அதென்னவோ ஒவ்வொரு ஊருக்கும் நாட்டுக்கும் தனித்தன்மையா ஒரு பொருளோ இல்லை காட்சிகளோ இருந்தால்தானே மக்கள்ஸ் போய் ரசிச்சு அனுபவிச்சு நினைவில் வச்சுக்க நல்லா இருக்கும். அதை விட்டுட்டு, க்ளோபல் க்ளோபல்னு சொல்லிக்கிட்டே எல்லாத்துக்கும் கிளைகளை உண்டாக்கி வச்சுக்கும் காலமால்லே இது ஆகிக்கிடக்கு. தாஜ்மஹலை ஊர் ஊருக்குக் கட்டிவிட்டா எப்படி?
ஆறரைக்கு எழுந்து சூரியக் க்ளிக்ஸ் முடிச்சு காஃபி. நடை இன்னிக்கு ஏழுமணிக்கே ஆரம்பம். யார் வந்தா என்ன ? யார் போனா என்னன்னு கடல் பாட்டுக்கு அலையைக் கரை வரை கொண்டுவர்றதும் போறதுமா தன் கடமையில் கவனமா இருக்கு!
கடற்கரை மணலைச் சுத்தப்படுத்தும் வண்டிகள் பணியில். தப்பித்தவறி செடிகளுக்கிடையில் பறந்துபோய் மாட்டிக்கும் குப்பைகளையும் கவனமாகப் பொறுக்கிச் சேகரிக்கிறார் ஊழியர். யாரும் யாரையும் மேஸ்த்திரியா நின்னு கண் காணிக்கலை.
தூரத்துலே பாய்மரப்படகு ஒன்னு! எப்பவும் எதாவது செஞ்சுக்கிட்டே இருக்குப்பா சனம்!
க்ரீஸ்க்காரர், மீன்பிடிக்க வந்துருந்தார். நேத்து பதினொரு மீன்கள் கிடைச்சதாம். லஞ்ச், டின்னர்ன்னு ஒரே மஜாவாம்! (ஒருநாளைப்போல மீனே தின்னால் போரடிக்காதோ?)
எட்டுமணி ஆயாச்சுன்னு கடிகாரம் பார்க்காமலே சொல்லலாம். லைஃப் கார்ட் வண்டி வந்து நின்னு கொடி நட்டு அவுங்க வேலையை ஆரம்பிச்சுட்டாங்க.
நடைப்பயிற்சி, காயத்ரி சொல்றதுன்னு நாங்களும் ஸர்ஃபர்ஸ் பாரடைஸ் பீச் வாசல் வரை போய் வந்தோம்.
கடலுக்கும், நம்ம ஹொட்டேல்கள் இருக்கும் வரிசைக்கும் இடைப்பட்ட மண் வெளிகளில் கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே ஒரு வகைச்செடிகள் படர்ந்து வளர்ந்துக்கிட்டே போகுது. தண்ணீரெல்லாம் ஊத்தி வளர்க்க வேணாம். தானே காற்றில் இருக்கும் ஈரப்பதம், மழை இவைகளே போதுமாம். இலைகள் தடிப்பாக ஒருவிதக் கள்ளிச்செடி வகைகள். இங்கே நம்ம நியூஸிக் கடற்கரையிலும் ஏராளமா இருக்குதான். மஞ்சளும், மெஜந்தாவுமாரெண்டு வகை வண்ணங்களில் பூக்கும்.
ரொம்ப வளர்ந்து காடு போல் பரவாமல் இதையும் பார்டர் கட்டுவதைப்போல் வெட்டி ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வர்றாங்க. மெஷீன்கள் வேலை செய்வதால் வலை எல்லாம் கட்டி, யாருக்கும் ஆபத்தில்லாமல் பகுதி பகுதியாச் சுத்தம் செஞ்சுக்கிட்டே போறதுதான். அபார்ட்மெண்ட் திரும்பும்போது நம்ம ஹொட்டேலுக்குப் பக்கம் வலை கட்டிட்டாங்க. நமக்கு உள்ளே போகணுமுன்னதும் வேலையை நிறுத்தி வலையைப் பிரிச்சு உள்ளே போகவிட்டது பிடிச்சுருந்துச்சு.
குளிச்சு முடிச்சு ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. மஃப்பின்ஸ் அண்ட் தயிர்.
தினம் எதுக்குப் பறந்து பறந்து வெளியே போகணும்? இன்னிக்குக் கொஞ்சம் நிதானமாகவே கிளம்பலாமுன்னு முடிவு. சவுத் போர்ட் பக்கம் போய் நெராங் நதி கடலில் கலக்கும் முகத்துவாரத்தைப் போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னார் கோபால்.
இங்கேதான் ஸீ வொர்ல்ட் கட்டி விட்டுருக்காங்க. சவுத்போர்ட் படகுக்குழாம் நம்ம வீட்டில் இருந்து ஒரு அஞ்சு கிமீ தூரம்தான். முதலில் அங்கெ போய்ப் பார்க்கலாம்.
குட்டியூண்டு பீச் ஒன்னு இருக்கு. இங்கே நாய்களுக்கு லீஷ் போடாமல் விளையாட விடலாம். அவுங்களுக்கும் மண்ணில் சுதந்திரம் வேணும் இல்லையா?
ஒரு அம்மாவும் செல்லமும் இருந்தாங்க. ' பந்தைப் போடு. நான் போய்க் கொண்டாரேன்'னு கேட்டுக்கிட்டு அம்மாமுன்னே கெஞ்சிக்கிட்டு இருந்தது செல்லம்.
ஒரு ஏழெட்டுக் கார்கள் பார்க்கிங்கில் இருந்தாலும் ஆள் நடமாட்டம்கூட அவ்வளவா இல்லை. ஒருத்தர் சின்னப் படகு ஒன்னில் உக்கார்ந்துக்கிட்டுத் தூண்டில் போட்டு வச்சுருந்தார். இன்னொருத்தர், மீனே நீயாவே வந்து தானாகவே தூண்டிலில் மாட்டிக்கோன்னுட்டு, செல்ஃபோனைப் பார்த்துக்கிட்டு இருக்கார்.
ஓய்வு வாழ்க்கை எப்படிக் கவலை இல்லாமல் வாழணுமுன்னு இவுங்களைப் பார்த்துப் படிச்சுக்கிட்டால் நமக்கும் நல்லது. நெராங் நதியில் படகுகளைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்காங்க சிலர். நமக்குத்தான் ஓய்வு கிடைச்சாலும் ஓட்டம் நிக்காது போல!
ஸீ வொர்ல்ட் இங்கே அடுத்துதான் இருக்கு. போகலாமான்னார் கோபால். ஆரம்பத்து பாரா இங்கே வரணும் இப்போ!
ஒரு சமயம் ஸான்டியாகோ ஸீ வொர்ல்ட் போயிருக்கோம். அப்போ முக்கியமாப் போனது ஷாமுவைப் பார்க்க. நாம் போன நாளில் ஷாமு ஷோ காமிக்கும் பெத்தாம் பெரிய கண்ணாடி டேங்கில் கலங்குனமாதிரி ஒரு தண்ணீர். பார்க்கின் உதவியாளர்கள் சிலர் ஓட்டமும் கையுமா இங்கே அங்கேன்னு தொட்டியைச் சுத்தி இருக்காங்க. பார்வையாளர் கேலரியில் ஈ காக்கா கிடையாது.
இங்கெல்லாம் வெவ்வேற மிருகங்கள், மீன்களுக்கான தினப்படி ஷோ ன்னு உள்ளே போய் டிக்கெட் வாங்கும்போதே ஒரு பட்டியலைக் கையில் கொடுத்துடறாங்க. பெரிய தீம் பார்க்கின் வரைபடமும் கொடுத்துடறாங்க. அதை வச்சுக்கிட்டு இங்கேயும் அங்கேயுமா ஓடி ஓடி நாமும் ஸீ லயன், டால்ஃபின், திமிங்கிலம் இப்படி பயிற்சியாளர்கள் ஆட்டி வைக்கும் காட்சிகளைத் தவறவிடாமல் பார்த்துக்கிட்டு இருப்போம். நாம் போறதே ஒரு நாள் பயணமாத்தான். எதையும் விட்டுடக்கூடாது பாருங்க.
என்னுடைய முதல் டால்ஃபின் ஷோ, ஹாங்காங் Ocean Park இல். ஆச்சு 33 வருசம்! பிரமாண்டமான டேங்க். இதுவே ஒரு ஏழெட்டுமாடி தரையில் இறங்குது. சரிவுப்பாதையில் சுத்திச்சுத்தி வரவர ஒவ்வொரு லெவலிலும் ஒவ்வொரு வகை மீன்கள்! ஒரே பிரமாண்டமான தொட்டியில் அடுக்குமாடி போல வெவ்வேற உயரத்தில் வசிக்குதுகள்! அதுக்கப்புறம் சில நாடுகளில் டால்பின் ஷோக்கள் பார்த்தாச்சு. ஆரம்ப கால பிரமிப்பு போயிருச்சு.
இப்படி ஓடுன ஒரு சமயம்தான் திமிங்கிலத் தொட்டியைக் கடந்து போறோம். கலங்குன தண்ணீரின் காரணம் பிடிபட்டுருச்சு. திமிங்கிலம் ஒன்னு குட்டி ஈனப்போகுது. அடிவயித்துலே வால் ஒரு ரெண்டடி நீளம் வெளிவந்து நீட்டிக்கிட்டு இருக்கு. தாய்காரி தன்னுடைய உடலை முறுக்கி, வால் படபடன்னு அடிச்சுக்கிட சுத்திச்சுத்தி வர்றாள். பிரஸவமென்ற சமாச்சாரத்தில் உள்ள வலி எல்லா உயிர்களுக்கும் பொதுவே! பாவம்.....
அதைப் பார்த்துக்கிட்டே இருக்கும்போதே.... குளம் முழுசும் ரத்தச் சிகப்பு! என்ன நடக்குதுன்னே தெரியலை. நம்ம இவர் வேற இருந்து பார்க்க விடாம, அடுத்த ஷோவுக்கு ரொம்பதூரம் நடக்கணும், வா வான்னு மகளை இழுத்துக்கிட்டு ஓடறார். நானும் மனசில்லா மனசோடு பின்னாலேயே போக வேண்டியதாச்சு.
அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ஷாமு ஷோவுக்காக இங்கே வர்றோம். என்னமோ மந்திரம் போட்டாப்போல.... மொத்தக்குளமும் பளபளன்னு புதுத்தண்ணீர் ரொப்பிக்கிடக்கு. ப்ளாஸ்டிக்லே செஞ்ச பொம்மையாட்டம் மினுமினுப்போடே ஒரு திமிங்கிலம் தண்ணிக்குள் விளையாடிக்கிட்டு வலம் வருது! பிரஸவ வார்டாக இருந்ததன் சுவடு கூட இல்லை! ஒரே மேஜிக் !
இதுவுமே நடந்து ஒரு பத்தொன்பது வருசங்கள் ஆனாலும்.... இன்னும் மனசில் பச்சக்!
இதைப்பற்றி எட்டு போடக் கேட்டுக்கிட்ட ஒரு பதிவில் எட்டு வருசத்துக்கு முன்னே எழுதி இருக்கேன். விருப்பம் இருந்தால் பார்க்கலாம்:-)
ஸீ ஒர்ல்ட் , இங்கே போக வேணாம்னு சொன்னவள், 'திமிங்கிலம் பார்க்கறதுன்னா பரவாயில்லை'ன்னேன். இங்கே இருந்தே படகில் நம்மைக் கூட்டிபோய் காமிக்கிறாங்களாம். அதுவும் சீஸன் பொறுத்து. மூணு மணி நேரம் குறைஞ்சபட்சம் இதுக்கு ஒதுக்கணும்னு சொல்றாங்க. ஆனால் கட்டாயம் திமிங்கிலம் நம் கண்ணுக்கு முன் புலப்படுமான்றது நம் அதிர்ஷ்டம் பொறுத்ததுதான்.
இதுக்குப் பதிலா நியூஸியிலேயே 'வேல் வாட்ச்சிங்' போகலாம். ஒருநாள் கண்ணில் படலைன்னா அங்கேயே ஒரு மோட்டலில் தங்கி மறுநாள் கூடப்போய்ப் பார்க்கலாம். ஒருநாள் போகணும்தான். நூறு சதமானம் கேரண்டீ இல்லைன்னாலும் அம்பது சதம் திருப்பிக்கொடுப்பதாச் சொல்றாங்க நியூஸியில். நம்ம வீட்டில் இருந்து ஒரு ரெண்டரை மணி நேர ட்ரைவ்தான்.
போகவேணாமுன்னு முடிவு செஞ்சதும், ஸர்ஃபர்ஸ் பேரடைஸ் வழியாகவே பஸிஃபிக் ஹார்பர் மாலுக்குப்போனோம். அங்கேயும் முதல்நாள் போனபோது ஒரு கடையில் பாத்திரம் ஒன்னு பார்த்து வச்சுருந்தேன். . இண்டக்ஷன் அடுப்பில் வச்சு சமைக்கலாம். மூடியே இன்னொரு பாத்திரம் போல இருக்கு. டபுள் பாத்திரமாகக்கூடப் பயன்படுத்திக்கலாம். ஆனால் இப்போ ஸேல் இல்லை. அநேகமா நீங்க போறதுக்குள்ளே ஸேல் வந்தாலும் வரலாம். கண்டுக்கிட்டுப் போங்கன்னு கடைக்காரம்மா சொல்லி இருந்தாங்க.போய்ப் பார்த்தால் இன்னும் தலைமையிடமிருந்து தகவல் இல்லையாம்.
இந்தக் கடைக்காரம்மாதான் முதல் நாள் அங்கே போனபோது, என்ன பெர்ஃப்யூம் போட்டுருக்கீங்க. அட்டகாசமா இருக்குன்னாங்க. நான் நம்மூர் காதி க்ராஃப்ட்டில் வாங்கின அத்தர், மணிக்கட்டில் பூசி இருந்தேன். இதோ இதுதான்னு கைப்பையில் இருந்து எடுத்துக் காமிச்சுட்டு, அவுங்க மணிக்கட்டில் கொஞ்சூட்டு பூசி விட்டதும் அப்படியே மகிழ்ந்து போயிட்டாங்க. ப்யூடிஃபுல் ஸ்மெல். நெவர் ஹேட் பிஃபோர்! வேர் டிட் யூ கெட் இட் ஃப்ரம்? (அ(த்)து.....) ஃப்ரம் மை மதர்லேண்ட், இண்டியா!
அப்படியே மாலுக்குள் போகும்போது வழியில் இருந்த ஃப்ளோரிஸ்ட் ஷாப்பில் பார்த்து வச்சதை வாங்கிக்கலாமுன்னு அங்கே போனேன். கூடவே வந்த கோபாலின் நாக்கில் சனி வந்து உக்கார்ந்து இருந்ததை அப்ப யாரும் கவனிக்கலை!
சின்னதா ஒரு குழந்தை புத்தர். ரெண்டு கைகளையும் ஒருசேரக் கும்பிட்டாப்லெயும், விரல்கள் ஒட்டாமலும் வச்சுத் தலையை ஒரு பக்கமா சாய்ச்சு உக்கார்ந்துருக்கு. போகும்போதே பார்த்தவுடன் சட்னு எனக்கு மனசுக்குப் பிடிச்சாலும் கொஞ்சம் நேரம் ஆசையை ஒத்திப் போட்டேன். செகண்ட் தாட்லே வேணாமுன்னு பலசமயங்களிலும் ஆசைப்பட்டதை வேணாமுன்னும் ஒதுக்கி இருக்கேன். இதெல்லாம் ஒரு டெஸ்ட் தான்.
இப்பக் கடைக்குள் போனதும் வாங்கிக்கணுமுன்னுதான் தோணுச்சு. ஆசையோடு அதைக் கையில் எடுத்துக் கோபாலிடம் காமிச்சதும், 'எதுக்கும்மா வேணாமு'ன்னு வழக்கமான பல்லவியை ஆரம்பிச்சார். அஸ்து....... சட்னு எடுத்த இடத்தில் வச்சுட்டுக் கடையை விட்டு வெளியே வந்து கார் பார்க்கை நோக்கி நடையைக் கட்டுனேன்.
அப்பதான் மனசுக்குள்ளே என்னென்னமோ ஆத்தாமை பொங்கிப்பொங்கி வருது. இதுவரை இந்த ஒரு வாரத்துலேயே எத்தனையோ பொருட்களைப் பார்த்துருந்தும் ஆசைப் பட்டுக் கேட்டது இது ஒன்னுதான். அது போகட்டும்..... ஒரு இருபத்தியஞ்சு எனக்காகச் செலவழிக்க மனசில்லாமப் போச்சேன்னு......
ஒன்னும் பேசாம மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டு இருந்தேனா.... சரி. வாங்கிக்கோன்னார். வேணாம். வேணவே வேணாம்......
ரபீனா ஷாப்பிங் செண்டருக்கு வண்டியை விட்டுக்கிட்டே ' ரபீனா போகலாமா'ன்னார். ம்... தலையாட்டலோடு சரி.
வழக்கமான ஷாப்பிங் சென்ட்டர்தான். இதுலே ஜாப்பனீஸ் கடை ஒன்னு இருக்குன்னு அதுலே நுழைஞ்சால்..... ஏற்கெனவே கெட்டுக் கிடக்கும் நம்ம மூடைக் கெடுக்கறாப்போல.... போதுண்டா சாமின்னு ஆச்சு.
ஒரு ஒன்னேகால் வயசு இருக்கும் குழந்தை, தன்னுடைய ஸ்ட்ரோலர்லே இருந்து இறங்கித் தரையில் உக்கார்ந்துக்கிட்டு, ஒரு கையில் தள்ளுவண்டியின் கம்பியைப் பிடிச்சபடி, உலகத்து சோகத்தையெல்லாம் பிழிஞ்சு எடுக்கறாப்போல சத்தமாக் கத்திக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்கு.
இதென்னடா... தாய் எங்கேன்னு கண்ணை அனுப்பினால் ரெண்டாவது ஐலில் வேறெதோ சாமான்கள் வாங்கும் பாவனையில் ச்சும்மாவே இதையும் அதையும் எடுக்கறதும் வைக்கிறதுமா.... சின்னப் பொண்ணுதான். ஒரு இருபதுகளில் இருக்கணும்.
இங்கே எங்க பக்கங்களில் குழந்தை வளர்ப்புன்னு இவுங்க வச்சுருக்கற அளவுகோல் இன்னமும் எனக்குப் புரியாத புதிர்தான். ஒருவேளை என்னைப்போல் குழந்தைக்காகத் தவமாய் தவமிருந்து கிடைச்ச மாமணின்னா.... வேறமாதிரி இருக்குமோ என்னவோ?
தோழி ஒருத்தர் சொல்வாங்க.... பிறந்த நாள் முதல் குழந்தை தனி அறையில்தானாம். குழந்தையைத் தூங்க வைக்கத் தொட்டிலில் போட்டுட்டு, லைட்டை அணைச்சுட்டு வந்துடணுமாம். அழுதா கண்டுக்கப்டாதாம். பத்து நிமிசம் போல் அழுதாட்டு... போய் ,கொஞ்சம் தட்டிக் கொடுத்துட்டு வந்துடணுமாம். இப்படியே மூணு முறை. மூணாம் முறை குழந்தை நல்லாவே தூங்கிப் போயிருக்குமாம்.
இப்படி எல்லாம் குழந்தை வளர்க்க எனக்குத் தெரியலையேப்பா......
பதின்ம வயதுகளிலேயே பசங்க இப்பெல்லாம் குழந்தை பெத்துக்கறாங்க. அதுவும் சோலோ பேரண்ட். இதுகளே குழந்தைகளா இருக்கும்போது இன்னொரு குழந்தையை வளர்க்கறது கஷ்டமில்லையோ!
போதாக்குறைக்குக் கடைகளில் போய் பொம்மைகள் இருக்கும் பகுதியில் பார்த்தோமுன்னா.... அப்படியே எனக்குப் பத்திக்கிட்டு வரும். பாய்ஸ்க்கான பொம்மைகளில் கார், ட்ரக், டிக்கர் இப்படியெல்லாம் மெஷீனரி சம்பந்தப்பட்டவைகள். பெண் குழந்தைகளுக்கு 'மை பேபி' வகையறாக்கள். ஃபீடிங் பாட்டிலில் பால், அதைக் குடிச்ச கொஞ்ச நேரத்துலே பொம்மைக்கு நாப்கின் மாத்தணும். இதெல்லாம் ஒரு விளையாட்டா? ஏன் பசங்களை இப்படி மேற்கொண்டு சிந்திக்கவிடாமல் மொக்கையாவே வைச்சிருக்கணும்? இதுலே நாம் சொல்லிக்கறது.... வெள்ளைக்காரன் அறிவாளி. அவனைப்போல் ஆகுமான்னு.... அட போங்கப்பா....:-(
இந்த இளம் தாயும் இப்படி மூளைச் சலவை செய்யப்பட்டு, எதோ அவசர ஆத்திரத்துலே குழந்தை பெத்துக்கிட்ட மாதிரிதான் தெரிஞ்சது. ஒரு குழந்தையை வளர்த்து எடுப்பதற்கு எவ்ளோ பொறுமை வேணுமுன்னு யாரும் சொல்லித்தரலை போல!
ஆமாம்.... குழந்தை இப்படி கடையே இடிஞ்சு விழுவது போல வீறிட்டு அழுதே.... இது சைல்ட் அப்யூஸ்லே வராதா? கடைக்காரம்மாவுக்கும் சல்லியமா இருந்தாலுமே காமிச்சுக்கப்டாது என்பதால் ஒன்னுமே நடக்காத மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு இருந்தாங்க. எனக்குத்தான் ச்சீன்னு போச்சு.
மனசே பேஜார் ஆகிப்போனதால் வேறெங்கே போகணுமுன்னு கேட்ட நம்மவரிடம் வீட்டுக்கே போயிடலாமுன்னு சொல்லிட்டு,மறக்காம மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டேன்.
இவர் என்னென்னவோ சமாதானம் சொல்லிக்கிட்டே வர்றார். ' உனக்கு அவ்ளோ ஆசை இருந்தால் அந்த புத்தரை வாங்கிக்க வேண்டியதுதானே? ஏன் என்னிடம் காமிச்சுக் கேட்டே? அதான் உன் ஹேண்ட் பேக்லே காசு இருக்கே. நீயே போய் வாங்கிக்கக் கூடாதா? நான் வேணாமுன்னு சொல்றதுதான் வாடிக்கையாச்சே. ஏன் என் பேச்சைக் கேக்குறே.... ' இப்படி.
நாப்பத்தியோரு வருசமாப் பேச்சைக் கேட்டுத்தானே இப்படி ஆகிட்டோமுன்னு இன்னும் துக்கமா வருது எனக்கு.
திரும்பி வரும் வழியும் பஸிஃபிக் ஃபேர் பக்கம் என்றதால், 'நீ வண்டியிலேயே இரு. நான் போய் வாங்கியாந்துடறேன்' னு சொல்றார். எனக்கும் வீம்பா இருக்கு. வேணவே வேணாமுன்னுட்டு அபார்ட்மெண்ட் வந்ததும் அறைக்குப்போய் படுத்துத் தூங்கிட்டேன்.
அவரவருக்குள் இருக்கும் மிருகம் இப்படித்தான் எப்பவாவது வெளியே வந்து கொஞ்சம் ஆட்டம் காமிச்சுட்டுப் போகும். பேசாம விட்டுப்பிடிச்சால் கொஞ்ச நேரத்திலோ, கொஞ்ச நாளிலோ சரியாகிரும். அதானே... நல்லவராகவே எவ்ளோ நாள்தான் நடிப்பது:-)
அஞ்சடிக்கும்போதுதான் தூக்கம் போய் விழிப்பு வந்தது. இங்கெல்லாம் கடைகள், மால்கள் எல்லாம் வார நாட்களில் அஞ்சரை, ஆறு வரை திறந்துதான் இருக்கும் என்பதால், பஸிஃபிக் பேர் போகணுமுன்னு சொன்னேன். ஓசைப்படாம வந்து வண்டியைக் கிளப்பினார்.
நேரா அதே கடைக்குப்போய் அங்கிருந்த பொம்மைகளை ஒரு பார்வை பார்த்துட்டு, ரெண்டு வெவ்வேற போஸில் இருக்கும் புத்தாக்களை வாங்கினேன். கடையை மூட சாமான்களை எடுத்து உள்ளே வச்சுக்கிட்டு இருந்த கடைக்காரம்மாவின் அன்றையக் கடைசி வியாபாரம் நம்மதுதான்.
நம்ம வீட்டில் ஒரு ஸ்டேண்ட் செட் சண்டிகரில் இருக்கும்போது கலைப்பொருள் கண்காட்சியில் வாங்குனது நாலு வருசமா தரையிலே ஒரு மூலையில் கிடப்பா இருந்ததை, போன மாசம்தான் சின்னதா சாமி ஆடி சுவற்றில் மாட்டி வச்சுருக்கு. அதுக்குச் சரியா இருக்கும்.
ஒன்னுன்னு கேட்டப்பச் சும்மா இருந்துருக்கலாம். இப்போ.... பாருங்க.... ஒரு சண்டை புத்தா, ஒரு சமாதான் புத்தான்னு ஆகிப்போச்:-)
கோபமா இருந்ததால் மதியத்துக்குப்பின் கேமெராவை வெளியிலேயே எடுக்கலையாக்கும்:-(
இருட்டிப் போச்சேன்னு தரைவழியாவே சின்னதா ஒரு வாக் போயிட்டு வந்தோம். நாளைக்கு இங்கிருந்து கிளம்புவதால் மறுநாளைக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வெளியில் வச்சுட்டு, நம்ம சாமான்களை எல்லாம் சேகரிச்சு ஒழுங்கா பெட்டி கட்டி வச்சுட்டு, ஃப்ரீஸரில் இருந்த ரெடிமேட் சாப்பாட்டை அவனில் வச்சு எடுத்து ராச்சாப்பாட்டையும் முடிச்சோம்.
தொடரும்......... :-)
PINகுறிப்பு: ஊர் திரும்பினதும் மகள் வந்து பார்த்துட்டு, 'ஹைய்யோ!!! புத்தா ப்ரமாதமுன்னு சொன்னதும்.... கோபாலைப் பார்க்கணுமே.....:-)

21 comments:
உங்க சின்னச் சின்ன கோபம் அங்கங்கே எட்டிப்பார்த்தாலும் கடைசியில் அந்த புத்தர் சிலை பார்த்ததும்...எல்லாம் போயிடுச்சு. லொக்கேஷன் அருமை.
பயணத்தில் கோபம்.... :) சில சமயங்களில் இப்படித்தான்.... கோபம் வந்தாலும் காண்பிக்க முடியாத சில சமயங்கள் எனக்கு நேர்ந்திருக்கிறது! கூட வந்த ஆட்கள் அப்படி!
புத்தர் ரொம்பவே அழகு. அதுவும் கன்னத்தில் கை வைத்த மாதிரி இருக்கும் புத்தர்.
//அதான் உன் ஹேண்ட் பேக்லே காசு இருக்கே. நீயே போய் வாங்கிக்கக் கூடாதா? நான் வேணாமுன்னு சொல்றதுதான் வாடிக்கையாச்சே. ஏன் என் பேச்சைக் கேக்குறே..//
ஊட்டுக்கு ஊடு டோர் ஸ்டெப்ஸ். அதான் நான் எதானும் வாங்கணும்ன்னா இப்பல்லாம் ரங்க்ஸ் பேச்சைக் கேக்கறதேயில்லை. மாலில் நுழைஞ்சா, "நாங்க சும்மா சுத்திட்டு வரோம். நீங்க கவுண்டர் கிட்ட வந்துருங்க"ன்னுட்டு கழண்டுக்குவோம் ;-)
//பஸிஃபிக் பேர் போகணுமுன்னு சொன்னேன். ஓசைப்படாம வந்து வண்டியைக் கிளப்பினார். நேரா அதே கடைக்குப்போய் அங்கிருந்த பொம்மைகளை ஒரு பார்வை பார்த்துட்டு, ரெண்டு வெவ்வேற போஸில் இருக்கும் புத்தாக்களை வாங்கினேன்.//
சிரிச்சு முடியலை....
அண்ணா பாவம் :-)
ஹஹஹஹ் செம ஹ்யூமர் பயணம் போல....அதான் உங்க செல்ல....கோபம்.....கோபாலின் சமாதானம் என்று....செம போங்க...ஊடல் இல்லாத வாழ்வா சொல்லுங்க....!!!
புத்தர் இரண்டும் அருமை...அதுவும் அந்தக் கன்னத்தில் கைவைத்து....ஓ ஸ்வீட் பேபி புத்தா....
கீதா: நானும்....புத்தர் மாதிரிதான் அதான் ஆசையை அறவே துற அப்படின்றது போல எதுவுமே ஆசைப்பட்டுக் கேக்கவே மாட்டேன்....(ஏன்னா எனக்கு ஆசை ரொம்ம்ம்ப) ரொம்ப ரேரா என்னைக்காவது கேட்டா....எதுக்கு வீட்டுல குப்பை...இருக்கறதுக்கே இடம் இல்லை அப்படினு வரும் பாருங்க....அப்ப உங்கள மாதிரிதான்...ஆனா அது வொர்க் அவுட் ஆகாது...னான் தான் என் முகத்தை மாத்திக்கணும்...அவுக முயலுக்கு மூணு கால்....
படங்கள் வெகு அழகு!
சின்னதா சாமி ஆடி சுவற்றில் மாட்டி வச்சுருக்கு>}}}}}}}}}}}}}}}}}}}}}}}
இரண்டு புத்தாவும் மிக அழகு. கொஞ்சுகிறது.
அப்பப்போ கோபம் காட்ட வேண்டியதுதான்.
துளசி
எவ்ளோ அழகு!! புத்தர் சூப்பரா இருக்கும்மா.படங்களும் அழகு...) வாழ்த்துக்கள் மா.
வாங்க குமார்.
எவ்ளோ இன்னொஸென்ட்டா அந்தக்குழந்தை முகம் இருக்கு பாருங்க!!!!!
நிம்மதியான இடமா இருந்தது அங்கே!
வாங்க வெங்கட் நாகராஜ்.
கோபம்......... நல்லவேளை காண்பிக்க முடிஞ்சதுன்னு எனக்குத் திருப்தி! வெளியே காமிக்க முடியாத கோபம்..... ரொம்பக் கொடுமை.
வாங்க சாந்தி.
இந்த டோர் ஸ்டெப்ஸ்க்கு ஒரு ஸ்டாப்பர் போட்டு வைக்கணும்ப்பா :-)
இங்கே லோக்கல் ஷாப்பிங் என்றால் ஐ கான்டாக்ட் கூடாது. நேரா செக் அவுட் கவுன்ட்டரில் கொண்டுவந்து வச்சுடணும்.
வாங்க துளசிதரன்.
அந்த பேபி முகம் கவர்ந்ததால்தான்..... வாங்கும் ஆசையே!
@கீதா.... மூணு காலா. ஊஹூம் கூடாது. நமக்கு ரெண்டே கால் னு ஸ்டடியா நிக்க வேணாமா!!!
வாங்க தளிர் சுரேஷ்.
அழகை ரசித்தமைக்கு நன்றீஸ்.
வாங்க வல்லி.
பொறுமை காக்கணுமுன்னா.... எல்லையே இல்லாமப்போயிருதுப்பா. சண்டிகர் ஸ்டேண்டுக்கு நாலு வருசம் காத்திருந்தது அதிகம் இல்லையோ!
இன்னொரு கார்னர் ஸ்டேண்ட் (ரெண்டு வகை) பத்து வருசமா கராஜ்லே கிடக்கு. யானை பொம்மைகள் வைக்கலாமுன்னு வாங்குனது. ஊர்ப்பட்ட டூல்ஸ் வாங்கி வச்சுருக்கார். என்னைக்காவது அவைகளைப் பயன்படுத்தணுமுன்னு தோணாதோ? சாமிக்கு வெயிட் பண்ணறார் போல:-))))
வாங்க அபிநயா.
அழகை ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.
ஆகா... ....அழகு ....படங்களும் உங்க எழுத்துகளும் ....
புத்தர் சிலை ....அற்புதம்
அமைதியை சொன்ன புத்தர் சிலையை பார்த்தா .. உங்க (அன்பான) கோபம் ஞாபகம் வரும் இல்லையா .....
இனிமையான நினைவுகள் ..

haiyo.. post sooper!
haiyo.. buddha sooper!:)
//ஆசைப் பட்டுக் கேட்டது இது ஒன்னுதான்//
"ஆசைப் படாதே" -ன்னு சொன்ன புத்தரை வாங்க "ஆசை"ப்பட்டு இருக்கீங்க:)
என்னே ஒங்க கொள்கைப் பிடிப்பு டீச்சர்:))
ஆனா எனக்கும் அந்தக் கை குவிச்ச-தலை சாய்ச்ச புத்தர் மேல ஆசை!
மோகமே வந்துருச்சி டீச்சர்:) zoom செய்து பார்த்தேன்.. அத்துணை அழகு!
கொஞ்சம் கொஞ்சம் கண்ணு, மூக்கு, உதடு-ல்லாம் என் தோழன் ஒருத்தனைப் போலவே இருக்கு:)
ஆனா, அவன் கையெடுத்துல்லாம் கும்பிட மாட்டான், அழுத்தம் புடிச்சவன்:)))
புத்தம் சரணம் கச்சாமி = புத்தரைத் தஞ்சம் அடைகின்றேன்
தம்மம் சரணம் கச்சாமி = தர்மத்தைத் தஞ்சம் அடைகின்றேன்
ஸங்கம் சரணம் கச்சாமி = ஸங்கத்தைத் தஞ்சம் அடைகின்றேன்
நம் எல்லாருக்கும் கொஞ்சமேனும் சலனங்கள் குறையட்டும்; சிறிது ஞானமாச்சும் கிட்டட்டும்!
ஆனா புத்தரை விட, சின்னப் பொண்ணுங்க கொழந்தை பெத்துக்கறதை விட.. இந்தப் பதிவில் புடிச்சது என்ன தெரியுமா?
Just this one line..
//நாப்பத்தியோரு வருசமாப் பேச்சைக் கேட்டுத் தானே இப்படி ஆகிட்டோமுன்னு இன்னும் துக்கமா வருது எனக்கு//
:)))))))))))))))))))))))))
காலைக் காட்டுங்க டீச்சர், காலைக் காட்டுங்க!
கோபால் சார், மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு, எப்புடிப் படுக்கப் போனார்? என்று அறிய ஆவலா இருக்கே:)
சார், நீங்க ஒரு எதிர் பதிவு போடுங்க, Please..
டீச்சர், என் வேண்டுகோளை "Censor" பண்ணாம, கோபால் சார் கிட்ட கொண்டு சேருங்க, even if the post is against u! அது ஒங்க பதி விரதா தர்மம்.. சொல்லீட்டேன்:))))
புத்தர் சிலைல, குழந்தையின் இன்னோஸன்ட் முகம் பிரதிபலிக்கிறது. உங்களுக்கு நல்ல ரசனை. கோபால் சார் கோபித்துக்கொள்ளவில்லையென்றால், அழகான ஜோடி கிடைத்திருக்குமா? ஒரு குழந்தைக்குத் துணையில்லாமல் வைத்திருப்பீர்களே... செய் நேர்த்தி அருமை.
wow akka
ithudan super padivu. buddar ssssssssssssoooooooooooooooooo beautiful
ஓரே ஒரு பொன்நிறமாக வறுத்த மீண் துண்டு. கொஞ்சம் கொளம்பு. இது தான் இப்போதைய அதிகபட்ச ஆசையே. தினமும் இருந்தாலும் சந்தோஷமே? நீங்க வேற.
Post a Comment