இந்தியாவில் வாழ்க்கை ரொம்பவே சுலபமுன்னு நினைப்பு. அதிலும் பண்டிகைக் காலமுன்னா...... மாய்ஞ்சு மாய்ஞ்சு 'ஆக்கி' எடுக்கும் காலம்போய் எல்லாமே ரெடிமேடுன்னு ஆகியிருக்குன்னு விளம்பரங்கள் சொல்லுதே. (எல்லாம் தினமலர் தினகரன் வகையறாக்களில் ஈ எடிஷனில் பார்ப்பதுதான்)
எந்த நாட்டில் இருந்தாலும் புள்ளையாரை மட்டும் விடறதா இல்லைன்னு தெரிஞ்சவகையில் கொழுக்கட்டைச் செய்யறதுண்டு. பாவம் 'அவரும்' வெந்ததையும் வேகாததையும் தின்னே பழகிட்டார். நாஞ்சொல்றது புள்ளையாரை! யாரும் வரிகளுக்கிடையில் படிக்க வேணாம்,ஆமாம்.
ஒரு பண்டிகையாவது இந்தியாவில் 'கொண்டாடிடமுன்னு' ஒருக் குறிக்கோள் மனசுலே ஏறி உக்காந்துக்கிச்சுன்னாப் பாருங்களேன். போனவாரம் 'ஒரு' கிருஷ்ணஜெயந்தி வந்துச்சா.... அப்பவே நம்மக் குறிக்கோள் நிறைவேறாமப் போச்சு. அடுத்தமாசம்தான் நமக்குன்னு நாச்சியார் வேற சொல்லிட்டாங்களா..... அப்பீல் ஏது?
புள்ளையார்ச் சதுர்த்தி இந்த ஞாயிறுன்னுத் தெரிஞ்சதும் அதே 'ஈஸிப்பீஸிக் கொண்டாட்டம் ' நினைவுக்கு வருது. சனிக்கிழமைக் கோயிலுக்குப்போகும் வழியில்....பிள்ளையார் ஃபேக்டரியைப் பார்த்தேன். களிமண் கணபதி. ஆஹா.....கொசுவத்தி...... ஒரு நாப்பது வருசம் இருக்குமா? தாராளமா! வாங்கிறலாம்........
தெருவுக்கு ரெண்டு பக்கமும் புள்ளையார்கள் விற்பனைக்கு. ஆனாலும் நாம் நிக்கும் பக்கத்தைவிட எதிர்ப்புறம் இன்னும் அழகாக இருக்கோ? இக்கரைக்கு அக்கரைப் பச்சை. கூட்டம் அங்கேதானே அம்முது......அங்கேயே போய் வாங்கலாம்.
புள்ளையார் விற்கும் அம்மா, புன்சிரிப்போடு வாங்கம்மான்னு கூப்புட்டாங்க. ஆஹா.... சிரிச்ச முகமுள்ள விற்பனைப் பொண்ணுகளையே இதுவரை எந்தக் கடையிலும் பார்க்கலையே... சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், பழமுதிர்ச்சோலை இப்படிக் கொஞ்சம் பெரிய கடைகளில் எல்லாம் என்னத்தையோ பறி கொடுத்தாப்போலவும், கொஞ்சம் சடச்சுக்கிட்டும் சிநேகபாவம் முகத்தில் துளியும் இல்லாதவர்களையும் பார்த்து ( எல்லாம் சின்னப் பொண்களப்பா..... வயசும் இருபது இருந்தால் அதிகம்) நொந்து நூடில்ஸ் ஆகி இருந்த எனக்கு இந்தம்மா, பாலைவனத்தில் பசுஞ்சோலை.
நம்ம பிள்ளையாரைத் தெரிஞ்செடுத்தவுடன் அவருக்கான 'ஆக்ஸெஸரீஸ்' பரபரன்னு தானா நம்ம கண் முன்னால் நீட்டப்படுது பல திக்குகளில் இருந்தும்! குடையைக்கூட மடக்கிக்கலாமாம்! பேஷ் பேஷ்.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே நோகாம நோம்பு கும்பிட வழிச் சொல்லித்தராங்க. ஸ்பெஷல் பேக் ஒன்னு வாங்கியாச்சு. சின்னதா ஒரு பை. அதுநிறைய 'கூடீஸ்' திரட்டிப்பால், அதிரசம், லட்டு, ரெண்டு விதமானக் கொழுக்கட்டைகள், முறுக்கு, தட்டை, மனோகரம், தேன்குழல், கணேஷ் தர்ஷன்னு ஒரு சிடி (2500 பிள்ளையார்களின் அபூர்வத் தொகுப்பாம்) ஒரு புத்தகம்( விநாயகர் அகவல், 'ககார' சகஸ்ர நாமாவளி)மற்றும் திருவானைக்காவல் ஸ்ரீ வல்லப கணபதியின் படம். கூடவே ஒரு முக்கால் அடி உயரத்தில் ஒரு களிமண் பிள்ளையார். அட! இவரும் வருவார்ன்னு தெரியாமப்போச்சே. பரவாயில்லை டபுள் டபுள்:-) இதுவே தாராளம். கொண்டாத்துக்குக் கேட்பானேன்:-)
துரும்பைக் கிள்ளிப்போடலைன்னு 'சாமி' நினைச்சுக்கப்போறாரேன்னு சுண்டல் செய்யப்போறேன். குக்கரில் வேகுது. அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவலை, சாமிக்குப் படிச்சுக் காமிச்சேன். அதுலே ஒரு வரி 'சட்'னு என்னை எங்கியோ இழுத்துப் போச்சு
'மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்......'
???????????????????????????????????
உங்க அனைவருக்கும் பிள்ளையார்ச் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
ஹேப்பி பர்த்டே, கணேசா!
Sunday, August 23, 2009
துரும்பை(யும்) கிள்ளிப்போடாமல்.....
Posted by
துளசி கோபால்
at
8/23/2009 04:46:00 PM
Labels: அனுபவம், பிள்ளையார் சதுர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
//பிள்ளையார்ச் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.//
ஹ்ம் ஊருலன்னா அது ஒரு கொண்டாட்டம்.. உங்க பிள்ளையாரும் அலங்காரமும் சிம்ப்ளி சூப்பரு..
இங்க எங்களுக்கு களிமண் பிள்ளையார் வந்ததும் தீந்துடுவார் அப்பறம் கரையாத பிள்ளையர் தான் கிடைக்கும். இந்த முறை தங்க குடுத்த நவதானியப்பிள்ளையார் தான் விசேசத்துக்கு சின்னதா குட்டியூண்டா.. :))
கொழுக்கட்டையை கூரியர்ல அனுப்புங்க டீச்சர்..!
நேற்று கோவியாரை சிரங்கூன் சாலையில் ஒரு கடையில் பார்த்தேன்,அங்கும் கொழுக்கட்டை விற்றார்கள்.அதன் வடிவம் எங்கள் வீடுகளில் பண்ணுவது போல் இல்லை என்பதால் வாங்கவில்லை.
நான் வாங்கிய கருப்பு கரும்பை பார்த்து என்ன விநாயகர் சதுர்திக்கா என்றார்? இல்லை எனக்கு கரும்பு மிகவும் பிடிக்கும், அது இன்று கிடைத்தால் வாங்கினேன் என்றேன்.
நீங்கள் வாங்கிய
பிள்ளாருக்கு தென்கலை நாமமா? வித்தியாசமாக இருக்கு.காஞ்சிபுரத்தில் இந்த மாதிரி போட்டால் பிரச்சனையாகியிருக்கும்.
வாங்க கைலாஷி.
தலைப்புக்குப் பொருத்தமான பின்னூட்டம்;-))))......
எல்லாருக்கும் ஒரே வழிதானா. கிருஷ்ணா ஸ்வீட்ஸ்:)
பிள்ளையார் அலங்காரம் பிரமாதம்.
அப்பமுடன் அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி,
உங்கள் பி;ள்ளையார் பதங்களுக்கு வணக்கம் செய்கிறேன்.
சதுர்த்தி
வாழ்த்துகள் துளசி.
வாங்க கயலு.
பாட்டரி சொல்லித்தரும் இடங்களில் கிடைக்கும் களிமண் கொஞ்சம் வாங்கிப்போய் வச்சுக்கிட்டு விழாவுக்கு ரெண்டுநாள் முதல் நாமே செஞ்சுக்கலாம்.
அவரைக் கரைக்காமல் எடுத்து வச்சுட்டு அடுத்துவரும் வருடங்களிலும் பயன் படுத்தலாம்.திரும்பக் கொஞ்ச நேரம் ஊறவச்சால் களிமண் கிடைச்சுருமில்லே.
நியூஸி திரும்பிப்போனபிறகு இந்த ஐடியா ஒர்க்கவுட் ஆகுதான்னு பார்க்கணும்.
பிள்ளையார்ப்பட்டி, இன்னும் தமிழ்நாட்டுக் கோயில் அருகில் உள்ள கடைகளில் இந்த நவதானியப் புள்ளையார் நானும் பார்த்தேன். கலெக்ஷனுக்கு ஒன்னு வாங்க ஆசை. ஆனா நம்மூர்லே விடமாட்டாங்க. தானியம் தடா. பிடிபட்டால் பத்தாயிரம் டாலர் வரை ஃபைன்(-:
சின்னதா பிள்ளையார் 'அச்சு' கிடைக்குதான்னு பார்க்கணும். எல்லாம் தமக்குத்தாமே திட்டம்தான்:-)
அச்சையே ப்ளாஸ்டிசைன்லே செஞ்சால் என்னன்னு இப்பத் தோணுது!!!
வாங்க உண்மைத் தமிழன்.
சரவணனா இருந்துக்கிட்டு கூரியர் எதுக்கு? (மயில்) வாகனத்தில் வந்தே சாப்பிட்டுட்டுப் போலாமே!
வாங்க குமார்.
மோதக டிஸைனா உங்க வீட்டில்?
சீனர்கள் வொன் டான் செய்வது போல அதுக்குண்டான சதுரமான வெட்டப்பட்ட மாவு ராப்பரில் பூரணம் வச்சு மோதக வடிவில் சின்ன மூட்டையாச் செய்யலாம். நீராவியில் வச்சால் ஈஸிபீஸிக் கொழுக்கட்டை.
கோவியார் கொழுக்கட்டை வாங்கினாரா இல்லையா?
வாங்கும்போது அவர் பட்டையோடுதான் இருந்தார். நம் வீட்டுலே அவர் தும்பிக்கையாழ்வார் என்பதால் நாமம் நான் போட்டுவிட்டேன்.
எல்லாம் முந்திக்கும் சமாச்சாரம்தான் அவர் நமக்குப் போட்டுவிடுமுன்:-)
எங்க வீட்டுச் சம்பிரதாயம் தென்கலை நாமம். y y y why????? :-)
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
//'மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்......//
உண்மை தான்.இங்கயும் ரமலான் ஆரம்பிச்சதனால எல்லார் வீட்லயும் அலங்காரமா இருக்கு. கிறித்துவ நண்பர்களும் ஏதோ புனித விரதம்னு சொன்னாங்க.நம்க்கும் பிள்ளையார் சதுர்த்தி.என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.
//ஹேப்பி பர்த்டே, கணேசா!//
வாங்க வல்லி.
அன்றே கிருஷ்ணா கீதையில் சொல்லிட்டாரேப்பா ..... எல்லோருக்கும் ஒரே வழின்னு.
யார் யார் எப்படி எப்படிக் கும்பிட்டாலும் எல்லாம் அங்கெதான் போய்ச் சேருதுன்னு:-)
அதான் இங்கேயும் கிருஷ்ணா(ஸ்வீட்ஸ்)
வாங்க துபாய் ராஜா.
அவ்வையோட காலக் கட்டத்துலே(யே) மும்மதம் என்றதுதான்..... மனசுலேப் பட்டுச்சு.
வள்ளுவருக்கு உடன்பிறந்தாள்ன்னு கூட எங்கியோ படிச்சேன். அப்போ அவ்வையார் எந்தக் காலம்?
(இறந்தகாலமுன்னு சொல்ல வேணாம்)
சரித்திர டீச்சருக்கு வருசங்கள் முக்கியம்:-))))
அவ்வையார் என்ற பெயரில் நிறையப்பேர்(ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்) இருந்துருக்காங்களாமே!
இதுலே அகவல் எழுது அவ்வை..... யார்????
வாங்க நன்மனம்.
துளசி:
ஒங்க பிள்ளையார் உண்மையாவே ரொம்ப அழகா இருக்கார். அந்தத் தென்கலைத்திருமண் அழகு! அழகிற்கு அழகூட்டுகிறது. இதனால்தான் கிருஷ்ணன் அப்படி துளசி, துளசின்னு அலையறான் போலருக்கு ;-)
வாங்க கண்ணன்.
//இதனால்தான் கிருஷ்ணன் அப்படி துளசி, துளசின்னு அலையறான் போலருக்கு ;-)//
அவன் அலைஞ்சு என்ன காரியம்?
துளசியைக் (கூட்டிக்)கொண்டு வரவேண்டாம்' இப்படி ஒரு அறிவிப்பு வெங்கடநாராயணா ரோடு TTD தேவஸ்தானக் கோவில் வாசலில்(-:
பார்த்தவுடன் 'பகீர்'னு இருந்தது.
சாமி வரம் கொடுத்தாலும் பட்டர் வரம் கொடுக்கமாட்டேங்கறார்!
முன்று கண்ணும் மும்மதச்சுவடும்...
என்னையும் எங்கோ இழுத்துப்போகிறது....
இப்படிசிந்திக்கவே இல்லை..என்னபார்வை துளசிமேடம் உங்க பார்வை! ரசிச்சேன்!
good post, vinayakar chaturthi wishes
//ஸ்ரீகிருஷ்ணா ஸ்விட்ஸ்லே நோகாம
நோம்பு கும்பிட வழிச் சொல்லித் தராங்க//
உங்களுக்கு பிள்ளையார் நல்ல வழி காட்டிஉள்ளார்.
அவ்வையாரின் காலம் குறித்த தேடல் நல்ல விஷயம் துள்சிம்மா. வரலாற்று ஆசிரியர் இல்லையா பின்னே:)
இங்கே பாருங்க 3 லிங்க்:)
http://books.dinamalar.com/BookView.aspx?id=1501
http://groups.google.com/group/minTamil/msg/1671d21057b880cc
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15555&pid=238117&mode=threaded&start=
\\'மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்......'\\
பாட்டிக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு...இந்த அரசியல் பார்டிங்ளுக்கு தான் தெரியல..;))
பிள்ளையார் பண்டிகைன்னு இந்த மாதிரி பதிவுகளை பார்த்த பிறகு தான் தெரியுது. நல்லது..;))
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்:
"மும்மதம் பொழிதலால் உண்டான தழும்புகளும் (என்றவாறு)..அருள் மதநீர் ஒழுகும் அடையாளம், கணபதி திருமுகத்தில் காணப் படுகிறது" அப்படின்னு சொல்றாங்க.
பிள்ளையாரப்பா, உங்களுக்கே நாமம் போடுறாங்களே!
இங்கே அமெரிக்காவில சில ஊர்களில் அச்சு கொணாந்து, பிள்ளையார் செஞ்சு கொடுக்கறாங்க. மண்பிள்ளையாருக்கான விலை கோவிலுக்குப் போவுது. சில ஊர்களில் இந்திய கடைகளிலும் விற்பனை உண்டு.
எங்க வீட்டுல 4 வித கொழுக்கட்டை, சுண்டல், வடை எல்லாம் பிள்ளையார்(கள்) ஆசிர்வாதத்தில் நல்லபடியாக நடந்தது. இந்தியாவுல சொந்தக்காரவுங்க எல்லாம் க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் தான்:-)
//பாவம் 'அவரும்' வெந்ததையும் வேகாததையும் தின்னே பழகிட்டார். நாஞ்சொல்றது புள்ளையாரை! யாரும் வரிகளுக்கிடையில் படிக்க வேணாம்,ஆமாம்.//
அவர் பெயர் 'கோபாலாம்' . வரிகளுக்கிடையில் படிக்கலை. கோனார் உரையில் படித்தேன். ஹிஹி
சின்ன அம்மிணி said...
//பாவம் 'அவரும்' வெந்ததையும் வேகாததையும் தின்னே பழகிட்டார். நாஞ்சொல்றது புள்ளையாரை! யாரும் வரிகளுக்கிடையில் படிக்க வேணாம்,ஆமாம்.//
அவர் பெயர் 'கோபாலாம்' . வரிகளுக்கிடையில் படிக்கலை. கோனார் உரையில் படித்தேன். ஹிஹி
8/24/2009 12:26 PM >>>>>>>>>>>>>>>>>>>>
சின்னம்மிணி நீங்க பெரியம்மிணிதான்!
என்ன இயல்பா நகைச்சுவை உணர்வோட சொல்றீங்க! ரசிச்சேன்!
ரீச்சர்
கோயில் என் பொண்ணு பிள்ளையாருக்கு ஹேப்பி சொன்னாள்!! பர்த்டே சொல்ல வரலை என்பதால் வெறும் ஹேப்பிதான்!! :))
பிள்ளையார், விநாயகர் சதுர்த்தினா உங்க தளம்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது, டீச்சர்! :-)
ஆஹா ! ஆஹா !! ஆஹா !!!!
நம்ம ஊரு புள்ளையாரு தென்கலை திருமண் இட்டுண்டு ஜொலிக்கிறார் !!
விக்ன வினாசகனான விக்னேச்வரனுக்கு ஷோடச நாமாக்கள் ( 16 பெயர்கள் ) உண்டென சொல்வார்கள்.
இந்த நாமத்தையும் சேர்த்து பதினேழானது விசேஷம்.
இருந்தாலும் இவரோட ஃப்ரென்ட் ஆர்தடாக்ஸ் வடகலை, அது எப்படி புள்ளையாருக்கு
தென்கலை போடப்போச்சு ! என்று குதிப்பாரே !!
அவருக்கு ஒரு சமாதானம் சொல்லிப்போடுங்களேன்.
மீனாட்சி பாட்டி.
teacher neengalum namma thenkalai kostiya. ok ok. avaiyar sonna moonru matham ( saivam, vaishanavam and jainam) appa ithu moonrum moonru mathankal. iffathan mari poochu. appuram sundalai pathi onnum photo kanam. enn cokkerla irunthu edukka varulaya?
//'மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்//
படத்துக்கு ஏத்த மாதிரி வரிகளை தேடி பிடிச்சு போடறீங்களே டீச்சர். :))
ஹலோ டீச்சர். நீங்க இன்னும் சென்னைல தான் இருக்கீங்க போல.
பிள்ளையார் சதுர்த்தி எல்லாம் நல்ல படியாக முடிஞ்சதா?
உங்க இன்ஸ்பிரேஷன்ல நானும் ப்லோக் எழுத துவங்கி இருக்கேன்.
லிங்க்: http://viji-the-zeitgeist.blogspot.com/
படிச்சுட்டு கருது சொல்லுங்க.
தவறு இருந்தா சுட்டிக் காட்டுங்க. திருத்திக்கறேன்.
மாணவி தப்பு செஞ்சா சுட்டிக்காட்ட வேண்டியது ஆசிரியர் கடமை தானே? :)
துரும்பைக் கிள்ளிப்போடலைன்னு 'சாமி' நினைச்சுக்கப்போறாரேன்னு சுண்டல் செய்யப்போறேன்//
ரசனையான வரிகள், ரசனையான பதிவு.!
சூப்பர் டீச்சர்...ம்ம்ம் நான் பிள்ளையார் சதுர்த்தி கும்பிட்டும் நாலு வருசத்துக்கு மேல ஆச்சு
மக்கள்ஸ்,
கொழுக்கட்டை எல்லாம் ஜீரணமாகட்டுமுன்னு இருந்துட்டேன் ரெண்டு நாளா.
தாமதமான பதில்களுக்கு விஜயகாந்துக்குத்தமிழில் பிடிக்காத சொல்.:-)
வாங்க ஷைலூ.
இந்தக் கோணல்புத்தியும் கோணல் பார்வையும் ரொம்பப் படுத்துதுப்பா :-)
வாங்க ராம்ஜி.யாஹூ.
வருகைக்கு நன்றி.
வாங்க கோமதி அரசு.
அவர் எனக்கு மட்டுமாக் காமிச்சார்????
ஊருக்கே..............காமிச்சுருக்கார்.
ஆனா ஒன்னு, அவுங்க கொடுத்த சிடியில் அழகழகான பிள்ளையார்கள் கலெக்ஷன், சூப்பரா இருக்கு.
வாங்கப்பா கவிதாயினி.
உங்களுக்கெல்லாம் முன்னோடி இல்லையோ அந்த அவ்வையம்மா!
ஒரே பெயரில் அவ்வைகள் இருந்துருக்காங்க. அவுங்க அனைவருமே புலவர்கள் என்பது சுவையான சமாச்சாரம்தான்.
ஒருவேளை அந்தக் காலத்துலே எல்லா மக்களுக்கும் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு இருந்துருக்குமோ?
(டிவி சீரியல் பார்த்துருக்க மாட்டாங்க. அதனாலேயே புத்தி மழுங்காம இருந்துருக்கும்,இல்லே?)
வாங்க கோபி.
நானும் கேலண்டர் கிடைக்காத வருசங்களில், இணையம் இணைப்பு இல்லாதக் காலக்கட்டத்தில் எல்லாம் எந்தப் பண்டிகையும் எப்ப வருதுன்னு தெரியாம 'தேமே'ன்னு இருந்துருக்கேன்.
வாங்க கெக்கே பிக்குணி.
இருக்கும் ஒன்னுக்கு, ஒருவிதமே செய்ய முடியலை. இனி 4 விதத்துக்கு எங்கே போவேன்:-)
இந்தக் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஒரு அனுபவத்துக்குத்தான். பிழைச்சுக்கிடந்தால் அடுத்தவருசம் நம்ம சொந்த ஸ்டைலுதான். அவருக்கும் தமிழ்நாட்டுலே எங்கே பார்த்தாலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பக்ஷணம்னு போரடிச்சுருச்சாம். (கனவில்)வந்து சொல்லிட்டுப்போனார்.
நாமத்தைப் பொறுத்தவரை போட்டுவிட நாம் முந்திக்கணும்:-))))
பிறர் நெத்திதான் பெஸ்ட் ப்ளேஸ்.
வாங்க சின்ன அம்மிணி.
அச்சச்சோ.... 'பரிதாப முகத்தைப் பார்த்த பிறகுமா?'
வாங்க கொத்ஸ்.
பொண்ணு சரியான பாய்ண்ட்டைப் பிடிச்சுட்டாள்.
எல்லாரும் விரும்புவது அந்த 'ஹேப்பி'தான். அதுதான் வாழ்வின் நோக்கம்.
கொத்ஸின் மகளுக்குச் சொல்லியாத்தரணும்? :-)))))
குழந்தை எப்பவும் ஹேப்பியா இருக்கணும். ஆசிகள்.
வாங்க வருண்.
நானும் ஏறக்கொறையப் பிள்ளையார் சைஸ் என்பதாலா? :-))))
வாங்க மீனாட்சி அக்கா.
எல்லாரும் ஒருவிதத்தில் ஆர்தடாக்ஸ்தான்:-))))
நல்ல நட்புக்கு நடுவில் எதுவும் குறுக்கே வந்துறாது.
நாமம் வாழ்க.
வாங்க பித்தன்.
ஏதோ ஒருகலைப் பித்தர்கள்தானே நாமெல்லாம்:-)))
சுண்டல் வேகுமுன் பதிவு வ(வெ)ந்துருச்சு.
சமணம் அந்தக்காலத்தில் தெக்கேயும் பரவி இருந்துச்சுன்னு சித்தன்னவாசல் சொல்லுதே. அப்ப அது மூணும் இதுவா?
ஆஹா....
விளக்கத்துக்கு நன்றி.
வாங்க அம்பி.
எங்கே தேட விடுறாங்க? எல்லாம் தாமாய் அமையுதேப்பா:-))))
வாங்க விஜி.
தோ.... அடுத்து உங்க வீட்டுக்குதான் வரப்போறேன்.
அழைப்புக்கு நன்றி.
வாங்க ஆதிமூலகிருஷ்ணன்.
அடுத்த நாடகத்துக்கு ஸ்க்ரிப்ட் ரெடியா?
லேடீஸ் கேரக்டர்ஸ் வர்றமாதிரி எழுதுங்க. நாங்கெல்லாம் வர்றோம்!
வாங்க நான் ஆதவன்.
முறைப்படிக் களிமண் பிள்ளையார் வச்சுன்னா நானுமே 40 வருசம் ஆச்சு.
எல்லாத்துக்கும் சேர்த்து இந்தியா வரும்போது கொண்டாடிருங்க.
நாம் எப்போ லீவில் வர்றோமோ அப்போதான் தீபாவளி, இன்னபிற பண்டிகைகள் எல்லாம் கொண்டாடிக்கணும். பிரசாதங்கள் செய்யச் சொன்னால் ஆச்சு:-)
ஊரோடு சேர்ந்துக் கூட்டமாக் கொண்டாட முடியாதுன்றதுதான் ....
Post a Comment