Monday, August 10, 2009

வாழ்க்கையில் முதல்முதலா......

நம்ம மக்கள்ஸ் பரிசு வாங்குவதைக் கொண்டாடப் போயிருந்தோம். விழா மாலை நேரம்தான். ஆனால் அன்று பிற்பகல் நடக்கும் எளக்கிய சந்திப்புதானே நமக்கு முக்கியம்:-) அதிலும் நம்ம எஸ்.ரா. பேசறார். கட்டாயம் கேக்கத்தான் வேணும்.

ஒன்னும் எழுதத்தோணலை. காதும் மனமும் நிறைஞ்சுபோச்சு. விருது வாங்கப்போறவங்க, அவுங்க அனுபவங்களைச் சொன்னாங்க.

நம்ம எஸ்.ரா


நம்ம நாகூர் ரூமிபிற்பகல் நிகழ்ச்சியில் நாச்சியாரையும், நுனிப்புல்லையும் சந்தித்தேன். ஒரு சின்ன இடைவேளையா ஒரு மணி நேரம். மாலை நிகழ்வுக்குத் திரும்பிப்போனால்.............. பயங்கரக் கூட்டம். (நாலுபேருக்குமேல் இருந்தால் கூட்டம் என்று கொள்ளவேண்டியதில்லை. இது நியூஸியா என்ன?)
தங்க மயிலோடு தங்க முருகன்கள்நல்லி குப்புசாமிச் செட்டியார், தொலைக்காட்சி நடராஜன், நீதியரசர் லட்சுமணன்னு மேடையில் இருந்தாங்க. பேச்சுகள், நூல்வெளியீடு, பொன்னாடை போர்த்தல், விருது வழங்குதல், க்ரூப் ஃபோட்டோஸ் என்று சம்பிரதாயங்களை மீறாமல் எல்லாம் செவ்வனே நடந்தது. தெரிஞ்ச பெயரும் தெரியாத முகங்களுமாய் இருந்த நம்ம மக்களில் பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக அமைஞ்சது இந்த விழா.
நம்ம அண்ணாகண்ணன்

நம்ம பத்ரி
நம்ம கவிதாயினி மதுமிதா


நம்ம சிங்கை ஜெயந்தி சங்கர்எஸ். சங்கரநாராயணன், சிலபுத்தகங்களைக் காமிச்சு, 'எதுவேணுமுன்னாலும் எடுத்துக்கோ'ன்னார். மனக்குப்பை எடுத்துக்கிட்டேன். 'ஆஹா.... சரியான தேர்வு'ன்னு கோபாலுக்குப் பயங்கர மகிழ்ச்சி:-))))

எல்லாரும் இருந்து சாப்புட்டுட்டுப்போகணும், உங்களுக்காக ஆக்கிவச்சுருக்குன்னு விழாக்குழுவினர் விடுத்த வேண்டுகோளை, நீதியரசர் இருக்கும்போது நாமும் ஜஸ்டிஃபை பண்ணித்தானே ஆகணும்? கலியாண விருந்து , இலை போட்ட சாப்பாடு. குலாப்ஜாமூன், ஐஸ்க்ரீம், பீடான்னு எதையுமே விட்டுவைக்கலை. சுமார் 600 பேர்கள் இருக்கலாம்.
எல்லாம் இனிதே முடிஞ்சது.

37 comments:

said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

said...

பகிர்வுக்கு நன்றி!

said...

அடடே மேடையில் மதுமிதா.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
எதையும் விடாம நல்லா சாப்பிட்டீங்களா ஆச்சரியமா இருக்கே.. ? :)

said...

"...மனக்குப்பை எடுத்துக்கிட்டேன். ..."

Awaiting commentary :-)

Thanks for sharing.

said...

தேன் வந்து பாய்ந்த நேரம் .
கொஞ்சம் அசந்தாலும் வார்த்தைகள் தப்பிப் போய்விடுமோ என்று நினைக்க வைத்த கூட்டம்.

தோழி மதுமிதாவுக்கு,ஜெயந்திசங்கருக்கும் மீண்டும் வாழ்த்துகள் சொல்லிக்கிறேன்.
எஸ்.ரா. பேச்சு நிஜமாகவே கட்டிப் போட்டு விட்டது.
படங்கள் வெகு ஜோர்.

said...

வாழ்க்கைல முதன்முதலா எஸ்.ரா வை பாத்தீங்களா?

said...

நல்ல பகிர்வு.

அனைவருக்கும் வாழ்த்துக்கள். ;))

எஸ்.ராகிட்ட பேசினிங்களா!?? அவரு பேசியாதையும் மக்கள் பேசியாதையும் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லாமுல்ல!! ;))

ஆமா எனக்கு ஒரு டவுட்டு இப்போ நீங்க எங்க இருக்கீங்க? சென்னையிலா!?

said...

அட! நேத்து பாத்தீங்களா எஸ்.ராவ.

நான் ஐந்தாம் தேதி ஈரோட்டில் சந்தித்தேன். உரையையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

said...

அடடா..மதுமிதாம்மா,ஜெயந்தி சங்கர் இருவருக்கும் உங்க பதிவு மூலமா வாழ்த்து சொல்லிக்கிறேன் டீச்சர்.

அப்போ நீங்க இன்னும் இந்தியாவிலா இருக்கீங்க? அன்னிக்கு உங்க 'குப்பை' பதிவு பார்த்துட்டு திரும்ப நியூஸி வந்துட்டீங்கன்னு நெனச்சேன்..

சரி..அப்ப நேற்று கேணிக்கும் போயிருப்பீங்கள்ல..அதுபத்தியும் ஒரு பதிவு ப்ளீஸ் :)

said...

நிகழ்ச்சிக்கு வரமுடியாத குறையை போட்டோக்கள் பார்த்து ஆறுதல் பண்ணிக் கொண்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரையை சற்று மணக்கண் முன் கொண்டு வந்து எங்களுக்காக இடுகையிடுங்கள்...

said...

வாங்க நட்புடன் ஜமால்.

உங்கூர் எழுத்தாளர் ஃப்ளையிங் விஸிட் செஞ்சுட்டுப் போனாங்க:-)

அங்கே சிங்கையில் ஏதும் கொண்டாடலையா?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பகிர்ந்தால் மகிழ்ச்சி பல மடங்காகுதேப்பா!!

said...

வாங்க கயலு.

குலாப் ஜாமூன், ஐஸ்கிரீம்(வனிலா) கட்டித்தயிர் இதெல்லாம் விலக்கப்படக்கூடாதவை:-))))

பருப்புச் சாதம் & நெய் கிடைச்சுருதுப்பா.

said...

வாங்க நன்மனம்.

குப்பையைப் படிச்சுட்டுச் சொல்றேன்:-)

said...

வாங்க வல்லி.

சிலர்பேச்சுக் கட்டிலைப் போட்டுருச்சு:-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

என்னப்பாக் கேள்வி இது?

தினம்தினம் எஸ்ராவைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்னு சொன்னா..... நம்புவீங்களா?:-)))))

கதாவிலாசத்தில் கூடவே பயணப்பட்டேன்!

said...

வாங்க கோபி.

எஸ்ராகிட்டே என்னை அறிமுகப்படுத்திக்கணுமுன்னு நான் துளசி கோபால். நியூஸின்னதும் அவர் 'துளசி தளம் 'படிச்சுருக்கேன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு.
அதுவுமில்லாம நீங்க வலைஉலக அக்கா, அம்மா, டீச்சர் இப்படியெல்லாம் இருக்கீங்கன்னாரா....

அட..தேவுடான்னு இருந்தாலும் பின்னூட்டப் பிதாமகியை விட்டுட்டாரேன்னு.....

அந்தக் குறையை மதுமிதா, தன்னுடைய உரையில் சேர்த்துக்கிட்டாங்க. திடீர்னு மேடையில் அவுங்க இப்படிச் சொன்னதும் ஒரு செக்கண்டு ஷாக்....

(ஆஹா...இதுதான் ஒருவினாடிப் புகழா?)

said...

வாங்க வெயிலான்.

அழகான நடையில் எளிமையாப் பேசறார். வலிந்து எல்லாத்தையும் தமிழ்ப் படுத்தணுமுன்னு இல்லாம இயல்பான பேச்சு.

ரசிச்சேன்.

said...

வாங்க ரிஷான்.

வாழ்க்கையில் ஒன்னு கிடைச்சால் ஒன்னு கிடைக்காது என்பது ரொம்பச்சரி.

விழாவா இல்லை கேணியான்னு சீட்டுக்குலுக்கினா......

கேணி ஓடிப்போகாது, எல்லா மாசமும் இருக்கு. ஆனா...விழான்றது அந்த ஒருநாள் மட்டும். அதுவும் நம்ம தோழிகள் விருது பெறும் நிகழ்ச்சிக்குப் போகத்தானே வேணும்ன்னு.....

குடந்தை அன்புமணி குறையைப் போக்கிட்டார்:-)

said...

வாங்க அன்புமணி.

மொழியாக்கம்பற்றித்தான் பேசுனார். எழுத்தாளர்களுக்கு இருக்கும் மதிப்பு அப்படியே மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இருக்குன்னார்.

ஆனாலும் அவரைப் பார்த்துப் பிரமிச்சு வாய்பொளந்து உட்கார்ந்திருந்தேன்னா அதுதான் மெய்.

இன்னொருநாள் விரிவா மனப்பொட்டியில் இருந்து வெளியே எடுத்தால் ஆச்சு.

said...

விருது பெற்றோருக்கும்,பதிவிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

said...

அடடா..

தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பனே..!

said...

எஸ்ரா என்னதான் பேசினாரு?????
கேமராஉமன் ஒருத்தங்க உருவாகிட்டே வராங்க...ஹும்

said...

நல்ல பகிர்வு டீச்சர் :)

இந்தியா வந்த நேரத்தை மிக சரியா நல்ல நல்ல விசயத்துக்காக செலவழிச்சிருக்கீங்க டீச்சர்.

said...

டீச்சர் உங்க ஸ்பெசல் ;))

"ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு"

http://kanapraba.blogspot.com/2009/08/blog-post.html

போயி பாருங்கள்

said...

சகோதரி ஜெயந்தி சங்கர் மற்றும் விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

மிக அருமையாக கவர் செய்திருக்கிறீர்கள் ரீச்சர்....நன்றி.

said...

வாழ்த்துப் பதிவிட்ட துள்சிம்மாவுக்கும், வாழ்த்து தெரிவித்த‌ ரிஷான் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

துள்சிம்மா நீங்க அழகா வெட்கப்பட்ட அந்த புகைப்படம் இங்கே இல்லியே:)

said...

அன்புமணி,

இங்கே இந்தச் சுட்டியில் பாருங்க.

http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=46b40a6a-8cfb-4336-b0c1-8946f18b62df&CATEGORYNAME=TCHN

said...

வாங்க துபாய் ராஜா.

வாழ்த்துக்களை விருதாளர்களுக்குச் சேர்த்தாச்சு:-)

said...

வாங்க உண்மைத்தமிழன்.

இதென்ன அநியாயம்? உங்களுக்குத் தெரியாமல் இருக்குமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை(-:

நான் விருது வாங்கும்போதுக் கட்டாயம் சொல்றேன்:-)

said...

வாங்க ஜாக்கி சேகர்.

'விருது வழங்கும் சமயம்' எடுத்த படங்கள் எல்லாம் கோபாலின் கைவண்ணம். ஃபோட்டோகிராஃபர் கூட்டத்துக்குள்ளெ முண்டியடிச்சுப்போக முடியலை என்னால்(-:

விழாபற்றிய விவரங்கள் கொஞ்சம் சென்னை ஆன்லைனில் எழுதி இருக்கேன். மேலே ஒரு பின்னூட்டத்தில் சுட்டி கொடுத்துருக்கேன் பாருங்க.

எஸ்ரா அற்புதமாப் பேசுனார்.

said...

வாங்க நான் ஆதவன்.

கிடைச்சச் சந்தர்ப்பங்களைக் கூடியவரைப் பயன்படுத்தப்போறேன்.

இதெல்லாம் 'போனா வராது'கள்தானே?

said...

வாங்க கோபி.

சுட்டிக்கு நன்றி. நல்லவேளை...கோட்டை விடப் பார்த்தேன் நம்ம லுக் ச்சாயை!

said...

வாங்க மதுரையம்பதி.

விருது வாங்குனவங்களில் ரெண்டுபேர் நம்மாட்கள்ன்னா மகிழ்ச்சியும் ரெட்டிப்பா ஆச்சே:-)

said...

வாங்கம்மா விருதுபெற்ற கவிதாயினியே!

திடீர்னு இப்படி நம்ம பெயரை மேடையில் வச்சுச் சொல்வீங்கன்னு நான் கண்டேனா?

said...

Anbu Thozhi Manju Virudhu petradhai pugaipadathudan vezhi ittamaikku mikka nandri. Let us all wish her more and more happiness and success. GeethaMurugesh.

said...

வாங்க கீதா முருகேஷ்.

வராதவுங்க வந்துருக்கீங்க..... எல்லாம் தோழியின் புண்ணியம்:-))))

வருகைக்கு நன்றி