Monday, August 31, 2009

கர்ணன்கள்

பாரதம் மகாபாரதமுன்னு ஒரு விழா(அப்படித்தான் சொல்லணும் ) நடந்துக்கிட்டு இருக்கு. இதுலே ஒவ்வொருநாளும் ஒரு முக்கியப் பாத்திரத்தின்(அந்தப் பாத்திரமல்ல, இது கதாப் பாத்திரம்) அறிமுகம். கதை மாந்தர்ன்னு சொல்லாம். அரசனா இருந்தால் என்ன? ஏழையா இருந்தால் என்ன? மனித குணங்கள் முற்றிலும் முரண்பாடுகள் உள்ளதுதானே? எந்த தருமமும் நியாமும் அந்தந்த சமயத்துலே அது சரின்னுதான் எடுத்துக்க வேண்டி இருக்கு.

நேற்று நம்ம கர்ணன். இந்தப் பெயரைக்கேட்டதும் சிவாஜிகணேசனின் கர்ணன் மனக்கண்ணீல் வந்து நிற்பதைத் தடுக்க முடியாது. படமா அது? அப்பப்பா....எத்தனை முறை பார்த்தோமோ அத்தனை முறையும் ரசிச்சோம். பாட்டுகள் ஒவ்வொன்னும் அருமையிலும் அருமை. நடிகர்கள் தேர்வு, இசை, கலைன்னு ஒன்றோடு ஒன்று கை கோர்த்து அழகா அமைஞ்சது அது.

இந்தக் கர்ணனை மனசுலே இருந்து எடுக்கவே முடியாதுன்னாலும் இன்னொரு கர்ணனையும் பார்க்கலாமேன்னு 'காற்றுவெளி'யுடன் கலந்து போனோம். (பதிவுலக நண்பர்கள் சிலரையும் அங்கே சந்திச்சேன்) சொன்ன நேரத்துக்குச் சரியா ஆறே காலுக்கு ஆரம்பிச்சுட்டாங்க. திரை விலகியது. கொஞ்சம் இருட்டான போர்க்களக் காட்சி. பேராரவத்துடன் போர் நடக்கும் நிகழ்ச்சி. ஓசையே எல்லாத்தையும் சொல்லுது. வெள்ளை உறையில் உறைஞ்சு நிற்கும் சிலை. மெதுவாக உறை கழன்று மேலே போகப்போக உள்ளே இருந்து உருவம் வெளிப்படுது. அட! நம்ம நாஸர்.

கர்ணன், போர்க்களத்தில் நின்று, தன் வாழ்வில் நடந்தவைகளை எல்லாம் ஒருமுறை திரும்பிப்பார்க்கிறா(ர்)ன். எத்தனை எத்தனை அவமானங்கள்..... வேறு நடிகர்கள் யாரும் மேடையில் இல்லை. மோனோ ஆக்டிங். தன்னைத் துளைத்த அம்புகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கிறான். 'பாரதம் சொல்கிறது அர்ஜுனனின் அம்பால் இறந்தேன் என்று. ஆனால் நான் பட்ட அவமானங்களும் அவச்சொற்களும் என்னை எப்போதோ கொன்றுவிட்டன' இந்த வசனம் சொல்லப்பட்டபோது, என் கண்ணில் துளிர்த்த கண்ணீரே சாட்சி..... நடிப்பு எப்படி இருந்துருக்குமுன்னு சொல்ல.முப்பத்தியஞ்சு நிமிஷம். மேடையில் ஒருவர் மட்டும். வீராவேசமான பேச்சு ஒன்னும் இல்லை. ஒரு சாதாரண மனித மனத்தின் குமுறல்கள். மகாபாரதத்தில் வரும் மாந்தர்களில் அநியாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டவர் வரிசைன்னா முதல்லே கர்ணனைத்தான் சொல்லணும். துரியோதனனால் அரசன் என்று முடிசூட்டப்படும்வரை, (ஜனிச்ச நிமிஷம் தொட்டு அனாதைக் குழந்தையாய் ஆத்துலே பயணம்) வளர்ந்துவந்தக் காலக்கட்டங்களில் பட்ட அவமானங்கள் சொல்லிலே அடங்குமா?
நிகழ்ச்சி முடிஞ்சதும் நன்றி கூறும்போது, 'நான் ஒருத்தன் தான் உங்கள் கண் முன்னே. எனக்குப் பின்னால் ஒரு பெரும்படையே இருந்ததால்தான் இந்த நிகழ்ச்சியை உங்க கண் முன்னால் நடத்த முடிஞ்சது'ன்னு சொல்லி மேடை அமைப்பு முதல், நாடக இயக்கம்வரை பங்கேற்றவர்களை அருமையாக அறிமுகப்படுத்தினார். இது ஒரு அடவு ஃபவுண்டேஷன் தயாரிப்பு. தயாரிப்பு வடிவமைப்பு கமீலா நாசர். புருஷோத்தம், ரஃபி, நடேஷ், போளி வர்கீஸ், சந்திரா, ஃப்ரான்ஸிஸ் கிருபா, சந்தோஷ், பாஸ்கராஸ், எம்.ஜி. ஸ்வாமி, அனீஸ், வேலு, பேராசியர் ரகுராமன், கருணா பிரஸாத் இப்படி ஒரு பெரும்படையேதான். சந்தேகமே இல்லை.
உழைப்பு உழைப்பு உழைப்பு. எவ்வளவு உழைச்சாங்கன்றதைப் புரிஞ்சுக்க முடிஞ்சது.


கடைசியில் வெளியே வந்தப்ப, நாஸரையும், அவர் மனைவி கமீலா நாசரையும் சந்திக்க வாய்ச்சது. மழுமழுன்னு மொட்டைத்தலையுடன், உசரமாக நின்னுக்கிட்டு இருந்த ஒருவரும் அவர்கூடவே இருந்த இன்னொருவரும் 'கர்ணனுடன்' பேசிக்கிட்டு இருந்தாங்க.(அரிகிரி அசெம்ளிக்காரர்களாம். டிவி பார்த்தால்தானே தெரிஞ்சுருக்கும்?) நடிப்பு அபாரமுன்னு பாராட்டினோம். கோபால் கேட்டார்,'எப்படி சார் அவ்வளோ பெரிய டயலாக்கை மறக்காமல் பேசுனீங்க'ன்னு:-)))) அரைமணிக்கும் மேலா ஒருத்தர் பேசணுமுன்னா(அதுவும் போர்க்களத்தில், போர் அடிக்காம!!)

'நான் என்ன பெருசாச் செஞ்சுட்டேன். நாட்டியம் ஆடுனவங்களை விடவா?'ன்னார். பெரியமனசு. பெரிய மனுசர்.

எங்க 'அக்கா'வின் கணவருக்கு உங்க மூக்கேதான். நாஸர் மூக்குன்னு கலாட்டா செய்வோம்' அபத்தமாச் சொன்னது நான். ஆனா....மனுசர் அதையும் ரசிச்சுச்சிரிச்சார்.


பி.கு: அந்த நாட்டியத்தைப்பத்தி அடுத்தபதிவில் எழுதறேன்.

32 comments:

said...

//நடப்பு அபாரமுன்னு பாராட்டினோம். கோபால் கேட்டார்,'எப்படி சார் அவ்வளோ பெரிய டயலாக்கை மறக்காமல் பேசுனீங்க'ன்னு:-)))) அரைமணிக்கும் மேலா ஒருத்தர் பேசணுமுன்னா(அதுவும் போர்க்களத்தில், போர் அடிக்காம!!)
//

தனிக்கர்ணனாக மேடையில் வந்ததால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கூட பேச முடியும். மனைவியும் (கர்ணனின் மனைவி) கூட இருந்தால் ஐந்து நிமிடம் கூட பேச வாய்ப்பு கிடைத்திருக்காது. பாவம் கர்ணன்கள்...எல்லாத்தையும் கொடுத்து இழந்துட்டு நாள் கணக்கில் கூட டயலாக் பேசுவாங்க
:)

said...

விதவிதமான நிகழ்ச்சிக்கள் விதவிதமான விமர்சனங்கள்ன்னு களைகட்டுது தளம்.. :)

said...

துளசி அம்மா,தினம் தினம் தீபாவளிதான்.சென்னை நிகழ்ச்சிகள் எதையும் விடறதில்ல.......

ரமலான் நோன்பு நேரத்திலும் திரு.நாசர் மற்றும் திருமதி.நாசர் மற்றும் நண்பர்களின் பங்களிப்பு பாரட்டுதலுக்குரியது.

என்ஜாய் தீஸ் சென்னை டேஸ்...

said...

நாசர் ஒரு மிகச்சிறந்த நடிகர்....தேவர் மகன்ல கிட்டத்தட்ட கமலையும், சிவாஜியையும் தூக்கி சாப்பிடற மாதிரி நடிச்சிருப்பார்!

said...

ம்ம்ம்...என்ஜாய் டீச்சர் ;))

said...

படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி படங்கள்தான் பாத்தேன். நாசர் மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். படிச்சா அது நாசர் தான். நாசர் நடிப்பு மட்டும் இல்லை. மூக்கும் தனித்துவமானது.

said...

nalla kalainikalchi then nasar oru super actor, but realy karnan is an exagreated portion of tamil cinema.

said...

வர வர பெரிய ஆளாயிட்டே போறீங்க :-)

said...

வர வரப் பெரிய ஆளு இல்லம்மா. உஷா.
பெரிய ஆளா வந்து இன்னும் பெரிய ஆளயாச்சு.
நேத்திக்கு ஒரு மீட்டிங்னு போனேன்.
பதிவுலக நூசி மங்கை வரலியான்னு என்னைக் கேக்கறாங்க.:))

அவங்களுக்குக் காலைல ஒர் நிகழ்ச்சி,மதியம் ஒண்ணு அப்படின்னு எங்ஏஜ்மெண்ட் இருக்குன்னு சொல்லி சமாளிச்சேன்!!

துளசி எனக்கு இந்தப் ப்ரொக்ராம் பர்க்கலியேன்னு இருக்கு. நாசர் டாப்தான்!!

said...

டீச்சர் சென்னையில இருக்கறதால நிகழ்ச்சிக எங்கெங்க என்னென்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க முடியுது.நாசருடைய இந்த நிகழ்ச்சியை பத்தி படிச்சேன்..ஆனா விரிவா அழகா படத்தோட டீச்சரோட பதிவு..சூப்பர்.

said...

ரசனை மிக்க பதிவிற்கு நன்றி அம்மா. நாட்டியப் பதிவுக்கு வெயிட்டிங்...

said...

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. - இந்தக் குறளுக்கு ஏற்றார் போல் இருந்தவன் தானா கர்ணன்?......கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!........

said...

//எங்க 'அக்கா'வின் கணவருக்கு உங்க மூக்கேதான். நாஸர் மூக்குன்னு கலாட்டா செய்வோம்' அபத்தமாச் சொன்னது நான். //

ஹா ஹா ஹா..அந்த விஷயத்துல மூக்கை நுழைச்சேன்னு சொல்லுங்க டீச்சர் :)

//ஆனா....மனுசர் அதையும் ரசிச்சுச்சிரிச்சார்.//

ஆக, வில்லன் நடிகர் நல்லவர்னு சொல்றீங்க.. 100% ஏத்துக்குறேன் :)

said...

Always I love Mr. Nazar's perfomance in movie, theatres and in all stage Variety.

Once again I enjoyed his perfomance through your post.

Thanks

said...

டீச்சர்..

ரொம்ப வேலையாயிருச்சு.. அதான் மிஸ் பண்ணிட்டேன்..

நீங்க பார்த்துட்டீங்கள்லே..

போதும்..

வலையுலகமே பார்த்த மாதிரி..!

said...

முதலில் எல்லோரும் என்னை மன்னிச்சுருங்க. பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லத் தாமதமா வந்துருக்கேன்(-:

said...

வாங்க கோவியாரே.

//..........பாவம் கர்ணன்கள்..//

இப்படித் தேங்காய் உடைச்சது போல்...:-))))))

said...

வாங்க கயலு.

கொஞ்சநாளுக்கு நமக்கு(ம்) இப்படிச் சென்னை வாசம் கிடைச்சுருக்கேன்னு முடிஞ்சவரை ஒன்னையும் விடலை:-))))

said...

வாங்க துபாய் ராஜா.

பண்டிகை, நோம்பு காலங்களில்தானே நாமும் நம் தொழிலை மறக்காமல் செய்யணும்?

நாசருக்குத் தொழில் நடிப்பு!

said...

வாங்க அதுசரி.

அது என்னங்க எப்பவும் நீங்க சொல்றது சரின்னு ஒப்புக்க வைக்கும்படி பின்னூட்டம் போடறீங்க!!!!

said...

வாங்க கோபி.

நன்றிப்பா.

said...

வாங்க சின்ன அம்மிணி.

தனித்துவம் இருப்பதால்தானே சினிமாவில் ஜெயிக்க முடியுது!

said...

வாங்க பித்தன்.

படத்தின் நாயகனைக் கொஞ்சம் அதிகப்படியாத்தானே காமிக்கணும்?

said...

வாங்க உஷா.

பெரிய ஆளுங்களே இப்படிச் சொன்னா எப்படிப்பா?:-)

said...

வாங்க வல்லி.

பேசாம எனக்கு மேனேஜரா ஆயிருங்க:-))))

said...

வாங்க சிந்து.

நன்றிப்பா.

நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு. நேரம் அமையணுமே!

said...

வாங்க கவிநயா.

நாட்டியப்பதிவு போட்டாச்சு. இங்கேதான் வரத் தாமதம் ஆகிருச்சு.

தாமதம் ஏன் (துளசி) ஸ்வாமி.......... க்கு ஆடணுமா? :-)

said...

வாங்க நேசன்.

இடிச்சுரைச்சாத் துரியன் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பானா?

'செஞ்சோற்றுக் கடன்' னு இதைத்தான் சொல்லி வச்சுருக்கு.

இப்ப இருக்கும் அரசியல் கட்சித் தொண்டர்கள் தலைமையை எதிர்த்தோ, கண்டித்தோ வாயைத் திறக்க முடியுதா?

said...

வாங்க ரிஷான்.

வில்லன் நடிகர்கள் எல்லோருமே நிஜ வழ்க்கையில் அற்புதமான மனிதர்கள்.

எ.கா: மறைந்த ஹிந்தி நடிகர் அம்ரிஷ் புரி, சொக்கத்தங்கம்.

said...

வாங்க அருள் மொழியன்.

முதல் வருகையா?

வணக்கம். நல்லா இருக்கீங்களா?

ஆதரவுக்கு நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

இதுக்குத்தான், ' நான் கண்ட இன்பம்'ன்னு பெயர்:-)

said...

//கடைசியில் வெளியே வந்தப்ப, நாஸரையும், அவர் மனைவி கமீலா நாசரையும் சந்திக்க வாய்ச்சது//

Frontliners ன்னு ஒரு நிகழ்ச்சிக்கு நாசரையும்,கூட சத்ருகன் சின்ஹாவையும் படம் பிடித்தேன்.

அலட்டாத அடக்கமான ஜோடி நாசரும் அவர் மனைவியும்.