருக்கும் நூற்றியெட்டு லிஸ்ட்டில் இதை விட்டுட்டு, தஞ்சைப் பகுதின்னு போட்டு வச்சுருக்காங்க. இதைப் பற்றி எழுத, இன்னொருக்கா வரச் சொல்லிட்டார் ஆண்டு அளப்பவர் என்றுதான் நினைச்சுக்கிட்டேன். வாசலில் ஒரு போர்டு போட்டு வச்சுருக்கப்டாதோ? கோபுரத்தைக் க்ளிக் பண்ணதோடு சரின்னு விட்டதை நினைச்சால் .... மனசுக்கு பேஜாராப் போச்சு:-(
தரிசனம் செஞ்ச புண்ணியத்தோடு சரி. கோவிலைப் பற்றியும் கோவில்கதைகளைப் பற்றியும் விஸ்தரிச்சு எழுதாததாலும், அதை உங்களுக்கு வாசிக்க சான்ஸ் கொடுக்காததாலும் கூடுதல் புண்ணியம் கிடைக்கலை. இன்னொருக்காப் போய் அனுபவிச்சுப் பார்த்து எழுத வான்னுட்டான் அவன். அப்படியே ஆகட்டும், ஆமென்.
கோபுரவாசலில் 'அருள்மிகு ஸ்ரீ ஹேமாப்ஜ நாயிகா சமேத ஸ்ரீ வல்வில்ராமன் தேவஸ்தானம்,புள்ளம்பூதங்குடி' னு எழுதி இருக்கு. சின்னதா ஒல்லியா ஒரு அஞ்சு நிலை ராஜகோபுரம். ஸ்ரீராமா!
பலிபீடம், கொடிமரம், பெரியதிருவடி நமஸ்காரம் செஞ்சுக்கிட்டு மூலவரை நோக்கிப்போறோம். திறந்தவெளி முற்றமாத்தான் இருக்கு. முற்றத்தில் கருவறை வாசலைப் பார்த்தாப்படி சிறிய திருவடி நிக்கறார். மூலவர் முகப்பு மண்டபத்தில் ராமனும் லக்ஷ்மணனுமா சீதையுடன் நிக்கறாங்க. ரெண்டு பக்கமும் பாலக்ருஷ்ணர்கள்.
உள்ளே சரியான வெளிச்சம் இல்லை. தேமேன்னு தனியாக் கிடக்கறார். சின்ன விளக்கு முணுக் முணுக்னு எரிய உத்துப் பார்த்தால் மினுமினுன்னு அல்வா போல் ஒரு ஜொலிப்பு. இருட்டுக்கடை அல்வாப்பா! கையில் சங்கும் சக்கரமும் தரித்து, ஒரு கையில் கோதண்டத்தையும் பிடிச்சு, மற்ற கையை ச்சும்மா உடல்மேல் போட்டுருக்கும் சதுர்புஜ ராமன்! வலையில் கிடைச்ச படத்தில் கோதண்டத்தைக் காணோம்!
பெருமாள் நம்ம ராமனுக்கும், ராமராகவே தரிசனம் கொடுத்துருக்கார். என்ன குறும்பு பாருங்க!
நம்ம ஆஞ்சி சந்நிதி.
நீர்க்கடன் முடிச்சுட்டுக் களைப்புடன் அங்கிருக்கும் புன்னை மரத்தடியில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்க ராமன் உட்கார்ந்திருக்கும்போது, 'என்னத்துக்குக் கவலைப்படறாய்? எல்லாம் நல்லபடி ஆகும்'ன்னு சொல்றார். என்ன ஓய்வு? மனசுக்கு ஓய்வேது? சும்மாக் கொஞ்ச நேரம் கிடைச்சால் போதும் ஃப்ல்ம் காட்ட ஆரம்பிச்சுறாதா?
கவலைப்படாதேன்னு தரிசனம் கொடுத்தப்பக்கூட , என்னடா.... இது? இவர் முகம் நம்ம முகம் மாதிரி இருக்கேன்னு தோணியிருக்கப்டாதோ?
ராமனுக்கோ, தான் யாருன்னு கூடத் தெரியாது. சாதாரண மனுஷ ஜென்மம். பட்டத்து இளவரசன் என்றாலுமே தகப்பன், சின்னம்மாவுக்குக் கொடுத்த வரத்தை மீறி, பட்டம் கட்டிக்கத் தெரியலை. போதாததுக்கு பதினாலு வருச வனவாசம். பதிமூணு வருசம் நிம்மதியாப் போன காலம் கடைசி வருசத்துலே தன் குணத்தைக் காமிச்சுருச்சு. பொண்டாட்டியைக் காணோம்! வீட்டுக்குள்ளே தான் இருந்துருக்காள். மதினி காவலுக்கு மச்சான் வேற வாசலில் இருந்துருக்கான். தானோ மான் வேட்டைக்குப்போன தருணம். லக்ஷ்மணான்னு தன் குரலே கேட்டது எப்படின்னு முழிக்கும் நேரம் தன்னைத்தேடித் தம்பி வர்றான். எல்லாம் ஒரு காமணி, மிஞ்சிப்போனா அரைமணி நேரச் சமாச்சாரம். அதுக்குள்ளே வீட்டில் இருந்தவளைக் காணோமுன்னா எங்கெ போய் அழுவது?
உயிரோடு இருக்காளா, இல்லை போய்ச் சேர்ந்துட்டாளா? எந்த நிலையில் இருப்பாள்? எங்கே இருக்காள்? போய்ச் சேர்ந்துருந்தால் கதையே மாறி இருக்கும், இல்லே!
அந்த சீதைக்கும் பாருங்கோ, தான் மஹாலக்ஷ்மியின் அவதாரம் என்றும் தெரியாது. அந்த உணர்வு மட்டும் இருந்துருந்தால், கபட சந்யாஸி ராவணனைக் கண்ட மாத்திரத்தில் சுட்டு எரிச்சுருக்க மாட்டாளோ? அவன் இழுத்த இழுப்புக்கு ஓடி, புஷ்பகவிமானத்தில் ஆகாயமார்க்கத்தில் பயணம் போயிருப்பாளோ? கெட்டதில் நல்லதுன்னா, ஜடாயு கண்ணில் அந்த ஸீன் பட்டதுதான். அட்லீஸ்ட் போன திசை தெரியவந்தது!
இன்னொரு திறந்த மண்டபத்துலே கோவில் வாகனங்கள்.
கோவில் தலவிருட்சம் , புன்னை மரம்தான். இதனடியில்தான் 'அப்போ' ராமன் உக்கார்ந்துருப்பான்.
கருவறை விமானம், கோபுர வடிவில்.
கிணறு கூட இருக்கு. ஜடாயு தீர்த்தமாம்!
மீடியம் ஸைஸ் கோவில்தான். ஓரளவுக்குச் சுத்தம் இருந்தாலும், இன்னும் பளிச்ன்னு வச்சுருக்கலாம். சுற்றுப்புற சுத்தம் பேணுதலும் பக்தி ஸேவையில் வருதுன்னு புரிஞ்சுக்கிட்டால் நல்லது.
வைணவ நவக்ரகக்கோவில் வகையில் இது புதனுக்குரிய ஸ்தலம். மேலும் இங்கே பித்ரு காரியங்கள் செஞ்சுக்கிட்டால் விசேஷமாம். இதே ஜடாயு கதைதான் நம்ம காஞ்சீவரம் பயணத்தில் போன திருப்புட்குழிக்கும் அமைஞ்சுருக்கு. ஸோ அமாவாசை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்குமுன்னு நினைக்கிறேன். விசாரிக்கலாமுன்னா வல்வில் ராமனைத் தவிர வேறு யாரையும் காணோம். நமக்கு லபிச்சது ஏகாந்த ஸேவை!!
கும்மோணம் நவக்ரக டூரில் சைவக் கோவில்களுக்குத்தான் கொண்டு போறாங்க. அதே ஏரியாவில் வைணவ நவகிரக டூர் ஆரம்பிச்சாலும் நல்லாவே போகும், இல்லே!
என்ன ஒன்னு விஷ்ணு கோவில்களில் பெரும்பாலும் நவகிர ப்ரதிஷ்டைகள் இல்லை என்பதால் டூர்க்காரர்கள் கண்டுக்கலை போல!
காலை ஏழரை முதல் பனிரெண்டு வரையும், மாலை நாலரை முதல் ஏழரை வரையும் கோவிலைத் திறந்து வச்சுருக்காங்க.
பக்கத்துலே உயர்நிலைப்பள்ளிக்கூடம் இருக்கு போல. அதுக்குன்னு கூடுதல் வகுப்பறையைக் கட்டிவிட்டுருக்கார் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராமதுரைக்கண்ணு. எல்லாம் தொகுதி மேம்பாட்டுக்கு அரசு கொடுக்கும் நிதியில்தானாம். அந்தவரை ஸ்வாஹா செய்யாமல் இருந்ததுக்கு கோடி நன்றிகள்.
பக்கத்து சைக்கிள் ஸ்டேண்டுலே மாணவர் கூட்டம் அலைமோதுது. ஊர் போய்ச் சேர எவ்ளோ தூரமோ! பசங்க படிச்சு முன்னுக்கு வரணுமேன்னு பெருமாளை வேண்டிக்கிட்டேன்.
அடுத்த ஸ்டாப்பிங் நேரா கும்மோணம்தான். ஒரு இண்ட்ரஸ்ட்டிங் சமாச்சாரம் பார்க்கலாம்:-)
தொடரும்.........:-)

16 comments:
Teacher, have done 100 Divyadesams now.
அழைத்தால்தான் வருவான். கேட்டால்தான் தருவான்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கையில்லை. இந்த ஒரு பிறவிக்கு உயிர் கொடுத்த தாயே பிள்ளைக்குப் பசிக்கப் போகும் நேரத்துல சாப்பிடுன்னு தட்டு எடுத்து வைக்கிறப்போ... எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் தாயான கடவுளை “வருந்தி அழைத்தால் வருவான்”னு சொல்வதில் ஏற்பில்லை.
திருமங்கையை அவரே அழைத்தது அன்பினால்தானே. நாமெல்லாம் திருமங்கையைப் போல பக்தியில் ஆழ்வாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆண்டவனுக்குத் தாய்ப்பாசம் கொஞ்சமாவது இருக்கும் என்றே நம்புகிறேன். அழைக்காமலும் வரும் அலர்மங்கை நாயகனேன்னுதான் பாடனும். :)
நீங்க இராமாயணக் கதை சொல்ற அழகு நல்லாருக்கு. பேசாம அடுத்த தொடர் இராமயணமா இருக்கட்டும் :)
ராமன் ரொம்பவே அவதிப்பட்டிருக்கான், பாவம்.
ராமாயணமே பல விதமாகச் சொல்லப் பட்டிருக்கே. எதை சரியென்று கொள்ள.?
அஹோபில மடத்தின் ஆதரவில் இருக்கும் கோவில். நாங்கள் சென்றிருந்த போது முன் மண்டபம் கூட கிடையாது.
பக்கத்துலயே ஆதனூர் கோவிலும் புனருத்தாரணம் செய்ததாகக் கேள்வி. கும்பகோணத்துக்கு ஏழு மைல்கல் தூரத்தில்
சிங்கத்தின் முன்னோர்கள் பிருந்தாவனம் இருக்கும் நரசிம்மபுரமும் இருக்கிறது.
அருமையாக சுற்றிக் காண்பித்து விட்டீர்கள் அம்மா... நன்றி...
கோயில்உலாவின்போது புள்ளப்பூதங்குடி சென்றுள்ளோம். இருந்தாலும் உங்களது பதிவுகள் மூலமாக அதிகமான புகைப்படங்ளைக் கண்டோம். அருகிலுள்ள ஆதனூர் பெருமாள் கோயில் செல்லவில்லையா?
வாங்க கோபி.
ஆஹா நூறு தரிசனம் ஆச்சா!!! இன்னும் ஆறுதான். அதையும் தரிசனம் செஞ்சுருங்கோ. அப்ப நீங்க ரெண்டாவது பதிவர்! (நம்ம லதானந்த் 106 போய் வந்துட்டார்!)
நான் இப்பதான் எழுபத்தி நாலு.
ஆமாம்.... கோவில் விவரங்கள் பதிவு நூறும் எழுதியாச்சா?
வாங்க ஜிரா.
எனக்கும் அப்படித்தான். படைச்சவனுக்குத்தான் பொறுப்பு. நாம் ஏன் கவலைப்படணும், இல்லே?
பாரதத்துலே இருக்கும் சுவை ராமாயணத்துலே இல்லைன்னு என் நினைப்பு. பங்காளிச்சண்டைன்னா சும்மாவா :-))))) இப்பத்து டிவி சீரியல்ஸ்களுக்கெல்லாம் முன்னோடி!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
மனுசன்னாவே அவதின்னு காமிக்கத்தான்:-)
வாங்க ஜிஎம்பி ஐயா.
எது வாசிக்கக் கிடைக்குதோ அதை வாசிச்சுக்கலாம். தெரிஞ்ச மொழி, நயம் என்றால் நமக்கெல்லாம் கம்பன்.
எது 100 % சரின்னு சொல்ல முடியாது. ஸ்டோரிலைன் ஒன்னுதான். விஸ்தரிப்புதான் பலவிதம்!
வாங்க வல்லி.
ஆதனூரைச் சரியாக் கவனிக்காமல் இருந்துட்டேனேப்பா:-(
கோவில் உள்ளே நல்லாவே இருக்குப்பா. அடுத்தமுறை விடுவதில்லை. அதென்னப்பா இவ்ளோ கோவில் கும்மோணத்தைச் சுற்றியே! முழுசாப் பார்த்து முடிக்க முடியாது போல இருக்கே!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
நன்றிகள்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஆதனூர் கோவிலுக்குப் போய் தரிசனம் ஆச்சு. கொஞ்சம் அசட்டையா படம் எடுக்காம விட்டுட்டேன்..... அப்போ அது 108 இல் ஒன்னுன்ற விவரம் இல்லாமல் போச்சு:-(
படங்களோடு பதிவு வரட்டுமேன்னுதான் ஒன்னும் எழுதலை. எங்க கிவி ஆட்டிட்யூட்.... நெவெர் மைண்ட். நெக்ஸ்ட் டைம். எப்படி?
நல்ல விவரணம் கதைகளுடன் படங்கள் அருமை....
நேற்று புள்ளம் பூதங்குடி போய் வந்தோம். அருமை. அமாவாசை தரிசனம் பிரமாதம்.
Post a Comment