Wednesday, August 05, 2009

மஞ்சக் கலரு ஜிங்குச்சாம் செகப்புக் கலரு ஜிங்குச்சாம் பச்சைக் கலரு.....

குப்பை கெட்ட கேடு...இது என்னமாப் படுத்துது பாருங்க நம்ம வாழ்க்கையை. உலகத்துலேயே அதிகம் குப்பை போடும் ஆட்கள் நியூஸி மக்கள்தானாம். ஒரு வாரத்துக்கு 22 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துறாங்கன்னு புள்ளிவிவரம் சொல்லுது. இதெல்லாம் மக்கிப்போக 500 வருசம் ஆகுமாம்.

குப்பையைக் குறை, குறைன்னு கவுன்ஸில் 'குரைச்சுக்கிட்டே இருக்கு. ஆனாலும் குப்பை சேருவதென்னமோ நின்ன பாட்டைக் காணோம். ( அதுக்காகப் பார்க்கும் இடங்கள் எல்லாம் பூக்கும் பிளாஸ்டிக்ன்னு நினைக்காதீங்க. ஒழுங்குமுறையா அதுகளைக் குப்பையில் சேர்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்) சென்னையில் இருந்து வந்த கணேசன் மாமா( நியூஸித் தோழியின் தந்தை) சொன்னார், 'உங்கூர் ரோடுலே இலை போட்டுச் சாப்புடலாம்' :-)

குப்பைப் பிரச்சனை, நகராட்சிக்குப் பெரிய தலைவலி. நாங்க நியூஸி போன புதுசுலே குப்பைக் கலெக்ஷன் எப்படின்னா ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு நாள்ன்னு ஒதுக்கி, அன்னைக்குக் காலையில் ஏழரையில் இருந்து குப்பை வண்டிகள் வந்து வீடுவீடா நின்னு நாங்க வாசலில் கட்டி வைச்சுருக்கும் மூட்டைகளை வாரிப்போட்டுக்கிட்டு போகும். கைக்குக் கிடைக்கும் பைகளில் வாரி வைப்பதால் சிறுசும் பெருசுமாப் பொதிகள் இருக்கும்.

இது இல்லாமத் தோட்டத்துலே, புல் வெட்டும்போது வரும் புற்கள், செடிகொடி மரங்களை வெட்டி ஒழுங்குபண்ணும்போது வரும் கழிவுகள் இதையெல்லாம் நாங்களே கொண்டுபோய் ரெஃப்யூஸ் ஸ்டேஷன்னு அந்தந்தப் பகுதிகளில் இருப்பவைகளில் கொண்டுபோய் போட்டுட்டு வருவோம். அதுக்கு ஒவ்வொரு லோடுக்கும் ஒரு கட்டணம் கட்டணும். உள்ளே நுழையும்போதே நம்ம வண்டிகளை எடைபோட்டு மிசின் ஒரு சார்ஜ் சொல்லிரும்.

குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் வந்த சில வாரங்களில் தோட்டக் குப்பைகள் ஏகத்துக்கும் வந்துரும் என்றதால் 'இன்னிக்குக் குப்பைக்குக் காசு வேணாம். ஃப்ரீயாப் போ மாமே ன்னு கவுன்ஸில் ஒரு நாள் அறிவிக்கும். நாங்களும் இலவசத்தை விட முடியுதான்னு பாய்ஞ்சு பாய்ஞ்சு தோட்டத்தைச் சுத்தம் செஞ்சுக் குப்பைகளை வாரிக்கிட்டு ஓடுவோம்.

சில வருசம் கழிச்சுக் கவுன்ஸில் தேர்தல் வந்ததும் புதுசாத் தெரிஞ்செடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் புது ஐடியாக்கள் கொண்டு வந்தாங்க. குப்பையும் வாரணும், கூலியும் கூடக்கூடாது. கவுன்ஸிலோடக் குப்பை வண்டிகளை அனுப்பாமத் தனியாருக்கு டெண்டர் விட்டு, குறைச்சுக் கேக்கும் கம்பெனிக்கு அனுமதி கொடுத்துட்டாங்க. சிட்டிக்கவுன்ஸில்னு பேர் இல்லாத வண்டிகள் வந்துக்கிட்டு இருந்துச்சு. எங்களுக்கு ஒன்னும் வித்தியாசமாத் தெரியலை. ஆனா குப்பை சேகரிக்கும் கம்பெனிகள், வீட்டுக்கு ஒரு பை மட்டுமுன்னா தான் எடுப்போம்.அம்பாரமாட்டம் பைகளைக் குவிச்சா முடியாதுன்னுருச்சு. அதெப்படி ஒரு பைன்னு சொல்றது? பாக்கிக் குப்பையை எங்கேன்னு போடறது?


அடுத்த சில தினங்களில் கூடிப்பேசுனக் கவுன்ஸிலர்கள், சிட்டிக்கவுன்ஸில் பெயர் போட்டுப் பெரிய ப்ளாஸ்டிக் பைகளை வீட்டுவீட்டுக்குக் கொடுத்தறலாம். மக்கள் அதுலே குப்பைகளைப் போட்டு வைக்கட்டும். குப்பைக்காரர் எடுத்துப்போக லகுன்னுச்சு. கண்டகண்ட பைகளில் குப்பையை வச்சா எடுக்கவேணாம். ஆனாப் பைக் கணக்கு இல்லை. எத்தனை பை ஆனாலும் சரி, அதுலேச் சிட்டிக் கவுன்ஸில் பெயர் இருப்பதை மட்டும் எடுன்னு 'கலெக்டருக்கு' ஆர்டர். வீட்டு உரிமையாளர்களுக்குத் தகவல் சொன்னாங்க. கூப்பான் அனுப்புவோம். அதைக் கொடுத்துச் சூப்பர் மார்கெட்டில் 52 பை இருக்கும் பொதி இலவசமா வாங்கிக்கோ. வாரம் ஒரு பை குப்பைக்குன்னுச்சு. எங்கூட்டுலேக் குப்பை ரொம்ப. வாரம் ஒன்னு போதாதுன்னா? பிரச்சனை இல்லை. அதே சூப்பர் மார்கெட்டில் காசுக்கும் இதே பைகள் விற்பனைக்கு இருக்கும். வாரம் 52 வேணுமுன்னாலும் வச்சுக்கோ. அது உன் இஷ்டம். ஒரு பை ஒரு டாலர்.

காசுன்னதும் கை சுருங்குமா இல்லையா? அப்படியும் சில வாரங்களில் ரெண்டு பை அளவு குப்பை சேர்ந்துருதுதான். முக்கியமா பார்ட்டி, விழான்னு வரும் வார இறுதிகளில். எங்கூர் மக்களோ முக்கால்வாசி பார்ட்டி அனிமல்ஸ். பாட்டில் பாட்டிலா, கேன்கேனா குடிச்சுத் தீர்த்துருவாங்க. அங்கங்கே ரீசைக்கிள் பின்கள் வச்சுருந்தாலும் யார் இம்மாம் பெரிய அட்டைப் பொட்டியைத் தூக்கினு போகன்னுட்டு குப்பைப் பைக்குள்ளே திணிக்கப் பார்ப்பாங்க. ( இதையே கடையில் இருந்து வாங்கிவரும்போது மட்டும், கனமே தெரியறதில்லை என்பதுதான் ஆச்சரியம். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு பால், ஜூஸ் எல்லாம் கேன்தான்.அதுவும் மூணு லிட்டர் ப்ளாஸ்டிக் கேன்கள்.

அதுக்குள்ளே ரீசைக்கிளிங் முறையில் இதெல்லாம் சேர்த்துக்க சில ஏற்பாடுகள் ஆச்சு. 'குப்பைப் பைக்குப் பக்கத்துலே அட்டைப்பொட்டியோட பாட்டில், கேன் எல்லாம் வச்சுருங்க. நாங்க எடுத்துக்கிட்டுப் போயிருவோம். குப்பைப் பைக்குள்ளே வைக்காதீங்க ராசா'னு கவுன்ஸில் ஒரே அழுகாச்சி.

'ஆட்டும். செஞ்சுருவோம்' பனி விழும் காலங்கள். மழை நாட்கள் வரும்போது அட்டைப்பொட்டி அப்படியே ஊறிப்போய் எடுக்கும்போதே பிய்ஞ்சு பாட்டில் எல்லாம் தரையில் உருண்டு, கேன் எல்லாம் காத்துலே பறந்து அதைத் துரத்திப்பிடிக்க கலெக்டர் ஓடும்படியா ஆச்சு. யோவ், நான் ஒரு ஆள், குப்பையை எடுப்பேனா, ஒலிம்பிக்ஸ்லே ஓட ட்ரெயினிங் எடுப்பேனா..............

உக்காந்து யோசிச்சாங்க மறுபடியும். ஆஹா...ஐடியா ஆப்டுக்கிச்சு. பிளாஸ்டிக் க்ரேட் மாதிரி ஒரு கூடை தந்துறலாம். அதுக்குள்ளே மறுசுழற்சிச் சாமான்களைப் போட்டு குப்பைப் பைக்குப் பக்கத்துலே வச்சுட்டா அள்ளிப்போட்டுக்கிட்டுப் போய்க்கினே இருக்கலாம். குப்பை வண்டிக்கு நடுவிலே தடுப்பு வச்சுப் பிரிச்சுட்டா முன்னாலே கேன், பின்னாலே பை. சூப்பர் !!!! அந்தக் க்ரேட்டைப் பச்சை நிறத்துலே செஞ்சுட்டோமுன்னா மக்கள்ஸ் 'க்ரீன் கண்ட்ர்ரி இமேஜை'ப் புரிஞ்சுக்குவாங்க.

வீட்டுவீட்டுக்கு பச்சை க்ரேட் வந்துச்சு. தாராள மனசோடு இன்னும் ஒன்னு ரெண்டு கூடுதலா வேணுமுன்னா கவுன்ஸில் சர்வீஸ் செண்டரில் வந்து கேட்டு வாங்கிக்கினு போங்கன்னுச்சு. 'காட் மஸ்ட் பி க்ரேஸி' படம் நினைவிருக்குங்களா? கோக்கோ கோலா பாட்டில் இல்லாம யாருக்கும் வேலையே நடக்கலை பாருங்க. அதேதான். க்ரேட்டுக்கு ஆயிரத்தெட்டு பயன்கள் கண்டுபிடிச்சுறமாட்டோமா? நம்மூட்டுக்கே மூணு வந்துருச்சுன்னா பாருங்க. இத்தனைக்கும் 'குடிப் பார்ட்டி' இல்லாத வூடு:-)

இதுக்கே கவுன்ஸில் ஏராளமா நம்ம வீட்டுவரிப் பணத்தைச் செலவு செஞ்சுட்டோமுன்னு மொக்கை அழுகை அழுதுச்சு. இப்படி மூக்கால் அழுதுக்கிட்டே....உலகநாடுகள் பூராவும் குப்பைக்கு முடிவு கட்டணுமுன்னு தவிக்குது. நம்ம பங்குக்கு இன்னும் எதாவது செய்யலாமுன்னு கூடிக்கூடிப் பேசிக்கினு இருந்தாங்க. மக்கள் விரோதி ஒருத்தர் விபரீதமா யோசிச்சார்போல. 52 வாரம் 52 பைன்னு இருப்பதை மாற்றலாம். சப்ளையைப் பாதியாக்குனாக் குப்பையும் பாதியாகுமுன்னு 26 பைதான் கவுன்ஸில் கொடுக்கும். ரெண்டு வாரத்துக் குப்பையை ஒரு பையில் அடைச்சுருங்க. முடியாதவங்க காசு கொடுத்து எவ்வளோ வேணுமோ அவ்ளோ பை வாங்கிக்குங்க.

கொதிச்சுப் போயிட்டோம் அடப்பாவிகளா........ வீட்டுவரின்னு காசைப் பிடுங்கிக்கிட்டுக் குப்பையில் கையை வச்சுட்டியே..............இதையே ஒரு காரணமாக் காட்டி அடுத்து வந்த கவுன்ஸில் தேர்தல்களில் 'எங்களுக்கு ஓட்டுப் போட்டா மீண்டும் 52 பைகள் தரத் தயார்'ன்னு ஒரு கட்சி வியூகம் வகுத்துச்சு.

இங்கெ இன்னொரு முக்கியமான விசயத்தையும் சொல்லிக்கிறேன். நம்மூர்லே பழைய பேப்பர் வாங்கும் பிஸினெஸ் கிடையாது. காசு கொடுத்துப் பேப்பர் வாங்குனாதானே அதை ஒழிச்சுக்கட்டனுமுன்னு ச்சும்மா இருந்தாலும்.......... ஓசிப்பேப்பர் வாரம் அஞ்சு நாள் நம்ம தபால் பெட்டிக்கே வந்துரும். கம்யூனிட்டி நியூஸ் பேப்பர், விளம்பரங்கள், கிறைஸ்ட் சர்ச் ஸ்டார்ன்னு பக்காவா ஒரு மாலைப் பத்திரிக்கை (இது நாங்க இங்கே வந்த புதுசுலே, அது ஆச்சு 21 வருசம். காசு கொடுத்து வாங்கும் தினசரி. மாலைப் பதிப்பு. )வியாபாரம் சரியாப் போகாம இதை நிறுத்தினாங்க. அப்புறம் ஒரு புண்ணியவான் இதைச் சும்மாத் தரலாம். ஊர் முழுசும் ஒருவீடு பாக்கி இல்லாம எல்லாருக்கும் சப்ளை செஞ்சுறலாம்.. குறைஞ்சது லட்சம் வீடுகள் இருக்கே. இதையேக் காமிச்சு விளம்பரம் வாங்கிச் செலவைச் சரிக்கட்டி லாபமும் பார்க்கலாம். வாங்கிப்போட்ட அச்சு இயந்திரமெல்லாம் வீணாப் போவானேன்னாரு. அப்படியே ஆச்சு. பழைய பேப்பர்களையெல்லாம் ஒரு சூப்பர்மார்கெட் ப்ளாஸ்டிக் பையில் வச்சு, பச்சைக் க்ரேட்லே மேலாக வச்சுருங்கன்னாங்க. இருக்கும் குப்பை பத்தாதுன்னு டெலிஃபோன் டைரக்ட்டரி வேற வருசாவருசம் புதுசாப் போட்டு ஊர்லே உள்ள எல்லா வீட்டுக்கும் ( போன் இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி) சப்ளை செஞ்சுருவாங்க. வெள்ளைப் பக்கம் மஞ்சப் பக்கம் ரெண்டும்தான். புதுசு வந்ததும் பழசை எப்படித் தள்ளிவிடறது? புதுசு வந்த அதே பையிலே பழசை வச்சு பச்சைக்கூடையில் போடுன்னாங்க. சென்னையில் பழைய டைரக்டரிக்கு ஆயிரம் பயன். கபாலி கோயில் பக்கம் சுடச்சுட பஜ்ஜி மடிச்சுத் தர்றாங்க

போன வருசம் நடந்த தேர்தலில் புது மேயர் வந்தார். ரேடியோவிலே 'டாக் ஷோ' நடத்திக்கிட்டு இருந்தவர். அவர் பங்குக்கு அவரும் சிந்திச்சு(??!!) வீட்டு வீட்டுக்கு மூணு குப்பைக்கான வீலி பின்(Wheeli Bin) சக்கரம் வச்சது தரலாம். மக்கள் அதை ஈஸியா உருட்டிக்கிட்டேக் கொண்டுவந்து வீட்டுக்கு முன்னாலே நடைபாதையில் வச்சுட்டாப் போதும். கலெக்டர் இயந்திரக்கை வச்சு எடுத்து[ப் போட்டுக்குவார். ஒரே ஒரு ஆள் வண்டி ஓட்டுனாப் போதும்ன்னார்.

(எங்கூருலே எல்லாம் நடைபாதை இருக்கு பாருங்க, அது நடக்கறதுக்கு மட்டுமேதாங்க பயனாகுது. அதை அடைச்சுக் குடிசை போட்டுக்கறதோ. இல்லை கடைகண்ணின்னு வச்சுக்கறதோ, அதுவும் இல்லைனா டு வீலர்களை நிறுத்தி வச்சுக்கும் பார்க்கிங் ஏரியாவா ஆக்கறதோ இல்லைங்க.... என்ன சனமோ போங்க)

மஞ்சக் கலர் பெரிய BIN பாட்டில், கேன், பேப்பர் இப்படி மறுசுழற்சிக்குப் போகும் பொருட்கள், சிவப்புக் கலர் மீடியம் சைஸ் BIN, மறுசுழற்சிச் செய்ய முடியாத சாமான்கள் மக்காத ப்ளாஸ்டிக் பை, இதெல்லாம் போட, பச்சைக் கலர் சின்ன BIN வீட்டு அடுக்களையில் வரும் காய்கறித்தோல், இறைச்சி எலும்பு, மீந்த சோறு, ரொட்டின்னு எதைவேணாலும் போட்டுக்க. வீட்டுத் தோட்டத்துலே செடிகளைத் தரிச்சோமுன்னா அதையும் போட்டுக்கலாம், புல்வெளியில் புல் வெட்டுவோம் பாருங்க அதைக்கூடப் போட்டுக்குங்க. ஆர்கானிக் சமாச்சாரங்கள், மக்கும் பொருட்கள் எதுவேணுமுன்னாலும் போடுங்க சொன்னாங்க. அட! புல் கட்டிங்ஸ் கொண்டு போய் கவுன்ஸில் டம்ப்லே போட ஆறு டாலர் அழுவறது மிச்சம்:-) ஜாலியோ ஜாலி. பனி காலத்தைத்தவிர மத்த நாட்களில் ரெண்டுவாரத்துக்கு ஒரு முறை புல்வெட்டத்தானே வேண்டி இருக்கு.

எப்போ வந்து குப்பையை எடுப்பீங்கன்னதுக்கு சிகப்பும் மஞ்சளும் ஒரு வாரம்விட்டு ஒரு வாரம். பச்சை மட்டும் எல்லா வாரமும் எடுப்போமுன்னாங்க. ஆறு மாசமா இதைப் பற்றிய விளக்கங்கள், அந்த BIN பார்க்க எப்படி இருக்கும், மூடித் திறப்பு எந்தப் பக்கம் பார்த்தாப்புலெ வைக்கணும், என்ன ஏதுன்னு படங்கள் எல்லாம் வீட்டுவீட்டுக்கு அனுப்பி எங்களையெல்லாம் எஜுகேட் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. முதியோர்க் கல்வி. 'யூ கேன் நாட் டீச் நியூ ட்ரிக்ஸ் டு த ஓல்ட் டாக்ஸ்'ன்னு பழமொழி இருக்குல்லே? இளசுகளுக்குச் சொல்லி வைக்கணுமுன்னு ஆரம்பப் பள்ளி முதற்கொண்டு எல்லாப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு விளக்கமான விளக்கம் சொல்லி அப்பா, அம்மா குப்பைக் கொட்டறது சரியான்னு நீங்கதான் பார்க்கணும். நாளைய உலகம் உங்கள் கையில். அது சுத்தமா இருக்கணுமுன்னா நீங்க எல்லாரும் சேர்ந்து குப்பைமேலே கண் வைக்கணுமுன்னு இதுக்குன்னே ப்ரோக்ராம் எல்லாம் போட்டு நடத்துனாங்க. கவுன்ஸிலோட இணையப் பக்கத்துலே எல்லாவிதமான ஐயங்களுக்கும் மறுபடி தயாரா வச்சுருந்தாங்க. நாங்களும் ஊர் உலகத்துக்கு வராத சந்தேகங்களையெல்லாம் உக்காந்து யோசிச்சுக் கேட்டு பதில் வாங்குனோம்.
நான் சென்னைப் பயணம் வர்றதுக்கு மூணு நாள் முன்னால் மூணு பின் வந்துருச்சு. வீட்டு விலாசம் எல்லாம் எழுதி, நாங்க சொல்லும்வரை மூடியைத் திறந்து(ம்) பார்க்காதே. மார்ச் 9 தேதிக்குத்தான் திறப்பு விழான்னுச்சு. எந்தெந்த வாரம் எது எதுன்னு சொல்லக் காலண்டர் அடிச்சு, எதெதுலே எதெது போடலாமுன்னு விளக்கம் அடிச்சு ஒட்டின்னு அமர்க்களமா இருந்துச்சு எல்லாம். அப்ப, இப்போ இருக்கும் பச்சை க்ரேட்? ச்சும்மா நீயே வச்சுக்கோ. அதுக்குப் பயனா இல்லைன்னுச்சு. நானும் கொஞ்சம் மொய்மொய் கிழங்கை நட்டுவைக்கத் தொட்டியாச்சுன்னு பயிர் வச்சேன். ஏற்கெனவே ஒன்னுலே வெங்காயம் நட்டு வச்சது ஏராளமாக் காய்ச்சது. ஒரு மூட்டை அரிசிகூடப் போட்டு வச்சுக்கலாம்ன்னா, அடிப் பாகத்துலே ஒரு ஓட்டையை வச்சுத் தொலைச்சுட்டாங்க(-:

கவுன்ஸில் நிர்ணயித்த சுபநாளில் கலர்கலராப் பின்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். சுபமுகூர்த்தம் என்னன்னா நம்ம ஏரியாவில் குப்பை எடுக்கும் நாளில் காலை ஏழரைக்கு முன்னால் அதுகளை நடைபாதையில் வச்சுறணும். ஏழு முப்பத்தியஞ்சுக்கு வச்சால்? எடுக்கமாட்டாங்க(ளாம்) கலெக்டர் வர்றதென்னமோ எட்டுமணிக்குப் பிறகுதான். சிலசமயம் மதியம் ஒருமணிகூட ஆகிரும். ஆனா நாம் மட்டும் பங்ச்சுவலா இருக்கணுமாம். யாராலே முடியுது.....ஏற்கெனவே லேட்டா எழுந்து அடிச்சுப்பிடிச்சு வேலைக்கு ஓடும்சமயம் யாருக்கு ஞாபகம் இருக்கு? குப்பைப் பையைக்கூட மொதநாள் ராத்திரியே வெளியே வச்சுத்தான் பழக்கம். ஒருநாள் நான் எட்டுமணிக்குத்தான் பச்சையை வச்சேன். பக்கத்துவீட்டுப் பச்சை இருக்கான்னு பார்த்துக்கிட்டுத்தான் வச்சது. யார் எங்கே இருந்து கவனிக்கிறாங்களோ.............. அன்னிக்கு நம்ம வீட்டுப் பச்சையைக் கண்டுக்காமப் போயிட்டார் கலெக்டர்(துரை)


BINனோட மூடி டிஸைன் சரியில்லைன்னு என்னோட அபிப்பிராயம். மூடி ஓவர்லேப் ஆனால்தானே அதுமேலே விழும் பனியோ மழையோ வெளியில் வழிஞ்சு போகும்? இதென்னன்னா வாய்க்குப் பொருத்தமில்லை. உள்ளே இருக்கும் பொருட்கள் முக்கியமா மஞ்ச BIN லே போடும் பேப்பர்கள், பச்சையில் போடும் அடுக்களைக் கழிவுகள் எல்லாம் ஊறி அசிங்கம் ஆகப்போகுது(-:

இன்னொண்ணு என்னன்னா.... பச்சை ரொம்பக் குட்டியா இருக்கு. அளவு போதாது. புல்வெட்டும் போது வரும் கழிவுகளுக்குப் போதலைன்னு சிலருடைய குமுறல்.

அழுக்கெல்லாம் ஒட்டிப் பிடிச்சு உள்ளே காய்ஞ்சு போகுது. உள்ளே கழுவ சிரமமா இருக்கு. ஒரு மீட்டர் உசரம், குனிஞ்சு சுத்தம் செய்யறது கடினம்ன்னு இன்னும் பலருடைய கேவல்கள்.

ஆனா.............ஒன்னு இந்த BIN களால் புதுசா வேலை வாய்ப்பொன்னு அகப்பட்டுருச்சு. தனியார் கம்பெனி ஒன்னு ஆரம்பிச்சு இருக்காங்க. ஃபோன் செஞ்சு சொன்னால் வீட்டுக்கு வந்து கழுவித் தந்துட்டுப் போவாங்களாம். ஒரு BIN க்கு ஆறே டாலர்தான் சார்ஜ்.

இது எப்படி இருக்கு?

பின் குறிப்பு: அய்ய..........வெறும் குப்பைன்னு இடுகையைத் தூக்கிக் கடாசிடாதீங்க...... இது துளசிதளத்தின் 901 வது பதிவுன்னு ப்ளாக்கர் சொல்லுது.


ன்னமோ புதுக் குழப்பம்.... பப்ளிஷ் செஞ்சவுடன் புத்தகம்போல ரெண்டு காலமாக் காமிக்குதே....... ப்ளொக்கரே ஆடிப்போயிருக்கோ!!!

40 comments:

said...

இதி ஏமிட்டிரா கொடவ?????

ஈலாகே டபுள் பக்கங்கா வஸ்தாதீ!!!!

ப்ளொக்கர்காரு.....காப்பாடண்டி


oops........மன்னிக்கணும். உணர்ச்சி வசப்பட்டுட்டேன்....

said...

901 தானா

1901 ஆவது இருக்குமின்னு நினைத்தேன்.

ப்ளாக்கர் சரியாக இல்லை போல.

-------------------

இந்த ப்ளாஸ்ட்டிக் மேட்டர் இப்படி தொடர்ந்தால்

ஒரு வேலை Wall-E மாதிரி ஆயிடுமோ ...

said...

வெறும் குப்பைன்னு எப்படித் தள்ளமுடியும். நம்ம முகத்திலியே வந்துவிழும்.
சிகாகோல 2 $ டாக் ஒட்டினாதான் குப்பையை எடுப்பான்.
பாசல்லியும் அப்படித்தான். துபய்ல டாக் கொடுக்கிறாங்க போலிருக்கு விலைக்குத்தான்:)

நம்ம ஊரிலயும் இப்படி வந்தா நல்லாதான் இருக்கும்.
கொஞ்சமாவா குப்பை கொட்டறம்.

Anonymous said...

இங்கே மெல்பர்ண்ல அரசே மூணு பின்கள் (பின்லாடன் இல்ல) தருது. பச்சை - வீட்டு குப்பைகள்
நீலம் - ரீசைக்கிள் பண்ணக்கூடியவைகள்
ப்ரொவுன் - தோட்டக்குப்பைகள்
எல்லாமே இலவசம் - (ஆமா உங்க மாணவர் இலவசம் என்கே)

901 ஆ -- வாவாவாவாழ்ழ்ழ்ழ்த்துக்கள்

said...

வாங்க நட்புடன் ஜமால்.

நமக்கோ இல்லை ப்ளொக்கருக்கோ நேரம் சரி இல்லை(-:

said...

வாங்க வல்லி.

குப்பைத்தொட்டிகளைத் தெருமுனையில் வச்சுருக்காங்க சிங்காரச்சென்னையில். ஆனால் அப்பப்பக் க்ளியர் செய்யாமல் எல்லாம் நிரம்பி ரோடில் வழியுது(-:

said...

வாங்க சின்ன அம்மிணி.

என்னாத்தை இலவசம்? அதான் வீட்டுவரியை உசத்திட்டாங்களே, கவனிக்கலையா?

நம்ம இலவசத்துக்கு ஆணிகள் வெகுவாக் கூடிப்போச்சாம்(-:

இதுலே தமிழர்களுக்கு சினிமா அப்செஷன் ஏன்னு கேக்கறார்!

said...

ம்ம்ம்...படிச்சிட்டேன் டீச்சர்..;)

901ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ;))

வாழ்த்துக்கள் டீச்சர் ;)

said...

கலெக்டர் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யுறனால தான் அந்த ஊரு முன்னேறி இருக்குன்னு மாதவன் சொல்றது சரியா தான் இருக்கு (-:

901க்கு வாழ்த்துகள் டீச்சர்.

இந்த குப்பை டப்பா முறை மாறும் போது பத்து கிலோ என்ன 50 கிலோ அரிசிய போட்டு வைக்கலாம் :)

said...

901, அப்புறம் வரப்போற 9000...1,க்கும் வாழ்த்து(க்)கள்.

உங்கூர் குப்பையில நெறய விஷயம் இருக்கும்
போலிருக்கே:))), அர‌சிய‌ல் உள்ப‌ட.


பின்னை க‌ழுவ‌ எதுக்கு சிர‌ம‌ப்ப‌ட‌ணும். அதை ப‌டுக்க‌ப்போட்டா உச‌ர‌ம் குறைஞ்சுடுமே. என்ன‌ நீள‌ம் கூடுத‌லாகும்:).

மற்றும் ர‌க்க்ஷாப‌ந்த‌ன் ந‌ல்வாழ்த்து(க்)க‌ள்.(உங்க தோட்டம் நல்லா இருக்கா?).

said...

கலர் கலரா குப்பைதொட்டி கலக்குது டீச்சர்.அதுவும் கலக்ட்டரே கலக்ட் பண்றார்னா மெச்ச வேண்டிய விஷயம்.

said...

இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் வேணாம்னு தான் ஊரில் எல்லாம் குப்பையே அள்ளுவதில்லை. குப்பையை எங்க வேணாலும் போடலாம். குப்பைகளை காலி செய்ய ஆடு, மாடு, கழுதை, பன்றி என்று தாராளமா ஊருக்குள் வளைய விட்டு இருக்கோம்.. ;-)

ப்ளாக்கருக்கு பீவர்னு நினைக்கிறேன் டீச்சர்.. ;-))

said...

901க்கு வாழ்த்துகள்.

4-5 நாட்களுக்கு குப்பைகளை க்ளியர் செய்யாமல் விடும் போதுதான் க்ளின் செய்வோரின் அருமை எமக்குப் புரிகிறது.

said...

குப்பை தான் இங்கயும் பெரிய பிரச்சினை டீச்சர்....ஒலகம் ஃபுல்லா இந்த பிரச்சினை இருக்கு....

ரீ சைக்கிள் பண்றது, குப்பையில இருந்து எனர்ஜி அப்படின்னு நிறைய ட்ரை பண்றாங்க...

இன்னும் பத்து வருஷத்தில தண்ணியும், குப்பையும் தான் பெரிய பிரச்சினையாகப் போகுது...

said...

:-) idhe murai thaan indha oorula romba kaalama iruku.. (enaku therinju romba kaalam :D) new zea la nadai muraikku vara yen ivalavu thaamadham?

901!!!!!!! enna solradhu bayam thaan varudhu unga blog la vandhu naan ellam comment podalama nu.. :O vazhthukkal teacher!

said...

ஹைய்யோ ரீச்சர்! ஒரு மாசம் வெக்கேஷன் இன்னும் பழைய பாடங்கள் எல்லாம் படிக்கணும் .. எனக்கும் இந்த முறை கும்பகோணம் தஞ்சை ஏரியா செல்ல வாய்ப்பு.. உங்களை நினைச்சுண்டேன் :))
எப்படி இப்படி.. //துரத்திப்பிடிக்க கலெக்டர் ஓடும்படியா ஆச்சு. யோவ், நான் ஒரு ஆள், குப்பையை எடுப்பேனா, ஒலிம்பிக்ஸ்லே ஓட ட்ரெயினிங் எடுப்பேனா..............
என்னை ரொம்ப ஈசியா சிரிக்க வைக்க முடியும் :))

said...

எங்கள் ஊரில் தினம் குப்பை வண்டிகாரர் தான் கையில்

வைத்திருக்கும் குப்பை பாத்திரத்தில்

தட்டி சத்தம் எழுப்பி, குப்பை இருக்கா,

இருக்கா, என்று கேட்டு வாங்கிப் போவார்,
அப்படியிம் இந்த மக்கள் நினைத்த போதெல்லாம் ரோட்டில் குப்பை போடுகிறார்கள்.

said...

ஹூம்! இப்ப தான் குப்பையிலும் காசு வாரமுடிகிறதே அப்புறம் எப்படி தள்ளுவது?
இந்த பதிவை ஸ்குரோல் பண்ணுகிற அளவில் வைச்சிட்டீங்களே!!

said...

வாங்க கோபி.
படிச்சுட்டுக் குப்பையில் போடலைன்னு நம்பவா?:-))

said...

வாங்க நான் ஆதவன்.

கராஜ்லே இடம் ரொம்ப எடுக்குதுன்னு இதுகள் மேலே பலருக்கு எரிச்சல்.

வெள்ளைக்காரர்கள் அரைக்கிலோ அரிசிப் பொதி வாங்குனாவே அபூர்வம். இதுலே 50 கிலோவா?

நோ ச்சான்ஸ்:-)

said...

வாங்க ஐம்கூல்


படுக்க வச்சா நிமிர்த்தணுமே..... மூடிவேற வசதியா இல்லை. சக்கரம் இருப்பதால் ஒரு பக்கம் இழுக்குது(-:


இப்போ குளிர்காலம். தோட்டம் பனியில் கிடக்கு. செப்டம்பர் வந்தால்தான் செடி!

said...

வாங்க சிந்து.

கலெக்டர்ஸ் நிறையப்பேர் இருக்காங்க. அவுங்க இல்லேன்னா பலவேலைகள் நின்னுரும்:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

விளையாட்டாச் சொன்னாலும் அதுதான் உண்மை என்பது வேதனை(-:

said...

வாங்க மாதேவி.

எங்கூர்லே வாரம் ஒருநாள்தான்.

ஆனா.... சென்னையில் தினம் அள்ளலைன்னா.........அதோகதிதான்!

said...

வாங்க அதுசரி.

நீங்க சொன்னது ரொம்பச் சரி

said...

வாங்க பொற்கொடி.

இன்னுமா தங்லீஷூ?????

நாங்க கொஞ்சம் நிதானமாத்தான் எல்லாம் செய்வோம்:-))))
கூட்டமில்லை பாருங்க, அதான்.....

எங்கூர் சூப்பர் ஷெட் பத்தி ஒருநாள் எழுதறேன்.
ஆமாம்...நமக்கு எந்தூரு?

said...

வாங்க இலா.

கும்மோணத்துலே எல்லோரும் சௌக்கியமா?

லீவு முடிஞ்சு வந்து நின்னு நிதானமாப் படிங்க.

said...

வாங்க கோமதி அரசு.

நாங்க பூனாவில் இருக்கும்போது இப்படித்தான் ஒருத்தர் வருவார். குப்பைகளை ஒரு சின்ன வாளியில் வச்சுருந்து கொண்டுபோய்த் தருவேன். அவர் வர எப்படியும் 10 மணி ஆகிரும். நம்மாளுங்களுக்கு அவசரம். வீடு சுத்தமா இருக்கணுமேன்னு குப்பைகளைத் தெருவில் வீசி எறிஞ்சுருவாங்க. அதிலும் மாடியில் இருந்தே!

அவுங்க கண்களில் நான் ஒரு பைத்தியக்காரி:-)

said...

வாங்க குமார்.

ப்ளொக்கருக்கு ஃபீவராம். தமிழ்பிரியன் சொல்லிட்டார்:-)))))

said...

haiyo teacher naan thaan email ellam panirundhene konja naal munnadi marandhutingla? seattle.

said...

office la ukkandhu thanglish adikradhuke time kidaika matengudhu teacher.. mudindha podhu ellam nichayama thamizhla ezhudaren. poruthu arulunga!

said...

901.... Vazhtukkal ! ! !

said...

துளசி டீச்சர்
901 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள்..பிளாகிலே என்ன குப்பை கொட்டினேன்னு யாராவது கேட்டாங்களா...நல்லாவே குப்பை கொட்டிட்டீங்க டீச்சர்...

said...

யே யப்பா....குப்பை மேட்டருக்கு இவ்ளொ பொறுமையா பதிவ போட்டு கலக்கிட்டீங்க மேடம். இன்னைக்குத்தான் இங்க வந்தேன். உங்கள் சில பதிவுகளை பார்ததேன். நல்லா இருக்குங்க. எங்க ஏரியாவில தினமும் காலை 8 மணிக்கு குப்பை வண்டி (தள்ளு வண்டி) வந்து எல்லா குப்பையையும் கொண்டு போறாங்க. ஓண்ணும் பிரச்சனை இல்லை.

said...

வாங்க ஸ்ரீஜா.

அட! பரவாயில்லையே உங்க ஏரியா! இனிய பாராட்டுகள்.

சிங்காரச்சென்னையில் பாஷ் ஏரியான்னு சொல்லப்படும் இடங்களில் கூடத் தெருக்கள் எல்லாம் குப்பையை வீசிப்போட்டு இருப்பதைப் பார்த்தா வருத்தமா இருக்குதுங்க.

said...

901 க்கு பாராட்டுக்கள்.

தமிழ்ஸ்டுடியோ.காமில் நம்ம வண்ணத்த்பூச்சியார் வலைப்பதிவர்களைப்பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். முதல் அறிமுகம் நீங்கதான்.

said...

வாங்க புதுகைத் தென்றல்..

நன்றி.

வண்ணத்துப்பூச்சியார் சுட்டி அனுப்பி இருந்தார்.

அதிகமாப் புகழ்ந்துட்டார். கூச்சமாப் போயிருச்சு அதைப் படிச்சதும்.

ஆமாம். ஊருக்குப்போயிட்டு வந்துட்டீங்களா?

said...

ஆமாம் இலங்கை ட்ரிப் அடிச்சு வந்திட்டேன்.

பயணக்கட்டுரை பதிவுகள் போய்கிட்டு இருக்கு

said...

உண்மையிலே படமெல்லாம் சூப்பர். குப்பைக்கும் அலங்காரமான்னுதான் நினைக்கத் தோணுது.

ரங்கா.

said...

பலே:).

தங்கைதான் சொல்லியிருக்கணும் அக்கா படும் சிரமங்களைப் பார்த்து இந்த வழியை.

இங்கே பச்சை, கருப்பு தொட்டிகள்; நீலத்தில் பை(அதீதத்தில் http://www.atheetham.com/?p=2897 காட்டியிருக்கிறேன்).

கேவல்கள் எல்லாம் சரியாகி மக்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக இப்போது ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். உண்மைதான். மொத்தமா கவரில் கட்டி வெளியேற்றுகிற சவுகரியம் போய் இதற்கென மெனக்கிடுவதும், தொட்டிகளைக் கழுவுவதும் கூடுதல் வேலைகளே. காலப்போக்கில் பழகி விடும்.